பாகம் 37

கையில் மலர்க்கொத்துடன் உள்ளே நுழைந்த சுஜி,  வாசலில் நின்ற இந்திராவிடம் " என்ன மாமியாரே.. எங்க உங்க தூங்கு மூஞ்சிப் பையன்.. என்ன கூட்டிட்டு வரத விடு சாருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை " என வந்ததும் பொறிந்து தள்ளினாள்..

" சரி சரி உள்ள வா.. அவன அப்ரோமா ரெண்டு பேரும் சேர்ந்து திட்டிக்கலாம்.. இப்ப உள்ள போயி பாலாவ விஷ் பண்ணு " என்றார் இந்திரா

சுஜியைப் பாரத்தவுடனே அவளருகில் வந்தான் பாலா..

" மாமா சூப்பரா இருக்கிங்க " என்று சொல்லி முடிப்பதற்குள் " நான் உங்கிட்ட முக்கியமான விசயம் பேசனும் வா " என்று அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்து செல்ல எத்தனித்தான்..

ஆனால் அதற்குள் மாணிக்கம் " பாலா.. இந்தப் பொண்ணு தா சின்ன மருமகளா.. முன்னாடியே வந்திருந்தா அர்ஜூனோட சேர்த்து கிருஷ் தம்பிக்கும் நிச்சயத்த வெச்சிருக்கலாம் " என்றார்..

சுஜி அவரின் காலில் விழுந்து வணங்கிவிட்டு " ஐயா நீங்க மகதியோட அப்பா தான.. அப்ப எனக்கும் அப்பா முறைதான்.. ம்ம்.. ஓகே அப்பா. அது யாரு அர்ஜூன் " என்றாள்.. அவள் என்னமோ எதார்த்தமாக தான் கேட்டாள்.. ஆனால் பாலாவுக்குத் தான் பெரியதாக தெரிந்தது..

" ஓ அதுவா.. அவன் என்னோட மச்சான் பையன் மா.. வா உன்னை அவனுக்கு அறிமுகம் படுத்தி வைக்கிறேன் " என்று அழைத்து சென்று வி்ட்டார்.

பாலாவும் இனி தன்னால் நடப்பதை எதையும் தடுக்க முடியாது என்பதை உணர்ந்தான்..

" அர்ஜூன்.. இந்தப் பொண்ணுதான் கிருஷ கட்டிக்கப் போறா.. " என்று பின்புறம் திரும்பி தனது சுஜியுடன பேசிக் கொண்டிருந்த அர்ஜூனின் தோள் தொட்டு திருப்பினார்..

அரஜூன் புன்னகை மாறாமல் திரும்ப சுஜியோ அவனைப் பார்த்த அந்த நொடி உலகமே ஸ்தம்பித்ததை போல உணர்ந்தாள்..சுத்தியலால் யாரோ தலையில் அடித்ததை போன்று உணர அப்படியே மயங்கி கீழே சரிந்தாள்..

அவள் மயங்கி விழவும் அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டனர்..

அனைவரை விடவும் " சுஜி.. சுஜி என்னம்மா ஆச்சு.. ப்ளீஸ் யாராவது தண்ணி கொண்டு வாங்க.. என்னங்க டாக்டருக்கு போன் பண்ணுங்க..  " என்று பதற்றத்துடன் கூறியது இந்திரா இல்லை ஜானகி தான்..

அவரின் பதற்றத்தில் அனைவரும் இன்னும் பீதியாக,
பாலா அவர்களை விலக்கிவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டு மகதியி்ன் அறைக்குள் சென்றான்..
மின்விசிறியை ஆன் செய்து விட்டு சன்னல்களை திறந்து விட்டான்..
மகதியை மட்டும் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டு கதவினை சாத்திவிட்டான்..

" சுஜி.. அவுங்க எதுக்கு என்னைப் பார்த்தவுடனே மயங்கிட்டாங்க.. " என்றான் அர்ஜூன் ..

" எனக்கு மட்டும் எப்படிடா தெரியும்.. ஆனா அந்தப் பொண்ணு என்னோட காலேஜ் தாண்டா.. " - சுஜி..

" அவுங்க பேர் கூட சுஜியா "

" ம்ம்.. அது இருக்கட்டும்.. உங்கம்மா..எதுக்கு அந்தப் பொண்ணு மயக்கம் போட்டவொடனே அப்படி துடிச்சாங்க.."

" தெரில... எங்கம்மா இப்படி யாருக்காகவும் ஃபீல் பண்ணி பார்த்ததே இல்ல.."

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
" என்னங்க பயமா இருக்கு.. சுஜி எதாவது தகராறு பண்ணிட்டானா..எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சிடுங்க.. " மகதி

" எதும் ஆகாது" என்று சொல்லியபடியே சுஜியின் முகத்தில் நீரைத் தெளித்தான்..

