28


அவர்கள் வாகனம் தமுக்கம் மைதானத்தை கடக்க சிவாவின் மனமோ நான்கு மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை புரட்டி பார்த்தது .அன்று அவனும் அவனது தோழர்கள் மூவரும் சிறிது ஊர் சுற்றிவிட்டு வரலாம் என்று அங்கே சுற்றிக்கொண்டிருந்தனர் .

அப்பொழுது அவனை இடித்துக்கொண்டு ஒருவன் கைப்பையுடன் ஓட ஷிவா "ஏய்ய் அறிவுகெட்டவனே "என்று திட்டியவன் அதன் பின்னே அவன் கைப்பையை பிடிங்கி கொண்டு ஓடுவதை பார்த்தவன் அவனை துரத்த ஆரம்பித்தான்

ஓடிய திருடன் ஒரு கல் தடுக்கி கீழே விழுந்து பையை நழுவவிட அதை அவன் எடுப்பதற்குள் ஷிவா அவனை நெருங்கி விட பையை விட்டு விட்டு ஓடிவிட்டான் அவன் .அந்த பையை எடுத்தவன் யாராவது பின்னால் வருகிறார்களா பையை தேடி என்று நினைத்து திரும்ப அவன் கன்னத்தில் இடியென இறங்கியது ஒரு கரம் .

ஷிவா ஓட துவங்கியதும் என்ன ஏதென்று தெரியாமல் அவனின் நண்பர்களும் அவனை பின்தொடர அங்கே அவர்கள் கண்டா காட்சியோ ஷிவாவை ஒரு பெண் அடிக்கும் காட்சியை தான் .அது மதிய நேரமாதலால் அங்கு அவ்வளவாக கூட்டம் இல்லை .

ஷிவாவோ ஒரு நிமிடம் தனது கன்னத்தில் விழுந்த அறையில் கோபம் தலைக்கேற எதிரில் ஒரு பெண் இருப்பதால் தன் கோபத்தை அடக்கியவன் "எதுக்கு இப்போ அடுச்ச ?"என்று அடிக்குரலில் கோவத்தை வெளிக்காட்டி உரும

அவளோ அவனிற்கு சளைக்காமல் எதிர்த்து நின்றவள் "பைய புடுங்கிட்டு போன திருடன் நீ உன்ன அடிக்காம கொஞ்சுவாங்களா ?"என்க

அவள் கூறிய திருடன் என்ற வார்த்தையில் கொதித்தவன் "ஏய்ய் யாரை பாத்து திருடன்னு சொல்ற "என்க

அவளோ "உன்ன தான்டா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு இதே ஷர்ட் தான் "என்க அப்பொழுது தான் ஷிவா கவனித்தான் தான் அந்த திருடன் இட்டதை போன்ற நிறத்திலேயே சட்டை அணிந்திருப்பதை .

அதற்குள் பதட்டமாய் ஓடிவந்த இன்னொரு பெண் "அடியேய் அவசரக்குடிக்க இவன் இல்லடி அது "என்க

சுஜாதா "எப்படி சொல்ற ?நா தான் என் கண்ணால பாத்தேனே"என்க

அவளோ தலையில் அடித்துக்கொண்டவள் "அட மாடசாம்ப்ராணி பொய் கண்ணாடி போடு முதல்ல .இது நம்ம ஸ்கூல் என் சி சி கேப்டின் ஷிவா டி" என்க

அவளோ திருதிருவென்று விழித்தவள் அவன் புறம் திரும்ப அவனோ கைகளை கட்டிக்கொண்டு அவளையே முறைத்துக்கொண்டிருந்தான் .அவளோ இளித்தவள் "அது .... சாரி "என்க

அவனோ நக்கலாய் சிரித்தவன் ஏனோ இவளிடம் வம்பிழுக்க தோன்ற "ஓஹோ அடுச்சதுக்கு சாரி சொன்ன சரி ஆயிடுமா ?"என்க

