பாகம் 22

ஏற்கனவே தன் அத்தையை சுத்தமாக பிடிக்காது..சிறு வயதிலிருந்தே அர்ஜுனை அடிமை போல நடத்துவதினால் வந்தது தான் இந்த வெறுப்புக்குக் காரணம்.. இதில் இன்று திருமணப் பேச்சோடு வந்திருக்கிறார்..
ஆனால் என்றும் தனக்கு சாதகமாக பேசும் தந்தையோ இன்று தன் மேல் கோவமாக இருப்பதால் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை தெரியாமல் தவித்தாள்..
இது எல்லாத்துக்கும் காரணம் பாலா தான் என நினைக்கும் போது அவன் மேல் இன்னும் கோவம் தான் வந்தது..

இவள் இவ்வாறு சிந்தனையில் மூழ்கியிருக்க அதற்குள் நிச்சயப் புடவையை பிரித்து அவள் மேல் வைத்துப் பார்த்தார் ஜானகி..

அவரின் தொடுதலில் சுயநினைவுக்கு வந்தவளை " யாரும்மா அந்த பையன் சென்னைல இருந்து உன்னைக் கூட்டிட்டு வந்தானே " என்று சிரித்துக் கொண்டே   எரிக்கும் பார்வையை தன் மேல் வீசிக் கொண்டிருக்கும் ஜானகியின் செயல் அவளைத் தலை குனிய செய்தது..

இவரின் இந்த திடீர் கேள்வியால் அதிர்ந்தது மகதி மட்டுமல்ல..அனைவரும் தான்.. எந்த தகவல் இவருக்கு தெரியக் கூடாது என நினைத்தார்களோ அதை அவர் வாயாலே சொல்லும் போது தர்ம சங்கடமாகிப் போனது..

தனக்கு பிடிக்காத அத்தை முன்பே  தனது தந்தை தலைகுனிந்து நிற்பதை தாங்கமுடியவில்லை.. அழுது கொண்டே உள்ளே சென்று விட்டாள்..

" ஜானகி அது வந்தும்மா " என அவரிழுக்கவும்.. " அண்ணா நீங்க எதும் பயப்படாதிங்க .. இந்த கல்யாணத்த யாராலயும் நிறுத்த முடியாது " என்றார் வில்லத்தனமாக..

அவரின் பதிலில் நிம்மதி அடைந்தாலும் மகதிக்கு பிடிக்காமல் இந்த திருமணம் நடப்பது சற்று உறுத்தலாகவே இருந்தது.. ஆனாலும் அர்ஜுன் மகதியை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் இருந்தது..

" அண்ணி அண்ணா என்ன ஒன்னுமே பேச மாட்டிங்கறாரு.. நமக்கு வேற கல்யாண வேல தலைக்கு மேல இருக்கு " என அழுத்துக் கொண்டார்

இதை அனைத்தையும் சிலை போல நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன் ..அவனால் மட்டும் என்ன செய்ய முடியும் தன் தாயை எதிர்த்து..

அர்ஜுன் நீயேன் அமைதியாவே இருக்க என்று பரு கொடுத்த பாயாசத்தைக் குடித்துக் கொண்டே கேட்டார் ஜானகி..

"வேறொருவனை விரும்பும் பெண்ணை தன் தலையில் கட்டி வைக்க பார்க்கிறார்களே என்ற எண்ணத்தில் தான் அமைதியாக இருக்கிறான்.. அப்படி தானே அர்ஜூன் " என்றவாரே உள்ளே நுழைந்தான் இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த பாலா..

அவனைக் கண்டதும் அனைவரும் அதிர்ந்து போக ஜானகியோ தன் கையில் வைத்திருந்த பாயசத்தையே
கொட்டிவிட்டார்..

" நீயா .. நீ எதுக்கு இங்க வந்த " என்று பதற்றத்துடன் கேட்டதோடு மட்டுமில்லாமல் அவனின் கைப்பிடித்து உள்ளே ஒரு அறைக்கு அழைத்து சென்றார்..பாலாவும் சிரித்துக் கொண்டே பின்னால் சென்றான்..

அங்கே என்ன நடக்கிறது என்பதை உணர முடியாமல் மாணிக்கம் தம்பதியினரும் அர்ஜூனும் குழம்பிப் போயினர்..எவர்க்கும் அடங்காத தன் தாயே இவன் முன்னால் பதட்டப்படுவதைப் பார்த்தால் எதோ ரகசியம் இருவருக்குள்ளும் இருக்கும் என ஊகித்தான் அர்ஜூன்..

அவர்கள் 5 நிமிடத்திற்கு பிறகு வெளியே வந்தனர்.. பாலாவின் முகத்திலோ எதையோ சாதித்த மகிழ்ச்சி தெரிந்தது.. ஜானகியோ வராத சிரிப்பை வர வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்..

" அண்ணா  நிச்சயத்த குறித்த நாளிலயே வெச்சுக்கலாம்.. ஆனா அதில ஒரு சின்ன சேஞ்ச் .. மாப்பிள்ளை அர்ஜூன் இல்ல. இவந்தான் " பாலா முறைக்கவும் " சாரி இவர் தான் " எனத் திருத்தம் செய்தார்..

" ஜானகி நீ என்ன பேசிட்டு இருக்க.. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு முடிவெடுத்திட்டு இருக்க.. எவனோ ஒருத்தன கூட்டிட்டு வந்து என் பொண்ணுக்கு மாப்பிள்ளைங்கற.."
என்றார் மாணிக்கம்

" அண்ணா ப்ளீஸ்.. நான் சொல்றத கேளுங்க.. நமக்கு மகதியோட சந்தோசம் தான முக்கியம்.. இவர் ரொம்ப நல்ல பையன் அண்ணா .. குடும்பமும் நல்ல குடும்பம்.. நா எல்லாத்தையும் விசாரிச்டேன்..இவங்க பேமிலி நிச்சயம் அப்ப கண்டிப்பா வந்திருவாங்க.. அவுங்கள உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. என் மேல நம்பிக்கை வெச்சு இதுக்கு ஒத்துக் கோங்க " எனக் காலில் விழாத குறையாக கெஞ்சினார்..

மாணிக்கம் அர்ஜூனைப் பார்க்க அவன் சிரித்துக் கொண்டு சம்மதம் எனத் தலையாட்டினான்..

" ஜானு நீ என்ன பேசற.. நேத்து இவன் என்ன " எனப் பேச ஆரம்பித்த பருவை
ஜானகியின் தீப்பார்வை சாந்தமாக்கியது..

மாணிக்கம் பேச ஆரம்பிக்கும் முன்னரே " என்ன அத்தை வீட்டுக்கு வரப் போற மருமகனுக்கு ஒரு காஃபி கூட தரமாட்டிங்களா " என வினவிக் கொண்டே  நாற்காலியில் அமர்ந்து கொண்டான் பாலா..

ஜானகி கண்ணசைக்க பருவதம் சமையலறைக்குச் சென்றார்..
'உன்னை இந்த வீட்ட விட்டு எப்படி துறத்திறனு பார்த்திட்டே இரு ' என மனதில் நினைத்துக் கொண்டார் ஜானகி..

செப்டம்பர் 4  - குடியரசுத் தலைவர் ஒரு நாள் ஆசிரியராக பணியாற்றுகிறார்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top