3
நாட்களும் அதன் போக்கில் செல்ல அவ்வப்பொழுது வந்துகொண்டிருந்த இளமாரனின் வருகை ராமனின் வீட்டில் இலக்கியாவின் வருகைக்கு பின் அதிகமாக ஆரம்பித்தது .அங்கே வந்து ராமனோடு விளையாட்டு படிப்பு என்றிருப்பவன் இலக்கியாவிடமும் விளையாடுவான் .
அவளும் தனது மழலை மொழியில் இளமாரனை மாறா என்றே அழைப்பாள் .மூத்தவன் என்று அவளின் அன்னையும் அவளின் தமக்கையும் கண்டித்தும் திருந்துவாள் இல்லை .
ராமனின் இன்னொரு தங்கை சௌபாக்யவதியை தங்கச்சி என்று அழைப்பவனோ மறந்தும் இலக்கியாவை தங்கை என்று அழைத்ததில்லை.அவனிற்கு மட்டும் இலக்கியா லயா பாப்பா தான் ,அவனிற்கு பேச்சு நன்றாக வந்த பின்னும் .
மாறனின் தமக்கைக்கும் திருமணம் முடிந்து விட அவனின் தம்பியும் வளர அந்த மூவர் குழு நால்வர் குழுவாய் மாறி சுற்ற ஆரம்பித்தது .இலக்கியாவின் தந்தைக்கு வேறு வேலை கிடைத்து விட அவருக்கு வேலைக்கு செல்லுமிடத்தில் இருந்து இவ்விடம் தொலைவாய் இருப்பதால் வீடு மாற்றி சென்றனர் .அன்று யார் அழுதனரோ இல்லையோ நான்கு வயது இலக்கியா மாறனின் கழுத்தை கட்டிக்கொண்டவள் இறங்குவேனா என்று அடம்பிடித்து அட்டகாசம் செய்து விட்டாள் .
அவனிற்கு அவளையும் அவனது நண்பனையும் பிரிவது கஷ்டமாக இருந்தாலும் இலக்கியாவின் அளவிற்கு இல்லை .அவளை கஷ்டப்பட்டு அவளின் குடும்பத்தினர் அவனிடத்திருந்து பிரித்து கொண்டு செல்ல பிதுங்கிய உதட்டுடன் வெடித்த அழுகையின் தடயமாய் இருந்த சிணுங்கல்களுடன் விடை கொடுத்தவள் அவனின் சட்டை பட்டனில் தனது ஒற்றை வெள்ளி காதணியை விட்டு சென்றிருந்தாள்.
பின் வழக்கம் போல் விளையாடி விட்டு தன் தம்பியுடன் வீட்டிற்கு வந்தவன் தனது துள்ளலை உள்ளே இருந்த நபரை கண்டு அப்படியே நிறுத்தினான் .அங்கே வந்திருந்தது அவனின் தமக்கை மகாலட்சுமியும் அவளது கணவனும் .மகாலட்சுமியின் கணவன் ஈஸ்வரன் .மகாலட்சுமியின் குணத்திற்கும் அவனிற்கு ஏணி வைத்தாலும் எட்டாது .
பணத்திற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யுமளவிற்கு மோசமானவன் ,முழுநேர குடிகாரன் .அரசாங்கத்தில் கால்நடை துறையில் clerkகாக பணியாற்றிக் ,கொண்டிருந்தான் .அரசாங்க உத்தியோகம் வரதட்சணை ஏதும் கேட்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவனிற்கு திருமணம் செய்து வைத்தனர் .
அவனோ நச்சு பாம்பின் குணத்தோடு இருந்தாலும் மகாலட்சுமியை நன்றாக தான் வைத்திருந்தான், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேலும் குழந்தை இல்லாமல் போகும் வரை .திருமணமாகி நான்கு வருடமாகியும் குழந்தை ஏதும் மகாலட்சுமிக்கு தங்காமல் போக அவன் வசவு மொழிகளோடு அவளை அடிக்கடி இங்கே விட்டு செல்வதும் பின் அவர்களின் தாயாரும் தந்தையாரும் சென்று சமாதானப்படுத்தி அவளை விட்டு வருவதும் வாடிக்கை ஆகி போனது .
அது ஏனோ சுற்றி இருப்பவர்களும் குடும்பத்தவர்களும் குழந்தை இல்லை எனில் அப்பெண்ணை குறை சொல்வதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள் .குழந்தை என்பது கடவுள் அளிக்கும் வரம் அதில் சரி பாதி பங்கு அந்த பெண்ணின் கணவனிற்கும் இருக்கிறதென்பதை ஏனோ படித்தவர்களும் மறந்து போகின்றனர் .
