*6*
ஓ....நான் தப்பான நேரத்தில வந்திட்டன் என்று நினைக்கிறன்.
என கூறியபடி உள்ளேவந்தாள் கயல்.
அம்மா ஷானா நீ இண்டைக்கு முதல் முதல் சமைக்கவேணும் எனவே நீ பூஜை செய்யவேணும்...... என்ன நான் சொல்லிக்கொண்டு நிக்கிறன். நீங்க 3பேரும் முழிக்கிறிங்க என மஞ்சு பாட்டி கேட்டார்.
அது பாட்டி இங்க எங்க பாத்தாலும்...... என்னோட கண்ணுக்கு...........என்று கயல் ஒழுத்து கூறி முடிப்பதற்குள் அபி 'பாட்டி அது நான் வெளி..ய...போ..கணும்' எனக்கூறி வெளியேறினான். இவன் ஏன் இண்டைக்கு இவ்வளவு திக்கிறான் என பாட்டி குறிக்கொண்டு ஷானா வின் பக்கம் திரும்ப 'பாட்டி நான் வந்து பர்த்ரூம் போகணும்' எனக்குரியபடியே உள்ளே ஓடி சென்று விட்டாள் ஷானா.
என்ன இண்டைக்கு எல்லாம் புதுசா நடக்குது என பாட்டி கூறியபடி வெளியேறினார். அவரின் பின்னால்
சிரித்தபடியே வெளியேறினால் கயல்.
எனக்கு ரொம்ப பசிக்குது பாட்டி என்ன இவ்வளவு நேரம் ஆகியும் சாப்பாடு வரேல எனக்கெட்டபடியே இருந்தான் அபி. சாப்பாடு தயார் இதோ சாப்பிடலாம் எனக்குரியபடி பாட்டி சாப்பாடு எடுத்து வைத்தார்.
ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு விட்டு வாவ் பாட்டி இண்டைக்கு சமையல் சூப்பர் என கூறி சாப்பிடடன் அபி இது பாட்டி சமைக்கேல அண்ணா இது அண்ணி சமைச்சது என கூறி சிரித்தாள் கயல். தங்கையை பார்த்து மென்னகை புரிந்தபடி ஷானா வைப்பார்த்து முறைத்தான். ஆம் இவள் சமைத்ததைப்போய் நன்றாக உள்ளது என்று வேற குறிவிட்டேனே உடனே தலையில் ஏறி உக்கார்ந்து விடுவாள். என எண்ணிக்கொண்டான் அபி .
நீ அன்று போல் ஷோபாவில் தூங்கி பிறகு என்னை மீண்டும் சாட்டாதே என கூறி உறங்க ஆரம்பித்தான் அபி.
இவனுக்கு மட்டும் எங்கிருந்துதான் துக்கம் வருகிறதோ எனக்கூறி நித்திரை வராமல் புரண்டு படுத்தாள் ஷானா. அதிகாலையிலேயே எதோ தூங்க விடாமல் ஷானாவின் துக்கத்தை கலைத்தது. மெதுவாக கண்களை விழித்து எழுவதற்காக தலையை துக்கும் பொழுது எதோ கனமான ஒன்று அவளது இடை மேல் உள்ளது போன்று தோன்ற அவளது இடையின் மேல் அவனது கையைக்கண்டு பயந்து விட்டாள் இவ்வளவு நேரமா இவன் என்ன அணைத்தபடி தூங்கியிருக்கிறான். சீய்.....நான் அத கவனிக்காமல் இவ்வளவு நேரம் தூங்கி இருக்கிறன் என தன் மேலே கோவம் கொண்டாள்.
இவன் எழுவதற்குள் நான் எவ்வாறு வெளியே போக்கவேண்டு என எண்ணி அவனது கையை மெதுவாக தூக்கி அருகில் போட்டாள். தொம்மென தனது கையின் அதிர்வில் மெதுவாக அபி திரும்பினான். ஷானா பயந்த விழிகளுடன் அவனது முகத்தை பார்த்தாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top