14
ராஜ்மஹாலிற்கு அனைவரும் சென்றிருக்க அங்கே சிறிது நேரம் கழித்து வந்து சேர்ந்தான் மாறன் .அனைவரும் புடவைகள் எடுப்பதில் மும்முரமாய் இருக்க மாறனோ உள்ளே வந்தவன் தன் கண்பார்வையை சுழற்றி இலக்கியாவை கண்டுகொண்டான் .
காலையிலிருந்து பணி அலைச்சல், களைப்பு, சோர்வு அனைத்தும் அவளை கண்ட நொடி கானல் நீராய் மறைந்திட புதுப்பொலிவுடன் அவள் அருகில் சென்றவன் அவள் அம்மாவிடமும் அப்பாவிடமும் வணக்கம் வைத்துவிட்டு இவளிடம் வந்தான் ."என்ன மேடம் ரொம்ப பிஸியாக தேர்ந்தெடுக்குறீங்க ?"என்க
அவளோ "அட நீ வேற ஏன் பா ?எனக்கு என்ன எடுக்குறதுனே தெரில. இது வர புடவை கட்டுனதும் இல்ல எடுத்ததும் இல்லையா அதான் confusion "என்க அவனோ அங்கிருந்த புடவைகளை பார்த்தான் .
அதில் மயில்கழுத்து நிறத்தில் அடர் நீல பார்டர் வைத்து ஆங்காங்கே கற்கள் பதித்திருந்த சேலை மிகவும் அழகாய் இருக்க அதை தனியாக அவள் அறியாமல் அவளிற்காக எடுத்து வைத்துக்கொண்டான் மாறன் .அதன் பின் அவளிடம் திரும்ப அவளோ ஆகாய நீளத்தில் ஒரு புடவையையும் இளம் சிகப்பு நிறத்தில் ஒரு புடவையையும் காட்டி "இளா இதுல எது எனக்கு நல்லா இருக்கும் ?"என்க அவனோ அந்த இளம் சிவப்பு நிற புடவையை எடுத்து கொடுத்தான் .
அதன் பின் அவளோ சிரிப்புடன் "ஓகே இளா நாம இப்போ அண்ணனுக்கு போய் வேட்டி சட்டை எடுத்துட்டு வந்துருவோம் பக்கத்துக்கு கடைல .:என்க அவனோ செல்லும் பொழுதே அந்த புடவையை பேக் செய்ய கூறியவன் அவளுடன் சென்று ராமனிற்கு வேட்டி சட்டை எடுக்க சென்றான் .
இங்கு இவர்கள் அனைவரும் கல்யாணத்திற்காக மகிழ்வுடன் புடவை எடுத்துக்கொண்டிருக்க பாக்யாவோ எந்த ஒரு உணர்ச்சியுமில்லாமல் ஒரு பொம்மை போல் நின்றுகொண்டிருந்தாள் .
அவளின் அன்னை மீனாட்சி ஒரு சந்தன நிற புடவையை எடுத்து அவள் மேல் வைத்தவர் "பாக்யா இங்க பாருடி இந்த புடவை உனக்கு எவ்ளோ அழகா இருக்குனு "என்க
அவளிற்கோ அந்த நிறத்தை பார்த்து கண்ணை கரித்துக்கொண்டு வந்தது .அன்றொரு நாள் இதே போன்ற சந்தன நிறத்தில் அவள் புடவை கட்டி சென்றிருந்த போது அவளவனோ அவளை இமைக்க மறந்து பார்த்தவன் "வது இந்த கலர் சாரி செம்மையா இருக்கு உனக்கு நம்ம கல்யாணத்துக்கும் இதே நிறத்துல தான் நீ எடுத்துக்கணும் "என்று அவன் கூறி ரசனையாய் அவன் அவளை நோக்கி கண்ணடித்து நினைவில் வந்து இம்சிக்க அந்த புடவையை வருடியவளின் கண்ணீர் துளிகள் அந்த புடவையில் பட்டு தெறித்தது .
