26

ராஜா "அரசி கொஞ்சமாச்சும் சாப்பிடு டி எவ்ளோ நேரம் தான் அழுதுட்டே உக்காந்துருப்ப ?மணி பத்துக்கு மேல ஆச்சு "என்க

அவளோ விசும்பியபடி "எனக்கொண்ணும் வேண்டாம் போ "என்க

ராஜா சோர்ந்தவன்"அப்பறோம் நானும் சாப்பிட மாட்டேன் "என்க

அவளோ அசராமல் "சாப்பிடாத "என்க ராஜாவிற்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது .

அவன் அடுத்து ஏதோ கூறப்போக அதற்குள் அவன் கையிலிருந்த தட்டை வேறொருவர் வாங்கிட ராஜா யாரது என்று பார்க்க மாறன் தான் அவன் கையிலிருந்த தட்டை வாங்கினான்.

பின் இளவரசியின் அருகில் அமர்ந்து அவள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல இளவரசியோ ராஜா என்று நினைத்து கோபமாய் நிமிர்ந்தவள் "வேண்டாம்னு சொன்னா கேக்க "என்று ஆரம்பித்தவள் எதிரில் தனது மாறப்பாவை பார்த்து வார்த்தைகள் தடைபட அவனோ அவளிற்கு ஊட்டிவிட்டுவிட்டான் அந்த gappil .

அவனிடம் அந்த தோசையை வாங்கியவள் அடுத்து அவன் வைக்க போக கண்களில் கண்ணீருடன் அவன் இடுப்பை கட்டிக்கொண்டாள் அழுகையுடன் "so ....sorry மாறப்பா உங்கள ஏமாத்தணும்னுலாம் பண்ணல....... ப்ளீஸ் பா ....பேசுங்கப்பா "என்க

அவனோ அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை துடைத்தவன் "எதுக்காக டா இவ்ளோ பெரிய காரியம் பண்ண ?"என்க

ராஜாவோ "அண்ணே"என்க

அவனோ என்ன என்பதை போல் பார்த்தான் .

ராஜா தலை குனிந்தவன் "அண்ணே ப்ளீஸ் என்ன ஏதுன்னு கேக்காத. சொல்ல கூடிய சூழ்நிலைல நாங்க இல்ல "என்க

மாறனோ ஒரு பெருமூச்சை விட்டவன் சற்று இலகுவாகும் தொனியில்"சரி அது என்னவா வேணாலும் இருந்துட்டு போகுது மவனே இனிமே என் பொண்ணு கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்துச்சு தம்பின்னு கூட பாக்க மாட்டேன் தோலை உரிச்சு தொங்க போட்டுருவேன் "என்க

இருவரும் அவனை ஆச்சர்யமாய் பார்க்க அவனோ இளவரசியின் புறம் திரும்பி அவளிற்கு ஊட்டிவிட்டவாறு பேசினான் "நா வளர்த்த பொண்ணு ,என் கூடவே என்னை பார்த்து வளர்ந்த என் தம்பி .என்னோட ஒரு ஒரு வார்த்தைக்கும் மதிப்பு குடுக்குற நீங்க இவ்ளோ பெரிய காரியத்தை பண்ணிட்டு வந்துருக்கீங்க அப்டினா அதுல ஏதோ ஒரு விஷயம் இருக்குனு எனக்கு புரியுது .எதுனால எனக்கு சொல்லக்கூடாதுனு நெனைக்குறீங்கன்னு எனக்கு தெரியல ஆனா உங்க ரெண்டு பேர் மேலயும் நம்பிக்கை இருக்கு ."என்றவன்

ராஜாவிடம் திரும்பி "எதுக்காக கல்யாணம் பண்ணணு கேக்க மாட்டேன் ஆனா கல்யாணம் அப்டிங்குற புனிதமான பந்தத்தை விளையாட்டு தனமா எடுத்துக்காத .உங்க ரெண்டு பேருக்குள்ள காதல் இல்ல அது எனக்கு நல்லா தெரியும் ஆனா கஷ்டமோ நஷ்டமோ இது தான் உங்க வாழ்க்கை .பார்த்து இருந்துக்கோங்க"என்றவன் அடுத்து தம்பியையும் அமர வைத்து அவனின் வாய்க்கு நேராக உணவை கொண்டு செல்ல அவனோ குழப்பமாய் பார்த்தான் .

