பாகம் 29

அர்ஜூன் அதிர்ச்சியாக பார்க்க.. " ஆமா மாணிக்கம்.. இத்தன நாள் உம்பொண்ண இந்த பையனுக்கு கட்டித்தரேனு சொல்லிட்டு எங்க இந்த பையன ஆச காட்டி ஏமாத்திட்டியோனு வருத்தப்பட்டேன்.. இப்ப அந்த கவலையில்ல.. நீ சொன்னமாறியே உன் மாப்பிள்ளை பெரிய ஆளுதான்.. நீ செய்ய வேண்டிய வேலைய இவரு பாத்துட்டாரு " என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர்..

அவர் அவ்வாறு சொன்னதும் மாணிக்கம் பெருமையாக பாலாவைப் பார்த்தார்.. ' கவலைப் படாதிங்க நான் இருக்கேன் ' என்பதுபோல் தலையை ஆட்டினான் பாலா..

அர்ஜூன் பெரியவர்களுக்கு முன் எதிர்த்து பேச முடியாமல் பொறுமையாக இருந்தான்.. " ஏன் மாணிக்கம் ஜானகி இதற்கு ஒத்துப்பாங்களா.. " என்றார் ஒருவர்..

" ஏம்பா பொண்ணு எந்த ஊரு .. "

" கல்யாணத்துக்கு அப்ரோமும் அர்ஜூன் தம்பி இங்க தான் இருக்கப் போரானா.. "

" பொண்ணு நல்ல வசதியா "

" பொண்ணு பேரு என்ன " என பல கேள்விகள் கேட்கத் தொடங்கினர்..

பாலா அர்ஜூனைப் பார்த்துக் கொண்டே " பொண்ணு பேரு சுஜி.. அப்ரோம் இது அரேன்ஞ் மேரேஜ் இல்ல.. இது லவ் மேரேஜ்.. அப்படி தான அர்ஜூன் "

அதுவரை பொறுமையாக இருந்த அர்ஜுன் " மாமா இதோ வருகிறேன் " என்று சொல்லி எழுந்து சென்று விட்டான்..

அனைவரும் அவன் வெட்கப்பட்டுக் கொண்டு போவதாக நினைத்துக் கொண்டனர்.. சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரையும் அனுப்பிவிட்டு மாணிக்கமும் பாலாவும் தீவிரமாக எதனையோ விவாதித்தனர்..

அடுத்து பாலா அர்ஜூனைப் பார்க்க சென்றான்.. பாலா எதிர்பார்த்ததை போலவே அர்ஜூன் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு கதவைத் தாளிட்டு படுத்துக் கொண்டான்..

கதவை வேகமாக திறந்து கொண்டு உள்ளே வந்த பாலா சரமாறியாக அடிக்கத் தொடங்கினான்.. " என்ன எதுக்கு இப்ப அடிக்கிறீங்க .. என்ன விட்ருங்க அண்ணா " என இருகரம் கூப்பி வேண்டினான்..

இப்ப என்ன நடந்துச்சுனு இப்படி நடந்துக்கிற.. ஒழுங்கா சொல்லு.  இல்லைனா நானே உன்ன கொன்றுவேன்..

இனி நடக்க என்ன இருக்கு அண்ணா.. அதான் என் வாழ்க்கையே கேள்விக்குறியா நிக்குதே.. என்னால சுஜி அல்லாத வேறொறு பொண்ண கனவுல கூட நினைச்சுப் பார்க்க முடியாது.. அதான்  ...."

" அதான்.. சொல்லு .. ஏன் பாதியோட நிறுத்திட்ட.. அதான் விசங்குடிச்சிட்டேனு சொல்லு..நான் உனக்கு சுஜிய தான கட்டி வைக்கிறேனு சொன்ன அப்ரோம் ஏன் இப்படி பண்ற அர்ஜூன் .. " என்று சொல்லி முறைத்தான்..

அர்ஜூன் தலை குனிந்து கொண்டான்..

" நீ எங்கிட்ட எதும் மறைக்க முடியாது .. அத மொத தெரிஞ்சுக்கோ அப்ரோம் இந்த ஓவர் ஆக்ட்லாம் பண்ணாத.. நீ குடிச்சது விசம்லாம் ஒன்னுமில்ல.. வெறும் ஓமத்திரான தான் ஊத்தி வெச்சேன்.. அதுக்கே நீ இரத்தக் கண்ணீர் எம் ஆர் ராதா மாறி ஆக்ட் பண்ற. " என சிரித்துக் கொண்டே கூறினான்..