அவள் அதை ஆவலோடு பார்க்கிறாள் என்று நினைத்தவர்கள் அதையே அவளிற்கு தேர்வு செய்ய அவளோ மனதிற்குள்ளேயே குமைந்தாள் ஏன் ஆண்டவா இப்படி எனக்கொரு நிலை என்று .
அதன் பின் மாறனும் இலக்கியாவும் மாறனிற்கு வேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டு வர மாறனோ அவளிற்கென வாங்கிய புடவையை தன்னுடன் பத்திரப்படுத்திக்கொண்டான் .அதன் பின் அவர்கள் அனைவரும் கடையில் இருந்து கிளம்ப மாறனோ இலக்கியாவை அழைக்கவா வேண்டாமா தரவா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.
பின் தைரியத்தை திரட்டி "லயா " என்று அவன் அழைக்க அவளோ சடன் பிரேக் போட்டது போல் நின்றவள் அவன் புறம் திரும்பி ஒற்றைப்புருவத்தை தூக்கினாள்.
அவனோ அந்த அழகில் சொக்கியவன் பின் தன்னை மீட்டுக்கொண்டு அவளிடம் அந்த புடவை அடங்கிய பையை நீட்ட கையை எடுத்தவன் அதன் பின் அதை தன் பின் மறைத்துக்கொண்டான் "ஒ..... ஒன்னும் இல்ல bye "என்க
அவளோ லூசாப்பா நீ என்பதை போல் பார்த்துவிட்டு சென்றுவிட்டாள் .அவள் சென்றதும் கண்ணை சுருக்கி தரையில் காலை உதைத்தவன் தன்னை தானே திட்டிக்கொண்டான் .முட்டாள் முட்டாள் என்று .
அதை அப்படியே தன் வண்டியில் வைத்துக்கொண்டவன் வீடு வந்து சேர்ந்தான் .அந்த புடவையை எடுத்து தனது அலமாரியில் வைத்தவன் அதை வருடினான் ."இதை இப்போதைக்கு உனக்கு கொடுக்கமாட்டேன் லயா. உன்னோட பதினெட்டாவது பிறந்தநாளுக்கு என்னோட காதலோடு சேர்த்து இந்த புடவையையும் உனக்கு குடுப்பேன் .என்னவோ தெரில ஒரு ரெண்டு நாளா நீ என்ன விட்டு தூரமா போயிருவியோன்னு பயம் வருது ."என்று நினைத்தவாறு பெருமூச்சு விட்டவன் அந்த அலமாரியை மூடினான் .
நாட்கள் செல்ல அன்று மாறனின் வீட்டிற்கு ராமனின் பெற்றோர் பத்திரிக்கை வைப்பதற்காக வந்திருந்தனர் .ராமனும் மாறனும் பிறக்கும் முன்னிருந்தே இலக்கியாவின் தந்தையான சங்கரரும் மாறனின் தந்தை சத்யமூர்த்தியும் உற்ற தோழர்கள் .அதனால் சந்திக்கும் மீனாட்சிக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருக்க அங்கு வந்தவர்களை மிகவும் நன்றாகவே உபசரித்தனர்.
அன்று பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க இலக்கியாவோ அங்கு தன் அன்னையுடன் வந்திருந்த இளவரசியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
அவளும் இளவரசியும் ஒரே பள்ளியில் தானே படித்தனர் .பள்ளிப்பருவம் தொடங்கி இளவரசி என்றால் இலக்கியாவிற்கும் இலக்கியா என்றால் இளவரசிக்கும் அன்பு அதிகம் .இருவரும் சிறிது விளையாடிக்கொண்டிருக்க அவர்களை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் மாறன் .அந்த காட்சியை இரு ஜோடி கண்களான மேகலாவின் கண்களும் மகாவின் கண்களும் கவனிக்க மகாவோ அங்கே பார்க்க இலக்கியாவின் கள்ளம் கபடமற்ற முகம் அவளின் உள்ளே ஒரு அபாய மணியை அடித்தது .
