பாகம் 46
பாலா கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்டவள் "ஏன் உங்க க்ளோஸ் பிரண்ட் மாலுக்கு உங்க வீட்ல தங்க இடமே இல்லையா.. ஏன் எங்க வீட்ல இருக்க சொல்றீங்க.. " என்று பொறிந்து தள்ளினாள்..
நான் சொன்னா கேட்பியா மாட்டியா
என்று அவன் கோபமாக கேட்கவும்
கேட்கிறேன்.. கேட்டுட்டு தான இருக்கேன்.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. நீங்க எனக்கு மட்டும் எப்பவும் ஓரவஞ்சனை பண்றீங்க.. அது ஏன்னு எனக்குப் புரியல.. ஒருவேளை உங்களுக்கு என்னைப் பிடிக்கலைனா இப்பவே சொல்லிடுங்க.. நான் உங்க லைப்ல டிஷ்பர்ன்ஸா வர மாட்டேன்..
என்றாள் கண்களில் கண்ணீர் வழிந்தபடி...
அப்படிலாம் இல்ல மகதி..நீ நான் சொல்றத முழுசாக் கேளு
நான் இன்னும் பேசி முடிக்கல.. என்னைப் பார்க்கதான் இங்க வந்தீங்கன்னு இப்ப தான் சொன்னீங்க.. ஆனா அதுக்குள்ள மாலதிய இங்க தங்க வைக்கதான் வந்திருக்கிங்கன்னும் சொல்றீங்க..
நீங்க பண்றத எதையும் எங்கிட்ட சொல்றது இல்ல..
நான் எப்பவும் லூசு மாறி பேசறதால எனக்கும் மனசே இல்லைனு நினைச்சிட்டிங்களா.. நான் என்ன மத்தவங்க மாறி எப்பவும் அது வேணும் இது வேணும்னு தொல்ல பண்றனா..
இல்ல எங்கோட மட்டும் தான் பேசனும்னு ரூல்ஸ் போடறனா.. ஜஸ்ட் எனக்காக ஒரு 5 நிமிசம் ஒதுக்க மாட்டிங்கிறீங்கன்னு தான கேட்கிறேன் ..
நான் ஒத்துக்கிறேன் இப்ப நம்ப குடும்பத்துல நிறைய பிரச்சனை இருக்கு.. அதுனால தான் நான் உங்கள தொந்தரவு பண்ணாம இருந்தேன்.. ஆனா நீங்க என்னைப் பொருட்டாவே நினைக்கிறதே இல்ல...
" ஐயோ மகதி " என அவன் தடுக்கவும்
நான் பேசி முடிச்சிடறேன்.. அப்புறம் எதாவது சொல்லி என் வாய அடைச்சிடறீங்க.. நான் அப்படி என்னப் பண்ணேன்.. உங்களுக்காக நான் ஒவ்வொரு தடவையும் பொறுமையாக இருக்கிறேன்.. ஆனா அதையே அட்வேன்டேஜா எடுத்துக்கீறிங்க.. உங்களுக்கு பிடிச்ச மாறி மாற நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க.. சொல்லுங்க " என்றாள் கண்களில் நீர் நிறைந்தபடி..
அவள் இவ்வாறு பேசுவாள் என்று அவனும் நினைக்கவேயில்லை..
என் செய்கை இவளை இவ்வளவு பாதித்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை...
அவன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு " சாரி மகதி.. நான் பண்ணது தப்புதான்.. இனி இப்படி நடந்துக்க மாட்டேன்.. நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்.. இப்படி அழுவாதடா.. " என்று அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான்..
" உன் விசயத்துல உண்மையாவே நான் ரொம்ப ரூடா நடந்துகிட்டேன்.. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடு மகதி .. என் தப்ப திருத்திக்குறேன்டா " என்றான் உண்மையான வருத்தத்துடன் ..
அவன் அவ்வாறு மன்னிப்புக் கேட்கவும் மனம் தாங்காத மகதி " சரி சரி விடுங்க.. நான் எதோ டென்சன்ல பேசிட்டேன்.. வாங்க உங்களுக்கு ஒன்னு வாங்கி வெச்சருக்கேன்.. உள்ள போலாம் " என்றாள் பேச்சை மாற்றும் விதமாக..
என் மேல கோபம் போயிடுச்சா என்றான் பாவமாக
அவனின் முகபாவனையைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு வர " அது இனி நீங்க நடந்துக்கறத பொறுத்து இருக்கு.. " என்றாள் பொய்யான கோபத்தோடு..
அவள் செய்கையில் மனம் மலர்ந்தவன் " உண்மையிலே உனக்கு குழந்தை மனசுதான் மகி..நீ கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கனும்.. என் அழகு தங்க மிட்டாய் " என்று திருஷ்டி கழித்தான்..
அவன் அவ்வாறு செய்யவும் " ச்சீ போங்க.. உங்களுக்கு சரியா கொஞ்சக் கூட தெரியல " என்று அவன் நெஞ்சிலே குத்தினாள்..
" இஇஇ இனிமே கத்துக்கிறேன் மை பிரின்சஸ் " என்று அவள் கைப்பற்றி அருகில் இழுக்கவும் மாலதி வரவும்
சரியாக இருந்தது..
.
" மில்கி ஸ்மைல் ப்ளீஷ் .." என்று அவர்கள் இருவரையும் நோக்கி கையில் போனுடன் வந்தாள் மாலதி..
அவள் வந்ததும் இருவரும் விலகி நிற்கவும், அந்த இடைவெளியில் தான் போய் நின்று கொண்டு " என்ன மிஸ்டர். பாலா நீங்க சாரி கேட்டு பார்த்ததே இல்ல.. செம்ம.. மகதி கல்யாணத்துக்கு முன்னாடியே நல்ல ட்ரெய்னிங் போல " என்றாள் ஏக கடுப்புடன்...
