பாகம் 15

கிருஷ் இப்பதான் அவ மனச ஓரளவுக்கு மாத்துனான்.. ஆனா நீ இப்ப சொன்ன ஒரு வார்த்தைல மறுபடியும் பழையபடியே சொல்லிட்டு போய்ட்டா.. இப்ப உனக்கு சந்தோசமா என அவன் கத்த,
அதுவரை அவன் பேசுவதை அமைதியாக கன்னத்தில் கை வைத்தபடி கேட்டுக் கொண்டிருந்த மகதி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்..

" நா நா நா முன்னாடி உள்ள வந்தப்ப கிகிகிருஷ் சார் தான் அந்தப் பொண்ண திட்டிக்கிட்டு இருந்தார்.. நா ம்ம்ம் நினைச்சேன் அந்த பொண்ணுதான் இவர லவ்வ் பண்றானு.. ஆனால் இப்படி இருக்கும்னு நினைக்கல.. நான் உண்மையிலே லூசுதான்.. அதான் புரியாம தப்பு பண்ணிட்டேன்.. ம்ம் ம்.
நான் வேணா அந்த பொண்ணு கால விழுந்தாவது சமாதானப் படுத்தறேன்.. ப்ளீஸ் ம்ம் ம் "...என
கண்ணீரை துடைத்துக் கொண்டே சொல்லி முடித்தாள்.

பாலாவுக்கே அவளைப் பார்க்க பாவமாக இருந்தது...

" சாரி மகதி நா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு அடிச்டேன்.. நீ ஃபீல் பண்ணாத. அவ இத்தனை  நாள் நாங்க சொன்னதையே கேக்கல.. நீ சொன்னதுக்காகலாம் அவ அந்த முடிவு எடுக்கல.. புரியுதா.. போ வேலைய பாரு " என்று அவள் முகத்தைக்கூட பார்க்காமல் திரும்பி நின்று பதிலளித்தான்..

இந்த தடவை சுஜி கண்டிப்பாக என்னையும் என் காதலையும் ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் அவனது வேலையை அரைகுறையாக செய்துவிட்டு ஆர்வமாக உள்ளே நுழைந்தான்..கிருஷ்..

அங்கே சுஜி இல்லாதது அவனுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது..அவனது முகவாட்டத்தை பார்த்த மகதிக்கு அதற்கு நான் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் தன்னையே நொந்து கொண்டாள்..

பாலாவோ எப்பொழுதும் துறுதுறுவென இருக்கும் தன் செல்ல தம்பி இந்த பாழாய்ப் போன காதலால் அவன் படும் அவஸ்தையை தன்னால் சரிசெய்ய முடியவில்லையே என எண்ணி கண் கலங்க நின்று கொண்டிருந்தான்..

" அண்ணா அம்மு எங்க  " என்றான் நெஞ்சில் வலியோடு..

பாலா அவனிடம் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றான்..

" சார் அந்த பொண்ணுக்கு எதோ இம்பார்டன்ட் கால் வந்துச்சினு இப்ப தான் சார் போனாங்க " என்றாள் பொறுமையாக..

மகதி தன்னிடம் பொய் சொல்ல வாய்ப்பில்லை..என்ற நம்பிக்கையில் சிறிது நிம்மதி அடைந்தான் ..

மகதி வெளியே சென்ற சிறிது நேரத்தில் பாலாவும் வெளியே வந்தான்..

பாலா மன உலைச்சலுடன் வெளியே வருவதைப் பார்த்து மகதி அவனருகே வந்து நின்றாள்..

" சார் என்னாச்சு .. அவர் கண்டுபிடிச்டாரா... "
அவன் இல்லையென தலையாட்டவும்
" அப்படினா எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க.. நான் எப்படியாவது அந்தப் பொண்ண சமாதானம் பண்ணிறேன் "

" இங்க பாரு மகதி .. காதல் சமாதானம் பண்ணி வர விசயம் இல்ல.. மனசில அதுவா தோணனும்.. அப்படி இல்லைனா கடைசி வரை அவுங்க சந்தோசமா இருக்க முடியாது புரியுதா
.. கிருஷோட உண்மையான காதல் அவ மனச மாத்திரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. உன்ன அடிச்சதுக்காக நான் மறுபடியும் சாரி கேட்டுக்கிறேன்.. பாய் " என சொல்லி அவன் நகர ,

" சார் அந்த அர்ஜுன் பத்தி சொல்லுங்களேன் " என்றாள் தயக்கமாக..

" அவனப் பத்தி இப்ப உனக்கு தெரிஞ்சு இப்ப ஒன்னும் ஆகப் போறது இல்ல.. " என்றான் சளிப்பாக..

அவன்  அவ்வாறு கூறியதும்
அவளது முகம் வாட, தன் அலைபேசியில் இருந்த அர்ஜுனின் புகைப்படத்தைக் காட்டினான்..

அதை ஆர்வமாக பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்..
" சார் இவர் என்னோட அத்தை பையன் சார்... ஆனா இவர் உயிரோட தான இருக்காங்க.. ஆனா இறந்துட்டானு சொல்றீங்க.. "

அவனும் அதே அதிர்ச்சியுடன் " என்ன சொல்ற.. 2 வருசத்துக்கு முன்னாடி நடந்த கார் ஆக்சிடன்ட்ல இவன் இறந்துட்டான் " என்றான்

" இல்ல சார் ஆக்சிடன்ட் ஆனது உண்மைதான் சார்.. ஆனா அத்தானுக்கு ஒன்னும்  ஆகல.. இவுக இப்ப எங்க ஊர்ல தான் இருக்காங்க.. அவருக்கு என்னை  மேரேஜ் பண்ணி வெச்சிடுவாங்கனு தான் நா பயந்திட்டு இந்த ஊருக்கே வந்தேன் " என ஒரே மூச்சில் சொல்லவும்

அதை நம்ப முடியாமல்
' நிஜமாவா சொல்ற' என்று கோவமாகச் சொல்லி அவள் இரு தோள்களிலும் தன் கையை வைத்து உலுக்கினான்..

அவளும் நேராக அவன் கண்களைப் பார்த்து ஆம் என்று நடுங்கிக் கொண்டே  தலையாட்டினாள் அவனின் இந்த திடீர் நடவடிக்கையால்..

" அப்ப என்ன உங்க ஊருக்குக் கூட்டிட்டு போறியா இன்னைக்கே "

அவள் தயங்கவும் அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான் கிருஷின் கார் நிற்கும் இடத்திற்கு..

" சார் கிருஷ் சார்க்கு இன்ஃபார்ம் பண்ணனும் " என்றாள் தயக்கத்துடன்..

" நான் சொன்னத செஞ்சா போதும் புரியுதா " என்றான் கடுங் கோவத்துடன்..

அவனது கோவத்திற்கு முன்னால் மகதியால் எதுவும் பேச முடியவில்லை..பயந்த படி அப்படியே நின்று கொண்டிருந்தாள்..

அவளது நிலையைப் பார்த்து " சாரிமா.. அர்ஜூன் மேல இருந்த கோவத்த உன் மேல காட்டிட்டேன்.. வா போலாம்  " என்று  சொல்லி காரின் பின் கதவை திறந்து வைத்தான்..
ஆனால் அர்ஜூன் உயிருடன் திரும்பி வந்தால் கிருஷின் காதல் என்னாகுமோ என்கிற பயம் இருவருக்குமே தோன்றத்தான் செய்தது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top