தமிழர் குரல்

அடக்கமுடியா வீரன் அவன்

அழிக்கமுடியா சூரன் அவன்

ஆனவம்மிக்க அரக்கர் நீங்கள்

அடிமைபடுத்த நினைத்தீர்கள்!

எங்கள் பாசத்திற்கு கட்டுபடுபவனை கண்டு

எளிதாக எதிர்த்துவிடலாம் என்று

இன்று முளைத்த காளான்கள்

ஈராயிரம் ஆண்டுகளாய் தொன்றுதொட்ட

தமிழர் மரபை அழிக்க நினைக்க

ஏறுதழுவல் எம் இனத்தின் உரிமை

தழிழனொருவன் இருக்கும் வரை

அதை தடை செய்ய விடமாட்டோம்!

நாக்கில் நரம்பற்ற சிலர்

நாரதர் வேலை பார்க்க

பிரிந்து விடுவோம் என்று

இளித்து கொண்டு நின்றிருக்க

உயிர் கொடுத்து ஊக்குவிக்க

உடன் பிறப்புபோல் ஒன்றினைந்தனர்

பல மத சகோதரர்கள்!!

இறுதியில் மூக்குடைந்து போனார்கள்

முதுகெலும்பற்ற மூடர்கள்!!

எட்டி நின்று பார்த்தவரும்

ஏளனமாய் சிரித்தவரும்

எலியை போல் வால் சுருட்டி

எங்கே சென்று ஒளிந்து கொண்டீர்

காட்டுத் தீ அனையாது எங்கள்

பண்பாட்டுத் தீ குறையாது!!

ஐயம்விட்டு அகிலம் தொட்டு

வீரப்பெண்கள் வீற்றிருக்க

தடைவிதித்து தங்கவந்தவர்

தடயமின்றி தகர்ந்திடுவர்!!

பல சூழ்ச்சிகளை உள் புகுத்தி

மிருக வதை என பெயர் சூட்டி

கயவர்கள் பலர் கதைசொல்ல

அது வெறும் விளையாட்டல்ல

எங்கள் அடையாளம்!!

அழிக்க நினைப்பவர்கள்

அழிந்து விடுவீர்கள் என

எட்டு திக்கும் முழங்கும்படி

குரல் கொடுப்போம் வாருங்கள்!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top