பாகம் 24

அவர் கொஞ்சம் தயங்கவும்.. " பயப்படாதிங்க மாமா என்னை நீங்க குறை சொல்ற மாறி ஒரு போதும் நடந்துக்க மாட்டேன்.. " எதோ யோசித்தவனாக " ஜானகியம்மா உங்களுக்கு டைம் ஆச்சுனு சொன்னிங்கள்ள.. அர்ஜூன் அவர போய் வாசல் வரை விட்டுட்டு வா "
என்றான் பாலா..

ஜானகியும் இவனை முறைத்துக் கொண்டு " சரியண்ணா நான் கிளம்பறேன்.. எதாவது உதவி வேணுனா கேளுங்க ..வரேன் அண்ணி " என்று சொல்லி கிளம்பிவிட்டார்..அவர் செல்லும் போது அர்ஜூனை பார்த்து ஜாடையில் எதோ சொல்லிச் சென்றார்..

" சரிப்பா நீ போய் மகதிய பாரு. . பருவதம் அவருக்கு மகதியோட அறைய காட்டு.. எனக்கு முக்கியமான வேலையிருக்கு.. அதை முடிச்சிட்டு வந்தி்டறேன் .. அப்படியே தம்பிக்கு சாப்பிட எதாவது கொடும்மா "
என்ற மாணிக்கம் செல்லும் போது அர்ஜுனையும் உடன் அழைத்து சென்றார்..

தன்னை முறைத்துக் கொண்டிருந்த பருவதத்தை பார்த்து " அத்தை உங்களுக்கு என்னை பிடிக்கல தான " என்றான்..

அவர் இல்லை ஆமென்று மாத்தி மாத்தி தலையாட்டுவதை பார்த்து சிரித்தவன் " உங்க தம்பி பையனுக்குதான் மகதிய கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசப்பட்டு இருப்பிங்க.. நான் வந்து உங்க ஆசய கெடுத்துடேன்ல.. உங்களுக்கு விருப்பம் இல்லைனா சொல்லுங்க.. நான் போயிடறேன் " என்றான் பெருந்தன்மையாக..

" அப்படியெலாம் இல்லப்பா.. அன்னைக்கு ஊர்க்காரங்க முன்னாடி கொஞ்சம் சங்கடமா போச்சுப்பா.. அதான்.. ஆனால் உண்மையிலே உன்ன மாறி ஒரு நல்ல பையன் எங்க தேடியும் கிடைக்க மாட்டங்கப்பா.. இதோ மகதியோட ரூம்.. நீங்க பேசிட்டு இருங்க.. உங்களுக்கு சாப்பிட எதாவது கொண்டு வருகிறேன் " என்றவாறு கிளம்பிவிட்டார்..

பாலா மெதுவாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்..மகதி தன்னிலை மறந்து அழுது கொண்டிருந்தாள்..

" மகதி " என அவனழைக்கவும்.. வெடுக்கென எழுந்து அமர்ந்தவள் இது கனவா நிஜமா

என்பது போல ரியாக்சன் கொடுத்தாள்..

அவளது முகபாவத்தை பார்த்து சிரித்தவன் அவளது தோளைத் தொட்டு உலுக்கினான்..

இது கனவில்லை நிஜம் என்பதை உணர்ந்தவள் " மரியாதையா என் ரூம் விட்டு வெளிய போங்க சார்.. " என கத்தினாள்..

" ஏய் கத்தாத.. நானே யாருக்கும் தெரியாம வந்திருக்கிறேன்.. நீயே மாட்டி விட்டு வி்டுவாய் போலிருக்கிறதே " என்றான் அறைக் கதவைப் பூட்டிய படி..

" சார் நீங்க என்னை நினைச்சிட்டு இருக்கிங்க.. என் அர்ஜூன் அத்தான பழி வாங்க தான இப்படியெலாம் நடந்துக்கிறீங்க.. தயவு செஞ்சு வெளிய போங்க.. ஏற்கனவே உங்கனால எங்க குடும்பத்துல ஏகப் பட்ட பிரச்சனை.." என்றாள் பூட்டிய கதவைத் திறந்தபடி..

பாலா சாவுகாசமாக பெட்டில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்..

" சார் ப்ளீஸ் என்னால என் குடும்பத்துக்கு மறுபடியும் எந்த கெட்ட பேரும் வரத நான் அனுமதிக்க மாட்டேன்.. வெளிய போங்க " என்றாள் கோவமாக..

" அப்படினா நீ என்னை விரும்பவில்லையா.. நான் தான் தப்பா புரிஞ்சிட்டனா.. "

" நான் தான் சார் தப்பா புரிஞ்சிட்டேன்.. நல்லவங்க யாரு.. கெட்டவங்க யாருனு தெரியாம இருந்துட்டேன்.. ப்ளீஸ் அப்பா பார்த்தா தப்பாயிடும்.. எனக்காக இந்த ஒரு உதவிய மட்டும் செயுங்க.. உங்க முகத்த பார்க்க கூட விரும்பல " என்றாள் கைக்கூப்பி..

" கண்டிப்பா இதுக்கு நீ இப்பவே வருத்தப்படுவ மகதி.. "

" இனி நான் வருத்தப்படற அளவுக்கு பெரிய விசயம் ஒன்னும் என் வாழ்க்கைல நடக்க போறது இல்லை .. "
நீ முட்டாள்னு எப்பவும் காட்டிக்கிட்டே இருப்பியா.. அர்ஜூன நான் எதுக்கு பழி வாங்கனும்.. "

நான் முட்டாளாவே இருந்துட்டு போறேன்..போதும் என் அப்பாக்கு மரியாதை கொடுக்காத யார்டயும் பேசனும்னு எந்த அவசியமும் இல்லை..

சர்தான் போடி ஒவரா பேசிட்டு இருக்க.. நீயில்லைனா என்ன எனக்கு ஆயிரம் பேர் வருவாங்க.... ஆனா உன்ன அவ்ளோ சீக்கிரம் விட்டுட மாட்டேன்..

போதும் நிறுத்துங்க .. நான் உங்கள ரொம்ப உயர்ந்த இடத்தில் வைத்து இருந்தேன்.. நீங்களே உங்க தரத்தை குறைச்சிட்டிங்க..இந்திரா மேம்காகவும்
கிருஷ் சார்காகவும் தான் உங்க கிட்ட இவ்ளோ நேரம் பொறுமையா பேசிட்டு இருந்தேன்.. ஆனா அப்படியே இருக்க முடியாது.. என அவள் கண்ணை உருட்டி உருட்டி பேசினாள்..

' சாரி மகதி என்னோட சுயநலத்துக்காக உனக்கு தொந்தரவு தரேன் ' என நினைத்துக் கொண்டான் பாலா..

" ஏய் என்னடி நீ கத்தற சவுன்ட் காதயே கிழிச்சிடும் போலவே.. முதல்ல இந்த தட்ட பிடி.." என்று கையில் பலகாரத்துடன் உள்ளே நுழைந்தார் பரு..

மகதி அதிர்ச்சியடைவாள் என எதிர்பார்த்த பாலா அவள் அமைதியாக இருப்பதை பார்த்து அவன்தான் அதிர்ச்சியடைந்தான்..

அவர் உள்ளே நுழைந்ததும் அவள் வெளியே சென்று விட்டாள்..பாலாவிற்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது..

தம்பி உங்களுக்குள்ள எதாவது சண்டையாப்பா.. என வருத்தமாக கேட்டார்..

கல்யாணம் அடுத்த மாசம் தானு சொன்னேன்.. அவ்ளோ நாள் என்னால வெயிட் பண்ண முடியாதுனு கோவிச்சிட்டு போறா.. அதுக்கு நான் என்னங்க அத்தை பண்ண முடியும் என சலித்துக் கொண்டான்..

மகதி அழுது கொண்டே அர்ஜுனைத் தேடி சென்றாள்.. அவனும் அவளுக்காக தோட்டத்தில் காத்துக் கொண்டிருந்தான்..

பாலா அவர்கள் அருகே செல்லும் போது " உனக்கு நானிருக்கேன் மகதி..இந்த கல்யாணத்த நான் நிறுத்திறேன் .. மாமாகிட்ட நான் பேசறேன் " என்றான் அர்ஜுன்..

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் சுசிதா கிருபாளினி ( உத்தரப்பிரதேசம் )

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top