கவிதை. 114
நாம் நாளை என தள்ளி வைத்தது நம்மிடம் கெஞ்சுகின்றது உடன் செயல்படு உடல் செயல்படும் பொழுதே.
வளைந்த பிறகு தான் வானவில்லும் வண்ணம் பெற்றது வளைந்து கொடு உன் மனம் உடையாது.
அவள் கொண்டது மறைமுகப் பார்வை நித்தம் எழுதுகிறது நேர்முகத் தேர்வு விடை தெரியாது இதயம்.
இரட்டை வேடம்இயல்பாகி போனதுஅவளது கண்களுக்கு.
தாபம் கொண்ட ரௌத்திரப் பெண்மை ஏற்றவள் பேராண்மை அடங்கிய பூவை, மாது அறிந்தோர் அவள் உயிர் உண்டுள்ள சமர் மறம் அறிவதில்லை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top