வலிநீக்கும் உயிர்கொல்லி
ஏர் உழுது அறுவடை செய்து
எல்லோர்க்கும் உணவிட்ட
இனிமையான காலம்போய்
இன்று அரைசான் வயிற்றுக்கு
அழிந்து போன பாழ்நிலத்தில்
அயறாமல் உழைக்கின்றேன்!!
பிள்ளைகள் பசிபோக்க
நெற்கதிரை நானும் நட
மழையில்லா காரணத்தால்
முளையிலேயே கருகிவிட
போனது அவர்களுக்கு
பசியேதான் பழகிப்போனது!!
உதிரிகளை உடையாக்கி
உடுத்திக் கொண்டு உயிர்வாழ
ஊரோர்கு உடை தைக்க
பருத்தியை நான் பயிரிட
வெளிநாட்டு உடை விரும்பி
வெள்ளம் போல் சென்றனரே!!
எதிர்பார்த்து காத்திருந்தேன்
ஏமாற்றமே மிஞ்சியது!!!
புஞ்சையும் நஞ்சையும்
பூத்துக்குளுங்கும் தோட்டங்களும்
செழித்திருந்த விளைநிலம்
இன்று விலையாகி போனதாலே
தொச்சமென நினைத்திருந்த
உயிர்கொல்லி என்
வலிதீர்க்கும் மருந்தாகிப் போனதோ!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top