பாகம் 36

அர்ஜூன் சுஜியின் கையைப் பிடித்து உள்ளே கூட்டி வந்தான்..

மாணிக்கமும் பருவும் அவனை மகிழ்ச்சியுடன் பார்க்க மகதியோ ' எங்கிட்ட சொல்லாம மறைச்சிட்டல.. மகனே நீ செத்த ' என்ற ரியாக்சன் கொடுத்துக் கொண்டு இருந்தாள்..

அர்ஜீனின் அப்பா, அவர்கள் இருவரையும் ஆசிர்வாதம் செய்தார்.. ஜானகியோ பேயறைந்ததை போல நின்று கொண்டிருந்தார். அவரது கன்னத்தில் யாரோ அறைந்ததற்கான கைத்தடம் தெறிந்திருந்தது..

ஆனால் இவையனைத்திற்கும் காரணமான பாலாவையும் அவனது உடன்பிறப்பையும் அங்கு காணவில்லை..

அர்ஜுனின் சுஜியை அவன் அனைவருக்கும் அறிமுகம் செய்து கொண்டிருந்தாலும் அவனது கண்கள் பாலாவைத் தான் தேடிக் கொண்டிருந்தன..
சிறிது நேரத்தில்
" மகதிம்மா.. அண்ணா எங்க " என்று வினவினான் அர்ஜூன்

அவனுக்கு பதிலளிக்க முடியாமல் தயங்கிய மகதி " உங்ககிட்ட  யாரும் பேசறதா இல்ல.. எங்கிட்ட சொல்லாம அவர்கிட்ட மட்டும் சொன்னிங்கள்ல.. இப்பவும் அவர்கிட்டயே சொல்லிக்கோங்க.. நான் போய் சுஜிகிட்ட போய் பேசறேன் " என்று சொன்னவுடன் நில்லாமல் தனது தாயுடன் பேசிக் கொண்டிருந்த சுஜிக்கு அருகில் சென்று நின்று கொண்டாள்..

அர்ஜூன் பாலாவினைத் தேடி மாடிக்குச் சென்றான்.. அங்கே

கிருஷ் நான் சொல்றத புரிஞ்சிக்கோடா.. - பாலா

நான் நல்லா புரிஞ்சிட்டேன்.. இனி அவளோட முகத்தில் நான் எப்படி முழிப்ப..நான் இருந்தும் இந்த நிச்சயத்த ஏன் நிறுத்தலன்னு கேப்பால..அதுக்கு நான் என்ன சொல்னும்னு சொல்லுங்க..

சுஜி எடுத்து சொன்னா புரிஞ்சிப்பாடா.. அவகிட்ட நானே பேசறேன்..அவ மனசில இப்ப நீ மட்டுந்தான்டா இருக்க..அதுக்குனு நீ எங்கள விட்டு போறேன்னு சொல்றியேடா..ப்ளீஷ் கிருஷ் நீயில்லைனா அம்மா வோட நிலைமைய நினைச்சுப் பார்த்தியா..

அதெல்லாம் நினைச்சுப்பார்த்து தான் சொல்றேன்.. நான் யாரோட அன்புக்கும் தகுதியானவ இல்ல.. இங்க நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் நான் மட்டும் தான் காரணம்.. நான் போனா எல்லா சரியாயிடும்..தயவுசெஞ்சு என்ன போக விடுங்க..

நீயென்ன அண்ணானு நினைச்சினா இப்படி பேசுவியாடா

அந்த நினைப்பு கொஞ்சம் இருக்கிறனால தான் இங்க நின்னு பேசிட்டு இருக்கேன்.. நீங்க என்ன தம்பினு மனசுல ஒரு ஓரமாவாது நினைச்சிருந்தா நான் போறது அம்மாகிட்ட சொல்லிடாதிங்க..நான் கிளம்பறேன்..

இதற்கு மேல் அவனை சமாதனப்படுத்தும் வழி தெரியவில்லை..அவனை போக விடாமல் கைகளைப் பிடித்துக் கொண்டு " என்னோட நிச்சயத்த பார்த்துட்டாவது போடா " என்றான் கண்களில் நீர் வழிந்தபடி..

அவன் கைகளை விடுவித்தவாரே " ஏன் அதுக்குதான் உங்கள அண்ணா அண்ணானு சொல்லிக்கிட்டே ஒருத்தன் இருக்கானே .. என்னையே தொல்லை பண்றீங்க " என்று முகத்தில் அடித்தமாறி கூறிவிட்டு கீழே இறங்கினான்..

இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூனுக்கு தலையும் புரியவில்லை .. வாலும் புரியவில்லை ..ஆனால் தன்னால் தான் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்தான்..

வானத்தைப் பார்த்து நின்று கொண்டிருந்த பாலாவின் தோள்களைத் தொட்டான்..அவன் திரும்பி அர்ஜூனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான்..