இன்றளவும் ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லை என்றால் அந்த பெண் சந்திக்கும் அவமானங்களும் கேட்க நேரிடும் பேச்சுக்களும் அப்பப்பா சகுனத்தடை எனவே அவளிற்கு முத்திரை குத்தி விடுகின்றனர் .அந்த நிலையில் தான் இன்று மகாலட்சுமியும் இருந்தாள்.எத்தனை பேருக்கு தெரியப்போகிறது அதிக குடிப்பழக்கம் இருக்கும் ஆடவர்களுக்கு குழந்தை பிறப்பது கடினம் என்று ?
இதோ மீண்டும் வந்து விட்டான் அவளை விட்டு செல்ல .
ஈஸ்வரன் "தோ பாருங்க அத்த நாலு வருஷமா நானும் பொறுத்து பொறுத்து பாத்துட்டேன் .போகாத கோவில் குளம் இல்ல போகாத டாக்டரும் இல்ல .ஒரு இடத்துல தலை காட்ட முடியல ,இவளை கூட்டிகிட்டு எந்த விசேஷத்துக்கு போக முடியல.இனிமே இந்த வெளங்காதவளோட என்னால வாழ முடியாது .நா என் அம்மா பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்குறேன் "என்று விட்டு செல்ல
மஹாலட்சுமியோ அழுகையுடன் சென்று அவன் கையை பிடித்தவள் "என்னங்க இப்டி சொன்னா எப்படிங்க .... நா... நா... என்னங்க பண்றது இந்த பாவி வயித்துல குழந்தை வர மாட்டேங்குதே.நீங்க இல்லாம நா என்னங்க பண்ணுவேன் "என்று அவன் காலருகில் மண்டியிட்டவள் "தயவு செஞ்சு இப்டி முடிவெடுக்காதீங்க.நா என்னங்க பண்ணுவேன் "என்று கூறி அழ
அவனோ அவளை நிமிர்த்தியவன் "என்ன பண்ணுவேன்னு கேட்ட இல்ல...... செத்து போ "என்று விட்டு அவள் கையை உதறிவிட்டு செல்ல அவளோ பிரம்மை பிடித்ததை போல் நின்றாள் .
அவளின் அன்னையோ அங்கே எதுவுமே நடவாததை போல் படித்துக்கொண்டிருந்த அவரின் மூத்த மகனிடம் சென்றவர் "டேய்ய் முருகா மாப்ள போறாருடா, போய் கூட்டிகிட்டு வாடா "என்று அவனை பிடித்து உலுக்க
அவனோ அவனின் அன்னையின் கையை தட்டி விட்டவன் ஒரு அலட்சிய பார்வையுடன் "அவன் after all ஒரு clerk அவன் கிட்ட ஒரு supervisor caderla இருக்குற நான் போய் கெஞ்சணுமா?என்னால முடியாது "என்று கூற
அவனின் தாயோ "டேய்ய் என்னடா முட்டாள் மாறி பேசுற? போறது உன் அக்கா புருஷன்டா அவ வாழ்க்கை அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்கு இப்போ உன் வறட்டு கவுரவம் தான் முக்கியமா "என்று கூற
அவனோ அலட்சியமாய் தோளை குலுக்கியவன்"இவ கிட்ட குறை இருக்கேல என்னத்த போய் அந்தாளுட்ட பேச சொல்ற?extraa ஒரு கை அரிசி வேணுனா போடு இனிமே அதுக்கான பணத்தை நா குடுத்துருறேன் கூட பொறந்ததுக்கு "என்று கூறி வெளியே சென்று விட மகாலட்சுமியோ அவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தாள்.
அவளின் அன்னையும் அவளை வசவு மொழிந்து விட்டு சென்று விட அங்கே ஹாலில் பொத்தென்று அமர்ந்து அழுதுகொண்டிருந்த மகாலட்சுமியின் தோளில் சென்று கை வைத்தனர் ஒன்பது வயதான மாறன் மற்றும் ஆறு வயதான ராஜா.
அவர்களின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரை இருவரும் துடைத்து விட மாறனோ "ஆழாதக்கா உனக்கு சீக்கிரமே பாப்பா வரும் "என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை வைத்து கூற ராஜாவும் தன் அண்ணனை பார்த்தே அனைத்து செயல்களையும் செய்பவன் தானும் அதையே கூறி அவள் கண்ணீரை துடைக்க இருவரையும் அணைத்துக்கொண்டாள் .
நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு பத்து நாட்கள் கழித்து இடுப்பில் தண்ணீர் குடம் எடுத்து வந்து கொண்டிருந்த மகாலட்சுமி திடீரென்று தண்ணீர் குடத்துடன் மயங்கி சரிந்தாள் .
