பாகம் 13
ஹான் சொல்லுங்க சார்..என்றாள் மகதி..
இந்த பாட்டு நல்லாருக்குல... என்றான் நக்கலாக...அவள் முறைக்கவும் 'கிருஷ்
இப்ப சரியாக நடந்துகிறானா..'
என்று அவளைப் பார்த்து திரும்பிக் கேக்கவும் வழக்கம் போல் தன்னிலை மறந்து இஇஇஇஇ என்று இழித்து வைத்தாள்..
இந்த சிரிப்புக்கு அர்த்தம் என்ன என வினவிய பாலாவின் கோப மொழிகளைக் கேட்டு...
" சார் நீங்க ஏன் அவர் உங்க தம்பினு சொல்லவே இல்ல " என்றாள்
" ஹலோ மேடம் அன்னைக்கு ஹாஸ்பிடலயே இதத்தான் சொல்லாம்னு வந்தேன்.. நீ கால்ல சுடுதண்ணி கொட்ன மாறி என் சாரி எதுக்குனு கூட கேக்காம ஓடிட்ட " என்றான் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக் கொண்டு..
தன் மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டு " சாரி சார் " என்றாள் பவ்யமாக..
" இந்த ஆட்டிங்லாம் வேணா.... எல்லாத்துக்கிட்டயும் ரவுண்ட் கட்டி சண்டைக்கு போற நீ.. என்னப் பார்த்தா மட்டும் ஏன் பயந்து போய் ஓடுற.. என்னப் பார்த்தா அவ்ளோ டெரராகவா இருக்கு.. " என்றான் சிரித்துக் கொண்டு..
அவன் சிரிப்பிலும் அவனது குரலிலும்
தன்னைமறந்து " நான் பதில் சொல்லித் தான் இந்த கேள்விக்கு ஆன்சர் புரியுமா என்ன.. அந்த அளவுக்கு நீங்க டியூப்ளைட்டா " என்றாள் சிறு புன்னகையுடன்..
" என்ன உலற " என்றான் அதிர்ச்சியில் வண்டியை நிறுத்தி விட்டு..
இப்போதுதான் தான் என்ன உளறி வைத்து இருக்கிறேன் என்பதை உணர்ந்த மகதி எப்படி இதை சமாளிப்பது என்பதை அறியாமல் திணறினாள்..
கைகளை பிசைந்த படியே சன்னலைப் பார்த்தவள் இது தன் ஆபிஸ் இருக்கும் ஏரியா என்பதை உணர்ந்து ஒரு நொடி கூட தாமதிக்காமல் " டிராப் பண்ணதுக்கு தேங்க்ஸ் சார்.." என்று சொல்லி விட்டு வழக்கம் போல தப்பித்தோம்.. பிழைத்தோம் என ஓட்டம் பிடித்தாள்..
' உனக்கு தான் மண்டைல மசாலா இல்லைனு தெரியும்ல.. அப்ரோம் எதுக்குடீ நீயேப் போயி வாலன்டிரா போய் அவமானப் பட்டுக்ற...ஒழுங்கா வாய வெச்சிட்டு அமைதியாயிருந்தா இன்னும் அவரோட ஒரு 5 நிமிசம் டைம் ஸ்பென்ட் பண்ணியிருக்கலாம்ல என நொந்து கொண்டவளை..
' அப்ப இவ்ளோ நேரம் இதுக்குதா புலம்பிட்டு வந்தியா ' என்ற மனசாட்சியின் கேவலமான பார்வைக்கு ' ஆம் ' என தலையாட்டி விட்டு ஆபிஸ்க்குள் நுழைந்தாள்..
" மே ஐ கம் இன் சார் "என பாதி கதவைத் திறந்து கேட்டவளின் காதில்..
' நீ சொல்றக்கு பேர் காதலே இல்ல.. தயவு செஞ்சு என்ன டென்சன் பண்ணாம இடத்த காலி பண்ணு சுஜி '
என்ற கிருஷின் கத்தல் தான் காதில் விழுந்தது..
மகதியைப் பார்த்தவுடன் தன் கோவத்தை மறைத்துக் கொண்டு ' ஒரு 5 நிமிசம் வெளிய வெயிட் பண்ணு ' என்றான்..
பாவம் சுஜிதான் அவனருகே அழுது கொண்டு நின்றாள்..
மகதி சென்ற பிறகு சுஜி பேச ஆரம்பித்தாள்..
' கிருஷ் ப்ளீஷ்டா.. நான் சொல்றத புரிஞ்சிக்கோ .. நீ எங்கிட்ட கோவமா பேசறத என்னால தாங்கிக்க முடியலடா.. ' என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
" இப்ப நீ வெளிய போறியா.. இல்லையா " என சொன்னதோடு நில்லாமல் அவள் கையைப் பிடித்து இழுத்து வெளியே அழைத்து வந்தான்..
மகதி வெளியவே நிக்கவும் சுஜி மேல் இருந்த கையை விடுவித்து உள்ளே சென்று விட்டான்..
சுஜியும் அழுது கொண்டே வெளியே சென்று விட்டாள்..
' ச்சே அண்ணனும் தம்பியும் எப்ப தான் பொண்ணுங்க மனச புரிஞ்சிப்பாங்களோ...ஒரு வேள பாலாவும் உன் விசயத்துல இப்படி ரூடா நடந்துகிட்டா என்னடி பண்றது...ச்சீச்சி பாலா ரொம்ப சாப்ட் கேரக்டர்.. அப்படிலாம் பண்ண மாட்டார்.. சிம்பிளா உனக்கு நோ சொல்லிட்டு போய்டுவார்.. இல்ல மகதி... என மனசாட்சி பழிப்புக்காட்ட
" இல்ல " என சத்தமாகவே கத்திவிட்டாள்..
ஆபிஸே அவளைத் திரும்பிப் பார்க்க உடனே காதில் கையை வைத்த படி புளூடூத் யூஸ் பண்ணுவது போல் ஆக்ட் செய்து' ஹலோ நான் பேசறது கேக்குதா ' என வேண்டும் என்றே உறக்க பேசினாள்..
மகதி இந்த மாறியே பண்ணிட்டு இருந்த உனக்கு முழு லூசுனு பட்டம் கொடுத்து மூளைல உக்கார வெச்சிடுவாங்க.. இனி நோ மைன்ட் வாய்ஸ் .. ஓகே..
குட் கேர்ள்... என நினைத்துக் கொண்டு திரும்ப அங்கே பாலா சுஜியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்..
சுத்தம் .. அய்யோ இங்க ஒளியருக்கு கூட இடமில்லையே... அவன் பார்வையிலிருந்து தப்பிக்க முகத்திற்கு நேராக பைலை தூக்கி வைத்துக் கொண்டாள்..அவள் என்னமோ இந்த ஆபிசில் தான் வேலை செய்வது அவனுக்கு தெரியாது என்பது போல்..
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top