" அண்ணா ஏன் என்ன வாழவும் விடாம  சாகவும் விடாம டார்ச்சர் பண்றீங்க.. "

" நீ வேணா என்ன பேச்சுக்கு அண்ணானு சொல்லலாம்.. ஆனா நான் உன்ன தம்பிய தான் பார்க்கிறேன்.. சுஜியோட உன்ன சேத்து வைக்கிறது என்னோட கடமை..
புரியுதா.. ஒழுங்கா நிச்சயத்துக்கு தேவயான வேலைய மட்டும் செய்.. இப்போ போயி மாமாகிட்ட போய் பேசு போ " என அதட்டினான்.

" வேணா அண்ணா " என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் " என்ன அண்ணானு நினைச்சா பேசாம வெளிய போ..என்றான் கோபமாக ..

அர்ஜூனும் வெளியே சென்று விட்டான்.. அவன் சென்ற அடுத்த நிமிடத்தில் மகதி உள்ளே வந்தாள்..

' போச்சு இந்த லூசு வேற வருதே..இனி மூளையே இல்லாம முட்டாள் தனமா கேள்விகேட்டு டென்சன் படுத்துவாளே ' என நினைத்துக் கொண்டு என்ன என்பது போல் புருவத்தை உயர்த்திக் காட்டினான்..

மகதி தரையைப் பாரத்துக் கொண்டே " நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் " என்றாள் பொறுமையாக..

பேசு என்பது போல தலையாட்டினான்..
இரண்டு நிமிடத்திற்கு பிறகு " நீங்க எதுக்காக இப்படி நடந்துக்கிறீங்கனு தெரில.. ஆனா அர்ஜூன் அத்தான் நீங்க நினைக்கிற அளவுக்கு கெட்டவர்ல இல்ல.. அத்தை ஒருவேலை இப்படி அவுங்கள பண்ண வெச்சிருக்கலாம்..

" அப்ரோம் "

அப்ரோம் நீங்களும் அத்தானும் பேசறத நான் கேட்டேன்.. இப்ப இவர் சுஜிய கல்யாணம் பண்ணிட்டாருனா கிருஸ் சாரோட நிலைமைய நினைச்சு பார்த்திங்களா.. அதான் சுஜி ஓகே சொல்லிட்டாங்கள்ள ஏன் இப்ப இந்த முடிவ எடுத்திங்க..

" அட உனக்கு உங்க அத்தான விட கிருஷ் மேல தான் பாசம் போல "

" நீங்க எப்படி வேணா வெச்சிக்கோங்க. என்ன இருந்தாலும் அத்தான் தான் சுஜிய விட்டுட்டு வந்துட்டார்ல.. ஆனா கிருஷ் சார் சுஜிக்காக எவ்ளோ கஷ்டப்பட்டிருக்காரு.. ப்ளீஷ் இதோட விட்ருங்க..சுஜி பாவம் இத்தனை நாளுக்கப்ரோம் இப்பதான் சந்தோசமா இருக்கா.. "

ம்ம் இவ்ளோ தானா இன்னுமிருக்கா..என்றான் சந்தேகப் பார்வையோடு

இவ்ளோ தான்.. எனத் தடுமாறினாள்..

" ஆமா நீ எக்சாம்ல மொட்டை மனப்பாடம் தான பண்ணுவ " என்றான் சம்பந்தமே இல்லாமல்

" ஆமா.. ஏன் கேட்கறீங்க " என்றாள் புரியாமல்

" இல்ல உங்க அத்தை சொல்லிக் கொடுத்தத அப்டியே வார்த்தை மாறாம சொல்றியே.. அதான் கேட்டேன்.." என்றான் கூலாக

" ஓகோ.. ஹான்.. இல்ல இல்ல அத்தை எதும் சொல்லிக் கொடுக்கல.. " என உளறினாள்..

" அப்படியா.. " என்று கூறி விட்டு அந்த அறையைப் பூட்டினான்..

" இப்ப எதுக்கு கதவ சாத்திறீங்க " எனப் பதறினாள்..

" நீ நினைக்கும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல.. நானும் சில விசயத்தப் பத்தி பேசனும்..இப்போதைக்கு உன்னோட உதவி ரொம்ப தேவப் படுது..  எனக்கு ஹெல்ப் பண்ணுவீல்ல " என்றான் மகதிக்கு மிகவும் பிடித்த சிறு புன்னகையோடு.. அவளும் பூம் பூம் மாடு போல தலையாட்டினாள்..

சூரிய குடும்பத்திற்கு அருகிலுள்ள நட்சத்திரம் ?

பிராக்ஸிமா சென்டாரி ( 4.3 light years )

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top