பாகம் 23

அம்மா என்னாச்சு ஏன் இப்படி கப்பல் கவுந்த மாறி கன்னத்துல கைவெச்சிட்டு உக்கார்ந்திருக்கிங்க..

என சொல்லிக் கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தான் கிருஷ்..

அவனது கேள்விக்கு பதில் அளிக்காமல் சிலை போலவே அமர்ந்திருந்தார் இந்துமா..

அம்மா நீங்க அண்ணாவ நினைச்சு ஃபீல் பண்ணாதிங்க..அவர் எனக்கு கால் பண்ணி சொன்னாரு..என்னமோ முக்கியமான வேலை இருக்கு வர ஒரு வாரம் ஆகும்னு சொன்னாரு.
அண்ணா வந்துருவாருமா..

எனக்கும் போன் பண்ணான்டா..

அப்ரோம் எதுக்கு ஃபீலிங்கு ??

" அட போடா .. காலங்காத்தால போன் பண்ணி கிறுக்குத்தனமா கேள்வி கேக்குறான்டா.. எனக்கென்னமோ வரப்பவே கூட வம்பையும் இழுத்துட்டுதான் வருவான் போல.." 😞

" அத்தை எனக்கென்னமோ மகதியோட தான் மாமா வருவாருனு நினைக்கிறேன் " என்று கூறி அவரருகே அமர்ந்தாள் சுஜி..

" நல்லாருக்கியா மருமகளே.. உங்க அப்பா அம்மாலாம் லண்டன்ல இருந்து எப்ப வருவதா உத்தேசம்.. "

" அவுங்க நாளைக்கு வந்திடுவாங்க..உங்களுக்கு இப்ப உடம்புக்கு பரவாலியா..டேப்ளட்ஸ்லாம் கரெக்டா சாப்பிடுரிங்களா "

" இங்க கிருஷ்னு ஒரு ஜீவன் இருக்கறது உங்க கண்ணுக்கு தெரியுதா.. இல்ல தெரியாத மாறி ஆக்ட் பண்றீங்களா " என்றவாறு அவர்கள் இருவரையும் ஓரம் தள்ளிவிட்டு நடுவில் அமர்ந்தான்..

" அம்மா இருக்கேனு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்க.. பேட் பாய்.. நீ இரு சுஜிம்மா.. நான் போய் உனக்கு டீ கொண்டு வரேன்.. " என எழுந்தார் இந்து..

அத்தை டீ வேணா.. ஹார்லிக்ஸ்..என்று சிரித்துக் கொண்டே கூறினாள்..சுஜி.. அவளின் சிரித்த முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் கிருஷ்..

டேய் என் முகத்துல என்னடா இருக்கு இப்படி பார்க்குற..

இல்ல இன்னும் எவ்ளோ நாள்தான் பொய்யா சிரிப்ப

அதற்கு அவள்  பதிலளிக்க முடியாமல் அவனைப் பார்க்க.." எனக்கு உன்னோட ஒவ்வொரு அசைவும் தெரியும் சுஜி.. நீ மாற டிரை பண்ற.. ஆனா எதோ ஒன்னு உன்ன தடுக்குது.. ஆனா அது என்னனு தான் எனக்குத் தெரியில " என்றான் வெற்றுச் சிரிப்போடு..

" அப்படியெலாம் ஒன்னுமில்லடா.. நானும் பார்த்துட்டே இருக்கேன்.. நீ இந்த மாறியே பேசிட்டு இருக்க.. அப்ரோம் வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிடுச்சுனா அதுக்கு நான் பொறுப்பு இல்ல.. பாத்துக்கோ " என்று சொல்லி செல்லமாக அவன் முதுகில் அடியொன்றை வைத்தாள்..

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

மாமா இங்க பாருங்க.. நான் உங்ககிட்ட அன்னைக்கு மரியாத குறைவா நடந்துகிட்டேன்.. அதுக்கு என்ன மன்னிச்சிடுங்க.. இப்பவும் மகதிக்காக நான் எவ்வளவு நாள் வேணாலும் வெயிட் பண்ண தயாரா இருக்கேன்.. ஆனா ஜானகியம்மா தான் எதோ உங்களுக்கு வாக்கு கொடுத்துட்டாங்களாம்.. அதான் 3 தேதியே நிச்சயத்த வெச்சுக்கலாம்னு நினைக்கிறேன்..இதுல உங்க அபிப்ராயம் என்னனு சொல்லுங்க மாமா என்றான் பாலா பவ்யமாக..

