பாகம் 39

இருவரும் வீட்டை நெருங்க மணி எட்டானது..விசேசத்திற்கு வந்த தூரத்து உறவினர்களெல்லாம் சென்றிருக்க.. நெருங்கிய உறவினர்கள் மட்டும் சொந்த கதை சோக கதையினை அளந்த படி இருந்தனர்..

கிருஷ் வாசலினைத் தொடும்போதே " அங்கேயே நில்லுங்க ரெண்டு பேரும் " என உரக்கக் கத்தினார் இந்திரா..

கிருஷ்  இந்திராவை பாவமாகப் பார்த்தான்.. ஜோசப் அவரின் மனநிலையை உணர்ந்தபடி " இப்ப என்னாச்சு.. அதான் வந்துட்டோம்ல " என அதட்டினார்..

" ஏன் சொல்ல மாட்டிங்க.. கரெக்டா நிச்சயப் பத்திரிக்கை வாசிக்கிறப்ப இவன் காணாம போயி்ட்டான். அடுத்து நீங்க...  நீங்க இல்லைனு தெரிஞ்சவுடனே என் பையன் முகம் எப்படி வாடிப் போச்சு தெரியுமா .. இதுல சுஜிக்கு வேற உடம்பு முடியாம போயி" என முடிப்பதற்குள் " சுஜியா.. அவளுக்கு என்னாச்சு " என்று பதற்றமாக கேட்டான் கிருஷ்

"  உங்க அண்ணா ஃபீல் பண்ணானு சொன்னது இந்த பாசமலர் காதுல விழுகல. ஆனா சுஜினு சொன்னவுடனே ரோமியாக்கு காது கேட்ருச்சா.." என்றார் இந்திரா கேலியாக..

அவன் இன்று நிதானத்தில் இருந்திருந்தால் இந்திராவை வார்த்தையாலே மடக்கியிருப்பான்.. ஆனால் அவனிருக்கும் நிலைமையில்
வாயில் வார்த்தை வர மறுத்தது..

"  நீ சும்மா இரு இ்ந்து.. தம்பி புள்ளைங்க எல்லாரும் மாடில்ல தா இருக்காங்க நீங்க போயி பாருப்பா " என்றார் பருவதம்

ஒரே தாவலில் மொட்டை மாடியை அடைந்தவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனான் ..

பாலா நடுவில்  அமர்ந்திருக்க அவன் மடியில் அர்ஜூன் ஏதோ கதை பேசிய படி தலை வைத்துப் படுத்திருந்தான். மறுபுறம் கிருஷின் சுஜி அவன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

அவர்களிடமிருந்து சற்றுத்தள்ளி மகதியும் சுஜியும் எதையோ கதை அளந்து கொண்டிருந்தனர்..
அவர்கள் ஒருவரின் முகத்தில் கூட வருத்தத்தின் சாயல் சிறிதுமில்லை..

கிருஷ் என்னதான் தன் இடத்தை விட்டுக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தாலும் அர்ஜூனுடனான பாலாவின் நெருக்கம் அவனை ஏதோ செய்தது.. அது என்ன மாதிரியான என்ற உணர்வினை அவனால் உணர முடியவில்லை..

சுஜியோ அர்ஜூனைப் பார்த்தும் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கிறாள் என்று புரியாமல் தவித்தான்..

அவன் வந்ததை அனைவருக்கும் முன்பு பார்த்த மகதி அவனின் நிலையினைப் புரிந்து கொண்டு அவனருகில் வந்து நின்றாள்.

" கிருஷ் ஏன் இங்கயே நிக்கறீங்க.. வாங்க" என்று அவனைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.

அவனைப் பார்த்த பின்பும் சுஜி அவனைக் காணாதது போல அமர்ந்திருக்க .. அர்ஜூனோ அவனைப் பார்த்ததும் எழுந்து கொண்டான்.பாலா அவனை முறைத்து விட்டு அர்ஜூனின் கைப்பிடித்து மீண்டும் தன்னருகில் அமர வைத்தான்..

கிருஷிற்கு பாலாவின் கோபம் புரிந்தது.. " அண்ணா என்கிட்ட பேசுங்க " என்று குரலில் வருத்தத்தைக் காட்டாமல் கூற முயற்சித்தும் முயன்று தோற்றான்..

அவன் அமைதியாக இருக்கவும் மகதிக்கு சுள்ளென்று கோபம் வந்தது..
" வாயத் தொறந்து பேசுனாதான் என்னவாம் " என்றாள்..

அவளை முறைத்துவிட்டு
பாலா ஏதோ வாய்ப் பேச தொடங்கும் முன்பு பருவதமும் மாணிக்கமும் சிரித்த முகத்துடன் உணவுப் பாத்திரங்களுடன் மேலே வந்தனர்.அவர்களைத் தொடர்ந்து ஜோசப இந்திரா தம்பதியனரும் வந்தனர்..

அனைவரும் அங்கேயே உணவு உண்ணத் தொடங்கினர்.. கிருஷ் பாலாவையும் சுஜியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்....   ஆனால் அவர்களின் பார்வை சாப்பாட்டைத் தவிர வேறெதிலும் இல்லை..

