நினைவுகள்

பச்சிளம் குழந்தையாய் என் முதல் சிரிப்பை நீ கண்டிருப்பாய்...
தத்தி தத்தி நடந்த என் முதல் நடையை நீ கண்டிருப்பாய்...
மழலை மொழியாம் என் முதல் பேச்சை நீ கேட்டிருப்பாய்...

ஆனாலும் நான் நினைத்ததில்லை எனக்கு உயிர் கொடுத்த உன் உயிரற்ற உடலை நான் காண்பேன் என்று...

என் மனதுக்குப் பிடித்தவன்
நீ இல்லை என்று எண்ணியிருந்தேன்...
ஆனாலும் இன்று உணர்ந்து கொண்டேன் மனதின் ஓரத்தில் உன் மீது பாசம்
வைத்திருந்தேன் என்று...

காலம் கடந்து விட்டது...
நீயும் நானும் மீண்டும் சந்தித்து கொள்ள முடியா தூரம்
சென்று விட்டோம்...

இப்பொழுது உணர்கிறேன் நீ இல்லாத தனிமையை...

விதி தான் எவ்வளவு வலியது என்று பார்த்தாயா???
உடன் இருந்த பொழுது நீ என் பார்வையை விட்டு மறைந்திட வேண்டும் என்று எண்ணினேன்...


இன்று நீ மறைந்து விட்டாய்... மீண்டும் ஒருமுறை பார்த்துவிட மாட்டேனா என்று மனம் ஏங்குகிறது...

உனக்கென ஒற்றை கண்ணீர் துளியைக் கூட சிந்திட மாட்டேன் என்று இறுமாந்திருந்தேன்...
இன்று நிற்காமல் சுரக்கிறது என் கண்ணீர்...

காலம் என் வலிக்கு நிரந்தரமாக தீர்வு கொடுக்கலாம்...
ஆனால் உன்னை மறந்திட செய்யலாகாது...

உனக்கும் எனக்கும் ஒருமித்த கருத்துகள் இருந்தது
இல்லை...
நம்மிடையே அதிக
சண்டைகளும்
மனஸ்தாபங்களும்
வந்து சென்றதுண்டு...
உன்னை இறுதி வரை
நினைவில் வைத்து
கொள்ளவே கூடாது என்று எண்ணியிருந்தேன்...

ஆனாலும் உன் நினைவுகள் மனதை வதைக்கிறது...
மீண்டும் ஒருமுறை நிருபித்து விட்டாய்...
என்னை ஜெய்த்து
விட்டாய்...

அப்பா...
என் கனவினை நிறைவேற்றுபவனாக
நீ இருந்தது இல்லை...
நீ விரும்பிய மகளாய்
நானும் இருந்தது
இல்லை...

ஆனாலும் மீண்டும் ஒருமுறை உனக்கே மகளாய் பிறந்திட நினைக்கிறேன்...
இந்த பிறவியில் நம்மால் நிறைவேற்றிட முடியாத ஆசைகளையும்
கனவுகளையும்
அந்த பிறவியில்
நிறைவேற்றி
கொள்வோம்...

நீ அனுபவித்த வலிகளுக்கு மரணம் மட்டுமே உன்னை அமைதி படுத்தும் என்று நான் அறிவேன்... இறைவனும் அதை அறிந்திருக்கிறான்...

நானும் உன்னிடமிருந்து அன்புடன் விடைபெற்று கொள்கிறேன்...

மீண்டும் உன்னை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top