மரம்

பசுமை ஆடை போர்த்திய நன்பனே!!

நீ!!

கடலளவு பரந்து விரிந்திருக்கும்

மண்ணின் மைந்தனோ!!

ஏனெனில் விதையாகிய உன்னை

தன் கருவறையில் வைத்து

காக்கின்றாளே!!!

வயதாகி முதிர்ந்த பின்பும் வேர்களால்

தாயை அரவனைத்து வாழும் நீ

அவளை விட்டு பிரியும் நொடி

உயிர் துறக்கின்றாயே!!!

இங்கும் அங்குமாய் உலவிக் கொண்டிருக்கும்

காற்றின் காதலனா நீ!!!

அவள் பேசும் மொழிகளுக்கெல்லாம்

தலையசைத்து செவிசாய்க்கின்றாயே!!

உன் இலைகள் காற்றில் அசைவது

காதலியை கண்ட மகிழ்ச்சியிலா??

பகலும் இரவும் மாறிமாறித் தோன்றும்

நிழல் உன் மைந்தனோ!!!

எக்கனமும் உன் பாதுகாப்பில்

தோன்றி மக்களின் மனதை குளிர்வித்து

உனக்கு பெருமிதம் சேர்க்கின்றானோ!!

இவையாவற்றிர்கும் மேலாக

இப்புவியில் வாழும் மனிதற்க்கு

வாழ்வாதாறமாக இருப்பவனே!!!

ஆக்கும் ஆற்றலையும் அழிக்கும் ஆற்றலையும்

கொண்ட நீ!!!

கடவுளை தவிர வேறென்ன!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top