30
ஒரு மாதத்திற்கு பின்
மதுரையிலேயே பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான கூடலழகர் பெருமாள் கோவில். அன்று விடிந்தும் விடியாத காலை வேளையில் கொஞ்சம் கொஞ்சமாய் தன கூட்டினுள் இருந்து வெளிவந்த ஆதவனின் கதிர்பட்டு தன் கம்பீரத் தோற்றத்துடன் ஒளிர அன்று ராம பிரானும் சீதா பிராட்டியும் தங்கள் கரம் பிடித்து மனம் புரிந்த திருநாள் வைபவத்தில் தனது ஒன்பது வருட காதலை தனது லயாவை தாள லயத்துடன் தன மனைவியாக ஏற்க காத்திருந்தான் மாறன் .
பட்டு வேட்டி சட்டையில் கழுத்தில் மாலையும் நெற்றியில் குங்குமமும் அவனது ஆண்மைக்கு மேலும் அழகு சேர்க்க தன் அருகில் நின்று தன்னை கேலி பேசிக்கொண்டிருந்த நண்பர்களையோ தம்பியையோ கண்டுகொள்ளாதவன் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து எப்பொழுதடா சன்னதிக்கு சென்று தன் சரி பாதியை பாப்போம் என்று தவமிருக்க துவங்கினான் .
அவனை மிகவும் சோதிக்காமல் விரைவிலேயே சன்னதிக்கு அருகில் அவனை அழைத்து வந்துவிட தன எதிரில் கழுத்தில் மாலையுடன் மயில் கழுத்து நிற வெள்ளி ஜரிகை வாய்த்த பட்டு சேலையில் தலையில் வண்ண மலர்கள் அந்த கார்க்கூந்தலை அலங்கரித்திருக்க பெண்ணவளோ மிதமான ஒப்பனையில்
தங்க ஆபரணங்களை மிஞ்சும் வெட்கமெனும் ஆபரணம் சூடி தேவதையென காட்சி அளித்தால் ஆடவனின் கண்களிற்கு .அவன் தன்னை விழுங்குவதை போல் பார்ப்பதை உணர்ந்த இலக்கியா வெட்கம் தாளாமல் மேலும் தன் தலையை குனிந்து கொள்ள அவனோ லேசாக தனது தலையை சாய்த்து அவள் வதனத்தை பார்த்து சிரித்தான் .
அவன் அருகில் இருந்த ராஜா அவன் வாயில் தனது கைக்குட்டையை வைத்து துடைத்து அதை புழிவதை போல் சைகை செய்தவன் "அண்ணே மதுரைல இன்னொரு தடவ வெள்ளத்தை கொண்டு வந்துராதையா நீ "என்று கூறி சிரிக்க மாறனோ அவனை முறைக்க முயன்று தோற்று சிரித்துவிட்டான் .
கிண்டல்களும் கேலிகளும் அந்த இடத்தை நிறைக்க சிறிது நேரத்தில் புரோகிதர் வந்து மங்கள நாணை அங்கிருக்கும் அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்க கூறினார் .அனைவரும் அந்த சுபவேளையில் ஆனந்தமாய் திளைத்திருக்க மகாவோ இலக்கியா கழுத்தில் இருக்கும் ஆபரணங்களின் சவரன் எண்ணிக்கையை மனதிலேயே கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்.
மகா "ஒரு நெக்லஸ்,ஒரு ஆரம்,ஒரு மங்கா மாலை ,எட்டு வளையல் காதுல ஒரு ஜிமிக்கி கம்மல் .முப்பது சவரன் போடுறேன்னு சொன்னானுங்க இவ்ளோ தானா வரும் "என்று தன் வக்கிர புத்தியை அங்கும் காட்டிக்கொண்டிருந்தாள்.
அனைவரும் ஆசிர்வதிக்க முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆசியுடன் அந்த பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாளவர் சன்னதியில் தன்னவளின் செங்கழுத்தில் முதல் முடிச்சை அவனிட நாத்தனார் முடிச்சு போட வந்த மஹாவை கண்களாலேயே தடுத்தவன் "நானே மூணையும் போட்டுருறேன் கா ப்ளீஸ்"என்று கூறியவாறு புன்னகையுடன் மூன்று முடிச்சையும் தானே போட்டு முடித்தான் மாறன் .