சிரித்த மாறன் "நீயும் ஓழுங்கா மத்தியானம் சாப்ட்ருக்க மாட்ட என்ன பண்ணுவேனோனு நெனச்சே சாப்பிடு இப்போ "என்க அவனும் வாங்கி கொண்டான் .

இருவருக்கும் ஊட்டி முடித்தவன் பின் தட்டை sinkள் போட்டு விட்டு வந்து தனது உடமைகள் அனைத்தையும் ஒரு பெட்டியில் எடுத்து வைத்தவன் அதை சிவாவும் இளவரசியும் பகிர்ந்து கொண்ட அறையில் சென்று வைத்தவன் இளவரசியின் உடமைகளை இங்கு வந்து வைத்தான்.

இவ்வளவு நேரமும் அவன் செய்வதை பார்த்துக்கொண்டிருந்த இருவருக்கும் ஆளுக்கொரு ஜிகர் தண்டாவை கொடுத்தவன் மேலே பேசினான் .மாறன் "ராஜா எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு முடிவை எடுத்துட்டா ஆனா அதோட பின்விளைவுகளை யோசிக்கல .இப்போ நா கத்துன கத்துலயே அரசால் புரசலா உங்க கல்யாண விஷயம் நம்ம வரேல கசிஞ்சிருக்கும் .நாளைல இருந்து கேக்க ஆரம்பிச்சுருவாங்க ஏன் ஏன் அப்டினு .என்ன சமாளிக்கலாம்? அவங்கள எப்படி சமாளிக்க போற ?"என்க ராஜாவிற்கு அப்பொழுது தான் ஊர் வாயை மறந்தது நினைவில் வந்தது .

அவனிற்கு பொறையேற இளவரசி அவன் தலையில் தட்டியவள் அவன் ஆசுவாசமானதும் அவன் கையிலிருந்த ஜிகர்தண்டாவை வாங்கி அதையும் தான் குடிக்க ஆரம்பித்துவிட்டாள் .அவன் வடை போச்சு என்ற உணர்வில் "ஏன் டி ?"என்று கேட்க

அவளோ "உனக்கு தான் பொறை ஏறுதுல நீ கேள்விக்கு பதில் சொல்லு "என்று இரண்டையும் அவள் குடிக்க ராஜாவோ என் நேரம் என்று நினைத்தவன் திருதிருவென்று விழித்தான்

அடுத்து மாறன் "சரி இங்க விடு நாளைக்கு நம்ம சொந்த ஊருக்கு நம்ம பெரிய அண்ணனும் வருவாரு இந்த விஷயம் இந்நேரம் phone மூலமா அங்க போய் இருக்கும் ஊருல என்ன போய் சொல்லுறது ?"என்று கேட்க இதற்கும் விழித்தான் .

மாறன் "சரி இது எல்லாத்தையும் விடு இளவரசி இப்போ தான் first இயர் சேர்ந்து ஒரு மாசம் ஆகுது .காலேஜ்ல என்ன திடீர் கல்யாணம்னு கேட்டா அவ என்ன சொல்லுவா ?இல்லை படிப்பை நிறுத்துற ஐடியாவா?அப்பா இல்லாத பொண்ணுடா இளவரசி இப்டி திடுதிப்புனு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நின்னா என்ன பேசுவாங்க அவளை பத்தி யோசிச்சியா கொஞ்சமாச்சு ?"என்க எதற்குமே ராஜாவிடம் பதில் இல்லை .

அவன் முகத்தை வைத்தே அவன் இது எதையும் யோசிக்கவில்லை என்பதை அறிந்து கொண்ட மாறன் அவன் தலையிலேயே கொட்டியவன் "இதுக்கு தான் இதுக்கு தான் உன் அவசர புதிய காட்டாத ,எல்லாத்துலையும் எடுத்தேன் கவுத்தேன்னு பண்ணாதனு சொல்றது "என்று கூறி முறைக்க அவனோ தலையை தடவிக்கொண்டவன் மடியில் ஏதோ ஒரு பாரத்தை உணர இளவரசி அவன் மடியில் வாகாக தலையை வைத்து படுத்து தூங்கிவிட்டிருந்தாள்.

