17
அன்று சற்று முகத்தில் உறைந்த புன்னகையுடன் மாறன் உள்ளே நுழைந்தவன் முதலில் தன் தம்பியிடம் சென்றான்
.ராஜா "என்ன அண்ணே இவ்ளோ சீக்ரம் வந்துட்ட அதுக்குள்ள கல்யாணம் முடுஞ்சுதா ?"என்க
மாறனோ "ஏன்டா நீ வேற "என்றவன் அங்கு நடந்த அனைத்தையும் கூற
ராஜாவோ "எது மோகன் அண்ணனா நம்பவே முடியலண்ணா "என்க
மாறனோ "என்னாலயும் நம்ப முடிலடா அண்ட் இன்னைக்கு தான் இலக்கியா மேல எவ்ளோ காதல் வச்சுருக்கேனும் புரிஞ்சது .அவங்க அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவ அமைதியா இருந்த ஒவ்வொரு செகண்டும் துடுச்சு போய்ட்டேன்டா. என் உயிரே என் கைல இல்ல "என்க ராஜாவோ மனதார தனது அண்ணனின் காதல் வெற்றிபெற வேண்டிக்கொண்டான் தான் அந்த காதல் வெற்றிபெற தன் வாழ்வையும் பணயம் வைப்போம் என்று அறியாமல் .
நாட்களும் சென்றது வருடங்களும் உருண்டோடியது .இலக்கியா தனது கல்லூரி படிப்பை இந்த வருடம் முடித்திருந்தாள் .தற்போது ஒரு பிரைவேட் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றாள் .ராமன் கலாவுடன் தனது பணியை மேற்கொள்ள சென்றுவிட்டான் .வருடம் ஒரு முறை தான் வருவான் .மாறன் இலக்கியாவின் உறவு மாறனை பொறுத்தமட்டில் வலுவான காதலாகவும் இலக்கியாவை பொறுத்தமட்டில் வலுவான நட்பாகவும் வளர்ந்து வந்தது .
இலக்கியாவின் தந்தையான சங்கரர் அவள் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது நுரை ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் மாறன் தான் இலக்கியாவை ஏதேனும் தொலைவான பகுதிகளுக்கு அழைத்து செல்லவும் அழைத்து வரவும் என்று இருந்தான் .அவளின் பதினெட்டாவது பிறந்தநாளிற்கு தன் காதலை கூற வேண்டும் என்று நினைத்தவன் அவள் தமக்கை செய்த செயலால் அவளிடம் தன் காதலை கூறவும் இல்லை பார்வையிலும் அவளிடம் தன் காதலை உணர்த்தவும் இல்லை .
விஷ்ணுவிற்கு அவனின் தந்தை வழி அத்தையின் மகளான லட்சுமியுடன் திருமணம் முடிந்திருக்க அவள் காட்டிய அன்பிலும் காதலிலும் தனது கடந்த கால கசப்புகள் அனைத்தையும் மறந்து அவளுடன் இனிமையான இல்லற வாழ்வில் திளைத்திருந்தான் .அவனிற்கு ஹர்ஷவர்தன் என்று தற்பொழுது குழந்தையும் பிறந்திருந்தது .
ராஜா வங்கியில் வேலைக்கு சேர்ந்திருந்தான்.தற்பொழுது பி ஓ வாக ப்ரொமோட் ஆகி இருந்தான் மாறன் ஏ. டி ஆக ப்ரொமோட் ஆகி இருந்தான்.
மாறனின் தந்தைக்கு ஸ்ட்ரோக் வந்து மாறனின் செலவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது .அதன் பின் ஆன செலவுகள் அனைத்தையும் ராஜா தனது சமபங்காய் கொடுத்துவிடுவான்.இளவரசி பதினாறு வயதாகியும் இன்னும் பூப்பெய்தாமல் இருக்க மகாலட்சுமியே அதற்கு செல்லாத கோவில்கள் இல்லை .முருகனிற்கு சென்னைக்கு பணிமாற்றம் கிடைக்க மேகலா மற்றும் முருகன் குடும்பத்தினர் சென்னைக்கு பயணப்பட்டனர் .
அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி ஷாந்தி மட்டுமே நிறம் மாறாத பூவாக மாறனையும் ராஜாவையும் துச்சமென மதித்து வருகிறார் எனில் அவர்களின் சம்பளப்பணம் மட்டும் அவரிற்கு தேவைப்பட்டதாய் உள்ளது .