கண் விழித்த சுஜி பேயறைந்ததை போல எழுந்து அமர்ந்தாள்..
" சுஜி ஒன்னும் ஆகல.. ரிலாக்சா இரு " என்று தலையை நீவினான்..

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.. " இங்கப் பாரும்மா..சில விசயங்கள் நம்ப முடியாம வாழ்க்கைல நடக்கலாம்.. அத ஏத்துக்கிட்டு வாழ்றதுதான் புத்திசாலித்தனம்.. " அவள் புரியாமல் பார்க்கவும் " நீ யாரா உயிருக்குயிரா காதலிச்சு அவன் செத்தது தெரிஞ்சதும் உன்னையே அழிச்சிக்க சூசைட் பண்ணிக்க டிரை பண்ணியோ..அவனுக்கு உன்னை யாருன்னு தெரியாதுங்கறது தான் உண்மை.."

அவள் பாலாவையே தொடர்ந்து பார்க்கவும் " இங்க பாரு சுஜி.. அர்ஜூன் மேலயும் தப்பில்ல.. அவன் உன்ன விரும்பல..அவன் அந்த சுஜியப் பத்தி பேசிட்டு இருந்தத நீதான் உன்னப் பத்தி பேசரானு நினைச்சிட்டு தப்பா உன் மனசில ஆசைய வளர்த்துகிட்ட.. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் உனக்கு எதிரா இருந்திடுச்சு..".

சுஜி கண்களைத் துடைத்துக் கொண்டு எதுவோ தெளிவு பெற்றவளாய் " இப்ப கிருஷ் எங்க " என்றாள்

" சுஜி ப்ளீஸ் இதுல அவனுக்கு எந்த சம்பந்தமும் இல்ல.. "

அவன் எங்கனு கேட்டேன்

அவன் கோவிச்சுட்டு போயிட்டான்..அவனால தான் எல்லாப் பிரச்சனையும்னு தப்பா புரிஞ்சிட்டு போயிட்டான்..

அவள் நம்பாத மாறி பார்க்கவும் " சுஜி உண்மைய புரிஞ்சிக்கோ.. இப்போதைக்கு அவன்தான் ரொம்ப வலிய அனுபவிச்சிட்டு இருக்கான்.. அவன் ரொம்ப பாவம் மா..ப்ளீஸ் உன்னத் தவிர வேற யாரும் அவன சரி பண்ண முடியாது.. "

" உங்க தம்பிக்காக பேசறீங்களா.. அன்னைக்கு என்னோட கண்ணு முன்னாடியே அர்ஜூன் ஆக்சிடன்ட் ஆயி செத்துட்டானு சொன்னாங்களே.. அது கூட நான் தப்பா புருஞ்சிக்கிட்டேனா.. நீங்க கூட இப்படி கேவலமா நடந்துக்கிறிங்களா.ச்சே..உங்களப் பார்க்கவே அருவருப்பா இருக்கு.." என்று சொன்னவுடன் மகதி டென்சனாகி ஓங்கி அறைந்து விட்டாள்..

" இங்க நடக்கிற ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆணிவேரே நீதான்டி..நீ மட்டும் அர்ஜுன் அத்தான லூசு மாறி விரும்பாம இருந்தினா அந்த ஆக்சிடன்டே நடந்திருக்காது..அவரு தம்பிக்காக பேசறாரா..நல்லா தெரிஞ்சிக்க.. கிருஷ் ஒன்னும் அவர் தம்பியல்ல.. அர்ஜூன் தான் அவரோட சொந்த தம்பி..

" இது என்ன புதுக் கதை..இப்படிலாம் சொன்னா கிருஷ் நல்லவனாயிருவானா"

நீ என்ன வேணா நினைச்சுக்க.எனக்கு தெரிஞ்சு கிருஷ் பண்ண ஒரே தப்பு உன்னப் போய் லவ் பண்ணான் பாரு அதான்.. - மகதி..

இப்ப என்ன சொல்றீங்க.. நான் தா எல்லாத்துக்கும் காரணமா.. கடவுளே.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குது.. நான் காதலிச்சது தப்பா... நான் காதலிச்ச ரெண்டு பேருமே துரோகம் பண்ணிட்டாங்க நான் என்ன பண்ணட்டும் மாமா.. " என்று பாலாவின் தோள்களைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்..

பாலா " உன்மேலயோ இல்ல கிருஷ் மேலயோ எந்த தப்பும் இல்ல..எல்லாத்துக்கும் காரணம் ஜானகியம்மா தான்.." என்றான்

உலகில் தோன்றிய முதல் பறவையின் பெயர்
ஆர்க்கியாப்டிரிக்ஸ் ( archeoptryx )

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top