13

திருமண ஏற்பாடுகள் கலை கட்ட அங்கே முக்கால்வாசி வேலைகளை தாமரையும் இலக்கியாவும் தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர் .தாமரை அவரது கணவனுடன் சென்று வேலைகளை முடிக்க இலக்கியாவிற்கு உதவுவதோ மாறன் தான் .

சங்கரன் வயதின் முதிர்ச்சி காரணமாகவும் தனது வேலை காரணமாகவும் எளிதில் முடிக்க கூடிய வேலைகளையே எடுத்துக்கொண்டார் .மாறனோ விரும்பியே தனது நண்பனின் திருமணத்திற்கு அணைத்து உதவியும் செய்தான் முருகனின் திருமணத்தின் பொழுது முதல் இரண்டு வாரங்களும் மாறனோடு அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொண்டது ராமனும் மோகனும் தானே .மோகனிற்கு அங்கே விடுப்பு கொடுக்காத காரணத்தால் அவன் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னே தான் வருவான் ராமனிற்கும் அவ்விதமே

ராஜா தனது இறுதி தேர்வுகளை முடித்துவிட்டு வந்தவன் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் வங்கி கிளெர்க் தேர்விற்காக தீவிரமாக படிக்க ஆரம்பித்தான்.மாறனோன் தந்தைக்கு உடல்நலம் குன்ற ஆரம்பிக்க அவற்றிற்கான மருத்துவ செலவிற்கே அவன் சேர்த்து வைக்கும் முக்கால்பாக பணம் விரயமாக மீதி பணம் கடன் அடைக்கவும் பெட்ரோலுக்கும் சரியாக போனது.

மாறன் இயல்பாகவே பணப்பற்றாக்குறையால் கல்லூரி செல்கையிலும் மூன்று நல்ல நிலையில் இருக்கும் சட்டை pant தான் வைத்திருப்பான் .இப்பொழுதும் இருப்பு தொகை குறைய தனக்கான pant ஷர்ட் எடுக்குமளவு தன் சம்பாத்தியத்தில் தனக்கென அவனால் சேர்க்க முடியவில்லை .

அன்றொரு நாள் திருமண வேலைகளில் ஒன்றான திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கொடுப்பதற்காக மாறன் இலக்கியாவை வெளியே அழைத்து சென்றிருந்தான் .இருவரும் அழைப்பிதழை அச்சடிக்க கொடுத்தவர்கள் திரும்பி வர மாறனோ அவள் பைக்கில் ஏறும்முன் "லயாம்மா இந்தா "என்று அவள் கொடுத்த ஐயாயிரம் ரூபாயை அவளிடம் திருப்பி கொடுக்க அவளோ அவனை கேள்வியாய் பார்த்தவள் அவனின் உடையை பார்த்தாள் அது சற்று மோசமான நிலையில் தான் இருந்தது .

அதை பார்த்தவள் "என் இலா நானும் பல தடவ பாத்துட்டேன் இந்த மூணு சட்டையை தவிர்த்து வேற சட்டையே இல்லையா உன்கிட்ட அதையே திருப்பி திருப்பி போடுற ?"என்க

அவனோ அவளிடம் எதையும் மறைக்கும் குணமில்லாதவன் "இல்ல டா அப்பாவுக்கு மருந்து செலவு அப்பறோம் ஆல்ரெடி வாங்கி வச்சிருந்த கடன் அதுக்கே போயிருது .இன்னும் மூணு மாசத்தத்துல அப்பாக்கு ஆபரேஷன் வேற பண்ணனும் .ராஜா இன்னும் வேலைக்கு சேர நாலு மாசம் ஆகும் .என்ன மாறி அவனையும் ஏதாவது கடைல போய் வேலை பாக்க வைக்க மனசு வரலடா.கொஞ்ச நாள் தான அப்பறோம் பாத்துக்கலாம் "என்க