அவளோ திருதிருவென்று விழித்தாள் "வேற என்ன பண்ண ?"என்க

அவன் ஏதோ கூற வர அவனின் நண்பன் ஒருவனோ எகத்தாளமாக "எம் குமரன் சன் ஆப் மஹாலட்சுமில வர மாறி தமிழ்நாடு ஸ்டைலில் மன்னிப்பு கேளு போனா போகுதுனு மன்னிச்சு விட்டுருறோம் "என்க

ஷிவா அதிர்ந்து ஏதோ கூற போக அவளோ மீண்டும் கோபமானவள் "தமிழ்நாடு ஸ்டைல் எதுக்கு சார் சீனா ஸ்டைலிலேயே மன்னிப்பு கேக்குறேன் "என்றவள் அருகில் வந்து இன்னொரு கன்னத்திலும் அறைந்து விட்டு தன் தோழியை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்(இலக்கியா வளர்ப்பு அப்பறோம் எப்படி இருக்கும் ) .

அவள் அறைந்ததில் திகைத்தவன் தன் நண்பனை பார்த்து முறைத்து "இப்போ சந்தோஷமா ?"என்க

அவர்களோ சிரித்தவர்கள்"மச்சான் மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாளேனு ஒரு லைன் வருமே தில்லானா தில்லானா பாட்டுல "என்க

இன்னொருவனோ "அம்மா டா அதுக்கென்ன ?"என்க

அவனோ " அந்த லைன்க்கு அர்த்தம் இன்னைக்கு தான்டா தெரியுது அவன் கன்னத்தை பாரேன் சும்மா செவ செவன்னு செவந்துருக்கு "என்று கூற அவனோ இருவரையும் முறைத்தவன் மொத்து மொத்தென்று இருவரையும் மொத்தி எடுத்தான் .

அதன் பின் பள்ளியில் ஓரிரு முறை பார்த்திருக்கிறான் .அவள் பதினோராம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு இவன் பதினோராம் வகுப்பு காமர்ஸ் பிரிவு .அவ்வப்பொழுது இருவரும் சந்தித்துக்கொண்டாலும் அவள் அவனை ஒரு அலட்சிய பார்வையோடு கடந்துவிட அவனிற்கு அந்த அலட்சிய பார்வையே அவளிடம் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

தன் நினைவுகளில் மூழ்கி இருந்தவன் ராஜா தோள் தொட்டு உசுப்பியதிலேயே நிகழ்காலத்திற்கு வந்தான் .ராஜா "டேய்ய் என்ன கண்ண முழுச்சு கிட்டே தூங்குறியா ?ஊரு வந்து அஞ்சு நிமிஷமாச்சு பக்கி எந்திரி "என்க

அப்பொழுதே தெளிந்தவன் "ஹீஹீஹீ "என்று இளித்தபடி கீழே இறங்கினான் .

அவர்கள் வந்து இறங்கியிருந்தது சத்தியமூர்த்தியின் ஒன்றுவிட்ட அண்ணனின் வீடு .

அவர்கள் வாகனத்தை விட்டு இறங்கியதும் தலையில் நரை முடியுடன் இன்றும் விவசாயம் செய்வதால் உரமேறிய உடலுடன் தன் முறுக்கு மீசையை முறுக்கியபடி வந்தார் கருப்பத்தேவர் .வந்தவர் சத்தியமூர்த்தியை சென்று

