பாகம் 26

மகதி முறைக்கவும் " அத்தை சொல்லுங்க.. என்னை அத்தானு சொல்னுமா.. மாமானு சொல்னுமா " என தெரியாதவன் போல மகதியைப் பார்த்து  நக்கலாக சிரித்துக் கொண்டே கூறினான்.

" ஏன்டி மகதி மாப்பிள்ள தான் ஆசயா கேக்கறார்ல.. கூப்டதான் என்னவாம் "- பரு

' இந்த லூசு அம்மாக்கு என்னாச்சு.. ஓவரா இவருக்கு சப்போர்ட் பண்றாங்க.. சரியான வசியக்காரன் .. மகதி இதெலாம் நம்பி நீ ஏமாந்திடாத.. வீணா ஆசய வளர்த்துக் கிட்டு அப்ரோம் நீதான் மூலைல உக்கார்ந்துட்டு அழனும்.. ' என நினைத்தவாறு " அம்மா நான் கல்யாணத்துக்கு அப்ரோமே கூப்டுக்கரேன். அதுவரைக்கும் சாரே போதும். ம்ம்
விருந்தாளிய நல்லா கவனிக்கறயே. ஆனா நான் நேத்துல இருந்து பட்டினியா இருக்கனே. என்ன சாப்பிட சொன்னியா.. இதுல அந்த நல்லவர் வேற தட்டத் தூக்கிட்டு வெளிய போய்டாரு.. என்ன மனுசியா ஒருத்தர் கூட மதிக்க மாட்டிங்களா " என கத்தினாள்..

" ஹாஹாஹா அத்தை நான் சொன்ன மாறியே மகதிய பழைய வாயாடியா மாத்திட்டேன்ல.. " என்றான் சிரித்தபடி..
பருவும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்..

மகதிக்கு இதைக் கேட்டவுடன் கோபம் தலைக்கேற அந்த சமயத்தில் சட்னி தீர்ந்ததால் அர்ஜூன் உள்ளே வர " ஒரு தடவை சொன்னா புரியாதா.. நீங்கல்லாம் படிச்சவுங்க தான.. என்னைப் பார்த்தா முட்டாள் மாறி தெரியுதா.. உங்க ஆக்டிங்க பார்த்தவுடனே நான் நம்பிடனுமா.......
.
.
.
.
. ( தன்னால் எவ்வளவு முடியுமா அவ்வளவையும் மூச்சு வாங்கிற வரை அர்ஜூனை திட்டுவதாக பாலாவை திட்டிவிட்டு அறைக்குள் சென்றாள் )

அர்ஜூன் அப்பாடா என பெரு மூச்சு ஒன்றை விட்டு திரும்பினான்..

உள்ளே சென்றவள் திரும்பி வந்து " இனி எங்கயாச்சும் அண்ணா தம்பினு படம் ஓட்னிங்க.. அத்தைய உங்கள கூட்டிட்டு போக சொல்லிருவேன் ஜாக்கிரதை அத்தான் " என விரல் நீட்டி பேசினாள்..

அர்ஜுனின் காதில் இரத்தம் வராத குறைதான்.. 
" அர்ஜுன் தம்பி .. இப்படி நின்னுட்டே சாப்பிட்டா எப்டி .. இந்த அண்ணாயிருக்கேன் .. எவ்ளோ பெரிய கேங் லீடர் வந்தாலும் நான் உன்ன காப்பாத்றேன்.. சாப்பிடுத் தங்கம்.." என கைப்பிடித்து அமர வைத்தான்..பாலா

" மகதி ஏன் நின்னுட்டே இருக்க.. மொறுமொறுனு எனக்கும் என் தம்பிக்கும் தோசை ஊத்தி எடுத்துட்டு வா " என்று அதிகார தோனியில் உரைத்தான்..