அவனின் பேச்சு ஜாலத்தில் வீழ்ந்துவிட்டது மாணிக்கத்தின் கோபம்..பாலா டாக்டர் என்பதால் தனி மரியாதையும் வந்தது..

" நானும் உங்க கிட்ட கொஞ்சம் கோவமாக நடந்துகிட்டேன் மாப்பிள்ளை.. நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க..' என்றார் சந்தோசமாக..

" என்ன மாமா நீங்க எவ்ளோ பெரியவுங்க.. எங்கிட்ட போய் மன்னிப்புனெலாம் பேசிக் கிட்டு..என்ன முதல்ல ஆசிர்வாதம்
பண்ணுங்க " என்று எழுந்து நின்றான்..

காப்பி கப்புடன் வந்த பருவிடம் இருந்து கப்பை வாங்கி ஜானகியிடம் கொடுத்து விட்டு பருவின் கைப்பற்றி மாணிக்கத்திடம் அழைத்து சென்றான்..

" இப்ப ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை மாமா.. " என்று காலில் விழுந்தான்..
" நல்லாயிருப்பா " என மனசார வாழ்த்தினார் மாணிக்கம்..

" மாமா எங்க கல்யாணம் முறைப்படி நடக்கனும்னு ஆசப்படறேன்.. நீங்க என்ன சொல்றீங்களோ அதே மாறி செஞ்சிடலாம்.."

' அடப்பாவி அண்ணாவோட வீக் பாயின்ட்லயே அடிக்கறானே.. இப்படியே விட்டா.. எல்லார் மனசையும் மாத்திடுவானே..முதல இவன இங்கிருந்து அனுப்பனும் ' என முடிவெடுத்தார் ஜானகி ..

" ரொம்ப சந்தோசம்பா..உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. என் மகதிய நீங்க நல்லா பார்த்திப்பீங்கனு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு.. " என்றார் புன்னகையோடு..

' விட்டா கல்யாணமே பண்ணி வெச்சிடுவாங்க  போல '. என நினைத்துக் கொண்டே" பாலாத் தம்பி உங்களுக்கு டைம் ஆகலியா.. வாங்க.. நாம பேசிகிட்டே போலாம்  " என அழைத்தார் ஜானகி..

" அம்மா நீங்க கிளம்புங்க.. நான் மாமாகிட்ட கொஞ்சம் பர்சனலா பேச வேண்டியிருக்கு " என்றான்..

" எதப்பத்தி " என்று அதிர்ச்சியாக கேட்டார் ஜானகி..

அவரின் பதட்டத்தை அர்ஜூன் அறியாமல் இல்லை ..

" அதுவந்து மாமா.. நான் வளர்ந்ததெலாம் சிட்டில தான்.. இந்த அழகான கிராமத்தைப் பார்த்தவுடன் இங்கயே இருக்கனும்னு ஆசையா இருக்கு.. நிச்சயம் முடியற வரை நான் இங்க தங்கிக்கவா " என்றான் ஜானகியைப் பார்த்து சிரித்துக் கொண்டு..

" அதற்கென்னப்பா தாராளமா தங்கு.. அர்ஜூன் இவருக்கு வேண்டியத பண்ணிக் கொடுப்பா.." என்றார் மாணிக்கம்..

" கல்யாணத்துக்கு முன்னாடி அதெலாம் " என ஆரம்பித்த ஜானகியை பாலா குறும்பாக பார்க்கவும் அவர் வேறு புறம் திரும்பிக் கொண்டார்..

" மாமா உங்களிடம் இன்னொரு வேண்டுகோள் "  என பாலா சொல்லவும் ' ஐயோ மீண்டும் என்ன ' என்பது போல் பார்த்தார் ஜானகி..

" மாமா உங்க அனுமதியோட மகதிய நான் பார்த்து பேசலாமா " என்றான் பணிவாக..

' உலக மகா நடிப்புடா சாமி .. இன்னும் இவங்கிட்ட என்னலாம் பாடுபட வேண்டியது இருக்குமோ.. என எண்ணி பெருமூச்சு ஒன்றை விட்டார் ஜானகி..

'சுட்டிப்பயல்' என அழைக்கப்படும் ராக்கெட்  GSLV

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top