7

வாரமும் கடக்க முருகன் மேகலா திருமணமும் அடுத்த நாள் நடக்க இருந்தது .வீட்டில் சொந்தங்கள் அனைத்தும் நிறைந்து விட ராஜாவும் மாறனும் மாடிக்கு விரட்டப்பட்டனர் .

விரட்டப்பட்டனர் என்பதை விட இருவரும் விரும்பியே அந்த தனிமையை நோக்கி மாடிக்கு சென்றனர் .இருவருக்கும் புறம் பேசுவது என்பது அறவே பிடிக்காது ஆனால் சொந்தங்கள் நிறைந்து விட்டால் புறம் பேசும் பேச்சுக்கு பஞ்சமா இருக்கும் ஆதலால் இருவரும் இரண்டு போர்வையையும் தலையணையையும் எடுத்து வந்தவர்கள் சற்று குளுமையாயிருக்க வேண்டுமென்று அங்கே தண்ணீர் டேங்கில் தண்ணீரை பிடித்து அவர்கள் உறங்க போகும் இடத்தில் தெளித்து விட்டு அது காய்ந்த பின் அதில் போர்வையை விரித்தபடி படுத்தனர் .

ராஜா "ஏன் அண்ணே அங்க காலேஜ் எப்படி போகுது?சும்மா தான் இருக்கியா இல்ல அங்கேயும் ஏழரைய கூட்டி வச்சுருக்கியா ?"என்று கேட்க

மாறனோ தான் செய்து வைத்த செயலை நினைத்து சிரித்தவன் ராஜாவிடம் திரும்பி படுத்து கூறத்துவங்கினான் "அது ஒரு குட்டி கலாட்டாவே நடந்துருக்குடா மண்டக்கசாயம் .என் டைரி சயின்ஸ் வாத்தியாருஹ் ஒரு மலையாளி .அந்த ஆளு ப்ராஹ்மின்ஸ்ட மட்டும் நல்லா பேசி நல்ல மார்க் போட்டு விடும் மத்த பசங்க கிட்ட எல்லாம் எரிஞ்சு எரிஞ்சு விழும்.மனுஷன் என்ன பண்ணாலும் சபரி மலைக்கு மாலை போட்டு இருக்கேல மட்டும் ரொம்ப சாதுவா மாறிருவாரு டா.நா அவர் மாலை போட்ருக்குறத பார்த்துட்டு எங்க சமையல்காரர் ஒருவரும் மாலை போட்ருந்தாரு அவரும் மலையாளி தான் .அவர் கிட்ட பேசுற மாறியே நா அந்த ஆள ஓரக்கண்ணால் பாத்துட்டே எங்க சமயக்காரர்ட்ட நாயரே நீ இந்த தடவ மலைக்கு மட்டும் போடி உன்ன புலி அடிச்சு போடுதா இல்லையானு மட்டும் பாருன்னு சொல்லிட்டேன் ."என்க

ராஜா "அட பாவி அண்ணா வீட்ல தான் எலி மாறி இருக்க அப்பறோம் என்னாச்சு ?"என்க

மாறனோ சிரித்தவன்"அப்பறோம் என்ன அந்த மனுஷன் டென்ஷன் ஆகி இன்டெர்னல் fail ஆக்கிட்டான் பட் எஸ்ட்டெரனல்ல பேப்பர் வெளிய போய் இந்த பையனுக்கு எப்படி fail போட்டீங்க ? paperah சப்மிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க .அப்பறோம் இன்டெர்னல் பேப்பர் பார்த்துட்டு அந்த மனுஷனை left right வாங்கிட்டாங்க யூனிவெர்சிட்டில .ஒரு மாசம் சஸ்பென்ஷன் குடுத்துட்டாங்க அவருக்கு "என்க

ராஜாவோ "ம்ம் இவ்ளோ வாய் இருக்கு ஆனா ப்ரோயோகிக்க வேண்டிய எடத்துல மட்டும் ப்ரோயோகிக்க மாட்ட "என்க

மாறனோ அவனை நோக்கி கையை கூப்பி கும்பிட்டவன் "டேய்ய் ப்ளீஸ் டா என்ன விடு டா என்ன பேசுனாலும் அதையே புடுச்சுக்கிட்டு தொங்காத டா "என்க இருவரும் பக்கென சிரித்துவிட்டனர்.இருவரும் பேசியபடி இருக்க சற்று நேரத்திற்கு பின் மாமா என்ற சத்தமும் கொலுசு சத்தமும் கேட்க வரும் இருவர் யாரென்று திரும்பாமலே கண்டு கொண்டனர் அண்ணனும் தம்பியும் .