அவளோ அந்த பணத்தை பார்த்தவள் அவன் பின் ஏறிக்கொண்டாள் பின் அவன் "அடுத்து எங்கடா வீட்டுக்கு தான இல்ல கோவில்கு எதுக்கும் போகணுமா ?"என்க

அவளோ "அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ நேரா raymonds போ "என்க அவனோ புரியாமல் பார்த்தான் பின் ராமனிற்கு துணி எடுக்க போகிறாள் போல தன சார்பாக என்று நினைத்தவன் அவள் சொல்படி அங்கே கூட்டி சென்றான் .

அவ்ளோ அங்கே சென்று அவனை அழைத்தவள் அவனிற்கு பிடித்த வண்ணத்தில் எடுக்க சொல்ல அவனோ ராமனிற்கும் தனக்கும் ஒத்த எண்ணங்கள் இருப்பதால் இவ்வாறு கூறுகிறாள் என்று எண்ணி அய்யாயிரத்திற்கும் நான்கு சட்டை pant செட்டுகள் எடுத்தார்கள்.எல்லாம் எடுத்து முடித்தவர்கள் ஏழு மணி அளவில் வீட்டிற்கு வர இலக்கியாவோ இறங்கியவள் விறு விறுவென்று உள்ளே சென்றாள்.அவள் பையை மறந்து செல்வதை கவனித்தவன் அவளை அழைத்தான் "லயா"என்று அவன் அழைப்பிற்கு திரும்பியவள் அவனின் அருகில் வர அவனோ அந்த பையை அவளிடம் நீட்டினான் .

அவளோ சிரிப்புடன் அவனின் புறம் அந்த கையை நகர்த்தியவள் "இது உனக்கு தான் "என்க

அவனோ அதிர்ச்சியா மகிழ்ச்சியா என்று சொல்லொணா உணர்ச்சியில் சிக்கியவன் மீண்டும் மீண்டும் அவளிடம் தான் கை நீட்டி எதையாவது வாங்கியபடி இருக்கிறோமென்று தோன்ற அது அவனின் ஈகோவை சற்று அசைத்தது .

எனவே அதை அவளிடமே கொடுத்தவன் "வேணா லயா திரும்ப திரும்ப என்னால உன்கிட்ட வாங்க முடியாது "என்க

அவளோ "பப்ளிக் ஆச்சேனு பாக்குறேன்டா இல்லேன்னா செவுலு திரும்பிருக்கும் .நா யாருடா உனக்கு ?"என்க

அவனோ முதலில் அவளின் டாவில் திகைத்தவன் பின் மனதினுள்ளே "நீ எனக்கு எல்லாம் டி "என்று நினைத்துக்கொண்டவன் வெளியே மௌனம் சாதிக்க

அவளோ "சொல்லு நீ எனக்கு யாரு ?நீ என் frienduh டா இதே என் அண்ணனோ மோகனோ செஞ்சுருந்தா இப்டி தான் மறுத்துகிட்டு இருப்பியா ?ஒழுங்கா எடுத்துட்டு போயிரு ."என்றவள் பின் அவனிடம் அவனின் உடையை காட்டினாள் "ஒரு வெட்டனரி கோல்டு மெடலிஸ்ட் ,அரசாங்க மருத்துவன் போடுற டிரஸ் மாறியாடா இருக்கு உன்னோடது ?கலர் fade ஆகி இப்போவோ அப்போவோன்னு கிழியுற நெலமைல இருக்கு .ஆள் பாதி ஆடை பாதி நீ இப்டி போனா உனக்கு கீழ வேல பாக்குறவங்களுக்கு எப்படி டா இருக்கும் உன்ன பாக்கேல?உன் குடும்ப விஷயம் எதுவும் எனக்கு தேவை இல்ல ஆனா ஒன்னு சொல்லிக்குறேன் தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் பண்ணனும் .முதல்ல உன்ன பாரு அப்பறோம் உன்ன சுத்தி இருக்குறவங்கள பாரு "என்று பட படவென பொறிந்தவள் உள்ளே சென்றுவிட்டாள் தங்கு தங்கு என்ற அவளின் அழுத்தமான நடையுடன் .

