19
மாறனோ அதிர்ச்சியில் உறைந்து நின்றவன் அவள் தோள் தொட்டு உசுப்பியதிலேயே மனம் தெளிந்தான் .அவள் புறம் தடுமாற்றமாய் திரும்பியவன் "அது அது ..... எப்போ இருந்து லயா உனக்கு இப்டி தோணுது ?"என்க
அவளோ அசால்டாக "இப்போ தான் தோணுச்சு "என்க அவனோ நொந்துவிட்டான் .
அவன் மீண்டும் "அது இல்லடா எத்தனை மாசமா உனக்கு இப்டி என் மேல ஒரு எண்ணம் ?"என்று கேட்க
அவளோ பொறுமை இழந்தவள் "டேய்ய் ஒன்னு முடியும்னு சொல்லு இல்ல முடியாதுனு சொல்லு.இப்போ தான் தோணுச்சுனு சொல்றேன்ல "என்றவள் பின் நேற்று தன் தந்தை தன்னிடம் உரையாடியதை பற்றி கூறினாள் பின்"யோசுச்சு பாத்தேன் ஒத்து வரும்னு தோணுச்சு அதான் எதுக்கு மறச்சு வச்சுக்கிட்டுனு கேட்டுட்டேன் என்ன சொல்ற ?டைம் வேணுமா ? "என்க
அவனோ உடனே தான் காதலிக்கும் விஷயத்தை கூற துடித்த மனதை அடக்கியவன் அவளிடம் திரும்பி "நாளைக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கு ரெடியாக இரு "என்க
அவளோ" ம்ம் சரி இளா "என்றவள் உள்ளே சென்றுவிட்டாள் .
அவள் செல்வதை பார்த்த இளமாரனின் கண்களில் இன்று காதலுடன் கூடிய ஏக்கமும் போட்டி போட்டது .மழையில் நனைந்ததையும் பொருட்படுத்தாமல் தன் வீட்டிற்குள் வந்தவன் தன் தம்பி எதையோ கூற வருவதையும் பொருட்படுத்தாமல் உள்ளே குளியலறைக்குள் சென்று உடைகளுடன் ஷவரில் நனைய துவங்கினான் .அவனிற்கு என்ன செய்வது என்ன சொல்வது மனம் என்ன எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை .எட்டு வருடங்களாய் நேசித்து வருகிறான் .
இந்த முறை அவளிடம் பேசும்முன் ராமனிடம் பேசி விட வேண்டும் என்று தான் நினைத்திருந்தான் எனில் இன்று அவள் வாய் வழியாகவே திருமணம் செய்து கொள்ளலாமா என்ற கேள்வியை கேட்டவனிற்கோ ஏதோ தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது .அதிக நேரம் ஷவரில் நனைந்தவன் அதன் பின் உடையை மாட்டிக்கொண்டு கட்டிலில் வந்து அமர ராஜாவோ கேள்வியோடு அவன் முகத்தை நோக்கினான்.தம்பியிடம் எதையும் கூறாதவன் ஒரு புறம் சென்று படுத்துவிட ராஜாவோ அவனின் மனநிலை தெரியட்டும் என்று நினைத்து விட்டு விட்டான் .
அடுத்த நாள் காலை விடிய மாறன் ஒரு முடிவோடு கபோர்டில் இலக்கியாவிற்காக வாங்கி வைத்திருந்த புடவையை எடுத்தவன் அதை வண்டியில் வைத்துவிட்டு பணிக்கு சென்றான் .நேரங்கள் நொடிப்பொழுதில் கரைய மாலை ஐந்து மணியை நெருங்கி இருந்தது .தனது வண்டியை கிளப்பியவன் இலக்கியாவை அழைத்து செல்வதற்காக அவர்களின் வீட்டிற்கு வந்தான் .
அவன் ஹாரனை இரு முறை அழுத்த அவளோ வரேன் என்றவாறு கிளிப்பிற்கு அடங்காமல் முன் நெற்றியில் நடனமாடிய தனது முடிகளை காதோரம் ஒதுக்கி விட்டவாறு வந்தால் இலக்கியா .கரும்பச்சை நிறத்தில் அவள் நேர்த்தியாய் உடுத்தியிருந்த புடவையும் கண்ணிற்கு அவள் இட்டிருந்த மையும் மாறனின் மதியை கிறங்கடிக்க தலையை உலுக்கிக்கொண்டவன் அவளிடம் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு மீனாட்சி அம்மன் கோயிலிற்கு அழைத்து சென்றான் .