அவனின் ஒரு கை அனிச்சையாய் அவளின் கேசத்தை வருடிக்கொண்டிருந்தது .இவற்றை மாறனும் கவனித்தவன் மனதின் ஒரு ஓரத்தில் நிம்மதி தோன்ற தம்பியின் கவனத்தை ஈர்க்க வேண்டி செருமினான் .அவன் பதறி மாறனை பார்க்க "சொல்லுடா என்ன பண்ண போற ?"என்க

ராஜாவோ "தெரியல அண்ணே "என்க

மாறனோ பெருமூச்சுவிட்டவன் "நாளைக்கு காலையிலேயே ஊருக்கு கிளம்ப சொல்லு எல்லாரையும் .அங்க போய் யாராச்சு ஏதாச்சு கேட்டா ஜாதக தோஷம் அவசரமா பண்ணிட்டோம்னு சொல்லிக்குவோம் .ஊருக்கு போயிட்டு இங்க வந்ததுகப்புறோம் இங்க அதே கதையை உல்டாவா சொல்லுவோம் ஊருக்கு போய் குறி கேட்டதுல உனக்கும் அவளுக்கும் தோஷம் இருக்குறதால அங்கேயே கல்யாணம் பண்ணியாச்சுன்னு .அப்பறோம் ரெண்டு வாரத்துல reception வச்சுருவோம் .எந்த பிரெச்சனையும் இருக்காது "என்று கூற அப்பொழுதே ராஜாவிற்கு மூச்சு சீராக வந்தது .இடியாப்ப சிக்கல் போல் இருந்த பிரெச்சனையை சுலபமாக முடித்துவிட்டான் என்று .

ராஜா "சரிண்ணே "என்க

மாறன் "மூத்த அண்ணனை தான் எப்படி சமாளிக்குறதுனு தெரில "என்க

ராஜாவோ சிரித்தவன்"அண்ணிகிட்ட சாயந்தரம் சொல்லிட்டேன் அண்ணே "என்க

மாறன் "சும்மாவா விட்டாங்க உன்ன "என்க

ராஜாவோ "தமிழ்ல அத்தனை கெட்ட வார்த்தை இருக்குனு இன்னைக்கு தான் நா தெரிஞ்சுகிட்டேன் அரை மணி நேரமா வச்சு செஞ்சுட்டாங்க "என்க

மாறனோ பக்கென்று சிரித்துவிட்டான் "அப்புறம் "என்க

ராஜா"அப்பறோம் என்ன வழக்கம் போல சமாளிச்சுக்குறேன்னு சொல்லிருக்காங்க "என்க

மாறனோ "அது எல்லாம் சரி தான் அப்பறோம்.... இளவரசி படிப்பு முடியுற வரைக்கும் ..."என்று அவன் சங்கோசமாய் இழுக்க

ராஜாவோ அவன் கையை பற்றியவன் "நா பாத்துக்குறேன் அண்ணே "என்க மனதில் நிம்மதி பிறக்க

அவன் கையை பற்றியவன் இளவரசியின் தலையை வருடிவிட்டு "குட் நைட் டா குட்டிமா "என்க

அவள் வழக்கம் போல் அவன் கையை பிடித்தவள் "குட் நைட் மாறப்பா"என்று தூக்கத்திலேயே முனங்க

அவள் நெற்றியில் முத்தமிட்டவன் "பார்த்துக்கோ" என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டான்.மாறனின் கோபம் தணிந்து விட்டது என்பதே ராஜாவிற்கு பெரும் நிம்மதியை தர தன் மடியில் படுத்துறங்கும் இளவரசியை கண்கொட்டாமல் பார்த்தான் .

நிலவொளியில் அவளின் பால்முகமோ சற்று புன்னகையை பூசியபடி குழந்தை போல் நிர்மலமாய் உறங்க அவள் முகத்தையே சிறிது நேரம் பார்த்தவன் பின் அவளை நேராக படுக்க வைத்துவிட்டு அவள் அருகில் படுக்கவா வேண்டாமா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தி கடைசியில் வேண்டாம் என்று முடிவெடுத்து கீழே இறங்க போக அவளோ அவனின் சட்டையை இறுக்கமாய் பிடித்திருக்க அவள் அருகிலேயே விழுந்தான் ராஜா .

அவன் அருகில் படுத்ததும் அவன் அருகில் நெருங்கி படுத்த இளவரசி அவன் மார்பில் தலை வைத்து கண்ணயர்ந்து விட ராஜா முதலில் திகைத்தவன் பின் உதட்டில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள அவள் நெற்றியில் புரண்ட முடிகளை ஒதுக்கி அதில் முத்தமிட்டவன் அவளை தானும் அணைத்தவாறு படுத்துக்கொண்டான் .

