பாகம் 43

பொன்னெழில்.. பெயருக்கு ஏற்றமாறியே பசுமை கொஞ்சும் ஊர்..
அந்த கிராமத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த செல்லப் பெண்தான் ஜானகி...

எந்நேரமும் சிரித்த கலையான முகம்தான் அவளது அடையாளம் .. தன்னை விட 3 வயதே சிறிய பெண்ணாக இருந்தாலும் பிறந்த உடனே தாயை இழந்த இந்திராவிற்கு தாயாக மாறி அவளை அரவணைப்பவள்..

அதனாலே தான் மாணிக்கத்திற்கு ஜானகியென்றால் தனி மரியாதை.. அவரைத் தன் தாயின் ஸ்தானத்தில் வைத்து மரியாதை செலுத்தினான்..

இயற்கையிலே இளகிய மனம் படைத்த ஜானகி, தனக்கு பிறக்கப் போகும் குழந்தைப் பற்றி நிறைய கனவுகள் கொண்டிருந்தாள்.. பிரசவநாளும் நெருங்கிக் கொண்டிருந்தது..

தனது சகோதரியை பார்க்க இந்திரா வந்திருந்தாள்.. தனது காதலுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டாள்.. ஜானகியும் உதவி செய்யவதாக ஒத்துக் கொண்டாள்..

ஜோசப் வேறு மதத்தினைச் சார்ந்தவராக இருந்தாலும் நல்லவர். ஆனால் அவரது தாயாரும் சகோதரியும்
குணத்தில் அந்தளவுக்கு சிறந்தவரல்ல..

இருவரும் ஒன்றாகப் பேசிக்கொண்டு மாடியிலிருந்து இறங்கிவரும் போது இந்திரா தடுக்கிவிழப் போக, தாங்கிப் பிடிக்கச் சென்று தவறுதலாக கீழே விழுந்து விட்டார்..
.
.
.
.
மண்ணை வந்தடையாத அந்த சிசுவினை காரணம் காட்டி இந்திராவினை அனைவரும் மனதால் கொலை செய்து கொண்டிருந்தனர்.. ஆனால் அந்த நிலையிலும் கூட ஜானகி இந்திராவிற்காக " போதும் நிறுத்துங்க.. இந்துவும் என் பொண்ணுதான்.. தயவுசெஞ்சு அவளை ஒன்னும் சொல்லாதிங்க.."
என்று பரிந்து பேசினார்...

நாட்கள் செல்லச் செல்ல ஜானகிக்கு குழந்தை மீதான ஏக்கம் அதிகமானது.. ஆனால் கீழே விழுந்ததால் கர்பப்பை குழந்தையை தாங்கும் திறனை இழந்தது..
இந்நிலையில் வீட்டிலுள்ள அனைவரும் இரத்தினம் உட்பட ஜானகியை மலடி என்ற வார்த்தையால் சாகடித்துக் கொண்டிருந்தனர்..

ஆயினும் ஜானகி அதைப் பொருட்படுத்தாமல் இந்திராவிற்கான திருமண ஏற்பாடை செய்ய ஆரம்பித்தார்..

ஆரம்பத்தில் மாணிக்கம் அதை மறுத்துவிட அவரைக் கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வைத்தார்..

அடுத்த வருடத்திலேயே பாலா பிறந்துவிட்டான்..

அவர்கள் வீட்டில் பிறந்த முதல் வாரிசு.. அவனைக் காரணம் காட்டி ஜானகியை திட்டித் தீர்த்தனர்.. இந்திராவின் மாமியார் ஜானகியிடம் " மலடி " என்று கூறி குழந்தையைத் தரக் கூட மறுத்து விட்டார்..இந்திராவால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை ..

ஜானகி படும்பாட்டை மாணிக்கத்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவும் முடியவில்லை ..

இந்திராவிடமும் ஜோசப்பிடமும் வெறுப்பினைக் காட்ட ஆரம்பித்தார்..

ஒருநாள் ஜானகி அவர்கள் வீட்டிற்கு வந்த நேரம், ஜோசப்பிற்கும் மாணிக்கத்திற்கும் சண்டை முற்றியது..