அவள் வேண்டுமென்றே தங்கள் இருவருக்குள்ளும் மூக்கை நுழைக்கிறாள் என்று மகதிக்குப் புரிந்தது..
ஆனால் முன்பு போல மகதிக்கு கோபம் வரவில்லை.. மாறாக சிரிப்புதான் வந்தது.. அவளும் சிரித்துக் கொண்டே
" அவர் எனக்கு மட்டுமே சொந்தமானவர்.. அதனால் என்கிட்ட மட்டும் தான் சாரி கேட்பார்.. இல்லைங்க " என்றாள்
அவர்கள் இருவர் மனநிலையையும் அறிந்தவன் இப்போதைக்கு நாம் அமைதியாக இருந்தாலே போதுமென்றே நல்லது என்று நினைத்து " ஆமாம் " என்று தலையாட்டி விட்டு அர்ஜுனைப் பார்க்க விரைந்தான்..
மில்கி இப்படி நடந்து நான் பார்த்தது இல்ல.. வீனா அவன டென்சன் பண்ணாத மகதி என்றாள் மாலதி
எனக்கு எப்படி நடந்தக்கனும்னு தெரியும்.. நீங்க இந்த வீட்டுக்கு எதுக்கு வந்தீங்களோ அந்த வேளைய மட்டும் பாருங்க.. என்றாள் மகதி..
' நான் என் வேலையத் தான பார்க்கிறேன்டி ' என்று மாலதி மனதில் நினைத்துக் கொண்டாள்..
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
சுஜி இங்க எதுக்கு வந்த " என்றான் கிருஷ் கோபமாக
" இங்க பாரு கிருஷ் நீ எப்படிடா என்னை விட்டுட்டு வந்த.. உங்கண்ணாக்கு தான் அறிவில்லாம உன்னை இங்க அனுப்பிட்டாரு.. அதான் அவர நல்லா திட்டிட்டு உன்னைப் பத்திரமா பார்த்துக்க வந்தேன்டா 😊😊
அவன் நம்பாத மாறி பார்க்கவும் " வாடா வாசல்ல நிக்க வெச்சு பேசிட்டு.. எங்கடா எங்க மாமியார் " என்று அவனை தள்ளிவிட்டு உள்ளே சென்றாள்..
இரத்தினம் அவனை வரவேற்று ஜானகியின் அறையைக் காட்டினார்..
சுஜி மெதுவாக உள்ளே நுழைந்து எட்டிப் பார்த்தாள் . ஜானகி எதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்.. அவளைப் பார்த்ததும் " நீ இங்க என்னப் பண்ற " என்றார்..
அவரின் மீது கோபம் மலையளவு இருந்தும் கிருஷிற்காக வராத புன்னகையை வரவழைத்துக் கொண்டு " நான் கிருஷோட வீடுனு நினைச்சிட்டு வந்துட்டேன் அத்தை..இதோ இப்ப கிளம்பறேன்.. சாரி அத்தைனு வேற சொல்லிட்டேன்.." என்றாள் வருத்தமாக
அவள் அத்தைனு சொன்னதும் மகிழ்ச்சியுற்று " அம்மாடி அப்படிலாம் இல்லடா.. இங்கவா இங்க உக்காரு. உனக்கு சாப்பிட எதாவது எடுத்து வரவா " என்று அவளைக் கைப்பிடித்து அருகே அமர வைத்தார்..
அவரின் இந்த அன்புமுகம் இதுவரை அவள் பார்த்திராததால் அதிர்ச்சியுற்றாள்..
" என்னம்மா சாப்பிடறதே இல்லையா.. உடம்பு எப்படி இருக்கு பாரு " என்றார் அவளின் தலை கோதியபடி..
" சும்மா நடிக்காதிங்க " என்று அவள் உரக்க கூறவும் திகைத்துப் போனார் ஜானகி
" பின்ன என்ன சும்மா சாப்பிடுனு சொன்னா எப்படி.. நீங்களே சமைச்சு ஊட்டிவிடுங்கம்மா " என்றாள் அவரின் கண்ணம் தடவியபடி..
' அம்மா ' என்ற ஒற்றை வார்த்தை அவள் சொன்னதும் மனமும் உடலும் சிலிர்க்க " என் தங்கமே " என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டார்..
ஜானகி புத்திரசோகத்தில் வருந்துகிறார் என்று பாலா சொல்ல, அதை நம்பாத சுஜி இவரை இந்நிலையில் பார்த்ததும்
அது உண்மைதான் எனப் புரிந்து கொண்டாள்..
இரத்தினமும் கிருஷும் இருவரும் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தனர்..கிருஷை ஓரக்கண்ணால் பார்த்தபடி சுஜியுடன் சேர்ந்து சமைத்து முடித்தார்..
கிருஷ் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை..
சுஜி கிருஷையும் இரத்தினத்தையும் சாப்பிட அழைத்தாள்..
ஜானகி அனைவருக்கும் ஆசையோடு பரிமாற கிருஷோ அதனைக் கண்டுகொள்ளாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தான்..
" சுஜி வாசல்ல எனக்கு சாப்பாடு பார்சல் வந்திருக்குப் போய் வாங்கிட்டு வா " என்றான் கிருஷ்..
ஜானகியின் முகம் இதைக் கேட்டு மாறுவதை உணர்ந்து " கிருஷ் ஏண்டா " என்றாள்..
அதற்குள் ஜானகி " எல்லாரும் இங்கிருந்து போங்க எனக்கு யாரும் தேவையில்லை " என்று கத்தினார்..
Friends pls share ur votes and comments ... 😊😊😊
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top