35
அவள் இருந்த இடம் முழுதும் உதிரமாய் இருக்க அதை கண்டு பதறியவன் "லயா"என்று கத்திய கத்தலில் சிவாவும் இளவரசியும் அவனின் அறைக்கு வந்து விட்டனர் .
இளவரசி அவளின் நிலையை கண்டு பதறியவள் "மாரப்பா என்னாச்சு அக்காவுக்கு ?"என்று கேட்க
அவனோ "pre ... pregnantaa இருந்தா லயா பிளட்....பிளட்.... "என்று உலர
ஷிவாவோ "மாமா பதறாதீங்க நான் கீழ கதிர் அண்ணா கிட்ட கார் எடுத்துட்டு வர சொல்றேன் "என்றவன் கீழே ஓட இளவரசி இலக்கியா கர்ப்பமாக இருக்கிறாள் என்றதில் அதிர்ந்தவள் பின் ரத்தப்போக்கு நிற்காமல் வர உடை மாற்ற குளியலறைக்குள் அழைத்து சென்றிருந்தாள்.மாறன் என்ன செய்வதென்றே தெரியாமல் உறைந்து நின்ற நேரத்தில் இருவரும் இலக்கியாவை அள்ளி எடுத்துக் கொண்டு காரில் மருத்துவமனை செல்ல மாறன் அவனது கார்டை எடுத்துக் கொண்டு அவர்களின் பின்னே இருசக்கரவாகனத்தில் மருத்துவமனைக்கு விரைந்தான் .
அரை மணி நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு வந்தவளை உள்ளே அவர்கள் அழைத்து செல்ல மாறனோ கண்களில் பயம் சூழ அப்படியே இடிந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். படிவத்தை இளவரசி தான் நிரப்பி கொடுத்தாள் .சிவாவும் இளவரசியும் அவன் அருகில் அமர்ந்து ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர்
.அவளை பரிசோதித்துவிட்டு மருத்துவர் வெளியே வர அவன் அவர் அருகே ஓடினான் தவிப்புடன். அவன் அவரை பார்க்க அவரோ "சாரி மிஸ்டர் இளமாறன் உங்க wifeku abortion ஆயிருச்சு ."என்று கூற அவனோ கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டான் "ஆனா இன்னொரு காம்ப்ளிகேஷனும் ஆகிருச்சு "என்று சொல்ல
அவன்"என்னாச்சு டாக்டர் ?"என்று கேட்க
அவரோ "septic ஷாக். கரு பாதி கலைஞ்சு வெளியே ரத்தமா வந்துருச்சு ஆனா மீதி உள்ளேயே தங்கி இருக்கு .அதுல அவங்களோட bloodstreamla இன்னபிக்ஷன் ஆகி இருக்கு.அவங்க bp வரையின் அதிகமா இருக்கு .she is not stable .சீக்கிரமே antibiotics குடுத்து அந்த மீதி கருவை சின்ன surgery பண்ணி ரேமொவே பண்ணனும்.இல்லேன்னா..."என்று இழுக்க
அவனோ "இல்லேனா hys ... hysterectomy பண்ண வேண்டி வருமா டாக்டர்?"என்று கேட்க
அவரோ "ஆம்"என்று தலை அசைத்தார் பின் "ஆனா அவ்ளோ தூரம் போக வேண்டியது இல்ல சீக்கிரமே பணத்தை கட்டிருங்க உடனே surgery பண்ண ஸ்டார்ட் பண்ணிரலாம் இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ள operate பண்ணிட்டா uterus remove பண்ண வேண்டிய நெலமை வராது சீக்ரம் பணத்தை கட்டிருங்க "என்று கூறிவிட்டு அங்கிருந்த செவிலியரிடம் இருந்து ரிப்போர்ட்டை வாங்கி கொடுக்க அதிலோ உடனடியாக ஒன்றரை லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்று இருந்தது .
அவனிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அந்த தொகையை பார்த்து தலை சுற்றியது .மாத தொடக்கத்தில் இப்பொழுது தான் அவனின் தந்தயக்கும் தாய்க்கும் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து இருக்க அவனின் health கார்டு இன்னும் மூன்று மாதத்திற்கு உபயோகிக்க முடியாது .இந்த மாத துவக்கத்தில் தான் ராஜாவின் வற்புறுத்தலின் இதுவரை சேர்த்து வைத்த தொகை மொத்தத்தையும் போட்டு ஒரு நிலம் வாங்கி வைத்தான் .
