34

அன்று ஷிவா பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருந்தான் இன்று அவர்களின் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி நாள்.இன்றோடு பள்ளி பருவம் முடிந்து இனி பரிட்சைக்கு மட்டுமே செல்ல வேண்டும் .அவர்களின் பள்ளியில் இன்று காலையில் studyum மாலை farewell பார்ட்டி வைத்திருந்தார்கள்.

அதற்கு புத்தகத்தை எடுத்து வைத்தவன் கூடவே இன்னொரு செட் உடையும் எடுத்து வைத்தான்.பின் மிதிவண்டியில் கிளம்ப இலக்கியாவோ உள்ளிருந்து ஓடி வந்தவள் "ஷிவா "என்றழைக்க

அவன் "என்ன அக்கா ?"என்க

அவளோ ஒரு coverai நீட்டியவள் "சுஜி டிரஸ் ஆல்டர் பண்னண குடுத்துருந்தா இன்னைக்கு போடணுமாம் கொஞ்சம் குடுத்துறேன் "என்று கூற அவனோ என்ன சொல்லி அவளிடம் சென்று பேச என்று தவித்துக் கொண்டிருந்தவன் இலக்கியாவே அதற்கு வழி அமைத்து தரவும் புன்னகையுடன் தலை ஆட்டியவன் சென்று விட்டான் .

பள்ளிக்கு சென்றவனை அவனது நண்பர்கள் கூட்டம் அப்படியே அழைத்து சென்று விட மதியம் உணவு இடைவெளியின் பொழுது தான் அவனால் சுஜாதாவை காண முடிந்தது .தன் தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தவளை தூரத்தில் இருந்து சிறிது நேரம் பார்த்து புன்னகைத்தவன் பின் முகத்தில் உணர்ச்சி துடைத்தவனாய் அவள் இருக்குமிடம் சென்றான் .அவன் அங்கே வந்து நின்றதும் தொண்டையை செரும அவளின் தோழிகள் அவனை பார்த்ததும் விலகி சென்றனர் .

அவளோ நிமிர்ந்து என்ன என்பதை போல் பார்க்க அவன் அவள் கையில் இலக்கியா கொடுத்த coverai வைத்தவன் "அக்கா குடுக்க சொன்னாங்க "என்று கூற

அவள் அதை பிரித்து பார்த்தவள் "லூசு சித்தி எப்போ கேட்டா எப்போ குடுக்குது பாரு "என்றவள் பின் அவனை நிமிர்ந்து பார்த்து "தேங்க்ஸ் ஷிவா "என்று கூறி திரும்பி செல்ல

அவனோ "ஒரு நிமிஷம் "என்றான் .

அவன் அழைத்ததில் நின்று திரும்பியவள் "என்ன?" என்று கேட்க

அவனோ கை கட்டி நின்றவன் "இலக்கியா அக்கா உனக்கு சித்தின்னா நா உனக்கு என்ன வேணும் ?"என்க

அவளோ புரியாமல் குழம்பினாள் "புரியல ?"என்று கூற

அவனோ மீண்டும் அழுத்தமாய் "நான் உனக்கு என்ன வேணும்னு கேட்டேன் "என்று கேட்க

அவளோ தயக்கமாய் "ம...... மாமா "என்று கூற

அவனோ அவள் அருகில் ஒரு அடி எடுத்து வைத்தவன் "குட் இனி ஷிவா இல்ல ஷிவா மாமான்னு கூப்டு "என்று கூற

அவளோ சிரித்தவள் "ஹே லூசாடா நீ உனக்கும் எனக்கும் ஆறு மாசம் தான் வித்யாசம் என்னவோ புருஷன கூப்பிட சொல்ற மாதிரி மாமான்னு கூப்பிட சொல்ற நா என் ராமன் மாமாவையே மாமான்னு கூப்பிட்டது இல்ல பேர் சொல்லி தான் கூப்பிடுவேன் "என்று கூற

அவனோ சிரித்தவன் அசால்டாக "அதனால தான் கூப்பிட சொல்றேன் "என்று கூற அவளிற்கு அவன் கூறுவதை மனதில் பதிய வைக்கவே இரண்டு நிமிடம் ஆனது .