மகாலட்சுமியின் கணவன் ஈஸ்வர் குடித்து குடித்து குடல் வெந்து சென்ற வருடம் இறந்துவிட மகாலட்சுமி நிரந்தரமாய் இங்கே பிறந்த இடத்திற்கு வந்து தங்கிவிட்டாள் .ஈஸ்வரனிடம் அனுதினம் பெற்ற சித்ரவதை அவளது மூலையில் சற்று விஷத்தையும் சுயநலத்தையும் கலந்திருக்க ஷாந்தியுடனே நாளும் பொழுதையும் கழிப்பவளிற்கு தான் நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற குணம் தலைவிரித்து ஆட துவங்கியது .
இளவரசியையும் ஷிவாவையும் படிக்க வைப்பது மாறனும் ராஜாவும் தான் .இளவரசி மாறனின் உறவு தந்தை மகளாக அனுதினமும் வளர ராஜாவிற்கு இளவரசிக்கும் அதே டாம் அண்ட் ஜெர்ரி உறவு எந்த மாற்றமும் இல்லாமல் அதே போல் தான் சென்று கொண்டிருந்தது.
இளவரசி மாறன் கோண்டு என்றால் ஷிவாவோ ராஜா கோண்டு.ராஜாவின் குணத்தை அப்படியே கொண்டு வளர்ந்திருந்தான் அவனிற்காக எந்த எல்லைக்கும் செல்வான் எதையும் செய்வான் .மாறனின் மேல் அவனிற்கு அளவில்லாத மரியாதை இருந்தது பாசமும் இருந்தது .அவ்வப்போது மகாலட்சுமி ஷாந்தி இருவரும் அவனை தங்களின் கூட்டாளி ஆக்க இளவரசியை மாறனிற்கு தான் திருமணம் செய்விக்க வேண்டும் அப்பொழுது தான் அவன் சம்பாதிக்கும் அனைத்தும் உனக்கு சேரும் என்று கூறுகையில் எல்லாம் அவன் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவான்.அவனை பொறுத்தவரை அவன் அன்னையின் மேல் இருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் இறங்க ஆரம்பித்து விட்டது அவளின் தற்போதய குணத்தால் .
மாறன் வழக்கம் போல் அனைத்து சம்பளத்தையும் தாரைவார்க்க துணிய ராஜாவோ இவன் சரிப்பட்டு வரமாட்டான் என்று அவனின் பெயரில் lic பாலிசிகளை அவன் அனுமதியின்றி போட்டு வைத்துவிட்டு அவனை கட்ட வைத்தான் அவனிற்கென ஒரு சேமிப்பை உருவாக்க .
நாட்கள் அழகாகவே நகர்ந்தது அந்த ஆனால் வரும் வரையில் .
அன்று மாறன் வேலையாக இருந்த மாறனிற்கு திடீரென்று அழைப்பு வர அதை யாரென்றே கவனிக்காமல் எடுத்து காதில் வைத்தான் மாறன் .
மாறன் "ஹலோ "என்க
அப்புறமோ இலக்கியா "மாறா கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா "என்க
அவனின் மாறா என்ற அழைப்பில் திகைத்தவன் "என்ன லயம்மா ஏதாச்சு பிரச்னையா ?"என்க
அவளோ "அப்டிலாம் இல்லப்பா அம்மா உன்ன கூப்பிட சொன்னாங்க இப்போ நீ வீட்டுக்கு வா "என்க அவனோ இருக்கின்ற வேலையை எல்லாம் அப்படியே மூட்டை கட்டி வைத்துவிட்டு அங்கே அவர்களின் வீட்டிற்கு சென்றான் .அவன் அறிவான் சிக்கலான அல்லது இக்கட்டான சூழல்களை தவிர்த்து இலக்கியா அவனை மாறா என்று அழைக்க மாட்டாள் என்று .
அங்கே வாசலில் கார் ஒன்று நிற்க மூன்று பேர் செருப்பு வெளியே வாசலில் இருந்தது .மாறன் உள்ளே வர இலக்கியாவின் தந்தையோ அவனை கண்டு புன்னகைத்தவர் "இது தான் மாறன் என் புள்ளையோட ஸ்னேஹிதன் எனக்கு இன்னொரு மகன் மாறி "என்க அவன் அங்கே வந்திருந்தவர்களை அளவெடுத்தான்.