மூத்த ஜோடிகள் தங்கள் பழைய நினைவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

இறுக்கமான முகத்துடன் இருந்த கிருஷைப் பார்த்த
இந்திராவுக்கு ஏதோ தவறாகப் பட்டது..இதுவரை சுஜியுடன் தான் சண்டை என நினைத்திருந்தார்.. ஆனால் பாலாவின் முகமும் கலையிழந்து இருந்ததை வைத்து இங்கு ஏதோ பெரிய பிரச்சனை நடக்கப் போவதை உணர்ந்தார்.. அவரின் முகமும் வாட, அதனைக் கண்ட பாலா தன்னை சமன்செய்து கொண்டான்.

பாலா வேண்டுமென்றே நிலையை சரியாக்க பேச்சுக் கொடுத்தான்.
" டேய் கிருஷ் என்னமோ கான்பரன்ஸ் மீட்டிங் அட்டென்ட் பண்ண போனியே.. சக்சஷ் ஆயிடுச்சா " என்றான் சிரித்துக் கொண்டு

கிருஷ் புரியாமல் விழிக்கவும் " மாமா அவனெங்க அங்க போயிருக்கப் போறான். ஏதோ ஆத்துல பொண்ணுங்கிட்ட வம்பிழுத்துட்டு இருந்தானு கேள்விப் பட்டேன். இதெல்லாம் எங்க உருப்படப் போகுது " என்று கேலியாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தாள் சுஜி. ஆனால் மறந்தும் அவன்புறம் திரும்பவில்லை.

மகதியும் தன் பங்கிற்கு எதாவது சொல்லி வைக்கலாமே என்று
" என்னம்மா சுஜி.. கிருஷ் ரொம்ப அப்பாவி.. ஆனா உங்க மாமா தான் "
என இழுத்தாள்.

அவள் சொல்ல வந்ததை அனைவரும் ஆர்வமாக கவனிக்கவும், ஐயோ இதற்கு மேல் வாக்கியத்தை எப்படி முடிப்பது என்று யோசித்துக் கொண்டே பாலாவைப் பார்த்தாள்..

அவனோ நீ மட்டும் என் கைல மாட்டுன, நீ செத்த என்பது போல ரியாக்சன் கொடுத்துட்டு இருந்தான்..

இந்திரா " ஓய் வாயாடி, இப்ப சொல்லப் போறியா இல்லையா " என அவளின் தலையில் தட்டவும் " ஆஆ கிருஷ விட ரொம்ப அப்பாவினு சொல்ல வந்தேன்.. சாமி என்ன விட்ருங்க " என எழுந்து கீழே ஓடி விட்டாள்..
அவளின் செய்கையால் கிருஷும் சிரித்து விட்டான்..

அந்த வேளையில் அர்ஜூனுக்குப் புரையேற.. அவனருகில் அமர்ந்திருந்த இந்திரா அவன் தலையை தட்டிவிட்டு அருகிலிருந்த டம்ளரை எடுத்து நீட்டினார்.

கிருஷால் இந்திராவின் பாசத்தை மட்டும் பங்கிட முடியவில்லை.. அனைவரும் அமர்ந்திருக்க அவன் மட்டும் எழுந்து சென்று விட்டான்.

பாலாவும் இப்போது தானும் எழுந்து போனால் தவறாகிவிடும் என்று பொறுமை காத்தான்.

கிருஷிற்கு முன்பைவிட இப்போது தான் நரக வேதனையாக இருந்தது. சிலையென தோட்டத்தில் அமர்ந்திருந்த கிருஷின் முதுகில் யாரோ கைவைத்தார். அவன் திரும்பி பார்க்கும் போது மகதி தான் நின்று கொண்டிருந்தாள்.

" என்ன அண்ணி " என்றான்.

" ஏன் கிருஷ் இப்படி இருக்கிங்க.. நடந்தத யாராலும் மாத்த முடியாது. அதுக்காக இப்படியே தான் இருப்பிங்களா.. "

"ப்ளீஸ் அண்ணி. என்னை தொல்லை பண்ணாதிங்க"

"என்ன தொல்லைப் பண்ணாதிங்க.. இங்க உன் முன்னாடி எல்லாரும் சிரிச்சு பேசிட்டு இருக்கிறத தான் பார்த்த. ஆனா நீ போனப்பிறகு இங்க என்ன நடந்துச்சுனு தெரியுமா .. உங்க அண்ணா உனக்காக என்னப் பண்ணாருன்னு தெரியுமா .. ச்சே உங்கிட்ட போய் இத சொல்றேன் பாரு.. அவரு தான் தம்பி தம்பினு உருகுறாரு.. ஆனா நீ " என்று சலிப்பாக சொன்னாள்..

" அண்ணி என்னனு சொல்லுங்க ப்ளீஸ் " என்று கெஞ்சவும் " சாரி கிருஷ்.. அவர் உங்ககிட்ட எதும் சொல்லக்கூடாதுனு சொன்னாரு.. நா உளரிட்டேன்.. ப்ளீஷ் இனி எதுவானாலும் அவர்கிட்டயே கேட்டுக்கோங்க " என்று சொல்லி நகர்ந்து விட்டாள்.

அவன் ஆள் அரவம் கேட்டு திரும்பிப் பார்க்கவும் பாலாவும் சுஜியும் வந்து கொண்டிருந்தனர்..

காஸிரங்கா தேசிய பூங்கா ( அஸ்ஸாம் ) - ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top