1

என் அம்மாவைப் போல் என்னையும் என் அடுக்களையில் புலம்ப வைக்க  ஆயுத்தமாகிறாய். நானோ 
புலம்பல்களை புதைத்துவிட்டு, கடந்து செல்ல எத்தனிக்கிறேன். உனக்காக இல்லை, 
என் மகள் தலைமுறையினரிடம் 
புலம்பல்கள் புலம் பெயர்ந்துவிடக்கூடாதென. 
என் தலைமுறை அம்மாக்கள் அழகாக 
மூளைசலவை செய்யப்பட்டு முன்னேரிவிட்டார்கள். அடிமை சுமைதாங்கியிலிருந்து சுதந்திர சுமைதாங்கிகளாய் என் அம்மா.

சுற்றி திரிந்த என் ஆன்மாவிற்கு
கடவுள் தந்த வீடு தாயின் கருவறை
அங்கே முழுவதும் கருப்பு நிற இருட்டுகள்
முதலில் பயமாகத்தான் இருந்தன.
பின்பு உற்சாகம் ஓங்கியது மேகத்தை காட்டிலும்  மென்மையான அறைகள்
தண்ணீரில் தவழும் மீன்களைப் போல்
பண்ணீரில் தவழ்ந்து கொண்டிருந்தேன்.
அவ்வப்போது என்னிடம் பேசும் வார்த்தைகளும் என் மனதிற்க்கு
தாழிசையாய் இனித்தன அந்த இருட்டறையில் வருடும் சுவாசக்காற்றும்
மாசுக்கள் நீக்கப்பட்டது. அங்கே முகர்ந்து பார்க்க வாசனை இல்லை. வர்ணிக்க கவிதை மட்டுமே இருந்தன குளிர்ச்சியூட்ட நிலா இல்லை ஏனெனில் அங்கு நானே நிலா ஆனேன் அங்கு பூக்களோடு வீசும் காற்று இல்லை. அதைக்காட்டிலும் உன்னதமான
அம்மாவின் சுவாசத்தோடு வீசும்
சுவாசக் காற்று அங்கே. இயற்கையும் கிடையாது. அங்கே என் அன்னையே இயற்கையானாள் கடவுள் புகைப்படமும் இல்லை ஏனெனில் உன்னதமான கடவுள் 
என்னை சுமந்து கொண்டிருந்தாள்
அங்கே.

Dear friends i hope you're all good. உன்னைப் பற்றி உன்னிடமே I was completed. I think you're all enjoyed it. Thanks for voted and comments andall.
And please support for Next Part உன்னைப் பற்றி உன்னிடமே II will be updates.

May God Bless you friends & Keep read my works.

Thanks,

Parama Joseph.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top