ஊரையே கட்டியாளும் தனது மாமனிடம் எதிர்த்து பேசி சவால் விட்டபோதும், எதிரில் உள்ளவர்களை தன் முன்னே வாய்த்திறக்க விடாமல் கூட  பயமுறுத்தி வைத்திருந்த தனது அம்மாவையே அவன் முன்னால் பேச முடியாதவாறு கட்டுப்படுத்தி வைத்திருந்த போதும் பாலாவின் தைரியத்தையும் ஆற்றலையும் கண்டுவியந்தவன் தான் இந்த அர்ஜூன்.. அப்படிப்பட்ட அந்த ஆறடி ஆண் மகன் இவ்வாறு மனமுடைந்து அழும்போது அவனை எவ்வாறு ஆறுதல் படுத்துவது என்பதை தெரியாமல் விழித்தான்..

சிறிது நேரத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட பாலா " அர்ஜூன் இங்க நடந்தத யார்கிட்டயும் சொல்லாத " என்று சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டான்..

அவன் கீழே வரும்போது " பாலா.. அந்த கிருஷ் பயல ஆளையே காணாம்டா.. எங்க போனானே தெரில.. சுஜி வேர ரெயில்வே ஷ்டேசன் வந்துட்டாலாம்.. வந்து கூட்டிட்டு வரதுக்கு அவனுக்கு கால் பண்ணா நாட் ரீச்சபிள்னு வருதாம்.. அவன சீக்கிரம் கூட்டிட்டு வரச் சொல்லு.. நிச்சயத்துக்கு வேற டைம் ஆச்சு " என்று தன் பாட்டில் சொல்லிக் கொண்டு சென்ற இந்திராவிற்கு ' இனி திரும்பியே வரமாட்டான் ' என்பதை எவ்வாறு உரைப்பது என்று நினைக்கும் போதே இதயத்தைக் கிழித்து விடுவது போல இருந்தது..

அய்யர் வந்து நிச்சயப்பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தார்..
மணமக்களான பாலாவின் முகத்திலும் சரி மகதியின் முகத்திலும் சரி சிறு துளிகூட மகிழ்ச்சியில்லை..

அர்ஜூனோ இரண்டு வருடம் கழித்து தனது காதலி கிடைத்த சந்தோசத்தை கூட அனுபவிக்க முடியாதவாறு பாலாவின் சோகமானது அவனையும் தாக்கியிருந்தது..

" அர்ஜூன் என்னாச்சு.. ஏன் நீ சோகமா இருக்க.. இந்த நிச்சயத்துல விருப்பமில்லையா " என்றாள் சுஜி..

" ஏய் அப்படிலாம் இல்லடி.. ஆனா எதோ ஒண்ணு இங்க தப்பா நடந்திட்டு இருக்கிற மாறி தோணுது அதான் "

" ஆமாடா.  பாரேன் நம்மள சேர்த்து வெச்ச பாலா சாரும் மகதியும் கூட ரொம்ப டல்லா இருக்காங்க.. நாம அவுங்களுக்கு எதாவது வகையில ஹெல்ப் பண்ணியே ஆகனும்டா..எப்பவும் போல தத்தியா நிக்காம எதாவது ஐடியா கொடு.. " என்றாள் தனது வழக்கமான குழந்தைத்தனத்தோடு..

அவளது பேச்சில் நம்பிக்கையடைந்தவனாய் " நீ எங்கோட இருந்தா போதும் சுஜி.. எல்லா பிரச்சனையையும் தீர்த்திடலாம் " என்றான் அவளது கள்ளங்கபடமில்லா முகத்தைப் பார்த்து..

இவர்களது பேச்சினைத் தடுத்து பருவதம் இருவரின் கைகளிலும் மோதிரத்தினைக் கொடுத்தார்..அப்போது தான் கவனித்தனர் பாலாவும் மகதியும் ஏற்கனவே மோதிரத்தை மாற்றியிருந்ததை..

இருவரும் தனது காதல் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் மகிழ்ச்சியாக மோதிரத்தினையும் மாலையையும் மாற்றிக் கொண்டனர்..

எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரம்.. வாழ்வின் முக்கிய தருணம்.. ஆனால் அதனை அனுபவிக்க முடியாமல் செய்த தனது அத்தையை கொன்று விடலாமா என்றளவுக்கு கூட யோசித்து விட்டாள்..
மகதி ..

தனக்கிருக்கும் கஷ்டத்தினை மறைத்து பொய் புன்னகை வீசிக் கொண்டிருந்த பாலா மகதியின் மனநிலையினை அறிந்து அவள் விரல்களுக்குள் தன் விரலைப் புதைத்து அவளுக்கு ஆறுதல் கூறினான்..

அந்த நேரத்தில் கால் டேக்சியில் இருந்து இறங்கி மலர்ச்செண்டுகளுடன் வீட்டிற்குள் வந்தாள் சுஜி...

     ஒரெழுத்து ஓர் மொழி

கா      - சோலை
கூ      - பூமி
சோ   - மதில்
மா      - விலங்கு, பெரிய
வே     - உளவு

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top