அணைத்துக்கொண்டவர் "டேய்ய் தம்பி எப்பிடிடா இருக்க "என்க

அவரோ அண்ணனை கண்ட மகிழ்ச்சியில் "நல்லா இருக்கேன் அண்ணே "என்க

கருப்பத்தேவர் "என்னடா என் மவனையும் பேத்தியையும் காணோம் "என்க

இளவரசியும் ராஜாவுமோ வண்டியை விட்டு இறங்கியவர்கள் தயங்கியபடி நிற்க

அவரோ புன்னகையுடன் ராஜாவிடம் வந்து அவனின் இருபுற தோளையும் பிடித்தவர் "கேள்விபட்டேண்டா மவனே ஏதோ தோஷமாமே வெரசா(வேகமா ) கல்யாணம் பண்ண சொல்லிட்டாங்களாம் . பரவால்ல என் பேத்தி தான என் மருமகளா வந்துருக்கா "என்று கூறி மீண்டும் அவன் தோளை இறுகப் பற்ற

அவனோ வலியெடுத்தாலும் வெளியே சொல்ல முடியாமல் சிவாவின் புறம் குனிந்தவன் "டேய்ய் உன் தாத்தாவை கொஞ்சம் என் தோளுல மாவு பெசையுறத நிறுத்த சொல்லுடா கையோட வந்துரும் போல "என்று கூற அவனோ சிரித்தான் .

பின் மாறனிடம் திரும்பியவர் அவன் தோளில் கையை போட்டு"வாடா மவனே அடுத்து உன் கல்யாணம் தான் "என்க உள்ளிருந்து ஒரு பதினாறு வயது பெண் ஓடி வர அவள் பின்னே நாற்பது வயதினை ஒத்த ஒரு பெண் வந்தார் .

அவர் தான் சிவகாமி ,கருப்பத்தேவரின் ஒரே மகள் .மருமகன் வெளிநாட்டில் வேலை செய்ய மகளையும் பேத்தியையும் தன்னுடன் வைத்திருக்கிறார் .அந்த பதினாறு வயது பெண்ணோ ஓடி வந்து நின்றவள் இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.அவள் மகதி சிவகாமியின் ஒரே பெண் பிள்ளை.

ஷிவாவோ அவளை கண்டு சிரித்தவன் "ஹே ஒட்டடை குச்சி எதுக்குடி இவ்ளோ வேகமா ஓடி வர? ஒடுஞ்சு கிடுஞ்சு விழுந்துற போற "என்க

மகதியோ அவனை முறைத்தவள் ராஜாவிடம் திரும்பி "போ மாமா என்ன கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி இப்டி இந்த உருட்டுக்கட்டய கல்யாணம் பண்ணிக்கிட்டியே "என்று வராத கண்ணீரை துடைக்க

ராஜாவோ இளவரசியை சீண்டுவதற்காக "ஆமா டா செல்லாம் என்ன ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சுட்டாய்ங்க. இப்போவும் ஒன்னும் பிரச்னை இல்ல இவளை கழட்டி விட்டுட்டு நாம கல்யாணம் பண்ணிப்போமா ?"என்று கேட்க

இளவரசியோ மூச்சு முட்ட முறைத்தவள் "உன் மொகரக்கட்டைக்கு நானே அதிகம் இதுல என் தங்கச்சி வேற கேக்குதா? "

என்று அவள் அடிப்பதற்கு எதுவாக ஆயுதத்தை தேட மகதியோ அருகில் இருந்த குச்சியை எடுத்து கொடுத்தாள்"இதை வச்சே போடுக்கா" என்று

ராஜாவோ அலரியவன் "அடிப்பாவி பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுறியா"என்று பயப்படுவது போல் இளவரசியிடம் இரண்டு மூன்று அடிகள் வாங்க

இளவரசியோ சிரித்தவள் அவள் புறம் திரும்பி "அடி வாங்க வைக்கணும்னு நெனச்ச நடந்துருச்சா ஹாப்பியாஹ் ?"என்க

அவளோ அவனை மேலும் கீழும் பார்த்து தாடையில் கையை வைத்தவள் "ரத்தம் வரும்னு நெனச்சேன் பட் ஓகே "என்று கூற

அவளின் காதை திருகிய அவளின் தாய் "வீட்டுக்கு வந்தவங்கள வாசலிலேயே வச்சு என்னடி வம்பிழுக்குற "என்று ராஜாவையும் இளவரசியையும் சேர்த்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்ல

மஹாவோ வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்" இதுங்களுக்கு ஆரத்தி ஒன்னு தான் கேடு "என்று .