வைகை நதியின் கிழக்கு கரையில் மங்கையவள் மீனாட்சியின் வாசஸ்தலமாய் வானுயர்ந்த நின்றன கோவிலின் கோபுரங்கள் .உள்ளே சென்று மீனாட்சி அம்மனை தரிசித்தவர்கள் அதன் பின் அங்கிருந்த பொற்றாமரை குளத்தின் படிகளில் அமர்ந்தனர் .
மாலை மங்கி சாயும் நேரத்தில் குளத்தின் நடுவே அமைந்திருந்த பொற்றாமரையோடு சேந்து அந்த குளமும் தங்கமென ஜொலிக்க சந்தனமேனியாளின் மேல் வீழ்ந்த சூரியனும் அவளை தங்கமென ஜொலிக்க வைத்தான் .மாறன் சிறு புன்னகையோடு இலக்கியாவை பார்த்திருக்க அவளோ அவன் புறம் திரும்பியவள் "என்ன முடிவு பண்ணிருக்க இளா?"என்க
அவனோ அவளின் புறம் திரும்பி அமர்ந்தவன் அவள் கண்ணை தீர்க்கமாய் பார்த்தபடி "நீ என்ன காதலிக்கிறியா ?"என்க
அவளோ திகைத்து விழித்தாள் .மாறனோ அவளின் செய்கையிலேயே உண்மை உணர்ந்தவனின் மனம் சற்று வலித்தாலும் மீண்டும் அவளிடம் கேட்டான் "சொல்லு லயா நீ என்ன காதலிக்கிறியா ?"என்க
அவளோ இடவலமாய் தலை அசைத்தாள் இல்லை என்று .
அவனோ நீண்ட மூச்சை இழுத்து விட்டவன் "காதல் இல்லாம எப்படி டா கல்யாணம் பண்ணிக்க முடியும் சொல்லு ?"என்க
அவளோ "ஏன் இப்போ arranged marriage பண்ணிக்குறவங்களாம் காதலிச்சுட்டா கல்யாணம் பண்ணிக்குறாங்க ?கல்யாணத்துக்கு அப்பறோம் காதலிக்குறதில்லயா ?"என்க
அவனோ "அவங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் மிஞ்சி மிஞ்சி போனா எத்தனை நாள் தெரியும் லயா ?ஒரு அஞ்சு நிமிஷம் பார்ப்பார்களா ?அந்த அஞ்சு நிமிஷத்துல எதிர்ல இருக்குறது ஐஸ்வர்யா ராயா வே இருந்தாலும் காதல்லாம் வராது.கல்யாணத்துகப்ரோம் தான் அவங்களுக்கு முகத்தையே ஒழுங்கா பாக்குற சந்தர்ப்பம் கிடைக்கும் .சோ காதல் graduallaa வரும்.ஆனா உன்னையும் என்னையும் எடுத்துக்கோ என்ன உனக்கு எத்தனை வருஷமா தெரியும் ?"என்க
அவளோ தயங்கியவாறே "பொறந்ததுல இருந்து தெரியும் அஞ்சு வருஷமா எனக்கு கிளோஸ் friendaah தெரியும் "என்க
அவனோ "இந்த அஞ்சு வருஷத்துல ஒரு தடவ கூட உனக்கு என் மேல ஒரு சின்ன ஸ்பார்க் கூட வரல அப்பறோம் எப்படி கல்யாணத்துக்கு அப்பறோம் மட்டும் வரும்னு நெனைக்குற ?"என்க
அவளோ "அது... அது... உனக்கு மட்டும் தோணுச்சா என் மேல எதுவும் இல்லேல அதே மாறி தான எனக்கும் "என்க
அவனோ பலமாய் சிரித்தவன்"எனக்கு உன் மேல எதுவும் இல்லையா "என்றவன் அவள் கையில் தான் மூன்று வருடங்களுக்கு முன் எடுத்து வைத்த புடவையையும் எட்டு வருடங்களாய் அவளின் நினைவுகளை காகிதத்தில் பொறித்து வைத்திருந்த அவனின் டைரியையும் அவள் கையில் கொடுத்தவன் "எட்டு வருஷமா உன் மேல பைத்தியமா இருக்கேன் டி.என்ன சொன்ன உன் மேல எனக்கு feelings இல்லையா ?பைத்தியமே உன் மேல வந்த feelings எவ கிட்டயும் வந்ததும் இல்ல இனி எவ மேலயும் வரப்போறதும் இல்ல "என்க
