பாகம் 42
மகதி சத்தம் கேட்டு அங்கேயும் இங்கேயும் திரும்பி பார்த்தாள்...பாலாவின் கால்கள் மரத்திற்கு பின்னால் தெரியவும் அவனின் எண்ணத்தை அறிந்து கொண்டாள்..
மகதி பயந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு மயங்கி கீழே விழுந்தாள்..அதை அறியாத பாலா பயந்து போய் அருகில் வந்து அவளை எழுப்பினான்..
" மகதி சாரி மா.. ப்ளீஸ் எழுந்திரு" என்று அவளை உலுக்கினான்..அவனின் பதற்றம் அவளை என்னவோ செய்ய எழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்..
" என்ன டாக்டர் சாரே.. நல்ல ஏமாந்திங்களா. இந்த கிரேட் மஹதியவே ஏமாத்த நினைச்சா இப்படி தான் " என்று கூறி இல்லாத காலரை தூக்கிவிட்டாள்.
பாலா தனது முட்டாள்தனத்தை எண்ணி அவனையே நொந்து கொண்டு முதன்முறையாக அவன் மகதியைப் போல இஇஇஇ என்று மகதியை பார்த்து இழித்து வைத்தான்..
அவனது முகபாவனையை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் மேலும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்..
அவளது சிரிப்பில் சிறிது கடுப்பாக "ஏய்ய் போதும் நிறுத்துமா.. ரொம்ப சிரிச்சு மானத்தை வாங்காத" என்று சலிப்பாக கூறினான்..
இருந்தும் அவள் அடங்காமல் இரண்டு நிமிடம் கழித்தே அமைதி ஆனாள். "என்ன சார் நீங்க தான் சி.பி.சி.ஐ.டி. ஆச்சே.. எப்படி உங்களுக்கு எங்கூட பேசறதுக்கு எல்லாம் நேரம் ஒதுக்க முடிஞ்சுது" என்றாள் முகத்தை திருப்பி கொண்டு..
அவளின் கோபம் நியாயமானது என்பதை உணர்ந்து மெதுவாக அவளது கைகளை பற்றி " என்ன மகதி... உனக்கு தான என்னோட நிலைமை முழுசா தெரியுமே.. அப்பறோம் எதுக்கு நீயும் அம்மா மாறியே கோபப்படற.. சாரி டா" என்றான் பொறுமையாக..
' ஐயோ மகதி.. இவர் இப்டி தான் ஏதாவது பேசி மனச மாத்தி விடுவாரு.. நீ உஷாரா இருந்துக்கோ..நீ கோபமா இருக்க.. அத மறந்துடாத.' என்று தனக்குள்ளே பேசிக்கொண்டாள்..
மகதி இன்னமும் தன் மன்னிப்பை ஏற்காமல் இருப்பதால் அவள் உண்மையாகவே இன்னும் கோபமாக தான் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டு 'இப்ப நான் என்ன செஞ்சா உன் கோபம் குறையும்னு சொல்லுமா "என்றான் பாவமாக..
அவனைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு "
எனக்கு ஆரஞ்சு மிட்டாய் வேணும்.. வாங்கித் தாங்க " என்றாள்....
' என்னது ஆரஞ்சு முட்டாயா.. உலராத மகதி "
"எனக்கு வாங்கித் தந்தா பேசறேன்.. இல்லைனா கைய விடுங்க நான் போறேன்.."என்றாள் கோபமாக..
' காலக் கொடுமை கதிரவா ' என்று தலையில் அடித்து கொண்டான்..இருந்தாலும் மகதி இதுவரை எதுவும் தன்னிடம் கேட்காததால் இதையாவது வாங்கித் தரலாம் என்று நினைத்தான்..
" சரி நீ வீட்டுக்குள்ள போ.. நான் வாங்கிட்டு வரேன்'' என்றான்.
இவர் ஒருவேளை நான் கோபமா இருக்கிறேன்னு நம்பிட்டாரா .. ஐயோ பாவம்.. இவருக்கே எவ்ளோ பிரச்சனை.. இதுல நான் வேற லூசு மாறி எதாவது பண்ணிறேன்..'
" இல்ல..நான் சும்மா தான் சொன்னேன்.. பரவாயில்ல விடுங்க.."என்று அவன் கைப் பற்றி தடுத்தாள்..
"இதுல என்ன இருக்கு.. 5 நிமிசத்துல வந்துடறேன்.. நீ உள்ள போ" என்று சொல்லி விட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்..
' மகதி உன்னை லூசுன்னு சொல்றதுல தப்பே இல்ல.. நீ அத கேக்காம இருந்து இருந்தா அவர்கூட பேசிட்டாவது இருந்து இருக்கலாம்...ச்சீய் நீயே உன் மூஞ்சில நல்லா துப்பிக்கோ' என்றபடி வாசலிலே அவனுக்காக காத்துக்கொண்டு இருந்தாள்.
நேரம் சென்று கொண்டே இருந்தது..அவன் வந்த பாடில்லை.. மஹதிக்கு பயம் வர ஆரம்பித்தது.. இதை பற்றி யாரிடம் சொல்வது என்று புரியாமல் தவித்தாள்..அந்த நேரம் ஜோசப் அங்கே வந்தார்..
" என்னாச்சு மகதி " என்றார்.
மகதியும் அவரிடம் அனைத்தையும் கூற "சரி நான் போய் பார்த்துட்டு வரேன் " என்று சொல்வதற்குள் பாலா வந்து விட்டான்..