நேற்று கணக்கு புத்தகத்தை வைத்து யோசித்துக் கொண்டிருந்ததே இன்னும் பத்து நாட்களுக்குள் ஏதேனும் தவிர்க்க முடியாத செலவு வந்து விட்டால் என்ன செய்வது என்று தான் .சுத்தமாக இப்பொழுது பணத்திற்கு என்ன செய்வது என்றே அவனிற்கு புரியவில்லை .நகை எடுத்து அடகு வைக்கலாம் என்றால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் அதை செய்ய முடியாதே .என்ன செய்வது என்றே தெரியாமல் தனது வண்டியை எடுத்தவன் அது போன போக்கில் பதினைந்து நிமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு யோசித்தான் .
அங்கிருந்த ஒரு கல் பெஞ்ச் போன்ற ஒன்றில் அமர்ந்தவன்
அணிந்திருந்த formal சட்டை கசங்கி இருக்க தலை முடி களைந்து இருக்க கண்கள் ரத்த சிவப்பை ஏற்றி இருந்தது .அவனின் வாய் ஓயாது இலக்கியாவின் பெயரையே உச்சரித்துக்கொண்டிருக்க கைகளிலிருந்து இதோடு பதினைந்தாவது சிக்ரெட் அவனின் கையை சுட்டு கீழே விழுந்தது .
எழுந்தவன் தனது உள்ளது போராட்டத்தை அடக்க கால்களை ஓங்கி அடித்தும் தஎதைலை முடியை அழுத்தி கோதியும் தனது தவிப்பை மறைக்க போராடிக்கொண்டிருந்தான் .
இங்கோ இளவரசி மாறன் எங்கு சென்றான் என்று தெரியாமல் நேரமாவதை உணர்ந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் படபடப்புடன் இருக்க அடுத்த பத்தாவது நிமிடத்தில் ராஜா அவளின் முன் ஓட்டமும் நடையாய் வந்து சேர்ந்தான் தோளில் துணிப் பையுடன் .அவனை பார்த்து அவன் அருகில் சென்றவள் வார்த்தை தந்தி அடிக்க "அது ராஜா.... அக்கா...... மாமா..... ஆபரேஷன் "என்று உலர
அவனோ அவளின் உதட்டில் கை வைத்து தடுத்தவன் ஒன்னும் பேசாத ஷிவா கால் பண்ணி எல்லாம் சொல்லிட்டான்.நல்லவேளை பஸ்ஸ்டாண்ட்ல இருந்து வீட்டுக்கு போக இருந்தேன் ஷிவா கால் பண்ணதும் இங்க வந்துட்டேன் இப்போ தான் பணத்தை கட்டிட்டு வந்தேன் ."என்றவன் கண்கள் மாறனை தேடி பின் அவன் காணாது போகவும் அவள் புறம் திரும்பியவன் "அண்ணே எங்க ?"என்று கேட்க
அவளோ "தெ... தெரியாது மாமா பணம் கட்டணும்னு சொன்னதும் அப்டியே வேண்டிய எடுத்துட்டு போய்ட்டாரு எங்க போனாரு எதுவும் தெரியல "என்று சொல்ல
அவனோ "ப்ச் இவரு இந்த நேரத்துல எங்க போய் தொலஞ்சாரோ தெரியலையே ஏன் எனக்கு போன் பண்ண பணம் நா transfer பண்ண மாட்டேனாமாம் அப்டி என்ன உன் மாமனுக்கு கௌரவக்கொரைச்சல் வந்துர போகுது என்கிட்டே பணம் வாங்குறதுல "என்று கோவத்தில் கத்த இளவரசி அவனின் கோபத்தில் வெடவெடத்து போய் நின்றாள்.
அவனை நோக்கி வந்த செவிலியர் ஒருவர் "சார் இது ஹாஸ்பிடல் உங்க வீடு இல்ல கத்தாதீங்க "என்றவர் அவன் கையில் ஒரு படிவத்தை கொடுத்து "surgery ஸ்டார்ட் பண்ண போறோம் சார் இதுல husband signature வேணும் எங்க patientoda husband ?"என்று கேட்க
அவனோ இளவரசியை முறைத்தவன் அவரிடம் "இதோ வந்துருவாரு "என்று கூற
அவரோ "சீக்ரம் வர சொல்லுங்க சார் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள அந்த பொண்ணுக்கு surgery பண்ணனும்"என்று கூற அவனும் தலை அசைத்தவன் மாறனிற்கு தனது அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தான் .
அவனின் எண்ணவோட்டத்தை தடைப்படுத்த வேண்டி அவனது அலைபேசி சினுங்க அதில் ராஜாவின் பெயரை பார்த்தவன் எடுத்து காதில் வைக்க அவனோ "யோவ் என்னையா நெனச்சுட்டு இருக்க இன்னும் பத்து நிமிஷத்துல நீ hospitalla இருக்கணும் இல்லேனு வை அண்ணனு கூட பாக்க மாட்டேன் நீ எல்லாம் எதுக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்குற வாயா சீக்ரம் இன்னும் ஒரு மணி நேரத்துல surgery பண்ணணுமாம் "என்று வண்டியை வேக வேகமாக நிமிர்த்தியவன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தான் மாறன் .