அவளோ கையில் அவன் கொடுத்த புடவையையும் அந்த டைரியையும் வெறித்து பார்த்தவள் அவன் கூறிய எட்டு வருடமாய் காதலிக்கிறேன் உன்னை என்ற வார்த்தையில் சர்வமும் அடங்கி போய் அமர்ந்திருந்தாள் .அவள் குழப்பத்தை முகம் வழியே அறிந்துகொண்டவன் அவள் கையை பற்றினான் "இப்போ கூட உன் அண்ணன் கிட்ட பேசிறலாம்னு தான் நெனச்சேன் ஆனா நீயே நேத்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டும் என்னால ஓகே சொல்ல முடியல .கடமைக்காக நடக்க கூடாது இளா நம்ம கல்யாணம் .என்னோட மொத்த காதலுக்கும் பரிசா உன் முழு மனசோட நீ என்ன கல்யாணம் பண்ணிக்கணும் .அதை தான் நா விரும்புறேன்."என்றவன்
அவள் ஏதோ கூற வர அவனோ உதட்டில் ஒற்றை விரலை வைத்தவன் "ஷு எதுவும் சொல்லாத நீ வாயால சொல்றத விட உன் கண்ணு சொல்றத என்னால புரிஞ்சுக்க முடியும் .இப்போ உன் மனசுல சுத்தமா என் மேல அப்டி ஒரு எண்ணம் இல்ல .அப்டி வந்தா உன் கண்ணே எனக்கு காட்டி குடுத்துரும் .அது வர வரைக்கும் நா காத்திருக்கேன் .ரொம்ப கஷ்டப்படாத "என்றவன் பின் நேரத்தை பார்க்க அது ஏழு என்று காட்டியது.
பின் தான் நினைவு வந்தது அவனின் தாயாரும் தமக்கையும் அவனின் தந்தையும் வெளி ஊரிற்கு ஏதோ ஒரு திருமணத்திற்காக சென்றிருக்க வர நாளை ஆகும் .ராஜாவும் இளவரசியும் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர் என்பதும் .பின் இலக்கியாவிடம் திரும்பியவன் "சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் இனி முடிவு உன் கைல தான் இருக்கு .கவலைப்படாத பதில் எதுவா இருந்தாலும் என் எல்லைல தான் எப்போவும் நிப்பேன் "என்றவன் அவளை வீட்டில் சென்று இறக்கி விட அவளும் குழம்பிய முகத்துடனே வந்து தன கட்டிலில் விழுந்தாள்.
அந்த பட்டு புடவையை வருடியவள் காய் அந்த டைரியை திறக்க முதல் பக்கத்தில் மிகவும் அழகாய் அவள் பாவாடை தாவணியில் இருப்பது போன்று வரைந்திருந்தான் மாறன் கீழே லயா என்று எழுதி இருந்தான் .அடுத்த பக்கத்தில் ஒரு சிறிய சுருக்கு பை போல் இருந்தது .அதை அவள் பிரிக்க அதிலோ ஒரு சிறிய வெள்ளி வலயம் இருந்தது .கீழே
என் தேவதையின் முதல் நினைவுப்பரிசு
"என்று எழுதி இருந்தது .
அதன் பின் அவளிடம் தன காதலை உணர்ந்தது முதல் ஒவ்வொரு நாளும் அவளை காண்கையில் அவன் உணரும் உணர்ச்சிகள் அனைத்தையும் வரிகளாய் வடித்திருந்தான் அந்த டைரியில் .படிக்க படிக்க மனதில் இனம்புரியாத உணர்வொன்று எழுவதை இலக்கியாவால் தடுக்க முடியவில்லை .நடுவில் அவளிடம் இருந்து அவன் திருடிய போட்டோக்களும் இருந்தது .