ஜானகி தான் இதற்குக் காரணம் என்று ஜோசப் தாயார் தவறாகக் கூற அதனைத் தாங்காத ஜானகி அன்றிலிருந்து அந்த வீட்டிற்கு வருவதையே நிறுத்தி விட்டார்..

இந்திரா அவரைப் பார்க்க பலமுறை சென்றும் ஜானகி பார்க்க மறுத்துவிட்டார்..

இரண்டு வருடங்களில் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தாலும் அன்று மாடியிலிருந்து கீழே விழுந்த போது ஏற்பட்ட அடியினாலும் கொஞ்சம் கொஞ்சமாக உடலும் மனதும் பாதிக்கப்பட்டுக் கொண்டே வந்தது..

அவரது நடவடிக்கைகள் மாறுவதை உணர்ந்த இரத்தினம் சிகிச்சைக்காக கேரளா அழைத்துச் சென்றார்..

ஒரு வருட சிகிச்சைக்குப் பின்பு முழுவதும் மாறிய புதிய ஜானகிதான் திரும்பி வந்தார் ..

அந்த ஒரு வருடத்தில் தான் இந்திராவினை மாணிக்கம் வீட்டை விட்டு அனுப்பினார் ..

அன்பை தனது அடையாளமாகக் கொண்டிருந்த ஜானகி அதிகாரத்தினைக் கையிலெடுத்தார்..
அவரது முன்பு அனைவரும் பேச பயந்தனர்..

அவரும் இரத்தினமும் அவ்வூரை விட்டு நகரத்திற்கு வந்து வியாபாரத்தைத் தொடங்கினர்..யாரிடமும் சிரித்துப் பேசுவதையும் நிறுத்திவிட்டு பணத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டார்..

இதற்கிடையில் இந்துவும் ஜானகியும் ஒன்றாக கருவுற, ஜானகி தான் பட்ட வலி அனைத்திற்கும் காரணமாக நினைத்த இந்துவை பழி வாங்க நினைத்தார்..

எதற்காக அவ்வளவு வலிகளையும் அனுபவித்தாரோ அதனையும் பொருட்படுத்தாமல் இந்துவை பழி வாங்க வேண்டும் என்ற தீய எண்ணத்தால் குழந்தையை மாற்றி வைத்தார்..

கிருஷை எந்தக் குறையும் வராமல் இந்திரா பார்த்துக் கொண்டார். ஆனால் அர்ஜூனிற்கு அடிப்படைத் தேவைகளைத் தவிர வேறு எதுவும் தரப்படவில்லை..

ஜானகி அர்ஜூனை முழுவதும் துன்புறுத்த நினைத்தாலும் அவனின் முகத்தைப் பார்க்கும் போது தோற்றுப் போய்க் கொண்டே இருந்தார்..ஆயினும் இந்திராவினைச் சித்தரைவதை செய்வதற்காக சுஜியை அர்ஜூனிடமிருந்துப் பிரிக்க நினைத்தார்..

அதுவும் கிருஷின் காதலுக்கு அர்ஜூன் இடையூறாக வந்ததும் அர்ஜூனிற்கு விபத்து ஏற்படுத்தி அவனைப் படித்தது போதும் என்று கூறி மாணிக்கத்திடம் ஒப்படைத்து விட்டார்..

இந்திராவின் மகிழ்ச்சியான முகத்தினைப் பார்க்கும் போது அவரது நீண்ட நாள் கனவான ' பெற்ற பிள்ளை கண்முன்னே பல நரக வேதனையை அனுபவித்து தற்கொலை செய்து கொண்டே சாக வேண்டும் ' என்பதனை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தார்..

சுஜியிடம் அவன் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அவனை விட்டு விலக வேண்டும் என்று அச்சுறுத்தினார்.. அநாதையான சுஜியால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை ...

அர்ஜூனை விபத்துக்குள்ளாக்கிய கார் டிரைவரை ஜானகி மிரட்டிக் கொண்டு இருக்கும் போது எதேச்சையாக பாலா பார்த்துவிட்டான்.. ஆனால் அப்போது அவனுக்கு ஒன்றும் புரியவில்லை .. ஆனால் மகதி வீட்டில் ஜானகியைப் பார்க்கும் போது அர்ஜூனை சுஜியிடமிருந்துப் பிரித்து மகதியுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக என்று நினைத்தான்..
.
.