அதிர்ச்சியோடு நிமிர்ந்தவள் "உ.. உளறாத ஷிவா "என்று சொல்ல

அவனோ அவள் கையை அவள் அனுமதியே இன்றி எடுத்து அதில் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு வெள்ளி மோதிரத்தை அணிவித்தவன் அந்த கையை அவள் முகத்திற்கு நேரே தூக்கி "ஐ லவ் யூ .நல்லா தெரியும் இது லவ் பண்ற ஏஜ் இல்ல அப்டினு. இன்னும் அஞ்சு வருஷத்துக்கு உன்ன நா டிஸ்டர்ப் பண்ணமாட்டேன் அவ்ளோ ஏன் உன் கண்ணு முன்னாடி கூட வர மாட்டேன் .எனக்கு ips ஆகணும்னு ஆசை சுஜி .அண்டர் graduationoda ips ட்ரைனிங் குடுக்குற bangalore காலேஜ்ல எண்ட்ரன்ஸ் clear பண்ணிட்டேன் .இன்னும் அஞ்சு வருஷத்துல கண்டிப்பா போலீஸ் ஆயிடுவேன் .இப்போ நா உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுறதுக்கான காரணம் நீ இந்த அஞ்சு வருஷத்துல வேற யாரும் approach பண்ணாலும் ....பண்ணுவானுங்க அப்போ உன் மனசுல உனக்காக ஒருத்தன் காத்திருக்கேன்னு ஞாபகம் வச்சுக்க தான்.இப்போவும் உன் இஷ்டம் தான் காத்திருப்பனு சொன்னா இந்த மோதிரம் உன் விரல்ல இருக்கட்டும் இல்லையா கழட்டி இப்போவே குடுத்துரு " என்றவன் தான் பேச வேண்டியதை பேசி முடித்து விட்டேன் என்ற ரீதியில் அவளை விட்டு தள்ளி நின்றான் .

அவன் முதலில் கூறியதிலேயே திகைத்தவள் அடுத்தடுத்து அவன் கொடுத்த அதிர்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியாமல் நின்றாள் பின் சுயநினைவுக்கு வந்தவள் "நாம முழுசா மூணு தடவ தான் பேசி இருப்போம் அதுலயும் சண்டை தான் போட்டோம் உனக்கு என்ன பத்தி என்ன தெரியும் ?பாத்ததும் வரதுக்கு பேர் காதல் இல்ல அதுக்கு பேர் வேற "என்று சொல்ல

அவனோ புருவம் தூக்கியவன் "ப்ச் இதை பாரு இதே dialogueah எனக்கு ப்ரொபோஸ் பண்ண பல பொண்ணுங்க கிட்ட நா சொல்லிருக்கேன் சோ வேற எதாச்சு ட்ரை பண்ணு .சத்தியமா உன்ன பத்தி எனக்கு முழுசா தெரியாது ஆனா ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்ல முடியாது.உன்ன பார்த்த நாள்ல இருந்து உன்மேல தோணுன உணர்வு இது வர எவ மேலயும் தோணுனதில்ல இனி தோணப் போறதும் இல்ல ."என்று கூற

அவளோ சிரித்தவள் "நெறைய படம் பாப்பியோ? பெங்களூர் போனா என்ன எல்லாம் ஞாபகம் கூட வச்சுக்க மாட்ட ஷிவா. இதெல்லாம் ஜஸ்ட் ஒரு attraction தான் "என்றவள் அவன் அணிவித்த மோதிரத்தை கழட்டி அவன் கையில் வைத்தவள் "இதுக்கு உரியவ நான் இல்ல ஷிவா கண்டிப்பா மனசு மாறிடுவ"என்று கூறி திரும்பி நடக்க

அவனோ "ஒரு வேலை மாரலேனா?"

அவளோ "வாய்ப்பில்லை "என்று கூற அவன் "ப்ச் ஒருவேளை மாரலேனா நீ எனக்காக வெயிட் பண்ணுவியா ?"என்று கேட்க

அவளோ இரண்டு நிமிடம் யோசித்தவள் பின் அவனின் கண்ணை பார்த்து "சரி ஷிவா நான் காத்திருப்பேன் "என்று கூற

அவனோ சிரித்தவன் அந்த மோதிரத்தை பார்த்து "five years கழுச்சு மறுபடியும் இதை உன் கைல மாட்டுவேன் சுஜி "என்று கூற

அவளோ "பார்க்கலாம்" என்றாள் அவன் கையை நீட்ட அவள் கேள்வியாய் பார்த்தாள்.

அவன் "hand shake குடுத்து பிரியலாம் "என்று கூற

அவளும் சிரிப்புடன் அவன் கையில் தன் கையை வைத்து குலுக்கியவள் "ஆல் தி பெஸ்ட் "என்று கூற உணவு இடைவேளை முடிந்ததை உணர்த்த மணி அடித்தது .அதை தனக்கு நல்லா சகுனமாய் எடுத்துக்கொண்டவன் சிரிப்புடன் அவள் கையை விட்டான் .

