முன்னுரை
மழலையின் முதல் தமிழ் போல, வசந்தத்தின் முதல் மலர் போல, மனதில் எழும் முதல் காதலும் பொக்கிஷம் தான். நம்மை அறியாமலே நம்மை ஆட்கொள்ளும் இந்த காதல், இணைந்தாலும் பிரிந்தாலும் நம் மனதில் என்றுமே நிலைத்திருக்கும். வாழ்வில் பின் சந்திக்கவிருக்கும் பல ஆச்சர்யங்களுக்கு, அதிர்ச்சிகளுக்கு, தோல்விகளுக்கு நம்மை ஒரு விதத்தில் தயார் செய்யும் இந்த முதல் காதல் அனுபவம் கிடைப்பதும் வரம் தான்.
இதை உணர்ந்தால், லைலா-மஜ்னு, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதி என காவியங்களில் நாம் கண்டு கண்ணீர் சிந்திய காதல்களை போல, நம் ஆழ்மனதில் படிந்து, உயிரில் கலந்திருக்கும் நம் காதலும் புனிதம் தான் என்பது புலப்படும்.
மண் மேல் மரம் கொண்ட காதல் போல், மலர் மேல் வண்டு கொண்ட காதல் போல், கடல் மேல் முகில் கொண்ட காதல் போல், இவன் மேல் அவள் கொண்ட காதலும் அவள் மேல் இவன் கொண்ட காதலும் இந்த கதை வழியே உங்கள் முன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top