மழை
விண்ணிலிருந்து விழுந்த விண்மீன் விதையே
நீ பொழிவது
மண்ணில் நீரை விதைப்பதற்கா அல்ல
என் கண்ணின் கண்ணீரை மறைப்பதற்க்கா????
உழவர் மனதை நெகிழ்வித்தாய்
உலகினில் அனைவரையும் மகிழ்வித்தாய்
ஆனாலும்
உன்னை கண்டு ஓடுகின்றேன்
ஆழமான நினைவுகளை நீ நினைவூட்டும் முன்
கடலில் நீராய் கலந்துவிட்டாய்
நிலத்தை ஈரத்தால் நனைத்துவிட்டாய்
காற்றிலும் மிதமாய் கலந்துவிட்டாய்
எங்கும் செல்ல வழியின்றி
இறுதியில் உன்னிடம் தோற்றுபோய் துவண்டு நின்றேன்
உன் ஒரு துளி
பட்டவுடன் புரிந்து கொண்டேன்
வலிகொண்ட என் இதயத்திற்கு மருந்து நீயென்று
மழையே!!! நீ
தன் காதலியை பிரிந்து வாடும் மேகத்தின் கண்ணீரோ!!!!!
அல்ல
நெடுந்தூரம் பயணித்து நிலத்தை அடைந்த உலகின் உயிர்த்துளியோ!!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top