மாலை அனைவருக்கும் இளவரசி தேநீர் கொடுக்க ராஜா ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்தான் .அதை கவனித்த இளவரசி அவன் அருகில் அமர்ந்தவள் "என்னாச்சு மாமா யோசனையாவே இருக்க ?"என்று கேட்க

மாறனோ "ஆமா நானும் கவனிச்சேன் என்னடா ?"என்க

அவனோ "அது அண்ணே ஈரோட்டுக்கு transfer பண்ணிருக்காங்க இன்னும் ஒரு வாரத்துல அங்க இருக்கணும் "என்று கூற இளவரசியின் முகம் அவனை பிரிய வேண்டும் என்ற நினைவில் சோகத்தை தத்தெடுத்து .

அவள் வாடிய முகத்தை பார்த்த இலக்கியா "அது cancel பண்ண முடியாதா ராஜா ?"என்று கேட்க

அவனோ "இல்ல அண்ணி வேலைக்கு சேர்ந்து அஞ்சு வருஷம் ஆச்சு already ரெண்டு transfer கான்செல் பண்ணிட்டேன் இந்த தடவை transfer with promotion கண்டிப்பா போகணும் "என்று கூற

மாறன் "இளவரசி இங்க படிக்குறாளே டா என்ன பண்றது இப்போ ?"என்று கேட்க

அவனோ "அது அவளை விட்டுட்டு தான் அண்ணே போகணும் .வாரத்துக்கு ஒரு தடவ வந்து பாத்துக்க வேண்டியது தான் "என்று கூற அவளோ சோர்ந்த முகத்துடன் காலி கோப்பைகளை எடுத்துக் கொண்டு சமயலறைக்கு சென்று விட்டாள்.

மாறன் சென்று சமாதானம் செய் என்று கண்ணசைக்க தலை ஆட்டியவன் சமயலறைக்குள் சென்றான் .உள்ளே கோப்பைகளை கழுவிக்கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்தவன் "அரசி "என்று கூற அவள் மெளனமாக இருந்தாள்.

அவன் அவளை தன் புறம் திரும்பியவன் முகத்தை நிமிர்த்தி "புருஞ்சுக்கோ டி போயே ஆகணும் "என்று கூற

அவளோ அவனின் சட்டை பொத்தானை திருகியபடி "என்னையும் கூட்டிட்டு போ "என்றாள்

அவனோ அவள் நெற்றியில் முட்டியவன் "இங்க படிக்குற டி நீ. இன்னும் ரெண்டு வருஷம் படிப்பு மிச்சம் இருக்கு "என்று கூற

அவளோ "கரெஸ்ல பண்ணவா ?"என்று கேட்க

அவனோ "காலேஜ் life திரும்ப கிடைக்காது டி .அங்க புது ஊரு,யாரையும் தெரியாம வீட்லயே இருந்து என்ன பண்ணுவ ?ஞாயிறு காலைல உன்ன பாக்க வந்துருவேன் மாசத்துல ரெண்டு வாரம் சனிக்கிழமையும் இருக்கேன் ப்ளீஸ் செல்லம் அழாத "என்று கூற

அவளோ அவனை அனைத்துக்கொண்டவள் "சரி போ ஆனா டெய்லி கால் பண்ணிரு ,நா இல்லைன்ற தைரியத்துல எவளை ஆவது சைட் அடுச்ச கொன்னுடுவேன் ,ஒழுங்கா சாப்பிடு ,கண்டிப்பா ஞாயிறு காலைல என் முன்னாடி இருக்கணும் "என்று கூற அவனும் அனைத்திற்கும் "ம்ம் ம்ம்" என்று கூறியவன் பின் ஒருவழியாய் கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானப்படுத்தி அடுத்த வாரம் கிளம்பினான் .

இரண்டு மாதங்கள் கடந்திருந்தது .ஷிவா அவனின் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்க இளவரசி ராஜா ஐந்து நாள் விடுமுறையில் வருவதால் நாளைய விடியலுக்காக காத்திருந்தாள் .வீட்டில் சாந்தி,சத்யமூர்த்தி ,மஹா மூவரும் ஏதோ ஒரு திருமணத்திற்காக சென்றிருந்தனர்.

அன்று மாலையில் இருந்தே ஏதோ அசௌகரியாய் உணர்ந்த இலக்கியா அதை புறம் தள்ளி வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் .இரவு அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு வந்தவள் கட்டிலில் குழப்பமாய் அமர்ந்து மாதம் தோரும் அவன் எழுதி வைக்கும் கணக்கு புத்தகத்தோடு அமர்ந்திருந்த மாறனை பார்த்தாள் .இலக்கியா"என்னடா குழப்பமா உக்காந்திருக்க ?"என்று கேட்க

அவனோ புன்னகையோடு அவளை பார்த்தவன் அவள் முகத்தில் இருந்த சோர்வை கண்டு "ஒண்ணுமில்ல சும்மா முன்தலை கணக்கு தான் பார்த்தேன் . என்னாச்சு லயா ரொம்ப tiredaa இருக்க ?"என்று கேட்க