இளவரசியும் சிவாவும் மாறன் ராஜாவின் அருகில் வந்தவர்கள் ஆளுக்கொரு மாமனின் அருகில் படுத்துக்கொண்டனர் .இளவரசி ஷிவா இருவரும் ராஜா மாறனின் நடுவில் படுத்துக்கொள்ள மாறன் அருகே இளவரசியும் ராஜா அருகே சிவாவும் படுத்துக்கொண்டனர்.

இளவரசி மாறனின் மேலே கையை தூக்கி போட்டவள் "மாமா கீழ ரொம்ப சத்தம் மாமா இந்த அப்பத்தா வேற அப்பப்போ பேய் மாறி அப்டி சிரிக்குது நா உன் கூட இங்கயே படுத்துக்குறேன் மாமா "என்க

ராஜா சும்மா இருக்காமல் "அடியேய் முட்ட போண்டா என்ன தைரியம் இருந்தா என் அம்மாவை என் முன்னாடியே பேய்னு சொல்லுவ"என்க

அவளோ திரும்பி அவனை முறைத்தவள் "நீ என்ன பெரிய கொம்பாடா இடியாப்ப மண்டையா உன் அம்மாவையும் சொல்லுவேன் உன்னையும் சொல்லுவேன் பேசாம படு டா "என்க ஷிவாவோ தன் இளைய மாமனை பார்த்து சிரித்துவிட்டான்.

மாறன் இது உனக்கு தேவையா என்பதை போல் பார்க்க ராஜாவோ "கிரேட் இன்சல்ட் அடியேய் முட்ட கண்ணி என்னையே இந்த பாடு படுத்துறியே இன்னும் உன் புருஷனை எல்லாம் பிற்காலத்துல என்ன பாடு படுத்துவ "என்க

அவளோ புரியாமல் அவனை பார்க்க மாறனோ அவன் தோளிலே ஒரு போடு போட்டவன் "சின்ன புள்ள கிட்ட பேசுற பேச்சா டா இது தூங்குடா "என்க இளவரசி ராஜாவை பார்த்து நாக்கை துருத்திவிட்டு மாறனின் கழுத்தை கட்டிக்கொண்டு படுத்துவிட

ராஜாவும் "குட்டி பிசாசு" என்று முணுமுணுத்துவிட்டு ஷிவாவை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கிவிட்டான் .

அடுத்த நாள் காலையில் அனைவரும் கிளம்பி மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலிற்கு சென்றனர் .மணமகன் அழைப்பிற்காக முருகனுடன் மாறனும் ராஜாவும் அந்த முக்கில் இருந்த பிள்ளையார் கோவிலிற்கு பெரியவர்கள் சிலருடன் சென்றிருக்க மாறனோ ராஜாவிடம் புலம்பிக்கொண்டே இருந்தான் "டேய்ய் கண்டிப்பா இதை கட்டிக்கிட்டு தான் இருக்கணுமா டா நிக்க மாட்டேங்குதுடா வேட்டி இடுப்புல .போய் மாத்திட்டு வந்துருறேன் டா "என்க

ராஜாவோ அவன் காதிற்குள்ளேயே "கொஞ்ச நேரம் சும்மா இருண்ணே வேட்டிய பெல்ட் போட்டு கட்டி வச்சுருக்க இதுக்கு மேல உனக்கு அது நிக்காம இருக்குதா?பேசாம நில்லு "என்க அவனும் முனங்கிக்கொண்டே நின்றுகொண்டிருந்தான் .பின் மண்டபத்திற்கு வர மோகனும் ராமனும் வந்துவிட்டனர் .மாறனிடம் தாமதத்திற்கு மன்னிப்பு வேண்டியவர்கள் பின் பந்தியில் வேலை செய்ய சென்று விட்டனர் .

மாறன் வந்தவர்களை கவனித்துக்கொண்டிருக்க கொலுசொலியும் அதை தொடர்ந்த சிரிப்பு சத்தமும் அவன் கவனத்தை ஈர்த்தது .பார்வையை திருப்பியவனின் கண்களில் விழுந்தாள் பாவாடை தாவணியில் வழக்கம் போல் ரெட்டை ஜடை பின்னி அதில் கீழ்பக்கமாக பூவை சுற்றி வைத்து குழந்தைகளுடன் குழந்தையாய் விளையாடிக்கொண்டிருந்த இலக்கியா.அந்த காட்சியை கண்டு அவன் இதழ்கள் தானாய் சிரிப்பில் விரிய அது சரியாக மகாவின் கண்களில் பட்டது.

