கவிதை

கவிதை

ஓர் வரியில் பல கோணங்கள்

கவிதை

கவிஞர்களின் ஒலியில்லா மொழி

கவிதை

இயற்கையின் எழில் கொஞ்சும் அழகு

கவிதை

மழலையின் மனம் மயக்கும் பேச்சு

கவிதை

எண்ணங்களின் வரைபடம்

கவிதை

கூந்தல் வருடும் தென்றல் காற்று

கவிதை

தாயின் தன்னலமற்ற தியாகம்

கவிதை

மெய் மறக்கச் செய்யும் காதலியின் புன்னகை

கவிதை

வெட்கபட்டு நாணச் செய்யும் காதலனின் பார்வை

கவிதை

வலிகொண்ட இதயத்தின் விழிநீர்

கவிதை

காலம் கடந்து மலர்ந்திடும் முதுமைக் காதல்

கவிதை

இன்பமும் துன்பமும் இனைந்து இயங்கும் வாழ்க்கை

கவிதை

கணக்கிட முடியா கருத்துக்களின் மெய்ப்பொருள்!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top