கிளப்பிய வேகத்தில் பறந்து வந்தானோ என்று எண்ணுமளவு பதினைந்து நிமிடத்தில் வர வேண்டிய மருத்துவமனைக்கு எட்டு நிமிடத்திலேயே வந்தவன் அங்கே வாசலிலேயே தன்னை முறைத்துக்கொண்டு நின்றிருந்த தம்பியின் முன் தலை குனிந்தான் .
ராஜா "உனக்கு எப்போ தான் புத்தி வரப்போதுன்னே தெரிலண்ணே பணம் இல்லேன்னா என்கிட்டே கேக்குறதுக்கு உனக்கு என்ன கௌரவக் கொறச்சல் ?எப்போவும் நா உனக்கு தம்பி தான் அதை மனசுல வச்சுக்கோ .பணம் கட்டியாச்சு ஏதோ சைன் கேக்குறாங்க husband தான் போடணும்னு போய் போடு "என்று கறாராக கூற
அவனை நன்றியோடு பார்த்தவன் உள்ளே ஓட்டமும் நடையுமாக செல்ல செவிலியரோ "ஏன் சார் அட்மிட் பண்ணிட்டு அப்டியே போய்ட்டிங்க கொஞ்சமாச்சு அறிவு வேணாமா உங்களுக்கு ?என்ன ஆளோ கையெழுத்து போடுங்க சார் "என்று ஒரு கோப்பை கையில் நீட்டினாள்.
அதில் கையெழுத்திட்டவனின் கைகள் தன்னிச்சையாய் அந்த கோப்பில் பொறிக்கப்பட்டிருந்த தன் சரி பாதியானவளின் பெயரை வருடியது "மிச்சஸ். இலக்கியா இளமாறன் " பின் படிவத்தை எடுத்துக்கொண்டு அவர் சென்றுவிட அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவளிற்கு surgery துவங்கியது .அங்கிருந்த நாற்காலியில் சரிந்து அமர்ந்தவன் பழைய நினைவலைகளில் மூழ்கி இருக்க மருத்துவர் வெளி வரும் நேரம் தான் தெளிந்தான் .
அவரின் முன் வந்து நின்றவன் தவிப்புடன் அவரை பார்க்க அவரோ புன்னகைத்தவர் தனது அறைக்கு அவனை அழைத்து சென்றார்.அவனுடன் ராஜாவும் சென்றான் . மருத்துவரின் எதிரில் இருவரும் அமர "டோன்ட் ஒர்ரி மிஸ்டர் மாறன் நாங்க foetusah remove பண்ணிட்டோம் .அறுபத்தி அஞ்சு நாள் கருவா இருந்ததால தான் incomplete abortion ஆகி இருக்கு.remove பண்ணி antibiotics செலுத்துனதுல உங்க wife body நல்லா ரெஸ்பாண்ட் பண்ணுது .இன்னும் ஒரு நாள் observationla வச்சுட்டு நீங்க அவங்கள கூட்டிட்டு போகலாம் .அவங்க uterus strongaa இருக்கு சோ இன்னொரு குழந்தை பிறக்குறதுல எந்த பிரெச்சனையும் இல்ல இருந்தாலும் ஒரு one yearku நீங்க தள்ளி போடுறது நல்லது " என்று கூற அப்பொழுதே மாறனிற்கு மூச்சே வந்தது .
பின் மருத்துவர் "உங்களுக்கு இப்போதைக்கு குழந்தை வேணாம்னு நெனச்சுருந்தா நீங்க hospitalla வந்து அபார்ட்டின் பண்ணிருக்கலாமே சார் டாக்டர் தான நீங்க ?எதுக்கு நீங்களா கருத்தடை மாத்திரை வாங்கி குடுத்தீங்க ?"என்று கேட்க
மாறனோ அதிர்ந்தான் தான் தனது மனைவிக்கு கருத்தடை மாத்திரை வாங்கி கொடுத்தேனா ?எப்பொழுது என்று நினைத்தவன் அவரிடம் "இல்ல சார் நான் என் மனைவிக்கு கருத்தடை மாத்திரை வாங்கி தரலையே .நாங்க எதிர்பார்த்த குழந்தை இது அதுவும் என் மனைவி ரொம்ப எதிர்பார்த்து இருந்தா"என்று கூற
அவரோ குழம்பியவர் "what ? ஆனா அவங்கள டெஸ்ட் பண்ணி பார்த்ததுல மாத்திரை consume பன்னதுக்கான trace இருக்கே "என்று கூற அவனோ ரிப்போர்ட்டை வாங்கி பார்த்தவன் அதிர்ந்தான் .