மாறன் பிறகு உண்டுவிட்டு சிவாவின் அறைக்குள் வர ஷிவா அது வரை மாடியில் இருந்தவன் உள்ளே தனது பெரியமாமா இருப்பதை கண்டு அவனிடம் புன்னகையுடன் வந்தான் .

ஷிவா "என்ன மாமா இனிமே இங்க தானா ?"என்க

அவனோ சிரித்தவன் "என் பொண்டாட்டி வர வரைக்கும் இங்க தான்டா"என்க

ஷிவாவோ சிரிக்க மாறனோ அவனிடம் கேட்டான் "ஷிவா நா ஒன்னு கேட்டா உண்மையா சொல்லுவியா என்று "அப்பொழுதே புரிந்துவிட்டது ஏதோ வில்லங்கமாக கேட்க போகின்றான் என்று .

ஷிவா "அது.... தெரிஞ்சா சொல்றேன் மாமா "என்க

மாறனோ அவனை கூர்ந்து நோக்கியவன் "அவங்களோட இந்த முடிவுக்கு காரணம் என் அம்மாவும் உன் அம்மாவுமா ?"என்க ஷிவாவோ அதிர்ந்து விழித்தான் அந்த முழிப்பே அவனிற்கு அனைத்தையும் விளக்கி விட்டது .

அந்த நொடி மாறன் மனது எத்தனை வேதனையுற்றது என்று அவன் மட்டுமே அறிவான் .இப்படி ஏதாவது நடந்து விட கூடாது என்று தானே அன்று விழாவில் இலக்கியாவை தனது வருங்கால மனைவியாய் அறிவித்தேன் ,இளவரசியை எனது மகள் என்றும் கூறினேன் அதன் பின்னுமா இவர்களின் இந்த அற்பமான எண்ணம் மாறவில்லை என்று முதல் முதலில் தன் உடன் பிறந்தவள் மேலும் தன்னை பெற்றவள் மேலும் சிறிய வெறுப்பு தோன்றியது .

அவன் முகம் கசங்குவதிலேயே அவனின் வேதனை உணர்ந்த ஷிவா "மாமா நீங்க தெரிஞ்சா கஷ்டப்படுவீங்கன்னு தான் தாத்தா ராஜா மாமாகிட்ட எதையும் உங்க கிட்ட சொல்ல வேணான்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டாரு மாமா "என்க

அவனோ சிரித்தவன் "வாயால சொல்லலேன்னாலும் என்னால யோசிக்க முடியாதா டா ?அவ்ளோ முட்டாளா நெனச்சுட்டீங்களா ?"என்க அவனிற்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை .

மாறனோ மனதில் வலி எழுந்தாலும் அவர்கள் பக்க நியாயத்தையும் யோசித்தான் "ஆனா அவங்களையும் குத்தம் சொல்லக் கூடாதுடா சின்ன வயசுல இருந்து அப்டி ஆசையோட இருக்கேல அது நிராசையா போச்சுன்னா அந்த நேரத்துல ஏதாவது செஞ்சு நம்ம விருப்பத்தை நிறைவேத்தணும்னு தான தோணும் .அப்போ அது அவங்க தப்பில்ல சின்ன வயசுலயே அப்டி ஒரு எண்ணம் இல்லைனு நான் சொல்லிருக்கனும்.என் தப்பு தான் "என்க ஷிவாவோ இவ்வளவு தெளிவாக யோசிக்கிறான் எனில் குடும்பம் என்று வந்தால் அனைத்தையும் பொறுத்யுக்கொள்கின்றானே என்று கவலை கொண்டான் .

தன்னையே பார்க்கும் ஷிவாவை நோக்கி புன்னகைத்தவன்"இதை எல்லாம் மண்டைல போட்டுக்காதடா ஒழுங்கா படி "என்று கூற அவனும் சரி என்று மண்டை ஆட்ட இருவரும் உறங்கி போயினர் .

அதிகமான மன்னிப்பும் ஒரு கட்டத்தில் ஆபத்தை தான் தரும் அதை மாறன் உணருகையில் காலம் கடந்திருக்கும் என்பதை பாவம் அன்று அவன் அறியவில்லை

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top