ஒரு நடுத்தர வயது பெண்ணும் ஆணும் அமர்ந்திருக்க நடுவில் அவன் வயதை ஒத்த ஒருவன் அமர்ந்திருந்தான் .கொஞ்சம் பார்க்கவும் அழகாக தான் இருந்தான் .அவர்களுக்கு கீழே வெத்திலை பாக்கு ,பழங்கள் போன்றவை தாம்பூலத்தில் இருக்க அவர்கள் வந்ததன் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறனிற்கு புரிய அவன் அதிர்ந்த நேரத்தில் அடர் நீல பட்டில் மிதமான அலங்காரத்தில் தொங்கிய முகத்துடன் வந்து நின்றாள் இலக்கியா .
சங்கரன் மாறனிடம் திரும்பியவர் "ராமன் காலைல போன் பண்ணி பொண்ணு பாக்க வராங்கனு சொல்லிட்டான்பா .அதான் திடீர்னு கூப்பிட முடியல பையன் அட்வகேட் ஆஹ் இருக்காராம் நல்ல குடும்பம் "என்க அவனிற்கோ எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் என்ற நிலை .
ஆனால் இலக்கியாவின் முகத்தை பார்க்க அதுவோ வாடி தொங்கிப்போய் இருந்தது .அது அவனிற்கு சற்று தெம்பளிக்க பிறகு பேசிக்கொள்ளலாம் என்று அமைதியாக ஒரு புன்சிரிப்பை கொடுத்தான் மனதில் எதிரே அமர்ந்திருந்த புதியவனை அர்ச்சிக்கவும் மறுக்கவில்லை .
அந்த ஆடவனின் தாய் "ஏன்டா இப்டியே உக்காந்துருந்தா எப்படி பொண்ண பாத்துக்கோ "என்க
அவனோ இலக்கியாவை பார்த்தவன் ஒரு அலட்சிய திமிரான பார்வையுடன் "not bad .பேச வேண்டியதை பேசுங்க அம்மா "என்க
மாறனோ "எது not bad ஆ அடிங்குஹ் "என்று நினைத்தவன் அவன் இலக்கியாவை பார்த்த விழுங்கும் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் தலைக்கேற கைகளை இறுக்கி மூடியபடி அமர்ந்திருந்தான் .
அதன் பின் அந்த பையனின் தாய் "எல்லாம் சரிங்க பொண்ணுக்கு ஒரு நூறு சவரன் நகையும் பையனுக்கு ஒரு பைக்கும் வாங்கி குடுக்குறதா இருந்தீங்கன்னா மேற்கொண்டு பேசலாம் "என்க
இலக்கியாவின் தந்தையும் தாயுமோ அதிர்ந்தவர்கள்"நூறு சவரனா ?எங்களால அவ்ளோ முடியாதுங்களே "என்க
அந்த பையனின் தாயோ "என்னங்க நீங்க என்னவோ அநியாயமா கேக்குற மாறி இழுக்குறீங்க .எங்க வசதிக்கு இல்லேன்னாலும் பொண்ணு பாக்க லட்சணமா இருக்கேனு தான் சம்மந்தம் பேச வந்தோம் .அது மட்டுமில்லாம உங்க நடு பொண்ணு ஓடி போய்ட்டாளாமே ?ஓடி போன பொண்ணோட தங்கச்சிய எவன் கட்டிப்பான் ?யாருக்கு தெரியும் இவளும் அப்டி ஓடி போய்ட்டா ஒரு safety வேணும்ல எங்களுக்கு "என்று கேட்டுவிட்டு ஏளனமாய் சிரிக்க
அதுவரை அமைதியாய் இருந்த மாறன் "என்ன உங்க இஷ்டத்துக்கு பேசுறீங்க ?"என்று எகிற அதற்கடுத்து இலக்கியாவின் கை தட்டும் ஓசை கேட்டது .கையை தட்டியபடி அதுவரை குனிந்திருந்த தலையை நிமிர்த்தியவளின் கண்களில் அலட்சியமும் திமிரும் அளவிற்கு அதிகமாகவே இருக்க முகமோ கோபத்தில் கோவைப்பழமென சிவந்திருந்தது .அவள் முகத்தை பார்த்து புன்னகை பூத்த மாறனோ அந்த பையனையும் அவனின் தாயையும் ஒரு பரிதாபப்பார்வை பார்த்தவன் சாவகாசமாக சாய்ந்து அமர்ந்துகொண்டான் .