நடக்குமா நடக்காதா என்று கடைசி நிமிடம் வரை பதை பதைப்பிலேயே இருந்த இலக்கியாவின் மனம் காதலானவன் கைச் சிறையில் அவன் அணிவித்த தாலியை கழுத்தில் வாங்கிய நொடி ஏதோ பெரும் பாரம் அகன்றதாய் உணர்ந்தவள் சிறு சிரிப்புடன் இரு துளி கண்ணீரையும் வெளியேற்றினாள்.
பின் இருவரையும் மாலை மாற்றிக்கொள்ள சொல்ல மலை மாற்றியபின் உரிமையாய் அனைவரின் முன்னும் தனது மனைவியின் நெற்றியில் இதழ் ஒற்றினான் மாறன்.அதில் இலக்கியாவின் கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் சிவக்க அதை கண்ட மகாவின் முகமோ அருவருப்பாய் சுருங்கி கோபத்தில் சிவந்தது .
வாய் விட்டே அவள் "ஊர்ல உலகத்துல இல்லாத பொண்டாட்டிய கட்டிட்டான் "
"என்று கூறி நொடித்துக் கொள்ள
அருகில் இருந்த இளவரசியோ தன் கையில் இருந்த தண்ணீர் bottleai திறந்து மகாவிடம் கொடுத்தவள் "தண்ணிய குடிமா அடிவயிறு ரொம்ப எரிஞ்சு அல்சர் வந்துர போகுது "என்க அவளோ இளவரசியை முறைத்தவள் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டாள்.
திருமணம் முடிந்த பின் மணமக்கள் தம்மை பெற்றவர்களிடம் ஆசி வாங்கியபின் பிரகாரத்தை சுற்ற சொன்னார்கள் .மாறனின் நட்பு வட்டம் பெரியது தான் எனில் அவனுடன் படித்தவர் பலரும் வெளிநாடு சென்றுவிட இன்று அவன் திருமணத்திற்காகவே அனைவரும் வந்திருந்தனர் . அவனின் நல்ல குணத்தால் அவர்கள் அனைவரையும் தக்க வைத்திருந்தான் மாறன் .
திருமணம் முடிந்து பிரகாரத்தை சுற்ற கூறுகையில் மாறன் அவள் கைகளை பற்றியவன் "ரொம்ப அழகா இருக்க லயாமா "என்று அவள் காதிர்கருகில் குனிந்து சொல்ல
அவளோ அவன் மூச்சு காற்று பட்டதில் சிலிர்த்தவள் வெறும் "ம்ம் "மட்டும் கூறினால் .
அவளின் அமைதியை புதியதாய் கண்டவன் "ஏய்ய் சண்டிராணி என்ன இன்னைக்கு ரொம்ப அமைதியா வர "என்று கேட்க
அவளோ "ஐயோ போடா எனக்கு என்னவோ மாறி இருக்கு "என்று கூற
அவனோ அவள் கூறிய தோரணையில் சிரித்தவன் அவள் கழுத்தை அடிக்கடி பிடிப்பதை பார்த்து "மாலை வெயிட்டா இருக்காடா ?"என்று கேட்க
அவளோ பாவமாய் முகத்தை வைத்தவள் "செம வெயிட் டா புடவை ,நகை அது போக இது வேற மூச்சு முட்டுற மாறி இருக்கு "என்று கூற அவனோ முதலில் தன் கழுத்தில் இருந்த மாலையை கழற்றினான் .
சாந்தி "ஏய்ய் மாறா என்னடா கல்யாணம் முடுஞ்சு வீட்டுக்கு போற வரைக்கும் மாலையை கழட்ட கூடாது டா "என்று கூற
அவனோ "அம்மா மாலை ரொம்ப கனமா இருக்கு வெயில் வேற நாங்க கழட்டிக்கிறோம் மாலையை "என்று கூறியவன் தன் தம்பியிடம் ஒரு பெரிய பையில் அதை வைக்க சொல்ல அதன் பின் இலக்கியாவிடம் திரும்பியவன் அவளையும் கழற்ற சொல்லி வாங்கி கொண்டான்.அவன் அறிவானே அவளை மட்டும் கழற்ற கூறினால் எப்பொழுதடா அவளை வசை பாடலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் அன்னையும் தமக்கையும் துவங்கி விடுவார்கள் தங்கள் வேலையை என்று .
