பாகம் 40
பாலாவும் சுஜியும் தன்னை நோக்கி வருவதைக் கண்டு பதற்றம் அடைந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டான்.
கிருஷ் இங்க என்ன பண்ற.. அம்மா உங்கிட்ட பேசனும்னு சொன்னாங்க.. வா என்று அழைத்தான் பாலா..
அவன் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லை..சுஜியின் கண்கள் அழுது சிவந்திருந்ததை தெளிவாக காட்டின..
" அம்மானா ஜானகியம்மாவ சொல்றீங்களா.. " என்றான் கோபமாக
அவன் பேச்சில் பொறுமை இழந்தவனாக " கிருஷ் இப்ப உனக்கென்ன பிரச்சனை..ஏன் என்ன தண்டிக்கிறேன் என்ற பேர்ல உன்ன நீயே கஷ்டப் படுத்திக்கற.. கொஞ்சம் புரிஞ்சிக்கோடா " என்றான் பாலா..
உங்கள கஷ்டப்படுத்த எனக்கென்ன உரிமையிருக்கு.. நான் என்ன உங்க கூட பொறந்த தம்பியா என்ன ? என்றான் ஏளனமாக..
பாலாவுக்கு வார்த்தை வர மறுத்தது..கடந்த இரண்டு நாளாகவே கிருஷ் வார்த்தையால் அவன் மனதை நோகடித்துக் கொண்டே இருந்தும் அவன் நிலையை புரிந்து கொண்டு அமைதியாகவே தான் இருந்தான். ஆனால் இப்போது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினான்.
தன்னை சுதாரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.. " கூடப் பொறந்தா தான் தம்பியாடா பைத்தியமே.. நீ நினைக்கறதே சரின்னு நினைக்காத கிருஷ்.. இப்ப என்ன நாங்க எல்லாரும் உன்ன வெறுக்கனும் அப்படி தான.. அதுக்காக தான இப்படி முட்டாள் மாறி நடந்துக்கிற. போ நீ எனக்கு வேணா. போ.. நீ என்ன உண்மையாவே என் அண்ணனா நினைச்சிருந்தா என்ன விட்டு போக உனக்கு மனசு வந்திருக்குமா..
அப்பவும் அந்த ஜானகியம்மா சொன்னமாறி தான நடந்துக்கற.. உனக்கு இந்தும்மா எப்படி போனா உனக்கென்ன ? ஆனா அவுங்க தான் உன்னை நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டு பிபி ஏறினது தான் மிச்சம்.. நீ கஷ்டப்படக் கூடாதுன்னு
அதக்கூட உங்கிட்ட சொல்லக்கூடாதுனு சொல்லிட்டு சகஜமா இருக்கிற மாறி நடச்சிட்டு இருக்காங்க..
அதப்பத்தி உனக்கென்ன கவலை.. அவுங்க உன்னோட அம்மா இல்லையே.. ச்சே " என்று தன் கைகளை வேகமாக மரத்தினில் குத்தினான்..
உங்கிட்ட என்ன சொல்லியும் பிரயோஜனமில்ல.. அத சொல்ற உரிமையும் எனக்கில்ல.. நான் உங்கிட்ட தவறா நடந்திருந்தா அதுக்கு மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.. சாரி என்று தன் கைகளை கூப்பி மன்னிப்புக் கேட்டான்..
" மாமா என்ன பண்ணிட்டு இருக்கிங்க.. வாங்க உள்ள போலாம் " என்று அவன் கைகளைப்பிடித்து இழுத்தாள் சுஜி.. அவன் வர மறுக்கவும்
" ச்சே உன் மனசு என்ன கல்லாடா.. உனக்கு கொஞ்சங்கோட பாசமே இல்லையா " என்றாள் கிருஷைப் பார்த்து
அந்த நேரத்தில் இந்திரா வீட்டிலிருந்த படியே " சுஜிம்மா உங்க அம்மா கால் பண்றாங்க .. வா " என்று அழைத்தார்.. அவளும் வேறு வழியின்றி சென்று விட்டாள்..
அவள் சென்ற பிறகு பாலாவும் செல்ல எத்தனிக்க... கிருஷ் பாலாவின் கால்களைப் பிடித்துக் கொண்டான்..