அதன் கீழே
"கண்ணியமாய் கடந்து செல்லவே நினைக்கின்றேன்
நின் காந்த விழிகளில்
கள்ளுண்ட வண்டெனவே ஆகிறேன் .
காதல் வந்தால் கள்ளத்தனமும் குடியேறிடுமோ?"
என்றிருக்க அதை வருடியவள் இதழ்கள் புன்னகை பூத்தது .முழுதாய் அந்த டைரியை வாசித்து முடித்தவளின் மூலையில் ஓடியதென்னவோ ஒரே கேள்வி தான் .தான் இத்தனை காதலிற்கு தகுதியானவளா ?என்பது தான் அது .
இங்கு மாறனோ காதலை சொல்லி விட்ட நிம்மதியிலும் சந்தோஷத்திலும் சற்று நேரம் சுற்றிக்கொண்டிருக்க இங்க வீட்டிலோ ராஜாவும் இளவரசியும் வீட்டை அதகளம் செய்து கொண்டிருந்தனர்.
ராஜாவும் இளவரசியும் மட்டுமே வீட்டில் எஞ்சி இருக்க இளவரசியோ வாயை பிளந்தபடி தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்க ராஜாவோ அவள் தலையிலேயே கொட்டியவன் அவளிடம் இருந்து ரிமோட்டை பிடிங்கி "எப்போ பாரு டிவி பொய் படிக்க மாட்டியா அரிசி மூட்டை "என்க
அவளோ தலையை தேய்த்துக்கொண்டவள் "மாடு மாடு எல்லாம் படுச்சு முடுச்சுட்டேன் போடா "என்க
அவனோ "பரவால்ல திரும்பி போய் படி நா மேட்ச் பாக்கணும் "என்க அவளோ அவனை கை வலிக்கும் வரை அடித்து ஓய்ந்தவள் வயிறு வலிப்பதை போல் தோன்ற குளியலறைக்குள் சென்றாள்.
சென்றவள் சென்ற வேகத்திலேயே அழுதபடி வெளியே ஓடி வர ராஜாவோ பதறி விட்டான் .அவள் கட்டிலில் அமர்ந்து அழுதுகொண்டிருக்க அவனோ "ஏய்ய் ஏய்ய் அரிசி மூட்டை என்னடி எதுக்கு அழுகுற ?"என்க
அவளோ அவனை கட்டிப்பிடித்துக்கொண்டவள் "மாமா மாமா ர... ரத்தமா வருதுடா அம் அம்மா வேற இல்ல என்னடா ஆச்சு எனக்கு பயமா இருக்குடா "என்க
அப்பொழுதே அவளின் பாவாடையை கவனித்தான் அவள் அணிந்திருந்த பாவாடை முழுவதும் உதிரத்தால் சிகப்பாக மாறி இருந்தது .முதலில் அதை கண்டு மகிழ்ந்தவன் அவளின் தலையை வருடிக்கொடுத்தான் "அரிசி மூட்டை ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல நீ small அரிசி மூட்டைல இருந்து big அரிசி மூட்ட ஆயத்த பயப்படாம இரு நா வெளிய போயிடு வந்துருறேன்.கண்ணா தொட "என்க
அவளோ அப்பொழுது தான் தான் பூப்பெய்து விட்டதையே உணர்ந்தாள் அவனை கட்டிக்கொண்டிருப்பதையும் .அவசரமாய் அவனை விட்டவள் தலையை குனிந்து அமர்ந்து விட அவனோ வெளியே சென்று அவளிற்கு தேவையானதை வாங்கி வந்தவன் அவளை உள்ளே சென்று குளித்து வர கூறினான் .பின் மாறனிற்கு கால் செய்து விஷயத்தை கூற அவனோ மகிழ்ச்சி பொங்க இப்பொழுதே வருவதாய் கூறி வைத்துவிட்டான் .
ராஜா சாதாரணமாய் இருக்க உள்ளே சென்ற இளவரசிக்கோ இது வரை தோன்றாத தயக்கமும் வெட்கமும் போட்டி போட,அவனை அனைத்திருந்த உடல் குறுகுறுக்க ஏன் இப்படி உணர்கிறோம் என்றே தெரியாமல் நீண்ட நேரம் குளித்துக்கொண்டிருந்தால் அந்த பதினேழு வயது பெண் .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top