பாகம் 10

நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.. என்னை ஒரு ஆளாக்கூட மதிக்காத ஒருத்தன போய் எப்படி போய் நான் லவ் பண்ணேன்.. இல்ல இது லவ் கிடையாது.. ஜஸ்ட் ஒரு அட்ரேக்சன் தான்.. இனி அதும் கிடையாது ..
இனி நீ உண்டு உன் வேலை உண்டுனு இருந்துக்க.. அதான் உன் தன்மானத்துக்கும் நல்லது..

இனி எதுக்காகவும் அவன பார்க்க முயற்சிக்க கூடாது..அவ்ளோ தான் கதம்.. கதம்..

என்னையே மதிக்கல. நான் சொன்னதுக்காக கிருஷயா கேள்வி கேக்க போறான்.. பேசாம இந்த மன்த் முடிஞ்ச உடனே வேலைய விட்றனும்..
என தனக்குள் எண்ணிக் கொண்டே பேருந்திற்காக காத்துக் கொண்டு இருந்தாள் மகதி..

இவ்வாறு எண்ணிக் கொண்டு இருக்க இப்போது தான் தன் முகத்திற்கு நேரே யாரோ கையை ஆட்டிக் கொண்டு இருப்பதை உணர்ந்தாள்.. அது வேறு யாரும் இல்லை பாலா தான்..

இதுவரைக் தனக்குள் வைத்திருந்த கோபம் பாலாவைப் பார்த்தவுடன் தவிடு பொடியாக இஇஇஇ என்று இழித்து வைத்தாள்..

'
'உனக்கு வெக்கம் மானமே இல்லையா த்துதுூ..' என மனசாட்சி தன்னை அசிங்கப் படுத்த.. எதாவது கோவமா பேச ட்ரை பண்ணு மகதி என தன்னையே தைரியப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்..

" சார் இப்ப உங்களுக்கு என்ன வேணும் " என்றாள் கோவமாக..

" நேத்து நடந்ததுக்கு சாரி மகதி "

" நீங்க சாரி கேக்கிற அளவுக்கு அங்க ஒன்னும் நடக்கலியே சார் "

" ஓ.. அப்ப என் மேல உனக்கு கோவம் இல்லையா "

" சார் இத ஒரு மேட்டராக் கூட நா நினைக்கல.. போதுமா.. "

" ஓகே.. வா நான் உன்ன ஆபிஸ்ல ட்ராப் பண்றேன் " என்றான் தன் பைக்கைக் காட்டி...

" சாரி சார்.. அடுத்தவுங்களோட ஒன்னா பைக்ல போற அளவுக்கு நான் இன்னும் முன்னேறல...'

அதற்கு அவன் பதில் சொல்வதற்கு முன் தானே தொடர்ந்தாள்..
" நீங்க கேக்கலாம் அன்னைக்கு உங்க கிட்ட லிப்ட் கேட்டேனு.. அவசரமா பிளட் தேவப் பட்டதுனால தான் கேட்டேன்.. அதுக்கே நீங்க ஹெல்ப் பண்ணல.. இப்ப எதுக்கு என்ட கேக்றீங்க.. என் கை கால் நல்லாத்தான் இருக்கு.. ஒரு வேள பஸ்ஸே வரலினா கூட நடந்து கூட போயிருவேன்.. உங்க அனுதாபத்துக்கு ரொம்ப நன்றி .." என்றாள் சிறு கடுகடுப்புடன்..

' ஷப்பா கோவமா பேசியாச்சு' மகதி..

இதைக் கேட்டவுடன் பாலா சிரிக்க ஆரம்பித்து விட்டான்.
.' ஐயோ .. சிரிக்காத.. அப்றோம் என் டயலாக்ச மறந்திடுவேனே'

" சார் இப்ப எதுக்கு ல்லூ ( ஐயோ நல்ல வேள லூசுனு சொல்லிருப்பேன்..) சிரிக்கிறீங்க.."

" இல்ல .. கோவமே இல்லாம இவ்ளோ திட்றீயே.. நீ கோவப்பட்டா எவ்ளோ திட்டிருப்ப..அதன் நினைச்சேன்... சிரிப்பு வந்திடுச்சு.."

" ஹிஹிஹி.."

" சரி சரி நானும் எதும் நினைச்சிக்கல.. உண்மையாவே இன்னைக்கு இந்த வழியா பஸ் வராது.. என் மேல எந்த கோவமும் இல்லைனா நான் உன்ன டிராப் பண்றேன் ப்ளீஸ்.. " என்றான் புன்னகையுடன்..

' அதான் சாரி கேட்டுடானுல மகதி.. ப்ளீஸ் மன்னிச்சிடலாமே.. எவ்ளோ பெரிய ஆள் நம்ப கிட்ட வந்து சாரி கேக்கனும்னு என்ன இருக்கு.. வெயிட் வெயிட் .. அப்டினா நா நினைக்கிற மாறி தான் அவரும் என்னை நினைக்கிறாரா..'

" மேடம் இன்னும் எவ்ளோ நேரம் தான் உங்களுக்குள்ளயே எதாவது திங்க் பண்ணிட்டு இருப்பிங்க..நான் உங்கள கடத்திட்டு போற ஐடியாலாம் ஒன்னுமில்ல.. பயப்படாம வாங்க.. " என்றான் நக்கலாக..

" சார் நீங்க இந்த மாறிலாம் பேசுவீங்களா " என்றாள் ஆச்சரியத்துடன்..

" ம்ம் ஓட்டாத.. இனி நாம பிரண்ட்ஸ் ஓகே.." என்று சொல்லி கையை நீட்டினான்..

' நடப்பது கனவா நிஜமா என்று குழம்பிக் கொண்டே கைக் கொடுத்தாள்..

" எனக்கு இன்னைக்கு லீவ்.. ஸோ லேட்டானா எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல.. நீயும் லீவ் போடனும்னு நினைச்சினா இப்படியே என் கைய பிடிச்சிட்டு எவ்ளோ நேரம்னாலும் நில்லு "

" அவன் இவ்வாறு சொன்ன பிறகு தான் தன் கையை அவனிடமிருந்து இன்னும் எடுக்கவில்லை.. என்பதை உணர்ந்தாள்..

' ச்சீ மானக்கேடு .. அவன் என்னப் பத்தி எவ்ளோ சீப்பா நினைச்சானோ தெரியலியே.. ' இவ்வாறு எண்ணும் போதே எதிரில் ஒரு ஆட்டோ வருவதைப் பார்த்து
' 50 ரூபாய் வேஸ்டானாலும் பரவால.. இவங்கோட பைக்ல போகக் கூடாது ' என எண்ணி
" பாய் " என்ற ஒற்றை சொல்லை சொல்லிவிட்டு ஒரே ஓட்டத்தில் ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்..

' ஸப்பா தப்பிச்சோம்.. இவங்கிட்ட எதோ ஒன்னு இருக்கு.. அதான் அவன பார்த்து பேச முடியல.. தி கிரேட் மகதிக்கு இப்டி ஒருத்தனப் பார்த்து பயந்து ஓடி வர நிலைமை ஆயிடுச்சே..' என தன்னையே நொந்து கொண்டாள்..

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top