பாகம் 21
காலை 7 மணி...
அப்பா ப்ளீஸ் பா.. என் கூட பேசுங்கப்பா.. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக என் கூட பேசாம இருக்காதிங்கப்பா.. என மனமுருகி கெஞ்சிக் கொண்டிருந்தாள் மகதி..
அவள் கதறலும் கண்ணிரும் அவளின் தந்தையின் மனதை சரிசெய்யவில்லை..
பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார்..
" நீ என்ன தான் நீலிக்கண்ணீர் வடிச்சாலும் நாளைக்கு நிச்சயத்த நிறுத்த முடியாதுடீ.. ஒழுங்கா வந்து இந்த மருதாணிய வெச்சுக்கோ " என்று அதட்டினார் பருவதம்..
அதுவரை அமைதியாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் பேச ஆரம்பித்தான்..
" அத்தை சும்மா இருங்க.. இப்ப எதுக்கு இவ்ளோ அவசரப்படரீங்க "
" அர்ஜூன் நான் தெரியாம தான் கேக்கறேன்.. கல்யாணப் பேச்செடுத்தாளே நீ இந்த மாறி தான் பேசற.. நீயும் இந்த மகதி மாறி வேற யாரயாவது விரும்பறியா.." என கோவத்துடன் கேட்டார் மகதியின் தந்தை மாணிக்கம்..
மகதி அர்ஜூனையே பார்க்க
அவரே தொடர்ந்தார்.. " நான் ஏன் கேக்கறனா ஏற்கனவே நான் பையன் மாறி செல்லங்கொடுத்து அவ என்னைக் கேட்டாலும் அத செஞ்சுக் கொடுத்த என் பொண்ணே என் நம்பிக்கைய ஒடச்சிட்டா.. நீயும் அதே தப்ப பண்ணறனு தெரிஞ்சா இப்பவே மனச தேத்திக்குவேன்ல " என்றார் துக்கம் கலந்த சிரிப்போடு..
" அப்பா உங்கள நான் ஏமாத்தனும்னு நினைக்கலப்பா.. அவர பார்க்கறப்ப எனக்கு என்ன நடக்குதுனே தெரிலப்பா..ஆனா அவரு என்னை விரும்பவெலாம் இல்லப்பா.. வேற எதோ காரணத்துக்காக அப்படி சொல்லிருப்பாருப்பா.. நான் தான் முட்டாள் தனமா அப்படி நடந்துட்டேன்..இனிமே உங்க பேச்ச மீற மாட்டேன்பா.. நீங்க என்ன சொன்னாலும் கேக்கறன்பா.. என்னோட பேசாம மட்டும் இருக்காதிங்கப்பா.." என்று அவர் தோளில் சாய்ந்து அழுது கொண்டே கூறினாள்..
" இந்த மனுசங்கிட்ட அப்பவே சொன்னேன்.. பொம்பளப் புள்ளய வீட்டோடவே வெச்சிக்கனுங்கறது.. வெளியூர்கெலாம் அனுப்பினா இப்படிதான் ஆகும் " என்று சிடுசிடுத்தார் பரு..
" நீ அமைதியா இரு.. என் மகதிப் பத்தி எனக்குத் தெரியும்.. அவ பேச்ச மீற மாட்டா.. அப்படி தான மகதி.. " என்றார் மகதியின் தலையை நீவிக் கொண்டே..
அவளும் சரி என்று தலையாட்டினாள்..
" நீ என்னடா சொல்ற.." என்றார் அர்ஜூனைப் பாரத்து..
அவன் மகதியைப் பார்த்தான் அவள் கண்களில் உள்ள வலியை உணராமல் அவனில்லை..
" சொல்லுடா மாமா தான் கேக்கறாங்கல்ல " என்றார் பரு..
" மாமா என்னை மன்னிச்சிடுங்க .. என்னால மகதிய மனைவியாலாம் நினைச்சுப் பார்க்க முடியாது.. நீங்க எப்படி மகதிய நேசிக்கிறீங்களோ அதே மாறி தான் நானும் நினைக்கிறேன்.. தயவு செஞ்சு என்னைப் புரிஞ்சுக்கோங்க.. ஏற்கனவே என்னோட அம்மா என் லைப்ல நிறைய கேம் விளையாண்டுட்டாங்க.. என்னால இதுக்கு மேல எந்த வலியையும் தாங்கிக்க முடியாது.. உங்க வீட்ல நான் இருக்கறது தொந்தரவா இருந்தா சொல்லுங்க.. இப்பவே போயிறேன்.. "
என்றான் கண்ணீர் மல்க..
" எங்கப்பா போற " என்றவாறு சிரித்துக் கொண்டே வந்தார் அர்ஜூனின் தாய் ஜானகி..
அவர் உள்ளே வந்ததும் மகதி கண்களை துடைத்துக் கொண்டு தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றாள்..
" வாம்மா எப்படி இருக்க " என்ற வராத சிரிப்பை வரவைத்துக் கொண்டே உள்ளே அழைத்தார் ..
மகதி தண்ணீர் கொண்டு வந்து தர " என்ன மருமகளே.. முகத்துல கல்யாணக் கலை தாண்டவமாடுதே
" என்றார் அழுது கலையிழந்த மகதியின் முகத்தைப் பார்த்து..
" ஏன் நின்னுகிட்டே பேசறீங்க.. உக்காருங்க.. " என்று குழைந்து கொண்டே பேசினார் பருவதம்..
' தன் தம்பி மனைவிய பார்த்தா மட்டும் எதுக்குதான் இப்படி நல்லவங்க மாதிரி மாறிடராங்களோ ' என நினைத்துக் கொண்டாள் மகதி..
அவரைக் கண்டு கொள்ளாமல் " என்னம்மா மருமகளே சென்னை வந்தன்னு கேள்விப்பட்டேன்..என்ன பார்க்கணும்னு உனக்கு தோணலியா " என்றார் நக்கல் கலந்த புன்னகையோடு..
" அத்தை அது " என்று தயங்கினாள் மகதி..
" சரி விடும்மா .. உனக்கு நான் குட் நியூஷ் சொல்லப் போறேன்.. நெக்ஸ்ட் மன்த்தே உனக்கு மேரேஜ்.. ஹேப்பியா "
மகதி தன் தந்தையைப் பார்த்தாள்.. அவரோ அர்ஜூனைப் பார்த்தார்.. அவன் வாயைத் திறக்கவில்லை..
ஆனால் எதாவது பேசுங்க என்று கண் ஜாடை செய்தான்..
ஆனால் மகதிக்குத் தான் தெரியுமே..தன் அத்தை முன்பு தந்தை பொட்டிப் பாம்பென்று. அவரை எதிர்த்து இதுவரை ஒருவார்த்தை பேசியதில்லை என்று..
" அண்ணா வர 3 தேதி நாள் நல்லா இருக்கு..அன்னைக்கே நிச்சயம் பண்ணிக்கலாம் .. நீங்க என்ன நினைக்கிறீங்க "
" அது வந்து அர்ஜூன் எதோ " அவர் முடிக்குமுன் " அண்ணி வாங்க நிச்சயத்துக்கு இந்த சாரி ஓகேவானு சொல்லுங்க " என்றார் கையில் உள்ள கவரைக் காட்டி..
ஆசியாவின் மான்செஸ்டர் ஜப்பான்
( ஒசாகோ )
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top