*14*

ரொம்ப இனிமையான மொழி  எதுதெரியுமா? அது குழந்தைகள்  கொஞ்சிப்பேசும்  மழழைமொழிதான் என்று இவ்வளவு காலமும்  நினைத்திருந்தேன் ஆனால் காதல் பேசும் ஒரு பெண்னின்  மெளனம் கூட அழகுதான் என புரிந்துகொண்டேன்  என்று ஒரு குரல் கேட்க்க திரும்பினாள்  ஷானா அங்கு அபி  நின்று கொண்டிருந்தான்  அவனது கண்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது.

அவளது மூளையாள் இதை நம்பமுடியவில்லை காரணம் இவ்வளவுநாள்  திட்டி  வெறுத்துக்கொண்டு  இருந்தவன்  திடீரெண்டு  இப்படி காதல் வசனம்  பேசியதை ஆனால் மனது மூளையின் எச்சரிக்கையை  மறுத்தது கரணம் காதல்.
அப்போது  இந்த மரமண்டைக்கு  புரியல  அப்படியே எல்லாவற்றியும்  நம்பி  இப்படி வாழ்க்கைமுழுவதும்  வலிய சுமக்கவேண்டிண்டியிருக்கு எனமனத்தினுள்  புலம்பினாள்  ஷானா. என்ன மேடம் இண்டைக்கு ஒர்க் க்கு போற ஐடியா  இல்லையா  என கேட்டபடி உள்ளேவந்தாள் திவ்யா
            

ஏய்!  என்ன இப்படி முகமெல்லாம் சிவந்துபோயிருக்குது  அதுமட்டுமில்லாமல் கண்ணும்  வீங்கியிருக்குது  என்ன ஆச்சு உனக்கு  ஆர் யு ஓகே? என கேட்டாள் திவ்யா.
       அது .. அது .. ஆ அது வந்து இரவெல்லாம் ஒரே தலவலி அதான்  இப்படி இருக்கு ஒருநாள்  முழுக்க றேஸ்ட் எடுத்த  எல்லாம் சரியாகிும்  உனக்கு வேலைக்கு நேரமாகுது நீ போ என சமாளித்து  திவ்யாவை  வெளியே அனுப்ப  முயன்றால்  ஷானா.  என்னப்பா  உனக்கு இப்படியிருக்கும்  பொது வேலையாவது மண்ணாவது  நான் இண்டைக்கு உன்கூட இருந்து உன்ன நல்லா பாத்துக்கப்போறன்  என   திவ்யா கூற இடைமறித்து  இல்ல அப்படியெல்லாம்  வேண்டாம் நீ வேலைக்கு போ நான்தான்  சொல்லுறேன்ல  என கூறினால் ஷானா. ஆனா அது என திவ்யா இழுக்க  அது ஒண்டும் இல்ல நீ இப்ப வேலைக்கு போ எனக்கு ஒண்டுமில்ல  தூங்கியென்திருச்சா எல்லாம் சரியாகிடும் என கூறி திவ்யாவை அனுப்பி வைத்தாள்.
        
      நீ இவ்வளவு சொல்லுறதால  போறான் கிச்சின்ல  சாப்பாடு இருக்கு சாப்பிட்டு  நல்ல றேஸ்ட் எடு  எனகூறிவிட்டு  வெலியேரினாள் தீவி என்கின்ற திவ்யா.
 
      எல்லாம் முடிந்து விட்டது எல்லாவற்றையும் மறந்து விட்டேன் என நினைத்தேன்  ஆனால் இது முடியாதா  தொடர்கதையா  என நினைத்துக்கொண்டு மீண்டும்  பழைய நினைவில் மூழ்கினாள் ஷானா.

ஆம்.. அன்று நடந்தது எவ்வாறு பொய் என்று கூறுவது அதை பார்த்த யாராக இருந்தாலும் இது நாடகம்  என்று சொல்லமாடடார்கள்  ஏனன்றால்  அவனது நடிப்பு  அவ்வாறு  இருந்தது  தேவதை  என்றதென்ன  மானின்விழிகளும் தோற்றுவிடும் உன்னிடம்  என கூறியதென்ன றோயாவின் இதழ்  அது இது என்று கொஞ்சியது  இதெல்லாம்  எவ்வாறு பொய்யாக  இருக்கமுடியும். இதைக்கூட  விடலாம்  ஆனால் வாழ் நாள் முழுவதும் துணைவருவதாக  கூறியது  எல்லாம்..... எல்லமே  பொய்....எல்லாமே..பொய் ...பொய் நான் ஒரு முட்டால் எல்லாத்தையும் முழுசா  நம்பிட்டன்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top