கவிதை 150

காதல் தான் நம்மை பேசிக்கொண்டிருக்கிறது, காதல் தான் நம்மை சுவாசித்துக்கொண்டிருக்கிறது. காதல் தான் நம்மை காதலித்துக்கொண்டிருக்கிறது. 

பேசும் நேரத்தை விட அலைபேசியை யார் முதலில் துண்டிப்பது என்று மெளனமாய் காத்திருக்கும் நேரங்களே அதிகம். 

அடிக்கடி காணாமல் போய்விடும் என்னை உன் நினைவுகள் தான் கண்டுபிடித்து என் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறது.  

மடந்தை முகம் கண்ட நாள் முதல் மலர்ந்தே வாடிய மலர் ஒன்று இதயத்தில்.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama