16
அம்மா என்று கத்தியவள் அவர் கையில் கடிதத்தை தர அங்கே அந்த கடிதத்தை பிடிங்கி பார்த்த ராமனோ கண்கள் சிவக்க கோபத்தில் அதை கசக்கி எறிந்தான் .ராமனின் மனைவியான கலாவோ எதுவும் புரியாமல் அவன் தோளை தொட்டு திருப்பியவள் "என்ன ஆச்சுங்க "என்று கேட்க
அவனோ ஆத்திர மிகுதியில் "என் கூட பிறந்தவ ஓடி போய்ட்டா .எவனோ என்னோட உயிர் நண்பன் உயிர் நண்பன்னு வீடு உள்ள வரைக்கும் நம்பி விட்டேனோ அவனோடேயே ஓடி போய்ட்டா ."என்க கலாவிற்கோ பேரதிர்ச்சி .திருமணம் மேடை வரை வந்து நின்றுபோனால் பெண்ணிற்கு மட்டுமல்ல அது ஆணின் வாழ்க்கையும் பாதிக்கும். எந்த தவறும் செய்யாத தன் அண்ணனுக்கு இத்தனை பெரிய தண்டனையா என்று நினைத்தவள் கண்கள் கண்ணீரை பொழிய அங்கே வாசலில் யாரோ பொத்தென்று அமரும் சத்தம் கேட்க அங்கோ விஷ்ணு அனைத்தையும் கேட்டவன் இடிந்து போய் முற்றத்தின் கரையில் அமர்ந்திருந்தான் .வாசலில் அதிரிச்சியில் நின்றது விஷ்ணு மட்டுமல்ல மாறனும் தான் .
விஷ்ணுவின் பெற்றோர் தன் மகனின் நிலையை கண்டு அழ கலாவோ தன் அண்ணனின் அருகில் ஓடி சென்றவள் அவன் காலடியில் அமர்ந்துகொண்டாள்."அண்ணே அண்ணே இங்க பாருண்ணே ஏன் இப்டி இடிஞ்சு போய் உக்காந்துருக்க அண்ணே பாருண்ணே பாருண்ணே "என்க அவனோ சமைந்து வைத்த சிலை போல் தரையை விரித்தவாறு உணர்ச்சியின்றி அமர்ந்திருந்தான் .
ராமனின் அருகில் வந்த மாறன் அவனை சமாதானப்படுத்துவதற்காக கையை வைக்க ராமனோ ஆறுதல் வேண்டி ஒரு நண்பன் செய்த துரோகத்தை இன்னொரு நண்பனின் அணைப்பில் கரைக்க நினைத்தான் .மாறனால் சிறிதும் நம்ப முடியவில்லை .இத்தனை நாட்களாய் உயிர் நண்பனாய் சுற்றி வந்தவன் தன்னிடமே தனது காதல் விவகாரத்தை மறைத்து அதை வெளி சொல்லாமல் இரு குடும்பத்தாருக்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டானே என்ற ஆத்திரம் அவனுள் எழுந்தது .
விஷ்ணுவின் தாயாரோ அதுவரை அழுதவர் அதன் பின் இலக்கியாவின் பெற்றோரிடம் கோபமாய் வந்தார்.அவர்கள் அழுதுகொண்டிருப்பதை பார்த்தவர் "நிறுத்துங்க "என்று கர்ஜித்தார் அனைவரும் மிரண்டு பார்க்க அவரோ மேலும் அவர்களை
காயப்படுத்த ஆரம்பித்தார் "என்ன எல்லாம் பிளான் பண்ணி பண்ணிட்டு இப்போ எதுக்கு இப்டி நீலிக்கண்ணீர் வடுச்சு நாடகமாடிகிட்டு இருக்கீங்க ? சொந்த அண்ணன் பொண்ணு மருமகளா வந்த நல்ல இருக்கும்னு தான வரதட்சணை அது இதுனு வந்த வரனை எல்லாம் தட்டி கழுச்சுட்டு உங்க கிட்ட சம்மந்தம் பேசுனோம் .என் பையன் என்ன தப்பு பண்ணான் ?அவளுக்கு அவனை தான் புடுச்சுருக்குன்னா அவனுக்கே கல்யாணம் பண்ணி தொலைச்சுருக்க வேண்டி தான ?எதுக்கு ஏன் பையன் மனசுல ஆசையா வளர்த்து இப்டி மோசம் பண்ணுனீங்க ?"என்க
இலக்கியாவோ "அத்தை சத்தியமா எங்களுக்கு தெரியாது அத்தை .இப்டினு தெருஞ்சுருந்தா அப்பா உங்க கிட்ட சம்மந்தம் பேசி இருப்பாரா அப்பா அப்டி பட்டவரா கொஞ்சம் யோசிங்க அத்தை "என்க
அவரோ அவள் புறம் திரும்பியவர் "வாடி அம்மா மஹாராணி வா உன்ன தான் எதிர்பார்த்தேன் .பொம்பள புள்ளைன்னு நெனப்பே இல்லாம உன் அண்ணன் ஸ்னேஹிதன்களோடயும் உன் அண்ணனோடயும் தான சுத்திகிட்டு இருப்ப உனக்கு தெரியாதோ ?"என்க
ராமனோ "அத்தை கூடவே இருந்த எனக்கே தெரியல அவளுக்கு எப்படி தெரியும்?இப்போ எங்களால மன்னிப்பு கேக்குறத தவிர்த்து எதுவும் பண்ண முடியாது அத்தை "என்க
அவரோ "மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியா போய்டுமா மாப்பிள்ளை ?"என்க
சங்கரரோ "இப்போ என்ன தான்மா பண்ண சொல்ற ?"என்க
அவரோ "ஒருத்தி தான ஓடி போனா இன்னொருத்தி இருக்காள்ல .என் புள்ளைக்கு இலக்கியாவை கட்டிக்குடுத்து நீங்க ஏற்படுத்தின களங்கத்தை நீங்களே போக்குங்க "என்க
மாறனிற்கோ தனது இதயத்தை யாரோ பிளப்பதை போல் இருக்க கண்களில் கண்ணீர் நிறைய மனதில் பெரும்பாரத்தை வைத்தார் போல் உணர்ந்தவன் கண்ணிமைக்காமல் இலக்கியாவையே வலியுடன் பார்த்தான் .
இலக்கியாவோ அதிர்ந்தவள் "அ.....அத்தை என்ன சொல்றீங்க ?"என்க
அவரோ "ஆங் என் புள்ளய கல்யாணம் பண்ணிக்க சொல்றேன் டி .இதுக்கு அப்ரம் எவன் டி உன்ன கல்யாணம் பண்ணுவான்? ஓடி போனவ தங்கச்சிங்குற பேரு உன்ன ஒரு நாளும் வாழ விடாது .எல்லாரோட நல்லதுக்கு தான் இதை சொல்றேன் "என்க அவளின் பெற்றோரும் தலை அசைக்க இலக்கியாவோ செய்வதறியாமல் நின்றிருந்தாள் .
ஒரு முறை அவளின் பார்வை மாறனின் புறம் சென்று மீண்டது .அன்று அது வரை கண்ணில் காதலை தெளிவாய் மறைக்கும் மாறன் தன் காதலி வேறொருவருக்கு சொந்தமாகி விடுவாளோ என்ற பயத்தில் தன்னை அறியாமல் கண்ணில் காதல் வழிய வலியுடன் அவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் .இலக்கியாவிற்கோ ஏனோ அவன் கண்களில் இருந்து தன் கண்ணை திருப்ப முடியவில்லை .அவனின் பார்வை அவளிடம் இறைஞ்ச அவனின் கண்களில் தெரிந்த வலி அவளுக்கும் ஊடுருவுவதை போல் உணர்ந்தாள் இலக்கியா .எத்தனை நேரம் பார்வை பரிமாற்றம் தொடர்ந்ததோ
விஷ்ணுவின்" நிறுத்துங்க" என்ற கத்தலிலேயே அனைவரும் சுய நினைவடைந்தனர் .
விஷ்ணுவின் தாய் "என்னடா நிறுத்த சொல்ற ?"என்க
அவனோ "அம்மா என்னோட கல்யாணம் நின்னு போச்சு ,அது தான் உண்மை. அதுக்காக குழந்தையை போய் கல்யாணம் பண்ணி வைக்க பார்ப்பீங்களா ?அவ வயசென்ன என் வயசென்ன ?நா அவளை விட பதினோரு வயசு மூத்தவன் .சின்ன வயசுல இருந்து என் பொண்ணா தான் நினைக்குறேன் அவளை.இது உங்களுக்கும் நல்லா தெரியும் அவளை போய் ..... ச்சீ நெனைக்கேலயே அருவருப்பா இருக்கு.அடலீஸ்ட் கழுத்துல தாலி ஏறுறதுக்கு முன்னாடி ஆச்சும் போனாலே கல்யாணம் ஆனதுகப்ரோம் தாலிய கழட்டி வச்சுட்டு போகாம "என்று ஒரு விரக்தி புன்னகை செய்தவன்
இலக்கியாவின் பெற்றோரின் முன் சென்று கை கூப்பியவன் "மன்னிச்சுருங்க மாமா அம்மா உங்கள கொஞ்சம் கடுமையா பேசிட்டாங்க .அவ பண்ணதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க ."என்றவன்
பின் தன் தாயாரிடம் "கெளம்புங்கம்மா ப்ளீஸ் எனக்கு இங்க மூச்சு முட்டுற மாறி இருக்கு "என்க
ராமனோ அவன் கையை பிடித்தவன் "என்ன மன்னிச்சுருங்க மச்சான் ப்ளீஸ் "என்க அவனோ தலையை ஆட்டியவன் வெளியேற வாசலின் அருகில் அவனையே கண்ணீர் நிறைந்த கண்ணுடன் பார்த்துக்கொண்டிருந்த இலக்கியாவின் தலையில் கையை வைத்து அழுத்தியவன்"ஓய் வாலு அழுரியா?செட் ஆகல உனக்கு "என்று முயன்று அவளை சிரிக்க வைப்பதற்காக எதையோ கூற
அவளோ அவன் ஒரு பக்க கையை பிடித்துக்கொண்டு அதில் சாய்ந்து அழுதவள் "சா.... சாரி மாம்ஸ் ":என்க
அவனோ அவள் தலையை அழுத்தி பிடித்தவன் "நீ என்னைக்கும் என் குழந்தை தான்டா எதையும் நெனச்சுக்காத உன் மாம்ஸ் கொஞ்ச நாள்ல சரி ஆயிடுவேன் "என்று விட்டு வெளியேறி சென்றான் .அது வரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாறனிற்கு அப்பொழுது தான் நிம்மதியான சீரான மூச்சே வெளி வந்தது .
அது வரை பழகி இராத விஷ்ணுவின் மேல் மரியாதையும் பெருகியது அவனின் பண்பை பார்த்து .அதன் பின் அனைவரும் களைந்து செல்ல கலாவை சமாதானம் செய்தது என்னவோ இலக்கியா தான் .
வீட்டிற்கு உள்ளேயே இருந்தால் மனநிலை சீராகாது என்று நினைத்த மாறன் ராமனை வெளியே அழைத்து வந்திருந்தான் .அழகர்கோவிலிற்கு செல்லும் வழியில் தென்னந்தோப்புகள் நிறைந்த அந்த சாலை பகுதிக்கு வந்தவர்கள்அங்கிருந்த ஒரு சிமெண்ட் தடுப்பில் அமர்ந்தனர் .
ராமனோ மாறனிடம் திரும்பியவன் "எப்படி டா எப்படி டா இப்டி பண்ண அவனுக்கு மனசு வந்துச்சு ?நம்பி தான வீட்டுக்குள்ள விட்டேன் ?என் தங்கச்சிய அவன் தங்கச்சியா நெனைப்பானு நெனச்சு தானடா வீட்டுக்குள்ள விட்டேன் .இப்டி மோசம் பண்ணிட்டானே டா."என்க
மாறனிற்கோ தன்னையே அவன் கேட்பதை போல் இருந்தது தானும் அதே காரியத்தை தானே செய்துகொண்டிருக்கின்றோம் ?என்று தோன்ற மாறனோ மௌனமானான் .