பின் மாறனிடம் வந்தவள் "எப்படி இருக்கீங்க மாமா "என்று ஒரு பையை வாங்கியபடி கேட்க

அவனோ அவள் தலையில் கை வைத்து அழுத்த தியவன் "சூப்பரா இருக்கேன்டா படிப்புலாம் எப்படி போகுது ?"என்க

அவளோ "ம்ம் சூப்பரா போகுது மாமா "என்றவள்

அவனை குனிய வைத்து "ஆமா வந்ததுல இருந்து பெரியம்மா ஏன் இஞ்சி தின்ன குரங்கு மாறி உர்ருனே இருக்காங்க ?"என்று கேட்க

அவள் கேட்ட தோரணையில் சிரித்தவன் அவள் காதை திருகி "என் அக்காவை பத்தி என் கிட்டயே கிண்டல் அடிக்கிறியா ?"என்று கூற

அவளோ "ஐயோ விடு மாமா உன் அக்கா உன் இனம் தான்னு மறந்து உன்கிட்ட கேட்டுட்டேன் "என்று கூற அவன் அதன் பொருளை உணர்வதற்குள் உள்ளே ஒரே ஓட்டமாய் ஓடி இருந்தாள்.

மாறனோ சிரித்துக்கொண்டவன் "இவளுக்கு மகதினு பேர் வச்சதுக்கு பதிலா வாயாடின்னு வச்சுருக்கலாம் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு " என்று நினைத்தபடி உள்ளே சென்றான் .அங்கே அவர்களுக்கான அறைகளை பிரித்து கொடுப்பதில் இருந்து அவர்களுக்கு உணவு பரிமாறுவது வரை அனைத்தையும் மகதியும் சிவகாமியும் பம்பரம் போல் நிற்காமல் வேலை செய்ய இளவரசி இதில் தன்னை இணைத்துக்கொண்டாள்.

அங்கு ஊர்க்காரர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சொந்தக்காரர்களான இருக்க அவர்களின் மத்தியிலும் ராஜா இளவரசியின் திருமண விஷயம் கசிய தொடங்கி விசாரிக்க வந்திருந்தனர் .அனைவரிடமும் ஜாதக தோஷத்தையே காரணமாய் கூறி மாறனும் சத்யமூர்த்தியும் ராஜாவும் சமாளிக்க மஹாவும் சாந்தியுமோ எனக்கென்ன என்று அவர்களுக்கு கொடுத்த அறையில் சென்று அடைந்துகொண்டனர் .உணவு உன்ன வெளியே வருவதோடு சரி.

மதியம் அனைவரும் உண்டுகொண்டிருக்க முருகனின் குடும்பம் அப்பொழுதே வந்திறங்கியது .பத்து வயதான நந்தினியோ காரை விட்டு இறங்கியதும் "சித்தப்பா "என்று ஓடி வந்து மாறனை கட்டிக்கொள்ள அவனும் அவளை கட்டிப்பிடித்தவன் "வாடா செல்லம் நல்லா வளந்துட்ட "என்க

பின்னே மேகலாவோ சிரித்தபடி வந்தவள் "மாறா எப்பிடிடா இருக்க ?என் தங்கச்சி எப்படி இருக்கா ?"என்க

அவனோ அவளை தூக்கி கொண்டவன் "நல்லா இருக்கேன் அண்ணி.அவளுக்கு என்ன சூப்பரா இருக்கா . அண்ணன் எங்கே?"என்றவன் பின் சுற்றிமுற்றி பார்த்து விட்டு சற்று தாழ்ந்த குரலில்"எதுவும் இப்போதைக்கு பேச வேணாம்னு சொல்லிடீங்கள்ல அண்ணி? ஜாதக தோஷத்தால் கல்யாணம் பண்ணிட்டோம்னு சொல்லி வச்சுருக்கு "என்க