அவளின் கோபத்தை பார்த்து அவனிற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை .கீழே குனிந்து அந்த கவரை பார்த்தவன் அதை தனது அலுவலக பையின் உள்ளே போட்டுக்கொண்டான் .அதன் பின் வீட்டிற்கு வந்தவன் அந்த கவரை எடுத்து உள்ளே செல்ல யாரும் அதை பற்றி கேட்கவில்லை .

அவன் வரும் வரை படித்துக்கொண்டிருந்த ராஜா தன் அண்ணன் உள்ளே வந்ததை கவனித்தவன் அவனிடம் "வா அண்ணே "என்று கூறிவிட்டு மீண்டும் படிக்க துவங்க மாறனோ அங்கிருந்த கார்ட்டிலில் அமர்ந்தவன் அந்த கவரையே பார்த்துக்கொண்டும் அதை வருடிக்கொண்டும் அவ்வப்பொழுது புன்னகைத்துக்கொண்டும் இருந்தான் .இதை முதலில் கவனிக்காத ராஜாவோ பின் சற்று நேரம் கழித்து கவனித்தவன் புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டு வெளியே சென்றவன் இருவருக்கும் ஒரு தட்டில் உணவை வாங்கி வந்தான் .

பின் கட்டிலில் அமர்ந்தவன் மாறனிற்கு உணவை பிய்த்து வாயின் அருகே கொண்டு செல்ல மாறனோ இது அவ்வப்பொழுது நடக்கும் காரியமாதலால் வாயை திறந்து வாங்கி கொண்டான் .பின் தம்பிக்கும் ஒரு வாய் பிய்த்து ஊட்டியவன் "உன் அண்ணிக்கு ஆனாலும் ரொம்ப தான்டா கோவம் வருது.சண்டாளி என்னமா நோட் பண்ரா தெரியுமா "என்க

ராஜாவோ சிரித்தவன் "பார்ரா அப்டி என்ன நடந்துச்சு ?"என்க

அவனோ நடந்த அனைத்தையும் கூறியவன் அந்த கவரை காட்டி "இவ்ளோ நாளா என்ன பெத்து வளர்த்த என் அம்மாவுக்கு தெரியல ஆனா அவ கண்ணனுக்கு தெரியுது டா "என்க

ராஜாவோ சற்று குற்றவுணர்வு தலை தூக்க தலையை தொங்கப்போட்டுக்கொண்டான் "அண்ணே நா வேணுனா வேளைக்கு போறென்னே பேங்க் எக்ஸாம் ரிசல்ட் வர வரைக்கும் "என்க

அவனோ அவன் கன்னத்தின் அருகே கையை அறைவதை போல் கொண்டு சென்றவன்"அப்டியே அறைஞ்சேன்னு வை.... நா ஒன்னும் முருகன் இல்ல தம்பி எக்கேடோ கெட்டு போகட்டும்னு விடுறதுக்கு .ஒழுங்கா பேங்க் எக்ஸாம்க்கு concentrate பண்ணு "என்க

ராஜாவோ இயல்பானவன் "ஆனா அண்ணே நா எத்தனை தடவ சொல்லிருப்பேன் ரெண்டு செட் டிரஸ் வாங்கு வாங்குனு.எனக்கு வாங்கி குடுத்துட்டு சும்மா இருக்காதன்னு . ஒரு நாளாச்சு கேட்டுருப்பியா? உனக்கெல்லாம் அன்பா சொன்னாளாம் புரியாது அண்ணி மாறி அடாவடித்தனம் தான் ரைட் "என்க

மாறனோ சிரித்தவன் "தம்பி ஆனா இவகிட்ட பிற்காலத்துல மாட்டிகிட்டு நம்ம அம்மா நெலமைய நெனச்சா எனக்கு இப்போவே கவலையா இருக்குடா "என்க

அவனோ சிரித்தவன் "நா அந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க ஆவலோடு காத்துகிட்டு இருக்கேண்ணே "என்க அவனும் சிரித்தான் .பின் இரவு இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிவிட்டுக்கொண்டு உறங்க அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது .

