2..

அந்த லேபிற்குள் நுழைந்ததும் அதன் உள்ளமைப்பை பார்த்து பிரம்மித்து நின்றான்.அங்கு இருப்போர் எல்லோரும் அரவிந்தை பார்த்தது மரியாதை நிமிர்த்தமாக எழுந்து நிற்க உட்காரும் படி கையசைத்தான்.நடந்துகொண்டே அரவிந்த் தன் பேச்சை தொடர்ந்தான்.

"இந்த நிலையில் அந்த பசுமை குடில் வாயுகளில் புதியதாக கண்டறியபட்ட வாயு தான் SF5CF3...மற்ற வாயுகளாகிய மீதேன்,நைட்ரஸ் ஆக்சைட் போன்றவையெல்லாம் 20-300 மடங்கு தான் Co2 வைவிட வலிமையானது ஆனால் SF5CF3 18,000 மடங்கு co2 வை விட வலிமையானது.மேலும் அது வளிமண்டலத்தில் 800 ஆண்டுகளுக்கு இருக்கும்..SF5CF3 வாயு கொஞ்சம் அதிகரித்தாலே உலகில் பல இடங்கள்,நாடுகள் அழிந்துவிடும்..."

"அப்போ அந்த SF5CF3 வெளியாகாமல் தடுக்கலாமில்லையா..?"

"அங்க தான்டா பிரச்சனையே...அந்த கேஸ் எதிலிருந்து வருகிறதென யாரலும் கண்டு பிடிக்க முடியவில்லை..அது எக்ஸ்ட்டீரீம் ஆவதற்குள் அதன் தொழில்துறை மூலத்தை கண்டுபிடித்தே ஆகவேண்டும்..இதை தான் நானும் ஆராய்ச்சி செய்கிறேன்..."

"நல்ல விஷயம் தானே இதையேன் வெளியே சொல்லாமல் மறைக்கிறாய்.."

"இரு சொல்றேன்.. "
என்றவன் லேப்பில் அணிவதற்கான வெள்ளை கோட், இதர பொருட்கள் எல்லாம் அணிந்து கொண்டான்.

"ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒவ்வொரு விதத்தில் யூகிக்கின்றனர்.அதில் சிலர் 'இராணுவ உபகாரணங்களில் பயன்படுத்தும் இரகசிய வாயுகளால் தான்' என்று யூகிக்கின்றனர்..இதை மூலமாக கொண்டு நான் ஆராய்ச்சி செய்தேன்.அதன் விளைவாக ஒரு Formula நான் கண்டுபிடித்துள்ளேன்.என் கணிப்பு சரியாக இருந்தால் அந்த இராணுவ உபகாரணங்களில் பயன்படும் வாயுவில் SF5CF3 இருந்தால் இந்த FORMULAஒட ரியாக்டாகும்..ஆனால் அந்த இராணுவ உபகாரணங்களை என்னை ஆராய்ச்சி செய்ய லன்டன் Government அணுமதிக்க மாடேங்கின்றனர்.அவர்கள் இராணுவ ரகசியத்தை அந்நியர்கள் அறிய அணுமதி இல்லையாம். இதற்காக தான் இத்தனை  ஆண்டுகள் நான் போராடினேன்.இப்பொழுது தான் இறுதியாக ஐ.நா சபையின் உத்தரவின் பேரில் எனக்கு அணுமதி கிடைத்துள்ளது.ஆனால் இரண்டு கட்டளைகளுக்கு உட்பட்டு..

1.இந்த ஆராய்ச்சி முடியும் வரை இதை பற்றிய தகவல்கள் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியக்கூடாது.அதனால் தான் நான் உங்களிடம் கூட சொல்லவில்லை.

2. அப்படி என் பிராஜக்ட் தோல்வியடைந்தால் லன்டன் கவர்மெண்ட்டை சோதனை புரிந்தற்காக இனி என்னை இங்கு எந்த ஆராய்ச்சியும் செய்ய அணுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் வெற்றியடைந்தால் அவற்றை தடை செய்து உலகை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிவிடலாம்..என் விதி  மூன்றுமுறை என் ஆய்வு தோல்வியடைந்துவிட்டது.இன்று கடைசி முயற்சி இந்த முறையும் தோல்வியடைந்தால் விஷயம் கவர்மெண்டிற்கு போயிவிடும்..எங்கள் பல நாள் கஷ்டம் எல்லாம் விணாகி விடும்.."என்று அரவிந்த் சொல்லி முடிக்க "கவலை படாதேடா எல்லாம் நன்றாகவே முடியும்.."என்றான் ஹுதய்.
அப்போது அரவிந்தின் அஸ்ஸிஸ்டன் ஸ்டூவட் வந்து எல்லாம் தாயார் என்று தெரிவித்தான்.

"சரி ஹுதய் நீ இங்கேயே இரு..நான் போயிட்டு வருகிறேன்.."என்று கூறி ஸ்டூவடுடன் சோதனை  நடைபெறும் கூடத்தை நோக்கி சென்றனர்.

இருவரும்  முகத்தில் மாச்க் அணிந்துகொள்ள பின் அந்த அறையில் நுழைந்தனர்.அங்கு எல்லாம் சரியாக ஏற்பாடு செய்திருப்பதாக  தம்ஸ்சப் காட்டினான் ஸ்டூவட்.

அந்த அறையில் நுழைந்ததும் அவனுக்குத் தோன்றியதோ இது சரி தான் என்பதே..ஆனால் இது சரி இல்லை என்று என் மனம் கூறுகிறதே..இது சரி தானா..?என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் அரவிந்த்.
இருவரும் அங்கிருந்து வெளியேறியதும்

"ஏதோ தவறு என்று தோன்றுகிறது ஸ்டூவட்.."
என்றான்.

"இல்லையே சார்..சரியாக தானே தயார் செய்திருந்தோம்.."

"இல்லை..நான் மீண்டும் டெஸ்ட் செய்ய வேண்டும்..வா.."என்று வேறு ஆராய்ச்சி கூடத்தில் அந்த சோதனையறையில் புகுத்த பட்டிருந்த வாயுவின் சேம்பிள்ளை ஆராய்ந்து பார்த்தான்.அப்பொழுது அதில் ஒரு முக்கியமான ரசாயணத்தை சேர்கவில்லை என்பதை கண்டுபிடித்தவன் அதை ஸ்டூவடிடம் காட்ட அவனும் ஆமாம் என்று ஒத்துகொண்டான்.
பின் அனைத்தையும் மீண்டும் சரி செய்து அந்த அறைக்குள் புகுத்தினர்.அதன் பின் அனைவரும் ஹுதய் இருந்த அறைக்கு வர அவன் என்ன ஆயிற்று  என்பதுபோல் அரவிந்தை பார்த்தான்.

"இங்கேர்ந்து தான் ரிசல்ட்டை பார்க்க முடியும்" என்றவன் அங்கு சுவற்றில் மாட்டபற்றிருந்த LED டிவியை ஆன் செய்ய அந்த சோதனை கூடம் திரையில் வந்தது.

"அங்கே நடுவில் ஒரு கண்டைனர் இருகிறது பார்.அதில் தான் அந்த இராணுவத்தில் பயன்படுத்தும் வாயுகள் உள்ளது.அந்த அறை முழுதும் நான் கண்டுபிடித்த Formula வில் உள்ள வாயு புகுத்தபட்டுள்ளது.நான் இப்போது இந்த Button ஐ ஆன் செய்தால் அந்த கண்டைனர் திறக்கும்.அந்த வாயுவில் SF5CF3 இருந்தால் அறையில் உள்ள வாயுவோடு ரியக்ட்டாகி ஒரு நிமிடத்தில் அறையில் நிறம் மாற்றத்தை தரும்..அதில் SF5CF3 இன் அளவு குறைவாக இருந்தால் சிவப்பு நிறமாகவும் மிக்க அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறமாகவும் மாறும்.விச்மீன்ஸ் மிஷின் சக்சஸ்

ஒருவேளை அதில் SF5CF3 இல்லையெனில் எந்த நிறமாற்றமும் ஏற்படாமல் வெறும் புகை மூட்டம் மற்றுமே இருக்கும்..."என்று கூற, ஹுதய் புரிகிறது என்று தலையசைத்தான்.

ஒரு பெருமூச்சிற்கு பின் உறுதியுடன் அந்த Button ஐ அலுத்த Count down 60,59,58.... என்று ஓட துவங்கியது.ஒவ்வொரு நொடிக்கும் அங்குள்ள எல்லாரின் இதயமும் வேகமாக துடித்தது.

5,4,3,2,1......

அனைவரும் ஆர்வத்தோடும் எதிர்பார்போடும் திரையை நோக்க,

அந்த அறை சிவப்பு நிறமாக மாறியது,பின் மஞ்சள் நிறமானது.
                    *********
                         முற்றும்

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #shortstory