பாகம் 28

அண்ணா என்ன பண்ணிங்க உங்க பேர சொன்னவுடனே வெளிய ஓடி வந்து பார்த்தா .. ஆனா இப்ப மூஞ்சிய தூக்கி வெச்சிட்டு போரா.. அப்படி உங்களுக்குள்ள என்ன தான் பிரச்சனை.. நீங்க உண்மையா லவ் தான் பண்றீங்களா.. எனக்கே சந்தேகமா இருக்கு.. என்றான் அர்ஜுன்..

நீ சொல்றத பார்த்தா காதல்ல நிறைய அனுபவம் இருக்கும் போல இருக்கே.. என்றான் துடுக்காக..

அர்ஜூனின் தடுமாற்றத்தைப்
பார்த்து " நான் ஒன்னும் உன்னோட அண்ணனோ தம்பியோ இல்லையே.. அதான் சொல்லமாட்டிங்கற போல " என அழுத்துக் கொண்டான்..

அண்ணா ப்ளீஸ் இப்படி பேசாதிங்க..நான் சொல்றேன்.. எனக்கும் யார்கிட்டாச்சும் ஷேர் பண்ணனும்னு தோனுது.. எனக் கிணத்தடிக்கு கூட்டி சென்றான்..

சொல்லுங்க ரோமியோ உங்க காதல் கதைய கேக்க ஆவலா இருக்கேன்.. என்று ஒய்யாரமாக கிணத்து மேட்டில் அமர்ந்து கொண்டு கேட்டான்..

அர்ஜூன் வெற்றுச் சிரிப்போடு ஆரம்பித்தான்.. அவ பேரு சுஜித்ரா.. எங்க காலேஜ்க்கு பக்கத்துல இருக்கிற லேடிஸ் ஹாஷ்டல்ல தங்கிப் படிச்சா.. துருதுருன்னு இருப்பா.. அவள பார்த்தவுடனே பிடிச்சிருச்சுனு பொய்லாம் சொல்ல மாட்டேன்.. ஆனா அவளோட குறும்புத் தனம் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு.. அவகிட்ட பேசனும்னு நானும் எவ்ளோ ஆசப்படுவேன்.. ஆனா எங்க தப்பா நினைச்சிக்குவானு பயந்திட்டேன்..அதில்லாம ஒரு பொண்ணுக்கிட்ட அவ விருப்பத்த தெரிஞ்சுக்காம புரோபோஸ் பண்றதுல விருப்பம் இல்ல.. அன்னைக்கு வேலன்டைன்ஸ் டே என்னிக்கும் போல நானும் அவ ஹாஸ்டல் முன்னாடி நின்னுட்டு இருந்தேன்.. அவ அன்னைக்கு என்கிட்ட வந்து அவளாவே விரும்புறனு சொன்னா.. என்னால நம்ப முடியல.. இந்த உலகத்துல ரொம்ப சந்தோசமா என்ன மாறி யாரும் இருந்திருக்க முடியாது. நாங்க அவ்ளோ சந்தோசமா வாழ்க்கைய அனுபவிச்சோம்.. நான் அதுவரைக்கும் அனுபவிக்காத தாய்ப் பாசத்த அந்த கொஞ்ச நாள்லயே எனக்குத் தந்தா.. ஆனா அது எனக்கு முழுசா கிடைக்க நான் கொடுத்து வைக்கல .. அதான் " அதற்கு மேல் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க அர்ஜுனின் மனநிலையை புரிந்வனாக அவன் தோளினைத் தட்டிக் கொடுத்தான்..

அதுக்கப்ரோம் என்னாச்சு அர்ஜூன்.. நீயேன் இங்க வந்து இருக்க..

அண்ணா பிளீஸ் இதுக்கு மேல என்ட எதும் கேக்காதிங்க.. நான் இன்னொரு நாள் கண்டிப்பா சொல்றேன்..என்று கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டான்..

வெளியே சந்தோசமா இருக்கிற மாறி தன்ன காட்டிக்கிட்டு மனசுல இவ்ளோ வலிய சுமந்துட்டு இருக்கானே.. அர்ஜூனிடம் பேசிய பிறகு இன்னும் குழம்பிப்போனான்.. ஆனால் இப்போது வற்புறுத்திக் கேட்டால் இன்னும் சங்கடப் படுவான்.. என அமைதி காத்தான்..ஆனால் சுஜியோட நிச்சயத்துக்குள் இந்த பிரச்சனைய சால்வ் பண்ணியாகனும்

' மனசுல பெரிய ஹூரோனு நினைப்பு.. ஆளப்பாரு.. என்னை டென்சன் படுத்தறதயே வேலையா வெச்சிருக்காரு.. ஆமா காரு.. இதுல இந்த மரியாத ஒன்னு தான் கொறச்சல்.. ' எனத் தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்த மகதி அர்ஜூனின் சோக முகத்தைப் பார்த்து துடுக்குற்றாள். பாலா சார் எதாவது சொல்லியிருப்பாரோ.. ச்சே இந்த பொண்ணுங்கள விட பசங்க மனச புரிஞ்சிக்கிறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கும் போல..

