பாகம் 47
ஜானகி கோபமாக பேசவும் ரோகித் கிருஷிற்கு போன் பேசவும் சரியாக இருந்தது..
ஜானகி ரொம்ப டென்சனாகி பால்கனியில் சென்று அமர்ந்து கொண்டார்..
இரத்தினம் அவரை சமாதனம் பண்ண நகரவும் சுஜி அவரின் கைப்பிடித்து தடுத்துவிட்டாள்..
போன் பேசும் போது கிருஷ் முகம் மாறிக் கொண்டே சென்றது.. சிறிது நேரத்தில் அவனே தட்டில் சாதத்தை எடுத்துக் கொண்டு அவர் அருகே சென்று அமர்ந்தான்..
ஜானகியால் கிருஷின் மீது தொடர்ந்து கோபமாக இருக்க முடியாதே .. அவன் அருகே வரவும் நார்மல் ஆனார்..
இந்தாங்க என்று தட்டைக் கொடுத்தான்..
அவர் வாங்கி வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்து இருந்தார்..
" ஏன் எனக்கு ஊட்டி விடுங்கனு தனியா சொல்லனுமா " என்றான் வானத்தைப் பார்த்தபடி..
அவன் அவ்வாறு சொல்லவும் கண்களில் கண்ணீரோடும் உதட்டினில் சிறு புன்னகையோடும் அவனுக்கு ஊட்டி விட்டார்..அவனும் அவருக்கு ஊட்டிவிட்டான்

சுஜியோ " மாமா இவுங்க சாப்பிடரதப் பார்த்தா நமக்கு எதும் மிஞ்சாது போல வாங்க நாமபோய் சாப்பிடலாம் " என்று உள்ளே சென்று சாப்பிட ஆரம்பித்தாள்..
" என்னை தனியா கலட்டி விட்டிங்கல்ல அத்தை ...நல்லாக் கொஞ்சிக்கோங்க.. நீங்க ரெண்டு பேரும் கடைசில எங்கிட்ட தான் வந்தாகனும் .. அப்ரோம் பார்த்துக்கிறேன் உங்களை " என்றவாரே சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்த பிளானுக்குத் தயாரானாள்..
நாகுவும் சுஜியும் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தனர்.. கிருஷ் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான்..
" மாமா இன்னும் ரெண்டு ஸ்டெப்புல தோக்கப் போறீங்களே " என்று அவள் பழிப்புக்காட்ட
" நீ எதோ சீட் பண்ணி விளையாடற மாறி இருக்கே " என்றார் நாகு
' சுஜி உண்மையாவே இதில் சீட் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறாள் என்பதை கவனித்துக் கொண்டிருந்த கிருஷ் தந்தைக்குப் பதிலாக களத்தில் இறங்கினார்..
ஆட்டம் சூடுபிடிக்க சுஜி தோற்கும் நிலைக்கு வந்து விட்டாள்..
" போடா பன்னி.. எங்கோட பேசாத.. அத்தை நீங்க வாங்க.. எனக்காக நீங்க விளையாடுங்க " என்று அவர்களை தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஜானகியை அழைத்து வந்தாள்..
அவர் தயங்கவும் " அத்தை கவலப்படாதிங்க.. கிருஷ் ஒன்னும் சொல்ல மாட்டான் " என்று அருகில் அமர வைத்தாள்...
ஜானகிக்கு இந்த விளையாட்டெல்லாம் சாதாரணம் தான்.. இருந்தாலும் கிருஷை தோற்கடிக்க வேண்டுமா என்று எண்ணினார்..
ஆனால் வென்றது ஜானகி தான்..
சுஜி ஜானகியைத் தனியாய் அழைத்து " ஏன் அத்தை நீங்க விட்டுக் கொடுத்திருந்திங்கனா அவனுக்கு உங்க மேல கோபம் குறைஞ்சிருக்கும்ல. " என்றாள்
அவர் புன்னகையுடன் " என் பையனுக்கு விளையாட்ல விட்டுக் கொடுத்தா புடிக்காதுனும் தெரியும்.. அவன் தான் ஜெயிக்கிறத விட நீ ஜெயிச்சாதான் சந்தோசமா இருப்பானும்னு தெரியும் " என்றார்..
அவர் பேசியதை ரெக்கார்ட் பண்ணி கிருஷிற்கு போட்டுக் காண்பித்தாள்..
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
பாலா மாணிக்கத்திடம் சென்று " மாலதி இங்க இருக்கிற கர்ப்பிணி பொண்ணுங்களுக்கு அவார்னஸ் புரோகிராம் நடத்தப் போறா..அவ வேலை முடியற வரைக்கும் இவள பார்த்துக்கோங்க "என்றான்..
அவரும் மறுப்பேதும் சொல்லாமல் சம்மதித்தார்.. .
பின்பு அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.. மகதி ஒவ்வொரு பாத்திரமாய் எடுத்து வந்து டேபிளில் அடிக்கிக் கொண்டிருந்தாள்.. பாலாவின் கண்கள் அவளை விடுத்து வேறுபுறம் திரும்பவில்லை.. மகதியும் அவ்வாறே பார்த்துக் கொண்டே பரிமாறினாள்..