" அண்ணா என்னை மன்னிச்சிடுங்க.. நான் ஒரு முட்டாள்.. என்ன செய்றதுனு தெரியாம செஞ்சிட்டேன்.. ப்ளீஷ்னா " எனக் கெஞ்சினான்..
அவனை நிமிரச் செய்து அணைத்துக் கொண்டான்.. ஆதரவாக தலையை நீவி விட்டு " நீ எந்த விளக்கமும் சொல்லத்தேவ இல்ல..என் கிருஷ் எதுக்காக இப்படி பண்ணானு எனக்குத் தெரியும் .. " என்றான் பாலா
" அண்ணா இல்லன்னா.. உங்கள நான் வேணுன்னே காயப்படுத்திட்டேன். என்னால தானா இவ்ளோ பிரச்சனை.. என்னால தான அர்ஜூன் உங்களவிட்டு பிரிஞ்சு அவ்ளோ கஷ்டப்பட்டான். அதே தண்டனைய நானும் அனுபவிக்கனும்னு நினைச்சேனா.. அதுனால தான்..சாரின்னா " என்று அழுது கொண்டே கூறினான்..
இதுல உன் தப்பு எதுவுமே இல்லடா.. நீ என்னை புரிஞ்சிக்கிட்டல.அது போதும்.. இனி நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஜானகியம்மாக்கு நல்ல பாடம் சொல்லித் தரனும்..புரியுதா
லவ் யூ அண்ணா என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான் கிருஷ்..
பாலாவுக்கு இப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது..
பாலாவும் கிருஷும் கைகளைக் கோர்த்துக் கொண்டு உள்ளே வருவதைப் பார்த்தவுடன் அனைவரின் முகத்திலும் நிம்மதி பரவியது.
கிருஷ் இந்திராவின் அருகில் சென்று அமர்ந்து " இப்ப உடம்பு எப்படிம்மா இருக்கு " என்றான்.
டேய் என்ன ஓவரா பாசங்கொஞ்சற.. இப்ப தான் நான் உனக்கு கண்ணு தெரியறனா.. போடா போ.. உன் ஆள் பின்னாடியே என்றார் சிரித்துக் கொண்டு..
என்ன அத்தை என் கொலுந்த ரொம்ப தான் கிண்டல் பண்றீங்க.. என்று பொய்யான கோபத்தோடு காபி எடுத்துக் கொண்டு வந்தாள் மகதி..
மகதி இவங்கோட கூட்டு சேராத.. ரொம்பக் கெட்ட பையன்.. அப்ரோம் வீணா பாலாகிட்ட திட்டு வாங்கப் போற..
அத்தை நான் உங்கள மாறி..என்னைப் பத்தி கவலையே படாதிங்க.. வேணும்னா உங்க பையனுக்கு அட்வைஸ் பண்ணுங்க என்றாள் பாலாவைப் பார்த்துக் கொண்டு
பாலாவோ வேறு எதோ சிந்தனையில்
இருந்தான்..
அர்ஜூனும் சுஜியும் இப்போது தான் உள்ளே வந்தனர்..
கிருஷ் அவர்கள் இருவரிடமும் தன் வாழ்த்தை தெரிவித்தான்..வீட்டில் பழைய நிலை திரும்புவதை உணர ஆரம்பிக்கும் முன்னரே சுஜி பெட்டியுடன் கீழே இறங்கி வந்தாள் ..
எங்க சுஜி போற என்றார் இந்து..
அத்தை அப்பா உடனே வர சொல்லிட்டாரு.. நான் போய்ட்டு வரேன் என்றாள்..
கிருஷ் அவளை நேராக சந்திக்க முடியாமல் கீழே குனிந்து கொண்டான்..
சரி பாலாவோட கார்ல போறியா என்றார் இந்து ..
இல்ல அத்தை .. உங்களுக்கு பிரச்சினை இல்லைனா கிருஷ கூட்டுட்டு போறேனே என்றாள்..
ஓகேம்மா.. அம்மா அப்பாவ கேட்டதா சொல்லு .. கிருஷ் கூடப் போடா.. ஓவரா நல்ல புள்ள மாறி மூஞ்சிய வெச்சுக்காத..
கிருஷ் நிமிர்ந்து சுஜியைப் பார்த்தான்..
நவீன கம்பர் என்றழைக்கப்படுபவர் ?
மீனாட்சி சுந்தரம்பிள்ளை
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top