தன் கண் கொண்டே தனது நிலை அறிந்து செயல் படுபவனின் மேல் மீண்டும் மீண்டும் காதலில் விழுந்தாள் இலக்கியா .பின் அப்படியே மணமக்கள் இருவரும் வரவேற்பு நடக்கும் மண்டபத்திற்கு அழைத்து செல்லப் பட்டனர் .அங்கு சென்று அவளின் மணமகள் அலங்காரத்தை கலைத்தவர்கள் மெல்லிய ஆனால் அதே சமயம் மிகவும் அழகான வேலைப்பாடுகளுடன் இருந்த கரு நீல நிற soft சில்க் புடவையை கட்டி விட்டு அதற்கு ஏற்றார் போல் சிகை அலங்காரம் செய்து அவளின் கார்க்கூந்தலை விரித்து விட்டிருந்தனர் .
பின் மெலிதான ஒப்பனையில் அந்த புடவைக்கு ஏற்ப கல் ஆபரணங்கள் கொண்டு அலங்கரிக்க .திருமண அலைச்சலையும் அயர்வையும் மீறி அந்த புது மஞ்சள் நாணொடு வகிட்டில் குங்குமமும் மின்ன மொத்தமாய் தன்னவன் கை சேர்ந்த பூரிப்பில் மலர்ச்சியுடன் காணப்பட்டாள் இலக்கியா.தனக்கு ஈடாய் ஆண்மையின் கம்பீரத்துடன் கருநீல நிலத்தில் கோட் suit அணிந்து தன்னை ஆர்வமாய் பார்க்கும் தன்னவனை கண்டு வெட்கி தலை குனிந்தாள் இலக்கியா .
அவளின் நிலை எதுவென்றால் ஒன்பது வருடமாய் காதலெனும் தவமிருந்தவனிற்கு கிடைத்த வரமாய் தனது மனைவியாய் இருக்கும் தன்னவளை காண காண தெவிட்டவில்லை அவனிற்கு .மேடையில் இருவரும் ஒன்றாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க
மாறனோ தன்னை இரண்டு மாதங்களாக பார்க்கவே கூடாது என்று கூறி சித்ரவதை செய்தவளே விழுங்குவதை போல் பார்த்தே அவளை தவிக்க வைத்தான் .
இலக்கியா "ஐயோ இலா ஏண்டா இப்டி பாக்குற எனக்கு ஒரு மாறி இருக்கு பேசவாவது செய் இப்டி பாக்காத "என்று கூற
அந்த நேரத்தில் போட்டோக்ராபர் "சார் madammoda இடுப்புல கை போட்டு அவங்கள பாக்குற மாறி போஸ் குடுங்க "என்று கூற
அவனோ கண்களில் குறும்புடன் அவள் இடை பற்றி அருகிழுத்து அவளை பார்த்தவன் "ரெண்டு மாசமா பார்க்க விடாம அலைக்கழிச்ச பாத்தியா அப்போ யோசுச்சுருக்கணும் .நோ other way பேபி"என்று கூறி கண்ணடிக்க அவளோ அவனின் ஸ்பரிசத்தில் ஆட்டம் கண்ட உடலை இயல்பாய் காட்ட ப்ரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள்.
இன்னும் சில நெருக்கமான புகைப்படங்கள் எடுத்த பின் அவன் அவளை விட்டு சற்று விலக அப்பொழுதே இலக்கியாவிற்கு மூச்சு சீராக வெளிப்பட்டது .
ராமன் தனது குடும்பத்தினரோடு மேலே மேடையில் ஏறியவன் மாறனை கட்டி தழுவி "மச்சான் என் ஆழ்ந்த அனுதாபங்கள் டா இந்த நெருப்பு கோழியை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவஸ்த்தை போடுறதுக்கு "என்க
இலக்கியாவோ அவனை முறைத்தவள் தன் அண்ணியிடம் திரும்பி "பாருங்க அண்ணி இந்த அண்ணாவை "என்று கூற
அவளோ "விடுடா உண்மைகள் கசக்க தான் செய்யும் "என்று அவள் காலை வார இலக்கியாவோ போலிக் கோபம் பூச நினைத்து முடியாமல் புன்னகைக்க அது வரை புன்னகையுடன் இருந்து வாசலை பார்த்த ராமனின் கண்களோ கோவைப்பழமாய் சிவக்க தன் அண்ணனின் முக மாறுதல்களை கண்டு குழம்பிய இலக்கியா அப்பொழுதே அவர்களை கண்டாள்.