தம்பியின் பார்வை சென்ற இடத்தில பார்த்தவள் சற்று ப்ரம்மித்து தான் போனாள் அந்த எளிமையான தாவணியில் பேரழகாய் சாந்தமான முகத்தில் குறும்பு நிறைந்திருக்க இருந்தவளை பார்த்து .அவளிற்குமே தன்னை அறியாமல் அவள் செய்யும் பாவனைகளை கண்டு புன்னகை அரும்பி விட்டது எனில் மனதில் அவள் முகத்தை குறித்துக்கொண்டாள்.

சற்று நேரம் அவளை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த மாறன் தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட திருமணமும் இனியதாக நிறைவேறியது .அதை தொடர்ந்து வரவேற்பும் அங்கேயே நடக்க விருக்க நண்பர்கள்,ராஜா இளவரசி ஷிவா மற்றும் இலக்கியா கடைசியில் உண்ண அமர்ந்தனர் .

வரிசையாக அனைவரும் அமர்ந்துவிட இலக்கியாவிற்கோ மாறனிற்கு அடுத்து சுவற்றை ஒட்டி இருந்த இருக்கை தான் இருந்தது.

மாறன் சற்று தயங்கி மாறன் செல்ல இலக்கியாவோ "பரவால்ல உக்காருங்க எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க இப்போ இடம் மாத்த வேணாம் "என்ற படி இயல்பாய் அவன் அருகில் அமர்ந்து உண்ண துவங்கி விட்டாள் .மாறனோ அவளை நோக்கி ஒரு புன்னகையை சிந்திவிட்டு உண்ண துவங்கினான் .

மாறனிற்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது .மற்றவர்கள் கருவேப்பிலை மிளகாயை ஒதுக்கி வைத்தால் அவன் உணவில் இருக்கும் காய் கறி அனைத்தையும் ஒதுக்கி வைப்பான்

.அதே பழக்கத்தில் அவன் அனைத்தையும் ஒதுக்கி வைக்க இலக்கியாவோ அதை கவனித்துவிட்டு திட்டினாள் அவனை "இவ்ளோ காய் வேஸ்ட் பண்றீங்க ஒழுங்கா சாப்பிடுங்க.இது கூட கிடைக்காம எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? "என்க

மாறனோ "எனக்கு புடிக்காதும்மா காய்கறி அவ்ளோவா சாப்பிட மாட்டேன் "என்க அவள் மீண்டும் அதையே சொல்ல அவன் மறுக்க கடைசியில் பொறுமை இழந்தவள் ஒன்றையும் யோசியாமல் காய் கறி அனைத்தையும் எடுத்து அவன் வாயை தன் ஒற்றை கையால் திறக்க வைத்து அதில் வலுக்கட்டாயமாக காய்களை திணித்துவிட்டு சென்றுவிட அவனோ அவள் செய்கையில் திகைத்தவன் சுற்றி முற்றி பார்க்க ராஜாவோ இதை கவனித்து விட்டு குடித்த தண்ணீரை துப்பிவிட்டு அமர்ந்திருந்தான் .

ராமனும் மோகனும் எப்பொழுதோ இடத்தை காலி செய்திருக்க மாறனோ அவள் திணித்ததை முழுங்க முடியாமல் முழுங்கிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று இடத்தை காலி செய்துவிட்டான் தம்பியிடம் இருந்து தப்பிக்க .

இதுவரை தோன்றிடாத அவன் வயதிற்கே உரிய ஹார்மோன் மாற்றங்கள் அனைத்தும் உருவாகி அவன் முகத்தில் பிரியாத புன்னகையை தோற்றுவித்திருக்க கண்கள் அவளை தேடி தேடியே மனதில் படம் பிடிக்க அவனிற்கு அவன் வயதோ அவள் வயதோ மனதில் பதியாமல் அந்த பதின் பருவத்திற்குரிய மயக்கத்தில் சுற்றிக்கொண்டிருந்தான் .