மேகலாவோ அவன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவள் அவனின் அருகில் சென்று ஒரு துண்டை நீட்டினாள் .
அவன் குழப்பமாய் பார்க்க அவளோ "மாறா ரொம்ப வழியுது தொடச்சுக்கோ "என்க அவனோ அசடு வழிய சிரித்தான் மேகலாவோ அவன் தலையில் கொட்டியவள் "எத்தனை நாளா ?"என்க
அவனோ "மூணு வருஷமா" என்றான்
மேகலாவோ வாயை பிறந்தவள் "அட பாவி அமுக்குணி மாறி இருந்துட்டு மூணு வருஷமா லவ் பண்றியா ?சொல்லவே இல்ல "என்க
அவனோ அவளை பார்த்தபடி "இன்னும் அவ கிட்டயே சொல்லல அண்ணி .இன்னும் குழந்தையாவே இருக்கா.இவகிட்ட எப்போ நான் லவ்வ சொல்லி சம்மதிக்க வச்சு கல்யாணம் பண்ணி..... வயசாய்டும் போல"என்க
அவளோ வாயை பிளந்தபடி அவன் தோளில் தட்டியவள் "உனக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னனா டா ?ரொம்ப லேட் பண்ணாம சீக்கரம் சொல்லு டா சில பல பிரெச்சனைகள் அப்போ தான் சரி ஆகும்" என்று அர்த்தமாய் மகாவை பார்த்தபடி கூற அவனோ காதில் வாங்கினால் தானே .அவன் நிலையை கண்டு சிரித்துக்கொண்டவள் பின் அவர்கள் கிளம்ப இலக்கியாவிடம் சென்று சற்று பேசிவிட்டு வந்தாள்.
ராமனும் மோகனும் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் ஊர் வந்து சேர்ந்தனர் .
ராமனோ வந்ததும் வராததுமாய் கிளம்பியவன் மாறனின் வீட்டிற்கு வந்து விட அவனுடன் மோகனும் இணைந்து கொண்டான் .
ராமனும் மாறனும் பேசியபடி வர மோகனோ ஏதோ யோசனையிலேயே இருந்தான் .
அதை கவனித்த மாறன் "அடேய் மண்டை வீங்கி மோகா என்னத்த டா இப்டி யோசிச்சுகிட்டே இருக்க ?"என்க
யோசனையில் இருந்து விடுபட்ட மோகன் "அது ஒண்ணுமில்லடா ஏதோ யோசனைலயே ..."என்க
ராமனோ "இல்லாத மூளைக்கு ரொம்ப வேலை குடுக்காத வா வீட்டுக்கு போகலாம் "என்க
மோகனோ "இ..... இல்லடா நா வரல"என்க
ராமனோ அவனை குழப்பமாய் பார்த்தவன் "இன்னைக்கு என்னாச்சுடா உனக்கு? இலக்கியா உன்ன கேட்டுக்குட்டே இருந்தா எப்போ வ,ரான் எப்போ வரான்னு இப்போ வராம போனனு வை என்னைய புளிஞ்சு எடுத்துருவா மரியாதையா வந்துரு "என்க மோகனோ அரை மனதாய் தலை அசைத்தான்.
அங்கே வீட்டிற்கு சென்றவர்கள் உள்ளே அமர ராமனோ இலக்கியாவிற்கு குரல் கொடுத்தான் "இலக்கியா பாரு யாரு வந்துருக்கானு "என்க உள்ளே இருந்த இலக்கியாவும் பாக்யாவும் வெளியே வந்தனர் .
அங்கே வந்த இலக்கியா மோகனை கண்டு புன்னகைத்தவாறு "ஹே மண்டகசாயம் "என்றவாறு வர அவனை கண்ட பாக்யாவோ கண்ணில் நீருடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .
மோகனோ பாக்கிய கண்ணீருடன் செல்வதை கண்டவன் மனம் வலிக்க இலக்கியாவின் முன் காட்டக்கூடாதென்று பொய்யாய் சிரித்து பேசிக்கொண்டிருந்தான் .
பின் இலக்கியாவிடம் ஏதோ கூறியவன் பின் கட்டிற்கு செல்ல அங்கே இருந்த சலவைக்கல்லின் கீழே முகத்தை முட்டியில் புதைத்து அழுது கொண்டிருந்தாள் பாக்யா .
கொல்லைப்புற கதவை சாற்றி தாழிட்டு அவளை நெருங்கியவன் நடுங்கும் குரலில் "வது" என்றழைக்க அவளோ அவனை கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஏறிட்டவள் பின் முகத்தை திருப்பி கொண்டாள்.
யாரும் வருகிறார்களா என்று பார்த்தபடி அவளை நெருங்கியவன் அவளை மாடிக்கு செல்லும் படியின் மறைவிற்கு இழுத்து சென்றான்.
அவன் மார்பில் சாய்ந்து கொண்ட பாக்யாவோ அவனை குத்தியவாறே அழுதாள் "இப்டி இன்னொருத்தனுக்கு தாரை வார்த்து குடுக்க தான் என்ன சுத்தி சுத்தி லவ் பண்ணீங்களா ?நானா உங்க கிட்ட காதலிக்கிறேன்னு சொன்னேன்? நானா உங்கள் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தேன் ?நானா கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னேன் ?எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ எனக்கு கல்யாணம் பண்ண போறாங்கன்னு தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்களே ஏன் இப்டி என்ன சாகடிக்குறீங்க ?இதுக்கு மொத்தமா என்ன கொன்னுரலாம்ல ?"என்க
அவனோ அவள் வாயை மூடியவன் அவள் தலையை தன் நெஞ்சோடு அழுத்தியவன் "என்னடி பேசுற ?உன்னையும் என்னையும் பத்தி எங்க அம்மா அப்பா கிட்ட சொன்னேன் அவங்க ஜாதியையும் தகுதியையும் காரணம் காட்டி முடியவே முடியாதுனு சொல்லிட்டாங்க .கெஞ்சியும் பார்த்தேன் அழுதும் பார்த்துட்டேன் .என்ன உன்ன மறந்துறணும்னும் மீறி ஏதாவது செஞ்சா உன்ன கொல்லவும் தயங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க .என்ன ஏதாவது செஞ்சுருவேன்னு சொன்னாலும் பொறுத்து போயிருப்பேன் உன்ன கொன்னுடுவேன்னு சொல்லேல எப்படி டி நான் சும்மா இருக்க முடியும் ?பைத்தியம் புடிக்குற மாறி இருக்கு.போதாதுன்னு எனக்கு பொண்ணு வேற பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க "என்க
அவளோ விசும்பியபடி நிமிர்ந்தவள் "நான் ஒன்னு சொல்லுவேன் என்ன திட்டக் கூடாது "என்க
அவனோ "என்ன சொல்லு "என்க
அவள் கூறியதை கேட்டவன் அரண்டு விழித்தான் அவளை விலக்கி நிறுத்தியவன் "வேணாம் வது இதுனால நெறைய பிரச்னை வரும் "என்க
அவளோ காதலின் வேகத்தில் "என்ன ஆனாலும் பரவா இல்ல இதுக்கு ஒத்துக்கிட்டீங்கன்னா என்ன உயிரோட பார்ப்பீங்க இல்லேன்னா என்ன பிணமா தான் பார்ப்பீங்க "என்று கூற அவனோ வழியின்றி தலையை அசைத்தான் .
இந்த இருவர் தங்கள் வாழ்க்கையை காப்பாற்ற எடுக்கும் முடிவு எத்தனை பேரின் வாழ்வை கேள்விக்குறியாக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்க்க முடியும்
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top