அவள் மயங்கியதை கண்டு பதறிய மாறன் அவனின் அண்ணனையும் அன்னையையும் அழைக்க மகாலட்சுமியை முருகன் தூக்க மாறனோ வெளியே சென்றவன் அங்கே அருகிருந்த ரிக்ஷாவை அழைத்து வந்திருந்தான். அதில் மகாலட்சுமியை கிடத்தியவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்கே அவளின் கர்பம் உறுதி செய்யப்பட்டது .ஷாந்தியும் மகாலட்சுமியும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை .
அந்த காலத்தில் அவ்வளவாக தொலை தொடர்பு சாதனங்கள் ஏதுமில்லை .அவர்கள் இருந்த பகுதியிலேயே ஒரே ஒரு வீட்டில் தான் தொலை தொடர்பு சாதனம் இருந்தது .அங்கே சென்று அவனின் கணவனிற்கு தகவல் அலுவலகத்தின் தொலை பேசி எண்ணின் மூலம் சொல்ல பட்டது .
செய்தி அறிந்ததும் அவளின் கணவனிற்கு சொல்லப்பட அவனோ தான் பேசியது நடந்து கொண்டது அனைத்தையும் மறந்து குழந்தை வரப்போகிறது என்னும் செய்திக்காகவே மகாலட்சுமியிடம் நன்றாக பேசினான் .அவளும் தன்னை இந்த அளவு காயப்படுத்திய கணவன் மன்னிப்பு கூட கேட்கவில்லை எனினும் அவனிடம் இயல்பாகவே பேசினாள் அதீத மகிழ்ச்சியோடு .
முருகன் வழக்கம் போல் மருத்துவமனைக்கு நூற்றைம்பது ஆகி விட்டது ரிக்ஷாவிற்கு இவ்வளவு ஆகி விட்டது என்று புலம்பிக்கொண்டே சென்று விட முதல் முறையாக மாறனின் அடி மனதில் பெண்கள் என்றால் எப்படி இருந்திட வேண்டுமென்ற பாரதியின் கவிதையை அவனின் தமிழ் ஆசிரியர் இரண்டு தினங்கள் முன் நடத்திய புதுமை பெண் கவிதை நினைவில் வந்து தற்போதய சூழலையும் பார்த்து யோசிக்க வைத்தது .
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு
மானிடர் நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! - ஆணும்
பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம்
தழைக்குமாம் பூணு நல்லறத்
தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!
நாட்களும் அதன் போக்கில் செல்ல மகாலட்சுமியின் வயிற்றில் சிசுவும் வளரத்துவங்கியது .அவளிற்கு செலவு செய்வதற்கு முருகன் ஏதேனும் கூறிக்கொண்டே இருக்க மாறனின் மனதில் முருகனின் பணத்தை தொடக்கூடாது என்ற வைராக்கியத்தையம் தன் தமக்கைக்கு தான் பின்னாளில் வேலைக்கு செல்லும் போது அவள் கேட்க கேட்க எதற்கும் மறுப்பு சொல்லாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தையும் அவனின் செயல்கள் அந்த சிறுவனின் மனதில் வளர்த்துக்கொண்டு சென்றது.
வருடங்கள் கடந்து கர்பிணி ஆகி இருந்த தனது புதல்வியை ஷாந்தி ஒரு சிறு துரும்பையும் அசைக்க விடாது பார்த்துக்கொண்டார் .மூன்று வேளையும் அவளிற்கென பத்திய சாப்பாடு ,படிக்கட்டு ஏற விடாது வைத்திருப்பது என்று கண் போல் காத்து வர ஒன்பதாம் மாதத்தின் முடிவில் அழகிய பெண் சிசு வை ஈன்றெடுத்தாள் .
மருத்துவமனையில் இருந்து வெளியாகி வர வீட்டிற்கு வந்ததும் மாறனை கண்ட மகா என்ன நினைத்தாளோ அவனை அருகிலழைத்து தன் குழந்தையை காட்டியவள் "மாறா பாப்பாவை பத்திரமா பாத்துப்பியா?"என்று கேட்க
அந்த குழந்தையை கண்டதும் ஏனோ தான் பெறாத முதல் குழந்தை இவள் என்ற நினைவில் இருந்தவனோ "பாப்பாவை கைக்குள்ள வச்சு பாத்துப்பேன் அக்கா "என்று கூற மகாவோ அப்பொழுதே பிறந்த தன் புதல்விக்கு வாழ்க்கை துணைவனை இப்பொழுதே தேடிய நிம்மதியில் இருந்தாள் .
அதை கவனித்த சாந்திக்கும் அதே எண்ணம் வலுத்துவிட குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த மாறனின் வாழ்வில் தன் அன்னை மற்றும் தமக்கையின் மனதில் இருந்த இந்த எண்ணம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top