எனில் இலக்கியாவோ எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல் இயல்பாகவே சுற்றிக்கொண்டிருந்தாள் .அவள் சிறு வயதிலிருந்தே ராமனுடன் அதிகம் வளர்ந்ததால் மோகனை அன்னைக்கு பயந்து அண்ணன் என்று அழைத்தாலும் அவனிடம் வம்பிழுத்து அவன் தலையை பிடித்து ஆட்டி, அவனை அடித்து என்று இயல்பான ஆண் பெண் தோழமைக்கான ஸ்பரிசம் அறிந்து வளர்ந்ததால் அவளிற்கு தன் செயல் புதிதாகவோ தவறாகவோ தோன்றவில்லை.அவள் தன்னை பெண் என்றே உணர்ந்திராத பொழுது அவள் இது இயல்பான செய்கை இல்லை என்று எங்கனம் உணர்வால் .ராமனின் நண்பன் என்பதால் அவனையும் மோகனை போல் ஒரு நண்பனாக தான் பாவித்தால் அந்த வளர்ந்த குழந்தை . எனில் அது மாறனிற்கும் அப்படியே இருக்குமா என்றால் சந்தேகம் தான்.

வரவேற்பு முடிந்து அனைவரும் மண்டபத்தை காலி செய்ய ராமனும் இலக்கியாவும் ஒரு சிறு தலை அசைப்புடன் விடை பெற மாறனிற்கு இன்று ஏனோ அவளை கண்டாலே புன்னகை வந்து ஒட்டிக்கொண்டு கண்கள் அவளை விட்டு நகர மறுக்க அவள் செல்லும் திசையையே சற்று நேரம் வெறித்துக்கொண்டிருந்தான் .இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ராஜா மனதிற்குள் வண்டி கொஞ்சம் கொடை சாயுதே சரி இல்லையே என்று நினைத்துக்கொண்டான் .

மனமக்களுடன் அனைவ்ரும்ஜ் வீடு நோக்கி புறப்பட மகிழ்ச்சியோடு இருக்க அவேண்டிய ஒருத்தியின் முகமோ யோசனையில் இருந்தது .அவள் மணமகள் மேகலா தற்போது மிச்செஸ் மேகலா முருகன் .

பார்ப்பதற்கு அமைதியாக லட்சணமான மாசு மருவற்ற மதி போன்ற முகத்துடன் இருப்பவள் .எனில் கூட்டுக்குடும்பம் எனும் சொல்லையே வெறுப்பவள் .ஆம் வெறுப்பவள் எனில் முருகனை போல் சுயநலவாதி இல்லை .தனக்கு மிஞ்சி தானமும் தர்மமும் என்றும் தன் குடும்பத்திற்கென்று ஒரு தனி இடம் வேண்டும் என்றும் எண்ணுபவன் அவ்வளவே .மற்றபடி உறவுகள் வேண்டாம் என்று ஒதுங்குபவள் இல்லை .

முருகனின் வரன் வந்ததும் கூட்டுக்குடும்பம் என்றதும் தன் குணத்தால் குடும்பம் உடைய கூடும் என்று முதலில் மறுத்தவள் பின் அவனின் மாத சம்பளம் முப்பதாயிரமாக இருப்பதாலும் பார்க்க சற்று கலையாக இருப்பதாலும் வீட்டு உறுப்பினர்களின் வற்புறுத்தலாலும் ஒப்புக்கொண்டாள் ஒரு கண்டிஷனுடன் .

அதாவது திருமணத்திற்கு முன்பே வீடு ஒன்றை அவனின் பெயரில் கட்டி இருக்க வேண்டும் எப்பொழுது அவளிற்கு அங்கு குடும்பத்தோடு இருக்க முடியாமல் போகிறதோ அன்றே வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று ஆனால் அவர்களுக்கு மாதம் தரவேண்டிய பணம் எந்த பிசகும் இல்லாமல் அவர்களுக்கு சென்று விட வேண்டும் என்று.

முருகனும் அவளின் அதீத அழகால் அவள் பேச்சிற்கு கட்டுண்டு வீட்டை கட்டி திருமணத்தையும் முடித்துவிட்டான்.வலது கால் எடுத்து உள்ளே மணமக்களை அழைத்த பின் விளக்கை ஏற்றி கும்பிட சொல்ல அவள் முதலில் வேண்டியதே" கடவுளே.இந்த வீட்டில் நாத்தனார் கொழுந்தனார் என்று அனைவரும் நல்லவர்கள் தான் ஆனால் என்னால் என் இந்த குணத்தால் இந்த குடும்பத்தில் விரிசல் அமைந்து விடக்கூடாது .ஆதலால் சீக்கிரமே எனக்கு இந்த வீட்டிலிருந்து யார் மனதும் புண்படாமல் வெளியேற சந்தர்ப்பத்தை அமைத்து தா என்பதை தான் .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top