பாகம் 19
ப்ளீஸ் சொல்லுங்க ..அத்தான்..
இங்க பாரு மகதி.. இப்ப அதப் பத்தி பேச வேணா.. நீ போய் ரெஸ்ட் எடு..
சரி விடுங்க.. ஆனால் நீங்க ஏன் கல்யாணப் பேச்செடுத்தா அப்செட் ஆகறீங்க.. என்னைப் பிடிக்காததால..
லூசு.. ஏன் இந்த மாறிலாம் பேசற.. நான் உன்ன பொறந்ததிலிருந்து பார்க்கறேன்.. எனக்கு நீ எப்பவும் அந்த கட்டவிரல வாய்ல வெச்சிட்டு பலூன் ஊதிக் கொடு அர்ஜு னு சொல்ற குட்டிப்பாப்பாவா தான் தெரியற.. நீ என்னோட குழந்தம்மா.. உன்னப் போய் என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னா நான் எப்படி கோவப்படாம இருக்க முடியும்..
நான் என்னைக் கேக்க வரனு உங்களுக்கு புரியவே இல்லையா..எங்கிட்ட எதையும் மறைக்கனும்னு நினைக்காதிங்க..நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் . .. சொல்லுங்க அத்தான்..
உன்னோட பிரச்சனையே மணல் லாரி வெச்சு அள்ளுற அளவு இருக்கு.. நீ எனக்கு ஹெல்ப் பண்றியா..நான் சொன்னா கேப்பதானா.. போ.. எதும் பேசாம.. சாப்பிட்டு வா..
இப்ப உங்க பிரச்சினை தீர்ந்தா தான் என் பிரச்சினையும் தீரும் என வாய்க்குள்ளே முனுமுனுத்தாள்..
என்ன சொன்ன..கேக்கல.. சத்தமா சொல்லு..என்றான் அர்ஜூன் ..
நீங்க மட்டும் நான் கேட்டதுக்கு எதாவது பதில் சொன்னிங்களா.. நீங்களே உங்க வாய் திறந்து எல்லா உண்மையும் சொல்ற வரைக்கும் இந்த மகதி உங்களோட பேச மாட்டாள்.. போங்க பரு என் மேல கோவமா இருக்கு.. எனக்காக போய் சப்போர்ட் பண்ற வேலைய பாருங்க.. என்றாள் மென்னகையுடன்..
உனக்கெலாம் அந்த பையன் தான் சரிப்பட்டு வருவான்.. என்னா அடி.. னு சொல்லிட்டே உள்ள போய்டான்..
இதுவரை சிரித்துக் கொண்டிருந்த மகதியின் முகம் இறுகியது..
' பாலா சரியான சுயநலக்காரன்.. தன் தம்பி லைப் செட்டில் ஆனவுடனே.. அத்தான ஒரு கேள்வி கூட கேக்காமல் அப்படியே போய்டானே..இதுல என்னை விரும்பறேனு பொய் வேற..அப்பா வந்து என்ன கேள்வி கேப்பார்னே தெரியல.. இப்படி மாட்டி விட்டுட்டு போய்டாரே...'
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
கிருஷ் தோட்டத்தில் சுஜிக்கு எதிராக அமர்ந்து இருந்தான்..
சுஜியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை... அவள் கிருஷின் குழப்பமடைந்த முகத்தையே பார்த்திருந்தாள்..
" இன்னும் எவ்ளோ நேரம் தான் இப்படியே இருப்ப கிருஷ் .. எதாவது கேள்வி கேட்டா தான பதில் சொல்ல முடியும் "
சிறிது தயக்கத்திற்கு பிறகு " நீ என்னை மனசார ஏத்துக்கிட்டியா சுஜி "
என்றான் அவள் முகத்தைப் பார்க்காமல்..
இதுக்கு என்னால பொய் சொல்ல முடியல.. நான் உன்னோட காதல புரிஞ்சிகிட்டதால் தான் இந்த முடிவு எடுத்தேன்.. நான் உனக்கு எப்பவும் உண்மையா இருப்பேன்..உனக்கு எப்பவும் துரோகம் பண்ண மாட்டேன்டா.. நா மாறிட்டேன்.. உனக்கு என்கிட்ட எந்த வித்யாசமும் தெரியலியா " என்றாள் சிறு புன்னகையோடு..
" ஒரு வேளை அர்ஜூன் திரும்பவும் வந்து இங்க நின்னானா.. அப்பவும் இதே மாறி சொல்வியா.."
" கிருஷ் "
" சொல்லு சுஜி.. அப்பவும் உனக்கு என் காதல் பெரிசா தெரியுமா "
" ஏன் கிருஷ் இந்த மாறிலாம் பேசற.. மனசில ஒருத்தர நினைச்சிட்டு இன்னொருத்தரோட வாழற பொண்ணு மாறி உனக்கு என்னப் பார்த்தா தெரியுதா.. நான் உனக்கு சம்மதம் சொல்றப்பவே என்னோட பாஸ்ட மறந்துட்டு உனக்காக வாழனும்னு ஆசப்பட்டு தான் நினைச்சேன்.. ஆனால் நீ என்னை சந்தேகப் படற மாறி பேசற..பரவால.. நான் உன்ன அந்த அளவுக்கு காயப் படுத்திற்கேன்.. "
" அதுக்கில்ல சுஜி.. நீ உன்னையே கஷ்டப் படுத்திக்க கூடாதனுதான் சொல்றேன்.. "
" நானும் இப்ப சொல்றேன்.. இனி அர்ஜூனே உயிரோட வந்தா கூட என்னையும் உன்னையும் பிரிக்க முடியாது போதுமா.."
ம்ம்
" இப்பவாது சிரி கிருஷ்.. எனக்கு பழைய கிருஷ பார்க்கனும்னு ஆசயா இருக்கு.. "
உண்மையாவே எனக்கு இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரிலடீ.. சந்தோசமாவும் இருக்கு .. அதே சமயம் வருத்தமாவும் இருக்கு..
அவள் முகம் வாடிப்போகவும்..
சரி சரி.. நீயும் சோகமா மாறிடாத.. வா அண்ணாவுக்கு நாம ரெண்டு பேரும் பொண்ணு பார்க்கணும்.. நமக்கு இன்னும் கொஞ்சம் தான் டைம் இருக்கு..
அதுக்கு அவசியமே இல்ல.. அன்னைக்கு ஹாஸ்பிடல பார்த்தனே.. ஹான்.. உங்க ஆபிஸ் தான்..
யார சொல்ற.. மகதியவா..
ம்ம்
அந்த பொண்ணு பாலா மாமாவ விரும்பறானு நினைக்கிறேன்.. ஆனா மாமாவோட விருப்பம் தான் என்னனு தெரில..
அதெப்படி உனக்கு தெரியும்..
ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத் தான் தெரியும் என்று சொல்லி சிரித்தாள்..
சில வருடங்களுக்கு பிறகு ..அவளின்
சிரிப்பில் ஜீவன் இருந்ததைக் கண்டு அவள் முழுமையாக மாறிவிட்டாள் என்பதில் தெளிவு பெற்றான்.. இதற்கு மேல் அவளிடம் கேள்வி கேட்டு அவளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த கூடாது.. என எண்ணினான்..
எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறியவர் ?
அபாஸ் செல்பா ( நேபாளம் )
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top