முரைத்துக் கொண்டே மகதி சமையலறைக்குள் சென்று விட ' உங்களுக்கு நான் என்ன பாவம் பண்ணேன்.. ' என்ற பாவனையில் பாலாவைப் பார்த்தான் அர்ஜூன் ..

பாலா அவனைப் பார்க்காமல் சிரித்துக் கொண்டே தட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்தான் 
' உன்னை இனி பார்க்கவே கூடாதுனு நினைச்சேன்.. விதி உன்னோட என்ன சேர்த்து வெச்சிருச்சே ராட்சசி.. என இருவரது முதல் சந்திப்பையும் நினைத்துக் கொண்டு'

" அடடே இங்க ஒருத்தன மாட்டிவிட்டுட்டு நீங்க சிரிச்சிட்டு இருக்கிங்களா " என்றான் அர்ஜூன் பாவமாக..

" உனக்குத் தெரியுமா உன்ன மாறியே எனக்கும் ஒரு தம்பியிருக்கான். அவன் பேரு கிருஷ்.. கிருஷ்ணன்.." அந்த பேரைக் கேட்டதும் அர்ஜூனின் முகம் மாறியது..

" என்னாச்சு அர்ஜுன்.. உனக்கு அந்த பேர்ல யாரையாச்சும் தெரியுமா .. ஏன் டல்லாகிட்ட "

" இல்ல அண்ணா.. எனக்கும் அண்ணா தம்பினு எல்லாரும் இருந்தா என் விருப்பு வெறுப்பத்த ஸேர் பண்ணியிருக்கலாம்னு தோனுது.. கடவுள் எனக்கு அந்த பாக்கியத்த கொடுக்கல.. "

" நீயேன் அதை நினைச்சு ஃபீல் பண்ற.. அதான் நான் வந்துட்டேன்ல.. இனி கிருஷ் மாறி அர்ஜூனும் என் தம்பி தான்.. உனக்கு என்ன பிரச்சனைனாலும் சேர் பண்ணு .. புரியுதா " என்றான் அக்கறையாக..

" ரொம்ப தேங்க்ஸ் அண்ணாாாாாாா"

" இப்ப எதுக்கு கத்தற அர்ஜூ " எனும் போது தான் மகதி தோசைக் கரண்டியால் அர்ஜூனுக்கு சூடு வைத்துக் கொண்டிருப்பதை கவனித்தான்..

" என்ன தம்பி பாட்டுக் கிளாஸ்க்கு பிராக்டீஸ் எடுக்கறியா .. மகி அந்த வால்யூம கொஞ்சம் அதிகமாக்கு.. செமயா பாடுரான்ல " - பாலா..

அர்ஜூன் எழுந்து ஓடியே விட்டான்..
" இப்ப எதுக்கு அவன் மேல கோவத்த காட்ற " - பாலா..

" அத்தான் குழந்தை மாறி.. அதான் உங்க நடிப்ப நம்பி ஏமாந்திடப் போறார்னு அலார்ட் பண்ணேன் " என்று சொல்லி தோசையை அவன் தட்டில் வைத்தாள்..

" ஓஓ.. ஆமா தோசை என்ன வேகாம மாவாயிருக்கு.. எனக்கு இப்படியிருந்தா பிடிக்காது .. அதுனால நீ போய் "

அவன் முடிப்பதற்குள் " கேஸ் தீர்ந்து போயிடும். அதில்லாம எனக்கு இப்படிதான் சுடத் தெரியும்.. " என்றாள் புன்னகைத்துக் கொண்டு..

" பரவால நீ என்ன விட இல்லைனாலும் கொஞ்சம் அழகாத்தான் சிரிக்கிற.. "

அவன் புகழ்தலை காதில் கேட்டும் கேளாத மாறி சென்றுவிட்டாள்
மகதியின் செல்போன் அலறலைக் கேட்டு.. அது ஜானகியம்மாவின் அழைப்பு தான் என்பதை பாலாவும் அறியாமல் இல்லை ..

தேசிய மன்னிப்பு தினம் மே 26

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top