இதனைப் பொறுக்காத மாலதி வேண்டுமென்றே பல கேள்விகளைக் கேட்டு அவனை திசைத் திருப்ப முயன்றாள்..ஆனால் எதுவும் பழிக்கவில்லை..ஆனால் கடைசியாக அவள் கேட்ட கேள்வி அவனைக் கோபமுறச் செய்தது..
" ஏன்டா உனக்கு போயும் போயும் இவளையாடா புடிச்சிருக்கு "என்றாள்..
அவன் கோபமாகப் பார்க்கவும் " இல்லை ரொம்ப அப்பாவியா இருக்காளே.. அதான் வேற ஒன்னும் இல்லை " என்று சமாளித்தாள்..
பாலாவிற்கா புரியாது அவள் வார்த்தையின் அர்த்தம் ...இருந்தும் அவளை அவர்கள் முன்னிலையில் திட்ட மனம் வரவில்லை..
"ஏன் தட்டுல கோலம் போட்டுட்டு இருக்கிங்க.. சாப்பிடுங்க.. இத நான் சமைக்கல.. தைரியமா சாப்பிடலாம்.." என்று தட்டில் பொரியலை வைத்தாள் மகதி ..
" மதிம்மா அண்ணாவுக்கே எல்லாம் வைக்கிறியே ..எனக்கு எதும் கிடையாதா.. " என்றான் அர்ஜூன் அப்பாவியாக
அவன் தட்டில் வெறும் இரசத்தை மட்டும் ஊற்றி " மொதல்ல என்னை அழகா அண்ணினு கூப்பிடுங்க.. அப்ரோம் சாப்பிடலாம் " என்றாள் அவனுக்கு பழிப்புக் காட்டி

" அண்ணியா உன்னையவா சான்சே இல்ல போ போ " என்று அவன் கூறவும்
அவர்கள் பேசியதைக் கவனித்துக் கொண்டிருந்த பாலாவின் கையை கிள்ளிவிட்டு " நீங்க என்னை மதிச்சாதான அவரும் என்னை மதிப்பாரு.. ஒழுங்கா அண்ணினு கூப்பிட சொல்லுங்க " என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூறினாள்..
" மகி அப்படிலாம் கூப்பிட்டா வயசான மாறி தோணும் டா... " அவள் முறைக்கவும் " டேய் அர்ஜு சொல்லுடா " என்று மிரட்டினான்..
அவன் வாயைத் திறக்கும் முன் " இப்பவே எதுக்கு இந்த முறைலாம்.. ஒருவேளை இந்தக் கல்யாணம் நின்னுடுச்சுனா கஷ்டம் தானே " என்றாள் மாலதி மெதுவாக
மாலதி சொன்னது பாலாவுக்கும் மகதிக்கும் மட்டும் கேட்டது.
அர்ஜூன் " இப்ப என்ன சொன்னீங்க " என்றான்
சும்மா ஜோக்.. வேற எதுவும் இல்ல...
அர்ஜூனுக்கு மாலதியின் நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை.. அதுவும் மகதியின் மனதைக் காயப்படுத்துவது போலவே நடந்து கொண்டிருக்கிறாள்..
என்பதும் புரிந்தது
' அடியேய் மைதா மாவு நானும் வந்ததிலிருந்தே பார்த்திட்டு இருக்கேன்.. நீ ஓவரா பேசிட்டு இருக்க.. அவருக்காக தான் பார்த்தேன் .. இனி நீ செத்தடி மகளே ' என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள் மகதி..
எனக்குனு மட்டுமே வந்து வாய்க்குங்க பாரு.. பேரப்பாரு பாலாவா.. பேசாம ரோபோனு வெச்சிருக்கலாம்.. அதுவும் இன்னைக்குதான் ஏதோ கொஞ்சம் சிரிச்சு பேசுனாரு... அதுக்குள்ள கரடி மாதிரி வந்துட்டா.. இவ என்னை பேசுனாலும் எதும் திட்டக் கூட மாட்டிங்குறாரு..

எல்லாம் எந்நேரம்... அதும் இவளுக்கு வீட்ல பிரச்சனைனு இங்க வந்து தங்கவெச்சுக்கோனு சொல்றாரு.. ஆனா வேற எதோ ரீசன் இருக்கு.. அதயும் அந்த ரோபோ சொல்லித் தொலையாது..
" மகதி சாம்பார ஊத்து "
ஐயோ இந்த அத்தான என்ன தான் பண்றது.. நிம்மதிய யோசிக்கக் கூட விட மாட்டிங்குது..
.
.
.
.
சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு இருந்தான்..
' மகதி எதாவது பண்ணி இன்னைக்கு நைட் இங்க தங்கற மாறி பண்ணிடு டீ .. பாவம் ஒரு வாரம் ஊர்லயே இருக்க மாட்டாங்க '
பாலா வீட்ட விட்டு வெளிய வந்தான் ..
Pls share ur votes and comments....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top