21
தன தந்தை கூறிய வாக்கியத்தை முழுதாய் உணர்ந்துகொள்ளவே அவனிற்கு இரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டது .அவரை அடிபட்ட பார்வை ஒன்று பார்த்தவன் "என் குட்டிமாவ நா என் பொண்ணா நெனச்சு தானப்ப தூக்குவேன் ,கொஞ்சுவேன் அவளை தோளுல வச்சுக்கிட்டே சுத்துவேன் அது எப்படிப்பா உங்களுக்கு வேற மாறி தோணுச்சு ?"என்று அவன் கேட்கையிலேயே குரல் கம்மி விட கண்களில் லேசாய் கண்ணீரும் கோர்த்திருந்தது .
தனது தந்தை அன்பை ஒற்றை நொடியில் கொச்சை படுத்தி விட்டார்களே என்று .அவரோ குற்ற உணர்ச்சியில் தலை குனிந்தவாறு "மன்னிச்சுருப்பா"என்க அவனோ சற்று நேரம் இறுகி போய் அமர்ந்திருந்தான் .
அதன் பின் ஒருமுடிவெடுத்தவனாய் நிமிர்ந்தவன் "அப்பா இன்னும் 2 நாளுல குட்டிமாவுக்கு விஷேஷம் இருக்குல்ல "என்று கேட்க அவரோ மகனை புரியாத ஒரு பார்வை பார்த்தார் .பின் "ஆமாப்பா என் கேக்குற "என்க அவனோ ஒன்றுமில்லை என்று தலை அசைத்தவன் "சொல்றேன்பா "என்று கூறிக்கொண்டவன் மனதில் எல்லாத்துக்கும் அன்னைக்கே முடிவு கட்டுறேன் என்று நினைத்துக்கொண்டான் .
இரண்டு நாட்கள் அதன் போக்கில் செல்ல அன்று மாலை அவர்களின் வீட்டு வரவேற்பறையில் சொந்தங்கள் சிலரும் சுற்றத்தார் சிலருமென ஒரு முப்பது பேர் கூடி இருக்க மாறனின் கண்களோ வாசலையே நொடிக்கொருமுறை தொட்டு திரும்பியது .
அவன் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் இலக்கியாவின் குடும்பத்தார் வந்து விட மாறனின் கண்களோ தான் வாங்கி கொடுத்த மயில் கழுத்து நிற பட்டுப்புடவையை மை இட்ட கண்களோடு உதட்டு சாயமே இல்லாமல் சிவந்த உதடுகள் அவனை கண்ட நொடி செம்மலரென விரிய மல்லிகை சரங்கள் தோள் தொட்டு உறவாட வந்துகொண்டிருந்த தன்னவளையே அளவெடுத்துக்கொண்டிருக்க
அவளோ முதல் முதலாய் வேட்டி சட்டையில் சிரிக்கையில் மெலிதாய் விழும் கன்னக்குழியில் அலை அலையாய் புரண்ட கேசத்தை ஒற்றைக்கையால் கோதிவிட்டுக்கொண்டு மாநிறத்தில் ஆண்மையின் இலக்கணமாய் நின்றவனை ரசித்துப்பார்த்தவள் அவனின் பார்வையை கண்டு வெட்கம் வர தலையை தொங்கப்போட்டுக்கொண்டாள்
.அவர்கள் உள்ளே செல்லும் நேரம் அவள் காதிர்கருகில் குனிந்தவன் "ரொம்ப அழகா இருக்க லயாம்மா "என்க
அவளோ மண்டையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டாள் .அவன் அவளை பார்த்து சிரித்தபடி இருக்க அவன் முதுகில் தட்டிய பதினான்கு வயது சுஜாதாவோ "சித்தப்பா ரொம்ப வழியுது தொடச்சுக்கோங்க "என்க
அவனோ அசடு வழிய சிரித்தவன் "அதென்ன டா மாமா ல இருந்து புதுசா சித்தப்பாக்கு மாறிட்ட"என்க
அவளோ நக்கலாய் சிரித்தவள் "இலக்கியா என் சித்தின்னா நீங்க என் சித்தப்பா தான "என்று விட்டு அவன் அடிப்பதற்குள் ஓடிவிட்டாள் .
ஷிவாவோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான் வந்தவர்களுக்கு ஜூஸ் கொடுக்க ,சாமான்களை அவர்கள் கூறும் இடத்தில வைக்க என்று அலைந்துகொண்டிருந்தவன் மேல் பொத்தென்று யாரோ தலையில் மோத விலகி நின்றவன் இருந்து கோபத்தில் எதிரில் இருந்தவளை பார்க்காமல் "பாத்து வர மாட்டியா "என்று திட்ட வாயெடுத்தவன் எதிரில் நின்றிருந்தவளை பார்த்து அப்படியே வாயை மூடிக்கொண்டான் .(கண்டிப்பா அவள் அழகில் மயங்கி இல்லப்பா) .
அவன் கைகள் அனிச்சையாய் தன் கன்னத்தை தடவ அவளோ அவன் காத்த தொடங்கியதும் மிரண்டு விழித்தவள் முகத்தை பார்த்த பின் கண்களில் ஏளனம் குடி புகுந்து கொள்ள அவன் கன்னத்தை தடுவுவதை பார்த்ததும் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கியவன் முறைத்தவாறே உள்ளே சென்று விட்டாள்.