அன்று அவனது மருத்துவமனைக்கு வந்திருந்தது ஒரு மாட்டிற்கு மடி உப்பி இருக்க அரை மயக்க நிலைக்கு சென்றுகொண்டிருந்தது அந்த மாடு .மாறனோ கூட்டிக்கொண்டு வந்திருந்த அந்த முதலாளியை திட்டியவன் "இவ்ளோ வீங்கி இருக்கு சீரியஸ் ஆனதுகப்ரோம் தான் கூட்டிகிட்டு வருவீர்களா ?"என்று கூறிவிட்டு அதற்கு கால்சியம் கூடியதால் ஏற்பட்ட இந்த நிலையை கண்டறிந்தவன் அதற்கான இன்ஜெக்ஷனை போட்டு விட்டான்.

சற்று நேரத்தில் மாடு முழித்துவிட அந்த முதலாளியோ அவனிற்கு கோடி நன்றிகள் கூறியவர் மாடுதான் விடைபெற்று சென்றான் .அதன் பின் தன் பணிகளை கவனித்தவன் வெளியே வந்து தன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் .

வரும் வழியில் அவனின் செல் போனிற்கு ஒரு அழைப்பு வந்தது .அதுவோ செல்போன்கள் அப்பொழுதே புழக்கத்திற்கு வந்திருந்த புதிது
மாறன் வைத்திருந்ததோ ஒரு நோக்கியா மொபைல் அப்பொழுதே அலுவலகத்தில் கொடுத்தது அலுவலக பயன்பாட்டிற்காகவும் பர்சனல் பயன்பாட்டிற்காகவும் கொடுத்தது .

அதில் ஒளிர்ந்த புதிய எண்ணை பார்த்தவன் யோசனையோடு அதை எடுக்க அப்புறம் கேட்ட ஹலோ என்ற அழைப்பிலேயே ஊகித்துவிட்டான் பேசுபவள் யாரென்று .உயிரில் கலந்த குரலாயிற்றே .அப்புறம் இலக்கிய "ஹெலோ இளா வேலை ஏதும் இல்லேலப்பா ?"என்க

அவனோ "இல்ல லயாமா என்ன ஆச்சு ?"என்க

அவளோ "இல்லப்பா அது அண்ணிக்கு கல்யாண சேலை எடுத்துட்டாங்களா இன்னிக்கு பாக்யாவுக்கு எடுக்க போகணும் . அப்பா உன்ன கூப்பிட சொன்னாரு .அப்டியே அண்ணனுக்கும் எடுத்துறலாம் .உனக்கு தான அதோட டேஸ்ட்டெல்லாம் தெரியும் கொஞ்சம் வாயேன் "என்க

அவளை பார்க்க சாக்கை தேடி காத்துக்கிடப்பவனுக்கு இப்படி கேட்டால் செல்லாமலா இருக்க தோன்றும் "இதோ வந்துட்டேன் லயாம்மா "என்று கூறியவன் சிட்டாய் பறந்து விட்டான் அவள் கூறிய ராஜ்மஹால் கடைக்கு .

கைஸ் ரொம்ப இழுக்கிற மாறி இருக்காப்பா ?கத கொஞ்சம் பேருக்கு அதான் இப்டி அடுத்த எபில இருந்து ஸ்பீடப் பண்ணிரலாம் அது வரை குழந்தை புள்ளைய மன்னிச்சு .

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top