அவளோ அவனின் அருகில் கட்டிலில் அமர்ந்து அவனை அணைத்துக்கொண்டவள் "தெரியலடா ரொம்ப tiredaa இருக்கு காலைல எந்திரிக்கேல தலை வேற சுத்துது "என்று கூற

அவன் ஏதோ மூலையில் உணர்த்த அவளது முகத்தை பார்த்தவன் ஒரு வித எதிர்பார்ப்புடன் "நீ கடைசியா periods ஆகி ரெண்டு மாசம் ஆகுதுல்ல லயா?"என்று கேட்க

அவளோ அப்பொழுதே அதை பற்றி யோசித்தவள் "ஆ..... ஆமா இலா ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது "என்று சொல்ல அப்பொழுது இருவருக்கும் ஒரே நேரத்தில் அந்த எண்ணம் உதிக்க அவர்கள் மனதில் அந்த நொடி தோன்றிய மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க இயலாது .

அவள் முகத்தை கையில் ஏந்தியவன் அசுர வேகத்தில் முகமெங்கும் முத்தமிட அவளோ கண்ணீரும் புன்னகையும் மாறி மாறி முகத்தில் தோன்ற பேச்சற்று அமர்ந்திருந்தாள் .எழுந்து சட்டையை போட்டவன் "இப்போவே பார்மசி போய் kit வாங்கிட்டு வரேன் "என்று சொல்ல

அவளோ சிரித்தவாறு "டேய்ய் காலைல போடா மணி பத்து ஆயிருச்சு "என்று கூற

அவனோ "காலைல வரையிலும் waitlaam பண்ண முடியாது"என்று கூறியவாறு ஓடினான் மறுந்தகத்துக்கு .அவன் செல்வதை சிரிப்புடன் பார்த்தவள் கைகள் தன்னிச்சையாய் வயிற்றை வருடியது .உடலெங்கும் சிலிர்ப்பு ஓட தன்னவனின் உயிர் என் வயிற்றுக்குள் வளர்கிறதா ரத்தமும் சதையுமாய் ?என்று நினைக்கயிலேயே ஒரு வித பரவசத்தை உணர்ந்தவளிற்கு மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை .

பதினைந்து நிமிடத்தில் திரும்பி வந்த மாறன் அவள் கையில் pregnancy kittai கொடுத்தவன் "உள்ளே போ லயா "என்று சொல்ல அவளும் தலை ஆட்டி உள்ளே சென்றாள் .அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கதவு திறக்கப்பட அவள் முகத்தை ஆவலுடனும் தவிப்புடனும் பார்த்தவனிற்கு அவன் மனைவியின் ஆனந்தக்கண்ணீர் பதிலை அளிக்க அவளோ அவன் கையை எடுத்து அந்த சோதனை கருவியை வைக்க அதில் இரண்டு அழுத்தமான கோடு இருவருக்கும் சொல்லொணா ஆனந்தத்தை கொடுத்தது .

இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் தான் ஆனது எனில் இருவரும் இந்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்த நேரத்தில் கிடைத்த வருமல்லவா இந்த பிள்ளை .தன் இணையை இறுக்கமாய் கட்டிப்பிடித்துக்கொண்டவர்கள் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்க இயலாது .அவளை விடுவித்து அவள் வயிற்றில் தன் கை வைத்தவன் கையில் இருந்த ரோமங்கள் சிலிர்த்தது .அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டவன் அவளை அணைத்தபடி உறங்கினான்.வார்த்தைகள் சில நேரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் தோற்று நிற்கும் அல்லவா .இருவரும் பல்வேறு கனவுகளுடன் உறங்க அவர்களின் ஆனந்தம் அடுத்த இரண்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை .

அதிகாலை ஐந்து அளவில் தன மணாளனை கட்டிப்பிடித்தபடி உறங்கிக்கொண்டிருந்தவள் அடிவயிறு உளீரென்று வலியெடுக்க முதலில் கொஞ்சம் வழியை கட்டுப்படுத்தி பார்த்தவள் பின் நேரம் ஆக ஆக வலி வாட்டி எடுக்க அவன் கைகளுக்குள்ளே முனங்கியபடி நெளிந்தாள் இலக்கியா .

அவள் நெளிந்ததில் உறக்கம் கலைந்தவன் "என்ன லயா ?"என்று கேட்க

அவளோ வயிற்றை இறுக்கி பிடித்தவள் "வ..... வலிக்குது இளா "என்று கூற பதறி அடித்து எழுந்தவன் தான் கண்ட காட்சியில் உறைந்து நின்றான் .அவள் படுத்திருந்த இடம் முழுவதும் உதிரமாய் இருக்க அவளின் காலின் வழி உதிரம் வழிந்துகொண்டிருந்தது .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top