வாசலில் அங்கே சௌபாக்கியவதியும் மோகனும் வந்திருந்தனர் .சௌபாக்கியவதியின் கையில் ஒரு வயது மதிக்க தக்க ஆண் குழந்தை இருக்க மோகனின் கையை பிடித்தவாறு கொழு கொழு கன்னத்துடன் பட்டு பாவாடை சட்டையில் துள்ளி வரும் புள்ளி மானாய் தத்தி தத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள் நான்கு வயது மதிக்க தக்க பெண் குழந்தை .
அவர்களை கண்டு இலக்கியா முகம் ரௌத்திரமடைய ராமனோ வேகமாய் கீழே சென்று அவர்களை வெளியே செல்ல கூற எத்தனித்தான்.அவனின் கையை பற்றிய மாறன் "இன்னைக்கு கல்யாணம் உன் தங்கச்சிக்கு மட்டும் இல்ல சௌபாக்கியவாதியோட தங்கச்சிக்கும் தான் .எதுவும் பண்ணாத அமைதியா இரு "என்று கூற என்றும் தன் நண்பனின் பேச்சை மீறாத ராமனோ இன்றும் அமைதியானான் எனில் முகம் இறுகி தான் மேடையை விட்டு இறங்கினான்.
தன் கணவனின் முகமாறுதல்களை கவனித்த கலா என்ன என்று பார்க்க சௌபாக்கியவாதியும் மோகனும் ஜோடியாய் வருவதை பார்த்தவள் சிரித்த முகத்துடனே சென்று "வா பாக்யா எப்படி இருக்க நல்ல இருக்கியா ?"என்றவள் பின் அவள் கையில் இருந்த குழந்தையை பார்த்து "அடடே வாங்கடா செல்லம் "என்றவள் யாரோ அத்தை என்று அழைக்கும் சத்தத்தில் கீழே பார்க்க அந்த குட்டி தேவதை தான் ஒரு விரலை வாயில் வைத்தவாறு சிரித்தபடி அவளை அத்தை என்று அழைத்திருந்தாள் .
அவள் கன்னத்தை வருடியவள் "என்ன தெரியுமா குட்டிமா உங்களுக்கு "என்க
அவளோ தெரியும் என்பதை போல் தலை ஆட்டியவள் தன் மனைவியையே எரிப்பதை போல் பார்த்துக் கொண்டிருந்த ராமனை காட்டி "மாமா மாமா "என்று அழைக்க ராமனும் ஒரு நிமிடம் அந்த பிஞ்சின் அழைப்பில் உருகி தான் போனான் .
ராமனிடம் திரும்பிய கலா "என்னங்க என்ன அப்டியே பார்த்துட்டு இருக்கீங்க கூப்டுறால்ல வாங்க "என்று கூற அவன் மூளையின் கட்டளையையும் மீறி அவன் கால்கள் அந்த குழந்தையிடம் சென்றது .
அவள் உயரத்திற்கு குனிந்தவன் "உன் பேரென்னடா ?"என்று கேட்க
அவளோ "மீனாட்சி என்றாள்."அவள் கன்னத்தை வருடியவன் எழ சௌபாக்கியவதி "அண்ணா "என்க அவனோ அவளை நிமிர்ந்தும் பாராமல் சென்று விட்டான் .
அதில் அவள் முகம் சுருங்க கலாவோ அவள் கையில் அழுத்தம் கொடுத்தவள் "கவலைப்படாத சரி ஆயிடும்.மேடைக்கு போ "என்க
அவளோ மோகனை தயக்கமாய் பார்க்க அவனும் அவளை தான் தயக்கமாய் பார்த்தான் .கலா"வருஷங்கள் ஓடிருச்சு பாக்யா நடந்ததையே நெனச்சுட்டு இல்லாம போய் நில்லு "என்று அவள் கையில் அழுத்தம் கொடுக்க
அவளோ கண்ணீருடன் தலை ஆடியவள் "சரி அண்ணி "என்றவாறு மேடை ஏறினாள் .
