கவிதை. 108


கொட்டி கிடந்த மூன்றாம் பிறைகள் நீ வெட்டி போட்ட குட்டி நகம்.

ஒரு நாள் நமக்கு பிடிச்சமாறி வாழ்க்கை மாறும் அப்போ நம்ம ஆசையும் மாறி போய்யிருக்கும்.  

சொர்க்கம் அவள் அதில் தோன்றும் வானவில் அவளின் வெட்கம்.

பாவம் இந்த பெண்கள் உடைக்க பட்ட பின்னரே உருவம் தருகிறார்கள். 

பெரும்பாலான அக்கறைகளின் திரை மறைவில், கறை படிந்த சுயநலங்கள் மிக ஆக்ரோஷமாய் பதுங்கி கொண்டிருக்கக் கூடும்.  

எல்லாமே புரிந்த பின்பும் எதையோ ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது மனது.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama