*7*

"நான் என் இவ்வாறு பைத்தியம் போல
செய்தேன்" என எண்ணிக்கொண்டு  அபியின்  முகத்தைப்பார்த்தாள் ஷானா. அபி கண்களை திறக்காமல்  புரண்டு படுத்திருந்தான்." நான் ஒரு லூசு சும்மா சும்மா பயப்படுறன்  அதுவும் இவனைப்பாத்து"."முறைக்கு நான் தான் கோவப்பட  வேண்டும்" என எண்ணிக்கொண்டு குளியல்  அறைக்குள் சென்றால் ஷானா.

        " ஓ கடவுளே! நான் என்ன முட்டாள்  தனம்  பண்ணி இருக்கிறன்"." நல்ல காலம்  தூங்குறமாதிர  ஆக்ட்  பண்ணி தப்பிடடன்"."இனி இப்படி நடக்காம  பத்துக்கவேணும்" என தனது மனதுக்குள் எண்ணிக்கொண்டான்  அபி.

       "இன்றைக்கு  ஒரு முக்கியமான  மீட்டிங்குக்கு போகணும என்னால உன்னை கோவில்ல  இறக்க  முடியாது." " நீ போகணும் ஏண்டா நடந்து போ என்ன வந்து டாச்சர் பண்ணதா ஓகே .",என கோவமாக கூறினான்  அபி. "பாட்டி தான் சொன்னாங்க  கோவிலுக்கு  உங்ககூட  போகச்சொல்லி  அதனாலதான்  கேட்டானான்"  என கூறினால் ஷானா.
"ஆ எதுக்கெடுத்தாலும்  ஒரே பாட்டி பாட்டி சும்மா சும்மா பாட்டி பேரை  எடுத்து  என்னைஎன்ன மிரட்டவா  பாக்கிற."  "சும்மா சும்மா பக்கத்தில  வந்து நிக்கிற  நீ வந்து இந்த 3 மாதத்தில  நான் எவ்வளவு கஷ்டம்  அனுபவிக்கிறான்  தெரியுமா? என்னால நிம்மதியா  தூங்க முடியல எங்க பாத்தாலும்  என்பின்னால  பல்லி மாதிரி   ஒட்டிக்கொண்டு  சீய் போ"
என கூறியபடி வெளியில்  சென்றுவிட்டான். 

                          "நான் என்ன அப்படி இவனுக்கு செய்தனான்  எப்பப்பாத்தாலும்  எரிஞ்சு  விழுந்து கிட்டேயிருக்கிறான்."  என மனதினுள் நினைத்தபடி  நிமிர்ந்து பார்த்தவளுக்கு  அப்படியே தூக்கி வாரிப்போட்டது.

           அங்கு வாசலில் கயல் நின்று கொண்டு இருந்தாள். இவள் எப்போ  வந்திருப்பாள் என நினைத்தபடி காயலைப்பார்த்து  சிரித்துக்கொண்டே 
"கயல் எப்ப வந்தநீங்க"  என ஷானா கேடடாள். கயல் ஷானா கேட்ட கேள்விக்கு  பதில் கூறாமல். "அண்ணி 
நானும் கோவிலுக்குத்தான்  போறான் 
வாங்க ரெண்டுபேரும் சேர்ந்தே  போகலாம்."  என கூறினாள் கயல்

  கயல்...... வந்து..நான்..என ஷானா இழுத்துக்கொண்டு  இருக்கும் பொழுது  "என்ன அண்ணி நீங்க நீங்கதான்  பிறகு என்ன நான் வந்து போய் எண்டுகொண்டு  இருக்கிறீங்க 
பொய் தயாராகுங்க  கோவிலுக்கு போக  நான் கார்ல வைட்  பண்ணுறன்".என நில்லாமல்  கூறி கீழிறங்கி  சென்று விடடாள்.  

       இவள் என்ன இவ்வாறு கூறி விட்டு சென்று விட்டாள் ஒருவேள  இவள் எல்லாத்தையும்  கேட்டிருப்பாளா.
ஓ கடவுளே எனக்கு இதல்லாம்  தேவையா  எண்ணிக்கொண்டு  கோவிலுக்கு தயாராகி கீழே  சென்றால் ஷானா.
   
           அண்ணி வாங்க நான் கார்ல இருக்கிறன் எனக்கூறி சிரித்தாள் கயல்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top