பாகம் 35
அர்ஜூனைப் பற்றி கேட்டவுடன் " அர்ஜூன நான் தான் டவுனுக்கு பரம்பரை நகையெல்லாத்தையும் பாலிஸ் பண்ணி வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்..நைட்குள்ள வந்திடுவான் பா.. " என்றார் பரு...
" என்னாச்சு கிருஷ் ஏன் வந்ததிலிருந்து ஒரு மாறியா இருக்க "என்று தயக்கத்துடன் பாலா அவனின் தோள் மீது கைவைத்துக் கேட்டான்..
யாருக்கும் தெரியாமல் அவனது கையை மெதுவாக தட்டிவிட்டு " நான் நல்லாத்தான் இருக்கேன் டாக்டர் சார் " என்றான் பொய்யான சிரிப்போடு..
பாலாவுக்கு கிருஷ் தனது கையை விட்டு போய்விடுவானோ என்ற பயம் ஏற்பட்டது.. கிருஷ் தனது கண்களை நேராக கூட பார்த்து பேச மாட்டேன் என்கிறானே ஒருவேளை எது அவனுக்கு தெரியக் கூடாது என்று இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த உண்மை அவனுக்குத் தெரிந்து விட்டதோ ... அவனையே அறியாமல் அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தது..

அத்தை அர்ஜூன் இங்க எத்தனை வருசமா தங்கியிருக்காரு - கிருஷ்..
" என்ன கிருஷ் எங்கள எல்லாம் கேட்காம வந்ததிலிருந்தே அர்ஜூனப் பத்தியே கேட்டுட்டே இருக்க " என்றார் மாணிக்கம்..
கிருஷ் எதுவும் பேசாமல் இருக்கவும் " அதில்லப்பா சேம் ஏஜ்ஜா இருந்தா ஜாலிய பேசிட்டு இருக்கலாம்ல.. அதுக்குதான கிருஷ் " என்று சமாளித்தாள்..மகதி..
" நீங்க சொல்லுங்க அத்தை " என்றான் விடாப்பிடியாக..

பருவும் எதனைப்பற்றியும் யோசிக்காமல் பேச ஆரம்பித்தார்.. " ரெண்டு வருசமா இங்க தான் இருக்கான்.. எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வான்.. மகதி இல்லைனா கூட நாங்க இருந்துக்குவோம்.. அவன் இல்லைனா தான் எனக்கும் அவருக்கும் கையும் காலும் ஓடாது.. " என்று அடுக்கிக் கொண்டே போனார்
அவர் பேச பேச கிருஷின் முகம் மாறிக் கொண்டே சென்றது..
பாலா இதற்கு மேல் பொறுக்க முடியாமல் " கிருஷ் வா வெளிய போய்ட்டு வரலாம்.." என்று அழைத்தான்..
" இப்ப தான வந்திருக்கிறோம்.. அர்ஜூன் வந்ததுக்கு அப்ரோம் ஒன்னா போயிக்கலாம் " என்றான் பாலாவைப் பார்க்காமலே..
அதற்கு மேலே அங்கிருக்க பிடிக்காமல் எழுந்து சென்று விட்டான்..
ஜோசப் இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை கண்டு கொண்டு தான் இருந்தார்..
பின்பு அனைவரும் சாப்பிட்டு ஓய்வெடுக்க சென்றனர்..
மகதி பாலாவைப் பார்க்க சென்றாள்..
" அத்தான் நீங்க ஏன் ஒருமாறியாவே இருக்கிங்க.. கிருஷ நினைச்சா "..
அவன் ஆமென்று தலையாட்டிவிட்டு " அர்ஜுன பார்த்தா அவன் என்ன பண்ணுவானு பயமா இருக்கு "
இப்ப யோசிச்சு என்ன பண்றது.. இத முன்னாடியே உங்களுக்குத் தெரியலையா.. நாளைக்கு நிச்சயத்துல என்ன பண்ணுவீங்க
அதான் தெரியல.. அவனுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சானு சந்தேகமா இருக்கு..
என்னைக்கு இருந்தாலும் தெரியதான போகுது..
இல்ல.. அந்த உண்மை அவனுக்கு தெரியவே கூடாதுனு தான நான் இவ்ளோ கஷ்டப்பட்டேன்.. அவன் கஸ்டப்படறத என்னால பார்க்க முடியாது மஹி..
எதையும் நினைச்சு ஃபீல் பண்ணாதிங்க.. இதுவும் கடந்து போகும்னு நினைங்க..
ம்ம்.. கிருஷ் என்ன பண்றான்..
அவரு அர்ஜூன் அத்தானோட ரூம்ல தான் இருக்காரு..
இவங்க பேசிட்டு இருக்கிற சமயத்துல அர்ஜூன் வீட்டுக்கு வந்துட்டான்..நகைய பரு கிட்ட கொடுத்துட்டு டயர்டா இருக்குனு ரூம்க்கு போய்டான்..
பாலாவும் மகதியும் அவன் பின்னாடியே போனாங்க..
அர்ஜூன் கதவ திறந்துட்டு உள்ள போகும் போது கிருஷ் அவன் டைரிய படிச்சிட்டு இருந்தான்..
" யார் நீங்க.. இங்க என்ன பண்றீங்க " என்று கேட்டுக் கொண்டே டைரியை பிடுங்கினான்..
கிருஷ் அவனைப் பார்த்ததும் புன்னகைத்தான்..
ஹலோ யாருங்க நீங்க.. எதாவது சொல்லுங்க..
நான் கிருஷ்.. நாளைக்கு உங்களுக்கு தான் என்கேஜ்மென்டா.. பொண்ணு பேரு சுஜியா..என்றான் வருத்தமாக..
கிருஷா உங்களப் பத்தி பாலா அண்ணா நிறைய சொல்லிருக்காரு.. உங்களப் பார்த்ததுல ரொம்ப சந்தோசம்..
ஓகே நீங்க ரொம்ப டல்லாயிருக்கிங்க.. கொஞ்ச நேரம் ரெஷ்ட் எடுங்க.. நாம அப்ரோம் பேசலாம் என்று சொல்லிவிட்டு உடனே வெளியேறிவிட்டான்..
கிருஷின் இந்த செயலால் அவன் மனதில் என்ன நினைக்கிறான் என்பதை பாலாவால் புரிந்து கொள்ள முடியவில்லை ..பாலாவும் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விட்டு விட்டான்..
அடுத்த நாள் காலை அங்கே இருப்பவர்களின் அனைவரது வாழ்க்கையையும் மாற்றப்போவதை உணராமல் அதற்காக காத்திருந்தனர்..
நிச்சயதார்தத்தி்ற்கு தேவையானவற்றை பருவும் இந்திராவும் எடு்த்து வைத்துக் கொண்டிருந்தனர்.
ஜானகியும் அவரது கணவர் நாகராஜனும் கூட வந்துவிட்டனர்..

ஜானகி சந்தோசமாவே இருந்தார்..
ஒருபுறம் மகதிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது..
மறுபுறம் அர்ஜூன் " அண்ணா என் வாழ்க்கைல இதுவரைக்கும் எந்த சந்தோசத்தையும் அனுபவிச்சுது இல்ல.. இப்பவும் நான் உங்க மேல இருக்கிற நம்பிக்கைல தான் இதுக்கு ஒத்துகிட்டேன்..சுஜி கண்டிப்பா வருவால்ல " என்று பாலாவின் கைகளைப் பிடித்து சொல்லிக் கொண்டிருந்தான்...
" கவலைப்படாத.. உன்னோட சுஜி உனக்குத்தான்.. " என்று வாக்குறுதி கொடுத்தான் பாலா..
இவையனைத்தையும் கிருஷ் அருகில் நின்று கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.. ஆனால் அவன்முகத்தில் கோபம் இல்லை..
மகதியோ இன்று என்ன ஆகுமோ என்ற பயத்தில் ஆழ்ந்து இருந்தாள்..
ஊர்க்கார பெண் ஒருத்தி ஜானகியிடம் " என்ன ஜானகியம்மா.. உங்க மருமகள கண்ணுலையே காட்டமாட்டீங்க போல.. " என்றாள்..
' எனக்கே இன்னும் தெரியலயே.. சுஜிய நாம தான் மும்பைல மீட்டிங்னு பேர்ல லாக் பண்ணி வெச்சிருக்கோமே.. இந்த பாலா யாரக்கூட்டிட்டு வரப் போறான்னு தெரிலயே.. எவளா இருந்தா என்ன அர்ஜூனுக்கு அவளப் புடிக்காது.. வேணானு தான் சொல்லப்போறான்.எனக்கு அது போதும்...' என மனதில் நினைத்துக் கொண்டார்..ஜானகி..
அப்பொழுது " பொண்ணு வந்தாச்சு "
என்று வாசலில் யாரோ குரல் எழுப்ப, வீட்டிலுள்ள அனைவரும் வெளியே வந்தனர்..
அர்ஜூனுக்கு இதயம் வேகமாக துடித்தது..இரண்டு வருடங்கள் கழித்து சுஜியைப் பார்க்க போகிறோம் என்று..
முதலில் ரோகித்தும் கீதாவும் இறங்க..பின்பு அனுவுடன் சுஜியும் இறங்கி வந்தாள்..
அவளைக் கண்டவுடன் ஜானகிக்கு கோபம் தலைக்கேற அவளை அடிக்க கையினை ஓங்க நாகராஜன் வழுக்கட்டாயமாக அவரை இழுத்து சென்று விட்டார்..
" அண்ணா ரொம்ப தேங்க்ஸ் " என்று சொல்லிவிட்டு சுஜியின் அருகில் சென்றான்..

இருவர் கண்ணிலும் சொல்ல முடியாத சோகம் தெரிந்தது ..இருவருக்கும் தனிமை கொடுக்க நினைத்து அனைவரும் உள்ளே சென்று விட்டனர்..
" ஏன் டி என்ன விட்டு போன.." என பலார் என்று அறைந்தான்..அர்ஜூன்..
" நீயேன்டா உங்கம்மா பேச்சக் கேட்ட " என இவளும் திருப்பி அறைந்தாள் ..
" ஐ லவ் யூ டி எரும " எனக் கட்டிக் கொண்டான்..
" சாரி அர்ஜூன் .. உன்ன நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல.. இனி யாருக்காகவும் உன்ன விட்டுக் கொடுக்க மாட்டேன்டா..சரி வா உள்ள போலாம் " என்றாள் அவனிடமிருந்து விலகியபடி...

அதே நேரத்தில் கிருஷிற்கு அவனது சுஜியிடமிருந்து போன் வந்தது . அவன் அதனைக் கட் செய்து பிளாக் லிஸ்டில் போட்டான்..
இந்தியாவின் மனித கணினி என அழைக்கப்படுபவர் ?
சகுந்தலாதேவி
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top