அவர்கள் முன் வந்த இலக்கியாவோ "ஆண்ட்டி பேசாம ஒன்னு பண்ணுவோமா ?நூறு சவரன் நகை குடுத்து பைக்கையும் குடுத்து உங்க பையன் கிட்ட நா தாலி வாங்கிக்குறதுக்கு பதிலை for a change உங்க பையன் சேலை கட்டிட்டு வரட்டும் நா அவன் கழுத்துல தாலி கட்டுறேன்.பயப்புடாதீங்க ஆண்ட்டி உங்க பையன கண்கலங்காம வச்சு பாத்துக்குறேன் "என்க
அவனோ கோபமாய் எழுந்தவன் "என்னடி சொன்ன "என்க
அவனிற்கு சளைக்காத கோபத்தோடு அவன் எதிரே நின்றவள்"இந்த வாடி பொடிலாம் என்கிட்டே வேணாம் எல்லாத்தையும் அறுத்துருவேன் அமைதியா உக்காரு "என்று உறும
அடுத்து அந்த பெண்ணின் புறம் திரும்பியவளோ "சாரி ஆண்ட்டி உங்க பையன கட்டிக்க எனக்கு இஷ்டம் இல்ல சோ ஒழுங்கா அஞ்சு நிமிஷத்துல இந்த குப்பையை எல்லாம் கிளீன் பண்ணிட்டு போனீங்கன்னா உங்களுக்கு மரியாதை"என்க
அவனின் அன்னையோ "இல்லேன்னா என்னடி பண்ணுவ "என்க
அவளோ சாவகாசமாய் இருகைகளையும் நெட்டி முறித்தவள் "இல்லேன்னா புட்பால் விளையாண்டு ரொம்ப நாளாச்சு நீங்க கூட பாக்க புட்பால் மாறி தான் இருக்கீங்க உங்கள வச்சு புட்பால் ஆட வேண்டி இருக்கும் "என்று கூற அவரோ இவள் செய்தாலும் செய்து விடுவாள் என்ற பீதியில் அனைத்தையும் காலி செய்திருந்தார் .
அவர்கள் சென்றதும் பெற்றோரின் முன் தீயாய் திரும்பியவள் "இனிமே மாப்ள பாக்குறேன் மண்ணாங்கட்டி பாக்குறேன்னு கண்டவன் கிட்டயும் என்ன பேச்சு வாங்க வச்சீங்க நா மனுஷியாவே இருக்க மாட்டேன் ."என்றவள்" இந்த கொரங்கு மூஞ்சிக்கு அலங்காரம் ஒன்னு தான் கேடு என்று தலையில் வைத்திருந்த பூவை அப்படியே கழட்டி வீசிவிட்டு சென்றுவிட்டாள் .அவள் பேசி சென்றதும் மனதிற்குள் அவளை கொஞ்சி தீர்த்தவன் வெளியே வந்தான் .
வந்தவன் "ஹலோ மிஸ்டர் அட்வொகேட் "என்க
அவனோ திரும்பி கேள்வியாய் பார்க்க அவன் அருகே வந்து சட்டை காலரை சரி செய்தவன் "இந்நேரம் அவ மட்டும் வாய திறக்காம இருந்துருந்தானு வையேன் அடுத்து நீ வாதாட வாயில நாக்கில்லாம அறுத்துருப்பேன்.பொண்ணுனா உனக்கு அவ்வளவு இளக்காரமா ? இனி ஒரு தடவ உன்ன எங்கயாச்சும் பாத்தேன் ...... இனியாச்சு மனுஷனா நடந்துக்கோ "என்று கூறி அனுப்பி வைக்க
அவனோ முறைக்க மாறனோ
"முறைக்காதடா சிரிப்பு வருது .போ போ "என்று அவன் முதுகில் தட்டி அனுப்பி வைக்க அவனோ நல்ல இடத்தில் சம்மந்தம் பார்த்தீர்கள் என்று தன் அன்னையை வசை பாடியபடி சென்றுவிட்டான் .
அவ்வளவு தான் அன்று அவள் ஆடிய ருத்ரதாண்டவத்திற்கு பின் சிறிது காலம் போகட்டும் அவளிற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்தி வைத்திருந்தார் சங்கரன் .மாறனோ ஆண்ட்ரே முடிவெடுத்து விட்டான் இந்த வருடம் தன நண்பன் ஊரிற்கு வரும் சமயத்தில் இலக்கியாவை தான் விரும்பும் விஷயத்தை கூறி விட வேண்டுமென்று .விதி என்ன வைத்திருக்கிறதோ ?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top