மேகலாவோ சிரித்தவள் "அதெல்லாம் பக்காவா சொல்லிட்டேன் எதுவும் கேக்க மாட்டாரு "என்க

அவனோ பெருமூச்சு விட்டவன் "எப்படி அண்ணி இப்டி யார் பேச்சையும் கேக்க மாட்டாரு உங்கள தவிர்த்து "என்க

அவளோ "அதெல்லாம் சொன்னா புரியாதுடா கொழுந்தனே, கல்யாணம் பண்ணிப்பார் புரியும் "என்றவள் பின் குழந்தையை வாங்கிக்கொண்டு ராஜாவை வம்பிழுக்க சென்றுவிட்டாள் .முருகனும் உள்ளே வந்தவன் மாறன் எதிர்பார்த்ததை போல் எந்த பிரெச்சனையும் செய்ய வில்லை .அவர்கள் கூறிய பொய்யை அப்படியே காப்பாற்றிவிட்டான் .

அடுத்த நாளில் இருந்து பூஜை தொடங்க இருந்தது .முதல் நாள் சிவராத்திரி அன்று அவர்களின் குலதெய்வமான பதினெட்டாம்படி கருப்பிற்கு முதல் நாள் இரவு எத்தனையோ ஊர்களிலிருந்து சொந்த ஊரிற்கு வரும் சொந்தங்கள் ஒன்று கூடி பூஜை செய்து அதன் பின் அந்த கடவுளே ஒருவருக்குள் இறங்குவதற்கு உணர்ந்து அந்த கடவுளிடம் கேட்பதை போல் அவரிடம் குறி கேட்பார்கள் .

அதன் பின் இரண்டாம் நாள் காலையிலேயே கெடா வெட்டி பொங்கல் வைத்து வழிபடுவார்கள் .பின் நாடகங்களும் ,ஒயிலாட்டம் ,மயிலாட்டம், சிலம்பாட்டம் அனைத்தும் இரவில் நடைபெறும் .அதற்கு அடுத்து மூன்றாம் நாள் காலையில் சில ஆடவர்கள் பாரிவேட்டைக்காக மலைக்கு செல்வார்கள் .

அவர்கள் மாலையில் வந்த பின் பூஜைகள் செய்யப்பட்டு விழாவும் ஒரு முடிவிற்கு வர அன்றைய இரவே அனைவரும் தத்தம் ஊர்களிற்கு சென்றிடுவர்.

சத்தியமூர்த்தியின் உடன் பிறந்தோர் அவரை சிறுவயதிலே ஏமாற்றி தனியே விட்டு விட அவரை ஒரு சுயதொழில் கற்றுக்கொண்டு கடை வைக்கும் வரை உடனிருந்து அவரை பார்த்துக்கொண்டது கருப்பத்தேவர் தான் .அவர் மனைவி அவர் மகள் பிறந்த உடனே மரணத்தை தழுவ அவரின் ஒரே மகளுடன் இங்கு இருக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் .அவர்கள் அங்கு தங்கி இருப்பது அவர்களின் பூர்வீக வீடு .வீடு ஒரு முற்றத்துடனும் விசாலமான அறைகளுடனும் அழகாக இருக்கும் .மகதியும் சிவாவும் ஒத்த வயதை உடையதாலும் அவர்களின் பள்ளியிலேயே அவள் படிப்பதால் இருவரும் அன்னான் தங்கையை விட ஒரு படி மேலாக நல்ல நண்பர்கள் .இவர்கள் கலாட்டாவில் குட்டி நந்தினியும் சேர்ந்து கொள்ள அன்றைய தினம் களைகட்ட இரவு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் உறங்கினர் நாளை கோயிலிற்கு செல்ல .

அங்கு மாறனிற்கு என்ன காத்திருக்கின்றதோ ?

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top