13
காத்திருப்பது கொடுமை தான் ஆனால்
காத்திருந்து கிடைப்பது உன் அன்பு என்றால்
நான் இந்த மண்ணை விட்டு செல்லும் வரை
காத்திருப்பேன்.
மழைக்காக ஏங்கும் மரங்களை போல
உனக்காக ஏங்கும் மனிதன் நானடி
எனக்காக பொழிவாயா மழை எனும் உன் அன்பை.
நீண்ட நேர தனிமை வெள்ளை காகிதம்
அதில் உன்னைப்பற்றி சில வரிகள்
காதலில் நனைகிறது காகித பக்கங்கள்
என் இதயமும்தான்.
உன் சின்ன புன்னகையில் சிதறிய நான்
இன்னும் மீளவில்லை மீண்டும் ஒரு முறை
புன்னகையை சிந்துவாய...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top