இலக்கியா முகம் சிகப்பாகி இருவரையும் கண்களாலேயே எரித்தாள்.அவள் முறைப்படி பார்த்து சௌபாக்கியவாதிக்கு உதறல் எடுக்க அதற்குள் அவளின் மகளோ "சித்தி "என்று ஓடி சென்று இலக்கியாவின் காலை கட்டிக் கொண்டாள் .
தமக்கையின் மேல் ஆயிரம் கோபம் இருப்பினும் சிறு குழந்தையின் அழைப்பில் எந்த மனம் தான் உருகாது .அவளை வாரி எடுத்து கன்னத்தில் முத்தம் வைத்தவள் அவளை பார்த்து சிரிக்க அந்த குழந்தையோ கன்னக்குழி விழா சிரித்தது அவள் கன்னத்தில் எச்சிலுடன் தன் முத்தத்தை பதித்தது.
சௌபாகியா இலக்கியாவின் புறம் வந்து நிற்க மோகனோ மாறனின் புறம் வந்து நின்றான்.மாறன் இலக்கியாவின் கையில் அழுத்தம் கொடுத்தவன் பேசு என்பதை போல் சைகை செய்ய .இலக்கியா ஒரு பெருமூச்சு விட்டபடி "எப்படி இருக்க ?"என்று கேட்க
அவளோ தன் தங்கை பேசி விட்டாள் என்று மகிழ்வுடன்"நல்லா இருக்கேன் டி.என்றவள் சற்று தயங்கி என்ன மன்னுச்சுட்டியா ?"என்று கேட்க
இலக்கியாவோ "ஜென்மத்துக்கும் மன்னிக்க முடியாது ஆனா மறக்க முயற்சி பண்றேன் நீ என் அக்கா அப்டிங்குறதால இல்ல என் புருஷனோட நண்பனோட மனைவி அப்டிங்குறதால "என்று கூற அவளிற்கோ இது வரை அவள் பேசியதே போதும் என்று தான் தோன்றியது .
தன் மனைவியின் முகத்தில் பல வருடங்களுக்கு பின் நிம்மதியை கண்ட மோகன் தானும் புன்னகைத்து மாறனின் காதில் "தேங்க்ஸ் மச்சான் "என்று கூற அவனோ அதே புன்னகையுடன் "என்ன இருந்தாலும் நீ என் நண்பன் டா "என்று கூறினான் .
குழந்தையை கொஞ்சிவிட்டு வந்த கலாவை அங்கிருந்த அறைக்கு அழைத்து சென்ற ராமன் கதவை தாழிட்டு அவள் தோலை பற்றியவன் "எப்படி டி உன்னால முடுஞ்சது அவளை மன்னிக்க என்னாலேயே முடியலையே "என்க
அவளோ புன்னகைத்தவள் "ஏங்க அவ விருப்பத்தை கேக்காம நாமளா அவளை என் அண்ணனுக்கு கட்டி வைக்க முடிவு பண்ணோம் .அவ என் அண்ணனுக்கு வாழ்க்கை முழுதும் துரோகம் பண்ணறதுக்கு பதிலா இப்டி ஒரு துரோகம் பண்ணிரலாம்னு முடிவு பண்ணிட்டா .அவ செஞ்சது சரினு சொல்லல ஆனா அஞ்சு வருஷம் முடுஞ்சுருச்சுங்க .என் அண்ணனுக்கு கல்யாணம் ஆகி சந்தோஷமா இருக்கான் .அவ என்ன இருந்தாலும் உங்க தங்கச்சி .பாஷ தெரியாத ஊருல பிள்ளையை சுமக்கேள எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பா எல்லாரும் இருந்தும் அனாதையா .போதும்ங்க இந்த பகையை மனசுல வச்சு என்ன பண்ண போறோம்?இருக்குற வாழ்க்கைல சந்தோஷமா இருப்போம் "
என்று கூற தன் மனைவியை காதலுடன் பார்த்த ராமன் அவள் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு வெளியே அழைத்து சென்றான் .
அன்றைய நாள் காதலர்களுக்கு ஓர் அங்கீகாரத்தை கொடுக்க சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்த அந்த ஜோடியை பார்த்து காலம் சிரித்துக் கொண்டது இன்னும் எத்தனை நாட்களிற்கோ என்று .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top