பாகம் 14
அவள் பயத்தில் முகத்தை மூடிக்கொள்ள, ஆனால் இங்கே மகதி என்றொரு ஜீவன் இருப்பதையே கண்டுக்கொள்ளாமல் இரண்டு ஜீவனும் கிருஷுன் அறைக்கு சென்றுவிட்டனர்.
மகதி மெதுவாக பைலை இறக்கிப் பார்த்தாள்..அவன் கண்டுகொள்ளாது சென்றது சிறிது வலித்தாலும் தப்பித்தோம் என நினைத்துக் கொண்டாள்.
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
டேய் என்னடா உன் மனசில நினைச்சிக்கிட்டு இருக்க..அம்மு நிலைமையையும் புரிஞ்சிக்கடா என்றான் பாலா..
அண்ணா அவ நல்லதுக்காக தான சொல்றேன்.. நீயும் அவளுக்குப் போய் சப்போர்ட் பண்ற.. நான் எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்கட்டும்...
உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எப்பவும் நான் தா மாட்டிக்கிறேன்.. அம்மாக்காக தான் நா பொறுமையா பேசிட்டு இருக்கேன் புரியுதா.. இன்னைக்கு ரெண்டுல ஒரு முடிவு தெரியாம இந்த ஆபிச விட்டு நகர மாட்டேன்.. என்று கோபமாக பேசிவிட்டு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான் பாலா...
அந்த நேரம் கிருஷின் அலைபேசி அலற...
.
.
.
இந்த நாட்டாமை உள்ள போய் இவ்ளோ நேரமாச்சே.. ஒரு வேள தூங்கிட்டாரா.. என பார்க்கும் போது சரியா கிருஷ் கதவ திறந்திருந்தான்.
' மகதி அவங்களுக்கு சாப்பிட எதாவது கொடு.. நான் 5 நிமிசத்துல வந்திடறேன்.. என்று கோவமாக சொல்லிவிட்டு சென்றவன்.. திரும்பி வந்து அவள் கையில் இருந்த பைலை வாங்கிக் கொண்டு சென்றான்..
' வர வர பாலாவோட சேர்ந்து கிருஷிக்கும் அறிவு கொறஞ்சிடுச்சினு நினைக்கிறேன்.. அந்த பொண்ணு லவ் செட்டாகலினு பீலிங்ல இருக்கும்..டாக்டர் சாரோ டென்சன் மோடுல இருப்பாரு.. இதுல நான் போயி காபி குடிங்க சார்னு நீட்டனனா தூக்கி மூஞ்சிலியே ஊத்துனாலும் ஊத்தாலாம்.. எதுக்கும் நாம ஜில்லுனு ஜூசே கொண்டு போலாம்.. ' என நினைத்துக் கொண்டே ஜூஸை எடுத்துக் கொண்டாள்..
மகதி ஒரு 20 நிமிசம் முன்னாடி தான் வாய வெச்சிட்டு சும்மா இல்லாம அவமானப்பட்டு தலை தெறிக்க ஓடி வந்தேனு மறக்காம மனசில வெச்சிட்டு நல்ல படியா அமைதியா திரும்பி வந்திடுமா.. என் செல்லம்ல..இவ்வாறு விளையாட்டாக எண்ணிக் கொண்டு உள்ளே சென்ற மகதி, பாலாவின் இறுக்கமான முகமும் சுஜியின் சோகமான முகமும் கண்டு எப்படி பேசுவது என்பது புரியாமல் திகைத்தாள்..
அவளின் வருகையை பாலா அறியாமல் பேச துவங்கினான்..
" இங்க பாரு அம்மு.. உன்னால தான் கிருஷ் 2 வருசமா எங்கள பிரிஞ்சு வெளிநாட்ல இருந்தான்.. அம்மாக்காக தான் இப்ப வந்திருக்கான்,. இப்ப நீ எடுக்கற முடிவுல தான் என் தம்பியோட லைப்பே இருக்கு..
சுஜி எந்த முடிவும் சொல்லாமல் அமைதியா தரைய வெறிச்சு பார்த்துக் கொண்டிருந்தாள்..
மகதிக்கு சுஜிய பார்க்க பாவமா இருந்தது.... அவள் பக்கத்துல போய் உட்கார்ந்து அவள் தோள் மேல கைய வைத்தாள். மூளை எதுவும் பேசாதே என்று சொன்னாலும் நம்ம மேம் தான் அமைதியா இருக்க மாட்டாங்களே..
"இங்க பாருங்க . நீங்க எதுக்காகவும் உங்க காதல விட்டுக் கொடுக்காதிங்க.. புரியுதா " என்றாள் மகதி பாலாவை முறைத்துக்கொண்டு,
அவளது ஆறுதல் மொழியைக் கேட்ட பிறகு கண்களை துடைத்து விட்டு சுஜி " மாமா.. நீங்க சொன்னிங்க.. கிருஷ் கஷ்டப்படறான் ..அப்படிங்கறனால எல்லாம் என் காதல விட்டுக் கொடுக்க முடியாது.. என் லைப்ல ஒரே காதல் தான்..
( அப்பாடி அந்த பொண்ணு மனசு இந்த லூசு பேச்சக் கேட்டு மாறல.. என சந்தோசப் பட்டாள் மகதி.. பி்ன்னால் நடக்கும் விளைவு தெரியாமல் )
"என் லைப்ல ஒரே காதல் தான்.. அதும் என் அர்ஜூன் மட்டும் தான்... அவன தவிற வேற யார்க்கும் என் மனசில இடமில்ல.. என தீர்க்கமாக பாலாவைப் பார்த்து சொல்லிவிட்டு..
மகதியைப் பார்த்து " தேங்க்ஸ் " என்று சொல்லி சென்று விட்டாள்..
' என்னது அர்ஜூனா.. அப்ப இவ கிருஷ விரும்பலையா ' என எண்ணி முடிப்பதற்குள் பாலாவின் கை அவளின் கன்னத்தை பதம் பார்த்தது..
" அறிவிற்கா உனக்கு நாங்களே இப்ப தான் ஓரளவுக்கு மனச மாத்தினோம்.. அது உனக்கு பொறுக்கலியா.. இப்படி எங்க லைப்ல எதுக்கு இன்டர்பர் ஆகுற.. " என்றான் கடுங்கோபத்துடன்..
அவன் கடைசியாக சொன்ன வார்த்தை அவள் மூளையில் ஏறியிருந்தால் அடுத்த கேள்வியை கேட்டிருக்க மாட்டாள்..
" ஒரு பொண்ணோட மனசில இருக்கற காதல அவ்ளோ சீக்கிறம் மறக்க வைக்க முடியாது..உங்க தம்பிக்காக அர்ஜூன்க்கு துரோகம் பண்றீங்களா " என்றால் கன்னத்தில் கை வைத்தபடி..
" லூசு மாறி பேசாத.. அர்ஜுன் இறந்து 2 வருசமாச்சு..அவ அவனையே இன்னும் நினைச்சிக்கி்ட்டு தன்னையே அழிச்சிட்டு இருக்கா.." என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top