அவனோ "ஆத்தி இவ எங்க இங்க "என்று நினைக்க அதற்குள் அவன் அன்னை அழைக்க "என் அம்மா வேற "என்று சளித்தவாறே சென்று விட்டான் .
அதன் பின் இளவரசிக்கு விழாவும் தொடங்க முதலில் பட்டுபாவாடையில் வந்து யாகத்தின் முன் அமர்ந்திருந்தவளின் இரு புறமும் மேகலாவும் முருகனும் அமர்ந்து கொண்டனர் .
அவளிற்கு தந்தை இல்லாத காரணத்தால் .யாகம் முடிந்து விட அதன் பின் அவளை உள்ளே அத்தை மார்கள் அழைத்து சென்று தலைக்கு தண்ணீர் ஊற்ற அழைத்து செல்ல மாறனின் குரலோ அங்கு தனியாய் தெரிந்தது ."ஒரு நிமிஷம் "என்றவன்
இலக்கியாவிடம் திரும்பி "லயா நீயும் கூட போ "என்க சாந்தியும் மஹாலட்சுமியுமோ குழப்பமாய் பார்த்தார்கள் .
ஷாந்தி "மாறா அத்தை முறை உள்ளவங்க தான் போனும் அந்த புள்ள எதுக்கு "என்க
அவனோ "அதனால தான் அவளை போக சொல்றேன்.என் பொண்டாட்டி அவளுக்கு அத்தை தான"என்க அங்கிருந்த சாந்தியையும் மகாலட்சுமியும் அதிர சொந்தங்களுக்குள்ளோ சலசலப்பு ஏற்பட்டது .
சத்யமூர்த்தியோ அனைவரின் புறமும் திரும்பியவர் "மன்னிச்சுருங்க அவசரமா முடிவு பண்ணதால எல்லாருக்கும் சொல்ல முடியல ."என்று இலக்கியாவை சுட்டி காட்டியவர் "என்னோட மகன் இளமாரனுக்கும் என் நண்பன் சங்கரனோட மகள் இலக்கியாவிற்கும் திருமணம் செய்ய முடிவு பண்ணிருக்கோம்.கல்யாண தேதி குறிச்சதும் சொல்லி அனுப்புறோம் "என்றவர் ஷாந்தி எதையோ கூற வர இலக்கியாவின் புறம் திரும்பி "சின்ன மருமகளே நீ போமா "என்க
அவளும் "சரி மாமா "என்று கூறி உள்ளே சென்றாள்.
மகாலட்சுமிக்கு ஏதோ பெரிய இடியை தலையில் இறங்கியதை போல் இருக்க இளவரசியோ விஷமமாய் இலக்கியாவை பார்த்து சிரித்தவள் "வங்கக்கா இல்லை இல்ல அத்த"என்க
இலக்கியாவோ "சும்மா இருடி "என்று அவள் தலையில் தட்டியவள் மேகலாவோடு ஸ்னேஹமாய் புன்னகைத்தவாறு சல்லடையில் தங்க நாணயங்களை போட்டு மஞ்சள் பூசி இளவரசியை நீராட்டி முடித்தவர்கள் புடவையை கட்டிவிட்டு வெளியே அழைத்து வந்தனர் .
அதன் பின் வந்தவர்கள் அனைவரும் பரிசுகள் கொடுத்துவிட்டு செல்ல மஹாலட்சுமிக்கோ மனதில் எரிமலையே வெடித்துக்கோடனிருந்தது மாறனுடன் இலக்கிய ஜோடியாய் நின்று அனைத்து சடங்குகளையும் செய்வதை பார்த்து.
மாறன் அவளிற்கு ஒரு தங்க செயின் வாங்கி இருந்தவன் அவளிற்கு போட்டு விட்டு அவர்களுக்கு கேட்கும் படி "உனக்கு முறைல தான்டா நா மாமன் ஆனா நீ எனக்கு எப்போவுமே முதல் குழந்ததா "என்க
இளவரசியோ இன்று என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் "தேங்க்ஸ் மாறப்பா"என்றாள்.மஹாலட்சுமிக்கோ இது மேலும் கோபத்தை தூண்டி விட்டிருந்தது .இலக்கியா அவளின் பங்கிற்கு ஒரு மோதிரத்தை அணிவித்து விட்டாள் .
அதன் பின் ராஜா வந்து வழக்கம் போல் அவளை வம்பிழுக்க "அரிசி மூட அம்சமா இன்னிக்கு பொண்ணு மாறி இருக்க "என்று கூறியவன் சந்தனத்தை பூசி விட இளவரசியின் உடலிலோ புதியதாய் ஒரு குறுகுறுப்பு தோன்றியது .அதன் பின் அவன் தான் வாங்கி வந்திருந்த தங்க சங்கிலியை அவள் கழுத்தில் அணிவிக்க கண்களை மூடிக்கொண்டாள் இளவரசி அவன் விலகி சென்ற பின் தான் அவளால் சீராக மூச்சே விட முடிந்தது .அவன் அணிவித்து விட்ட சங்கிலியை வருடியவளின் இதழ்கள் தானாய் விரிந்து விட ஏனோ அந்த சங்கிலியை கழட்டவே கூடாதென்று நினைத்துக்கொண்டாள் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top