அர்ஜூனின் அருகில் சென்று " அத்தான் என்னாச்சு ரொம்ப டல்லாயிருக்கிங்க.. "

ஏய் அப்பிடிலாம் ஒன்னுமில்ல.. நீ சாப்டியா.. என்றான் பொய்யான சிறு புன்னகையோடு..

அவள் இல்லையென தலையாட்டவும் தட்டிலிருந்த சாதத்தை அவனே ஊட்டிவிட்டான்..

" உனக்கும் அண்ணாக்கும் என்ன பிரச்சினை .. அவர் ரொம்ப நல்லவரா இருக்காரு.. அவர் மனசு நோகர மாறி எதும் நடந்துக்காத.. மாமாக்கும் உன் மேல எந்த கோவமும் இல்ல.. வருத்தம் மட்டும் தான் அதும் சரியாகிடும்.. அத்தை உன்ன விட குழந்தை மனசு.. திட்டுவாங்களே தவிர மனசுல ஒன்னுமிருக்காது.. அவங்கிட்ட சண்டைக்கு நிக்காத.. புரியுதா " சாப்பாட்டை ஊட்டிக் கொண்டே சொன்னான்..

" அத்தான் ஏன் இப்படி பேசறீங்க.. என்னமோ நீங்க என்ன விட்டு போற மாறி அட்வைஸ் பண்றீங்க.. "

" லூசு நான் போகல.. நீ தான் கல்யாணம் பண்ணி போகப் போற புரியுதா.. வாயத் தொற "

" எனக்கென்னமோ இந்த கல்யாணத்துல நான் ரொம்ப அவசரப் பட்டுடனோனு தோணுது அத்தான் "

" அண்ணா முன்னாடி இந்த டயலாக்க சொல்லு பார்ப்போம் " என தலையில் கொட்டினான்..

ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு கண்ணசர்ந்தாள் அர்ஜுனின் மடி மீதே.. ஒரு குழந்தைப் போல தூங்கும் மகதியிடம் ' என்னை மன்னிச்சிடு மகதிம்மா.. உங்க எல்லாத்த விட்டு போகப் போறேன்டா.. ' என நினைத்துக் கொண்டான் ..இதையெல்லாம் பாலா பார்த்துக் கொணடிருந்தான்..

சிறிது நேரத்துக்கெல்லாம் வெளியே சென்ற மாணிக்கம் பெரும்படையையே கூட்டிக் கொண்டு

அனைவரிடமும் பாலாவைப் பற்றி உயர்வாக கூறினார்.. ஹார்ட் பெசலிஸ்ட்.. ரொம்ப மரியாதை தெரிஞ்சவரு.. இவ்வாறு சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார். அனைவரிடமும் பாலாவை அறிமுகம் செய்து வைத்தார் .. அவனும் நல்ல பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு அவர் கேட்பதற்கெலாம் பதிலளித்துக் கொண்டிருந்தார்.. இப்போது தான் மகதி கண்ணை திறந்து பார்த்தாள்..

அவள் முழித்து விட்டாள் என்பதை அறிந்தவுடன் பாலா தன்கையை குத்து பட சிம்பு மாறி


காற்றில் விசிரிக் கொண்டிருந்தான்..

" என்னாச்சு மாப்பிள்ள கைல எதாவது அடிப்பட்ருச்சா.. " என்றார் மாணிக்கம்..

" ஆமாம் மாமா சுண்டெலி கடிச்சு வெச்சிருச்சு " என்றான் சிரித்துக் கொண்டு..

அனைவரும் ' சுண்டெலியா ' என ஆச்சரியமாக கேட்க..மகதி வழக்கம் போல அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்..

" சாரி மாமா என்னைக் கடிச்சது சுண்டலியில்ல.. பெருச்சாளி.. அதும் காட்டுப் பெருச்சாளி " என விளையாட்டாக கூறினான்.. அவனது கேலிப் பேச்சில் எதற்கென்றே தெரியாமல் அனைவரும் சிரித்தனர்..

மகதி எழுந்து உள்ளே சென்று விட்டாள்..

ஊர் பெரியவர் ஒருவர் " ஏம்பா அர்ஜூன் இப்ப என்ன பண்லாம்னு இருக்கற.." என்றார்..

அர்ஜுன் அதற்கு எதும் பதிலளிக்காமல் இருக்கவும் " என்னோட என்கேஜ்மென்ட் அப்போ இவனுக்கும் என்கேஜ்மென்ட்.. இவனுக்கு ஏத்த பொண்ண நான் பார்த்துட்டேன்.. " என்றான் பாலா

இந்தியாவில் நெல் அதிக உற்பத்தி ஆகும் மாநிலம் ?

ஆந்திரா

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top