மகதி பதறி அடித்துக்கொண்டு அருகில் செல்ல அவனின் தலை மற்றும் கையில் இரத்தம் வருவதைக் கண்டாள்..
அவள் பேச தொடங்கும் முன் அவளின் வாயில் கையை வைத்து "இங்க நடந்தத யார்கிட்டயும் சொல்லாத.. நான் இப்பவே ஊருக்கு போறேன்..யார் கேட்டாலும் திடிர்னு ஹாஸ்பிடல் ல இருந்து கால் பண்ணாங்க.. நான் போய்ட்டேனு சொல்லு "என்றான்..
"அப்பா நீங்க தான் அம்மாவை சமாதானம் பண்ணனும்..எனக்கு அடி பட்டிருக்குனு சொன்னா ரொம்ப பயப்படுவாங்க.. ப்ளீஸ் பா எனக்கு ஹெல்ப் பண்ணுங்க " என்றான்..
அவர் சம்மதிக்கவும் மகதி கையில் மிட்டாயை திணித்து விட்டு சட்டென்று கிளம்பி விட்டான்..
தான் விளையாட்டாக செய்ய நினைத்த காரியம் இவ்வளவு விளைவை ஏற்படுத்தும் என்பதை மகதி அறிந்து இருக்கவில்லை..அவன் வாங்கி கொடுத்த மிட்டாயையே பார்த்துக்கொண்டு பிரம்மை பிடித்தவள் போல நின்று கொண்டிருந்தாள்..
ஜோசப் அவளுக்கு ஆறுதல் சொல்லி உள்ளே அழைத்து சென்றார்..
விடிந்தது..
மாப்பிள்ளை சொல்லாமல் சென்று விட்டார் என்று மாணிக்கமும் பருவதமும் வறுத்தப்பட்டாலும் அதனை வெளிக்காட்டவில்லை..அர்ஜுனுக்கு பாலா முன்னவே சொல்லி இருந்ததால் அவன் நிதானமாகவே இருந்தான்..
ஜோசப். இந்திரா மற்றும் சுஜி மூவரும் சென்னை நோக்கி புறப்பட்டனர்..
மகதி ஓயாமல் பாலாவின் போனிற்கு கால் செய்து கொண்டே இருந்தாள்... ஆனால் நாட் ரீச்சபிள் என்றே வந்து கொண்டிருந்தது..
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
பாலாவின் கார் சென்னையை நோக்கி பறந்து கொண்டிருந்தது..
' ஜானகி மோசமானவர் என்று தெரியும்.. ஆனால் உயிரைப் பறிக்கத்துடிக்கும் அளவுக்கு கொடுரமானவர் என்று பாலா சிறிதும் யோசித்திருக்கவில்லை.. இன்று அனைத்து பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தான்..
ஜானகியின் வீட்டுக்குள் கடுங்கோபத்துடன் நுழைந்தான்..
நாகரத்தினம் அவனைப் பார்த்து
" வாப்பா " என்று அழைத்ததையும் பொருட்படுத்தாமல் ஜானகியை தேடினான்..
ஜானகியோ கூலாக பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்..
அவனைப் பார்த்ததும் " என்ன தம்பி.. சட்டையெல்லாம் ஒரே இரத்தமா இருக்கு.. யார்கூடயாவது சண்டை போட்டியாப்பா " என்றார் போலி அக்கறையோடு..
" இப்ப உங்களுக்கு என்ன வேணும்.. ஏன் இப்படி நடந்துக்கிறீங்க " என்றான் கோபத்தோடு..
" ஓஓ சார் கோபமா இருக்கிறீங்க போல.. ம்ம்.. எனக்கு என்ன வேணும் தெரியுமா.. உங்கம்மாவோட கண்ணீர் வேணும்.. அதும் அவ சாகறவரைக்கும் வேணும் " என்றார் சுட்டுவிரலை ஆட்டியபடி..
" அதான் ஏன்னு கேட்கறேன்.. எங்கம்மா எவ்ளோ நல்லவங்க தெரியுமா...அவுங்கள டார்ச்சர் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்தது.. " என்றான்
" அவளா நல்லவ.. அவ யார் தெரியுமா.. கொலைகாரி.. என் சந்தோசத்தை அழிச்ச கொலைகாரி.. அவள நான் நிம்மதியா இருக்கவே விட மாட்டேன்.." என்று கத்தினார்..
அவர் உணர்ச்சிவசப்பட்டு பேச ஆரம்பிக்க தலைசுற்ற ஆரம்பித்தது..
இரத்தினம் அவர் அருகே வந்து ஊசி ஒன்றினைப் போட்டு அவரை சோபாவில் படுக்க வைத்தார்..
ஜானகியோ ' அவள விட மாட்டேன்.. இந்து நீ அழனும்.. காலமெல்லாம் அழுதுட்டே இருக்கனும் ' என்று புலம்பியபடியே மயக்கமானார்..
பாலா ஜானகியின் நிலையைக் கண்டு ஸ்தம்பித்துப் போனான்.. இரத்தினம் அவனை வெளியே அழைத்துச் சென்றார் ..
" பெரியப்பா அவுங்களுக்கு என்னாச்சு.. ஏன் இப்படி நடந்துக்கிறாங்க.." என்றான் குழப்பமாக..
அவரும் சிறிது நேர அமைதிக்குப் பின்பு பேச ஆரம்பித்தார்..
உலகின் மிக அதிக மழைப்பொழிவை பெறும் இடம் ?
மாசின்ராம் (Mawsynram ) மேஹாலயா
இந்தியா
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top