கிருஷிற்கு எட்டு வயது இருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் நிறைய இரத்தம் வெளியேறியது.. பாலாவின் இரத்தமும் பொருந்தவில்லை.. அந்த நேரத்தில் ஜானகி எங்கிருந்து வந்தாரோ தெரியவில்லை உடனே இரத்தம் கொடுத்து விட்டுச் சென்றார்..

ஆனால் அப்போது அவரது தாய்மை உணர்வால் இவ்வாறு செய்தார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர்.. அவர் சென்ற பிறகு செய்த டிஎன்ஏ டெஸ்டில் கிருஸ் இந்திரா ஜோசப்பின் குழந்தை இல்லை என்பது உறுதியானது.. ஆனால் ஜோசப் இதை யாரிடமும் தெரிவிக்கவில்லை...

சுஜி இரண்டு பேர் என்பது யாருக்கும் தெரியாது .. ஆதலால் அர்ஜூனிற்கு நிச்சயம் என்றவுடன் வேறொரு பெண்தான் வருவாள் என்று நினைத்திருந்தார்..

ஆனால் சுஜிக்கு  அர்ஜுனின் நினைவால் மன அழுத்தம் அதிகமாகிட, மன அழுத்த நிபுணரான ரோகித்திடம் வந்து அனைத்தையும் ஒப்பிப்பாள் என்று அவர் நினைக்கவில்லை..

ரோகித்திற்கு அர்ஜூன் மற்றும் சுஜி என்ற பெயரைக் கேட்டதுமே கிருஷின் காதலோடு தொடர்புடையதாக தோன்ற உடனே பாலாவிற்குத் தெரிவித்தான்..

அர்ஜூனை பிறந்ததிலிருந்தே பார்த்துக் கொண்டு இருந்தாலும் அவன் மீது பாசம் வரவில்லை..ஆனால் பாலாவினை சிறு வயதிலே தனது குழந்தையாகவே நினைத்திருந்ததால் அவன் தனக்கு எதிராக செயல்பட்டாலும் அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்..

ஆனால் அது ரொம்ப நாள் நிலைக்கவில்லை..இன்று பாலாவினை அடிக்க அடியாளை ஏற்பாடு செய்துவிட்டார்..

ஆனால் இவ்வளவு செய்தாலும் அவரது உடல்நிலையை அவர் எடுத்துவரும் எதோ ஒரு மருந்து சரி செய்வதாகக் கூறி  இன்னும் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டுள்ளது..

ஆரம்பத்தில் அவர் கோபத்தினால் தான் இவ்வாறு நடந்து கொண்டிருந்தப்பதாக இரத்தினமும் நினைத்திருந்தார்..
ஆனால் அவர் மனநோயால்  பாதிப்பு
அடைந்துள்ளார் என்பதை சமீபத்தில் தான் அறிந்து அதற்கான சிகிச்சையளிக்கத் துவங்கியுள்ளார் அதுவும் அவருக்குத் தெரியாமல்..

ஆனால் இப்போது இந்திராவின் நிலையை விட ஜானகியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது..
இந்திராவைப் பழி வாங்க நினைத்து தன்னையே மொத்தமாக அழித்துக் கொண்டிருக்கிறார்..

பாலாவிற்கு இப்போது ஜானகியைக் குணப்படுத்தும் பொறுப்பும் அதிகமாக சேர்ந்தது..

ஜானகியின் மனதில் தற்போது என்ன நினைக்கிறார் என்று அவரே எழுந்தாலொழிய தெரிய வாயப்பில்லை..

அவருக்கு சிகிச்சை அளிக்க ரோகித் அவரது வீட்டிற்கு வந்தான்..

உலகில் மழை பெய்யாத இடம் ?

அடகாமா பாலைவனம் ( Atacama desert )
ஸ்பேனிஸ் ( தென் அமெரிக்கா )

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top