அவன் மௌனிப்பதை கவனித்த ராமனோ "என்னடா பேசாம இருக்க "என்க
மாறனோ "ஒ.. ..ஒன்னும் இல்லடா "என்க
ராமனோ அவன் தோளில் கை போட்டவன் "மச்சான் நா காதலுக்கு விரோதி இல்லடா ஆனா அதுக்குன்னு ஒரு முறை இருக்கு .இதே மோகன் என்கிட்டே வந்து டேய்ய் ராமா உன் தங்கச்சிய எனக்கு புடுச்சுருக்குடா வீட்ல இப்டி பிரச்னை என்ன பண்றதுனு கேட்டிருந்தான் நானே என் நண்பனுக்கு தங்கச்சிய கட்டி தரோம்னு சந்தோஷமா கல்யாணம் பண்ணி வச்சு நானே அவனுங்கள வேற ஊருக்கு அனுப்பி இருப்பேனே .எதுக்கு ஒருத்தன் மனசுல ஆசைய வளக்கணும் ?ஏன் இப்டி ரெண்டு குடும்பத்தையும் தல குனிய வைக்கணும் ?"என்க
அப்பொழுதே மாறனிற்கு சற்று குற்ற உணர்ச்சி விலகியது ,அவனை பேசவிட்டவன் பின் சமாதானம் கூற இயலாதென்று அமைதியாய் இருக்க ராமனோ "மச்சி ரொம்ப நாள் ஆச்சு சரக்கடிக்கலாமா ?"என்க
மாறனிற்கோ காலையில் நடந்த களோபரத்திலேயே எண்ணி பார்க்கையிலே குடிக்கும் எண்ணம் சுத்தமாக வராமல் இருந்தது "இல்ல மச்சான் நீ குடி வண்டி ஓட்டணும் ஸோ நா குடிக்கல"என்றவன் பின் அவனை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துவிட்டு வீட்டில் இறக்கி விட வந்தான் .
கதவு மூடி இருக்க ராமனோ அவன் கைகளை சப்போர்டிற்கு பிடித்தபடி நின்றுகொண்டிருந்தான் .கதவை மாறன் தட்ட சற்று நேரத்திற்கு பின் கதவை இலக்கிய திறந்தாள் .அழுதிருப்பாள் போல கண்கள் சிவந்திருந்தது .அவள் திறந்ததும் ராமன் வாயை மூடியபடி உள்ளே சென்றுவிட
இலக்கியாவோ அவன் சென்ற தோரணையை பார்த்தவள் மாறனிடம் திரும்பி "அண்ணன் குடுச்சுருக்கா ?"என்க
மாறனோ "ஆமா அவனுக்கு கொஞ்சம் mind ரிலாக்ஸ் ஆகணும்னு சொன்னான் ஸோ கொஞ்சமா எடுத்துருக்கான் தூங்கட்டும்" என்க
அவளோ ம்ம் என்றவள் பின் திரும்பு சென்று கொண்டிருந்தவனை "இளா"என்க
மாறனோ திரும்பினான் "தேங்க்ஸ் "என்க
அவனோ சிரித்தவன் "நமக்குள்ள எதுக்கு அண்ட் இனிமே அழாத ப்ளீஸ் "என்க
இலக்கியாவோ "ஏன் "என்க
மாறனோ பைக்கில் அமர்ந்தவாறே "இல்ல சும்மாவே உன் மூஞ்ச பாக்க முடியாது இதுல இப்டி அழுது வடிஞ்சேனா சத்தியமா பாக்க முடியாது அதான் "என்க
அவளோ "அடிங்கு" என்று அவனை அடிக்க வர அவனோ அதற்குள் சிரித்தபடி பைக்கில் பறந்திருந்தான் .அவன் சென்ற வழியை வெறித்தவள் இதழில் புன்னகை பூக்க உள்ளே சென்று விட்டாள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top