அதில் அவளின் ரத்த சோதனையில் கருத்தடை மாத்திரை அவள் உட்கொண்டதற்கான அடையாளம் இருந்தது .எப்படி என்று தெரியாமல் அருகில் இருந்த ராஜாவை குழப்பத்தோடு பார்த்தவன் மருத்துவரை பார்க்க அவரோ "என்னாச்சு சார் ?"என்று கேட்க
அவனோ "என்னோட wife கருத்தடை மாத்திரை சாப்பிடல சார் எனக்கு நல்லா தெரியும் ஒரு வருஷமா அவ குழந்தைக்காக ஏங்குவதும் எனக்கு தெரியும் "என்று கூற
அவரோ "மே be அவங்களுக்கு தெரியாம குடுத்துருக்கலாமே ?"என்று கூற அவனிற்கு யார் அப்படி கொடுத்திருப்பார்கள் என்று தெரியவில்லை அவனின் குடும்பத்தார் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்த மாறன் மறந்தும் மகாவை சந்தேகிக்கவில்லை எனில் ராஜாவிற்கோ முதலில் சந்தேகம் வந்ததே மகாவின் மீது தான் .
அவன் குழப்பத்தில் இருக்க மருத்துவரோ "ஓகே அதை விடுங்க மிஸ்டர் மாறன் .முதல் குழந்தை அதுவும் அவங்க ரொம்ப எதிர்பார்த்த குழந்தைனு சொல்றீங்க .normallaave பெண்களுக்கு abortionukku அப்பறோம் ரொம்ப mind depress ஆகும் .சரியா சாப்பிட மாட்டாங்க, தூங்க மாட்டாங்க, எரிஞ்சு விழுவாங்க, மூட் ஸ்விங்ஸ் நெறைய இருக்கும் .நீங்க தான் அவங்கள பொறுமையா handle பண்ணனும் .பிஸிக்கல் strengtha விட மெண்டல் strength தான் இப்போ அவங்களுக்கு தேவை .அவங்க முன்னாடி நீங்க உடைஞ்சு போயிராதீங்க.இன்னும் ரெண்டு மணி நேரத்துல கண்ணு முழுச்சுருவாங்க நீங்க பாக்கலாம் "என்று கூற அவனிற்கோ முழுதாய் ஒரு நாள் கூட தான் அறிந்து உணர்ந்திராத தன் பிள்ளையின் இழப்பு அதீத வேதனையை தான் கொடுத்தது எனினும் அவன் மனைவி இப்பொழுது நலமுடன் இருப்பதே பெரும் நிம்மதியாய் இருந்தது
.தலை அசைத்து விடைபெற்றவன் வெளியே வந்து ராஜாவிடம் "ராஜா அவளுக்கு டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரல நான் போய் எடுத்துட்டு வந்துருறேன் "என்று கூற
அவனோ "சரிண்ணே" என்றவன் பின்"சீக்ரம் வந்துரு அண்ணி முழுச்சதும் உன்ன தான் தேடுவாங்க "என்று கூற அவனும் சரி என்று கூறி சென்றான் .
வீட்டிற்கு வந்து தங்களது அறைக்கு வந்தவனை வரவேற்றது அவனின் உயிரின் உதிரத்தால் நனைந்து போய் இருந்த மெத்தை விரிப்பு .அதன் அருகில் வந்தவன் மெத்தையின் முன் மண்டியிட்டு அந்த காய்ந்த உதிரத்தை வருடினான் .கண்களில் கண்ணீர் வஞ்சனை இன்றி வழிந்தது.அதை பார்த்தபடி இறந்த தன் சிசுவிடம் பேசினான் "அப்பாவை உனக்கு புடிக்கலயாடா கண்ணா ?ஏன்டா இப்டி விட்டுட்டு போயிட்ட?அம்மா எவ்ளோ உடைஞ்சு போயிருவா தெரியுமா ? "என்று கூறி அந்த மெத்தை விரிப்பை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்தவன் சிறிது நேரம் அழுது விட்டு பின்கட்டிற்கு சென்று அதை குழி தோண்டி புதைப்பதற்காக சென்றான் .
மகாவின் அறையில் தான் மண்வெட்டி இருக்கும் அதற்காக அவள் அறைக்கு சென்றவன் மண்வெட்டி எடுத்து குழிதோண்டி அந்த மெத்தை விரிப்பை ஒரு சில செடி விதைகளுடன் சேர்த்து புதைத்து விட்டு வந்தான் .மீண்டும் அந்த மண்வெட்டியை அவள் அறையில் வைத்து விட்டு அவன் திரும்புகையில் அவன் கை பட்டு அங்கிருந்த மாத்திரை டப்பா சரிய அதை ஒழுங்கு படுத்த குனிந்தவன் கையில் கிட்டியது அந்த மாத்திரை .கருத்தடை மாத்திரை .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top